PDA

View Full Version : தேங்காய் பற்றிய குறிப்புகள்அனுராகவன்
21-02-2008, 03:06 AM
தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்:
தேங்காய்: 1 மூடி

பச்சை மிளகாய்: 4

புளி: சுண்டைக்காய் அளவு

வெங்காயம்: 1

உடைத்த கடலை: சிறிதளவு

கடுகு: கால் தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், புளி, பெருங்காயம், உப்பு ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவல், உடைத்த கடலையைப் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு கடுகைத் தாளித்து அதில் கொட்டிவிடவும். இப்போது இட்லிக்கு தொட்டுச் சாப்பிட தேங்காய் சட்னி ரெடி.

இன்னும் பல தொடர்ந்து தருகிறேன்.
அவசியும் செய்து பாருங்கள்..

ஓவியா
21-02-2008, 03:09 AM
சட்டினி சரி, இப்ப நான் இட்டிலிக்கு எங்கு போவேன்!!!


நல்ல பதிவு. வழங்கியமைக்கு நன்றி.

அனுராகவன்
21-02-2008, 03:12 AM
தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்:

1 கிலோ பச்சரிசி, ஒரு தேங்காய், ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிய துண்டு பெருங்காயம், 2 தேக்கரண்டி உளுந்து, 100 கிராம் முந்திரிப்பருப்ப, 8 காய்ந்த மிளகாய், 1 தேக்கரண்டி கடுகு, 100 மி.லி. நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை.

செய்முறை:

பொல பொலவென்று சாதத்தை வடித்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை ஆற வைக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணைய் விட்டு, அதில் துறுவிய தேங்காயைப் போட்டு பொன் நிறத்திற்கு வறுத்துக் கொள்ளவேண்டும். பெருங்காயத்தை வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அதை காய விடவேண்டும். பின்பு கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் அதில் மிளகு மற்றும் உளுந்து பருப்பை போடவும். பருப்பு சிவந்த நிறத்திற்கு வந்ததும் அதில் கறிவேப்பிலையைப் போட்டு பொரியும் தருணத்தில் இறக்கவும். ஆஆ வாணலியில் இருப்பதை ஆற வைத்த சாதத்தின் மேல் கொட்ட வேண்டும். தேங்காய், பெருங்காயப் பொடி ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது தேங்காய் சாதம் சாப்பாட்டு மேஜைக்கு போக ரெடி....!!

ம்ம் மணக்கும் நெடி எனக்கு தெரியுது...

வெற்றி
21-02-2008, 12:30 PM
ஐய்யோ...ஐய்யோ...மன்றத்திலும் தே.சட்னி தானா???(என்ன கொடுமை மொக்கை இது??!!!)

மலர்
21-02-2008, 04:27 PM
சாப்பிடுற ஐயிட்டம்ன்னா....
மலரு எப்பவுமே பர்ஸ்ட்....... :D :D :D

இன்னும் பல தொடர்ந்து தருகிறேன்.
அவசியும் செய்து பாருங்கள்.. அனுக்கா நான் செய்து ஒருதடவைக்கு ரெண்டுதடவை நல்லா பாத்துட்டேன்..... ஹீ..ஹீ.... சாப்பிட்டு பாக்க தான் ஆள் இல்லை..
யாராச்சும் தெரியாம மாட்டினா டெஸ்ட் பண்ணியிர வேண்டியதுதான்... :D :D :D
------
அனுக்கா தேங்காய் சாதத்துக்கு தொட்டுக்க எந்த சைட்டிஷ் நல்லாயிருக்கும்..

மலர்
21-02-2008, 04:29 PM
ஐய்யோ...ஐய்யோ...மன்றத்திலும் தே.சட்னி தானா???(என்ன கொடுமை மொக்கை இது??!!!)
மொக்ஸ்.... அப்போ வீட்டிலேயும் தேங்காய் சட்னி தானா...
நோ...நோ....அதுக்காக இப்பிடியெல்லாம் அழக்கூடாது....
இதெல்லாம் அரசியலில் சகஜம்........:D :D :D

அனுராகவன்
22-02-2008, 12:23 AM
சட்டினி சரி, இப்ப நான் இட்டிலிக்கு எங்கு போவேன்!!!


நல்ல பதிவு. வழங்கியமைக்கு நன்றி.இட்லிக்கு வேறு எங்கையும் போகவேண்டாம்..
வீட்டிலே செய்யலாம்..
கடையில் இட்லிமாவு கிடைக்கிறது ஓவியா..
கவலைவேண்டாம்..
அதை வீட்டில் பொறுமையாக இட்லிசட்டியில்லையென்றாலும்
அதை தோசைக்கும் ட்ரை பண்ணலாம்..
இப்ப சரியா..இனி உங்கள் வீட்டில் தினமும் இட்லி மற்றும் தோசை கூடவே சட்னிவுடன்..
ம்ம் நல்ல ருசித்து புசிக்க வாழ்த்துக்கள்..:080402gudl_prv:

அனுராகவன்
22-02-2008, 12:27 AM
ஐய்யோ...ஐய்யோ...மன்றத்திலும் தே.சட்னி தானா???(என்ன கொடுமை மொக்கை இது??!!!)

