PDA

View Full Version : நானோவுக்கு அடுத்து மடிக்கணினி புரட்சி..!!



பூமகள்
22-02-2008, 04:36 AM
மடிக்கணினியின் இமாலய வளர்ச்சியைத் தொடர்ந்து, இப்போது ஹெச்.சி.எல் நிறுவனம் 13,990/-இந்திய ரூபாயில் மடிக்கணினி ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ளது.

இனி வீட்டுக்கு ஒரு நானோ போல வீட்டுக்கு நாலு மடிக்கணினி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இது பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.chennai365.com/information-technology/hcl-launches-14k-laptop/) சொடுக்குங்கள்.


தகவல் தந்து உதவிய ஷீ-நிசிக்கு எம் நன்றிகள். :)

அமரன்
22-02-2008, 06:37 AM
ஆ(அ)ச்சா!!! மலிவு விலை அலைபேசியுடன் கூட்டணி அமைத்து தொல்லைவளர்ச்சி அரசாங்கம் அமைக்காதவரை நல்ல விடயம். பாவனை உயர்வுகாணமுன்னர் யாவருக்கும் கணினி அறிவை ஏற்படுத்துங்கப்பா.

அன்புரசிகன்
22-02-2008, 08:08 AM
இது நல்லாயிருக்கே....

இனி பூ வீட்டின் முலைமுடுக்கெல்லாம் இதுதானோ...? :D

பூமகள்
22-02-2008, 09:05 AM
ஏங்க ரசிகன் அண்ணா.... உங்கள மாதிரி அன்பு மிக்க அண்ணா யாரும் வாங்கி கொடுத்தா வேணாம்னா சொல்ல போறேன்...!! ;)

அப்புறம் வீட்டுல என்ன.. வீட்டு மொட்ட மாடியில் கூட வச்சிப்பேனே...!! :D:D

வெற்றி
22-02-2008, 10:39 AM
ஏங்க ரசிகன் அண்ணா.... உங்கள மாதிரி அன்பு மிக்க அண்ணா யாரும் வாங்கி கொடுத்தா வேணாம்னா சொல்ல போறேன்...!! ;)

அப்புறம் வீட்டுல என்ன.. வீட்டு மொட்ட மாடியில் கூட வச்சிப்பேனே...!! :D:D

ஆமாம்...ஆமாம்..நான் கூட அண்ணா கொடுப்பதை ஹாலில் வைப்பேன்
நீங்கள் கொடுப்பதை வரவேற்ப்பு அறையில் வைப்பேன்

மனோஜ்
22-02-2008, 04:40 PM
சாதார்ன உபயோகத்திற்கு தகுந்த கணிணி

அக்னி
22-02-2008, 05:23 PM
இது தகவல் பரிமாற்றமா...
அல்லது,
அன்புவிடம் கணினி வாங்கும் பதிவுத் திரியா..?
அப்படீன்னா எனக்கும் இரண்டு தாங்க...

தகவலுக்கு நன்றி...

பூமகள்
22-02-2008, 06:16 PM
மாட்டேன் மாட்டேன்.. :icon_nono::icon_tongue::icon_shout:
என்ர அன்பு அண்ணா எனக்கு மட்டும் தான் வாங்கித் தருவதா வாக்கு கொடுத்திருக்கார்..!!:icon_dance:

யாருக்கும் கொடுக்க மாட்டேன் போ..............(ங்க)!! :sport-smiley-018:

இளசு
22-02-2008, 07:23 PM
நம் கண்முன் நிகழ்ந்த மிகப்பெரும் அறிவியல் வளர்ச்சி.. கணினி...>வீட்டுக்கணினி ---> மடிக்கணினி ----> கைப்பேசிக்கணினி.

இத்தனை தகவல்கள் இத்தனை பேருக்கு இவ்வளவு விரைவில்..
இருபது ஆண்டுகளுக்கு முன் நினைத்திருக்க இயலுமா?

இது மலிவாய் அனைவருக்கும் கிடைப்பது நல்ல சேதியே!

அமரன் சொல்வதுபோல் பட்டறிவு பரவலாக வேண்டும்..
இணைய வயலில் களையின்றி பயிரெடுக்கும் பக்குவமும் வேண்டும்..

சேதிக்கு நன்றி பூ + ஷீ!

அனுராகவன்
22-02-2008, 11:40 PM
நன்றி நல்ல விசியத்திற்கு..
மலிவு விலைக்கு வாங்கி பின் ஏதாவது குறையினா யாரை நாடுவது..
தகவல் தந்த பூவிக்கு ஒரு ஜெ!!!