PDA

View Full Version : மைக்ரோசாப்டின் புதிய சேவை



sarathecreator
22-02-2008, 05:17 AM
மைக்ரோசாப்ட் வழங்கும் விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் (http://tamizh2000.blogspot.com/2008/02/blog-post_9380.html)


http://bp3.blogger.com/_-5Cl9WHU-Uo/R75hYk31SCI/AAAAAAAAANU/LucyJLKlzHA/s400/sky.png (http://bp3.blogger.com/_-5Cl9WHU-Uo/R75hYk31SCI/AAAAAAAAANU/LucyJLKlzHA/s1600-h/sky.png)
மைக்ரோசாப்ட் வழங்குகிறது 5 ஜிபி அளவுக்கு இலவச கோப்புப்பகிர்வான் (http://skydrive.live.com/) சேவை.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா முதலிய குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவை பீட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால் 1 ஜிபி அளவே வழங்கப்பட்டு வந்தது.

இப்போது ஆஸ்திரேலியா, பிரான்சு, ஸ்விஸ்ஸ்ர்லாந்து, கனடா மற்றும் இன்னபிற நாடுகளிலிருந்து இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆரெஸ்ஸெஸ் பயன்பாடும் உள்ளது. இந்தச் சேவைக்கு விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் என்று பெயர்.

கோப்பு - மற்றும் போல்டர்களை - உங்களது இணையத்தளத்திலோ / வலைப்பூவிலோ நேரடியாக பொதிந்து (எம்பெட்) வழங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

உங்கள் வலையைப் படிப்பவர்கள் அதில் இருந்தபடி நேரடியாக கோப்புகளை இறக்கிக்கொள்ளலாம். தனியாக வேறு தளத்துக்குச் செல்லவேண்டிய அவதி இல்லை.

ஏஓஎல் தளமும் இதே போன்று 5 ஜிபி அளவுக்கு இளவச கோப்புப்பகிர்வான் சேவையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

http://skydrive.live.com/ (http://skydrive.live.com/)
http://skydriveteam.spaces.live.com/ (http://skydriveteam.spaces.live.com/)

க.கமலக்கண்ணன்
22-02-2008, 01:13 PM
மிக நல்ல தகவல் நன்றி சாரதி

மிக்க மகிழ்ச்சி இந்த சேவைக்கு உங்களுக்கும் மைக்ரோசாப்ட்டுக்கும்...

praveen
23-02-2008, 04:07 AM
நண்பரே, உங்கள் செய்தி வெளியிட்டீன் மூலம் நான் என்னிடமிருந்த PDF புத்தகங்களை ஏற்ற நம்பிக்கையான ஒரு இடம் தேடிக்கொண்டிருந்தேன், அது கிடைத்தது.

விரைவில் ஏற்றி பின் தருகிறேன்.

அக்னி
23-02-2008, 04:11 AM
இணைய உலகில் பாதுகாப்பு மிகுந்ததாக இருக்கும் என நம்பலாம்.

பகிர்தலுக்கு நன்றி...

அனுராகவன்
23-02-2008, 07:01 AM
நன்றி சரத் அவர்களே!!
பார்த்தேன்.. பரவசம் அடைந்தேன்..

அன்புரசிகன்
23-02-2008, 09:51 AM
நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

செல்வா
23-02-2008, 03:49 PM
உபயோகமானத் தகவல் நன்றி பகிர்வுக்கு...