என்ன சாமி..
தேங்காய் சட்னியே தினமும் சாப்பிட்டு அலுத்துவிட்டதா..
இதையே விதவிதமாக..
அதே நேரத்தில பிரமாதமாகவும் செய்யலாம்..
உங்களுக்கு தெரியுமா??
வாரம் ஒரு முறை சாப்பிடுங்க...
என் நன்றி சாமியோ..

அனுராகவன்
22-02-2008, 12:29 AM
அனுக்கா தேங்காய் சாதத்துக்கு தொட்டுக்க எந்த சைட்டிஷ் நல்லாயிருக்கும்..

ஏன் அவசரமா?
பிறகு தருகிறேன் மலர்..
அதுக்கு ஊருக்காய் தான் என் டேஸ்ட்...

தங்கவேல்
22-02-2008, 03:08 AM
சாப்பிடுற ஐயிட்டம்ன்னா....
மலரு எப்பவுமே பர்ஸ்ட்....... :D :D :D
அனுக்கா நான் செய்து ஒருதடவைக்கு ரெண்டுதடவை நல்லா பாத்துட்டேன்..... ஹீ..ஹீ.... சாப்பிட்டு பாக்க தான் ஆள் இல்லை..
யாராச்சும் தெரியாம மாட்டினா டெஸ்ட் பண்ணியிர வேண்டியதுதான்... :D :D :D
------
அனுக்கா தேங்காய் சாதத்துக்கு தொட்டுக்க எந்த சைட்டிஷ் நல்லாயிருக்கும்..

அம்மணி, குடும்பத்தோடு வந்து சாப்பிட்டு விட்டு எப்படி இருக்குன்னு சொல்ல நாங்க ரெடி. நீங்க ரெடியா ?

தங்கவேல்
22-02-2008, 03:11 AM
அனு, அப்படியே ஒரு போனை போட்டு என் வீட்டு முதலாளியிடம் அன்புக்கட்டளை இட்டால், படித்து நாக்கை சப்பிகொட்டியவாறு இருக்கும் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்..

அனுராகவன்
23-02-2008, 02:49 AM
அம்மணி, குடும்பத்தோடு வந்து சாப்பிட்டு விட்டு எப்படி இருக்குன்னு சொல்ல நாங்க ரெடி. நீங்க ரெடியா ?

ஏன் கஸ்டம் உங்களுக்கு கடையிலே கேளுங்க..
இல்லையினா அப்பரம் உங்க உடல் ஆசிபிட்டலிதான்..
மலர் ட்ரைபண்றது ஒரு ட்ரைலர்தான்
அப்ப நீங்க அதை போய் சாப்பிடபோரிங்களா..??

அனுராகவன்
23-02-2008, 02:51 AM
அனு, அப்படியே ஒரு போனை போட்டு என் வீட்டு முதலாளியிடம் அன்புக்கட்டளை இட்டால், படித்து நாக்கை சப்பிகொட்டியவாறு இருக்கும் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்..

நான் சொல்லுரேன்.
அப்ப அவங்க கேப்பாங்களா..

ஜெகதீசன்
23-02-2008, 03:29 AM
இட்லி சட்னி சாப்பிட்டு மூன்று மாத்திற்க்கு மேல்
ஆகிவிட்டது. யாராவது டி.எச்.எல் கூறியரில் அனுப்பி
வைங்க எனக்கு.

அனுராகவன்
23-02-2008, 03:32 AM
இனிப்பு தோசை


சாதா தோசையை போன்றே சுவையானது, செய்வது சுலபம், மாவு அரைக்கும் வேலையை இல்லை, எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.


கோதுமை மாவு - 2 கப்

அரிசி மாவு - 1 கப்

துருவிய தேங்காய் - 1/2 கப்

வெல்லம் (நசுக்கியது) - 1 கப்

உப்பு - 1 சிட்டிகை


இவை அனைத்தையும் நீர் விட்டு தோசை வார்க்கும் பதத்திற்கும் சிறிது கெட்டியாக கரைத்துக் கொண்டு தோசைத் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி தேய்த்து 1 கரண்டி மாவை ஊற்றி சிறிது மொத்தமாக தேய்த்து எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்து பரிமாரவும்.

இனிப்புக்கு பதில் காரம் சேர்த்துக் கொள்ளலாம்..

அனுராகவன்
24-02-2008, 01:52 AM
சட்டினிக்கு இட்லியே செய்யுங்கள்..
அப்பதான் சாப்பிட முடியும்

ரவா இட்லி

தேவையான பொருட்கள்:


ரவை - 1 டம்ளர்
நல்லெண்ணெய் சிறிது
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரைத் தேக்கரண்டி
இஞ்சி சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை சிறிது
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தயிர் ஒரு டம்ளர்
புளித்த இட்லி மாவு - 2 டம்ளர்
உப்பு தேவையான அளவு


செய்முறை:


வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்த பின்பு உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும் ரவையையும் சேர்த்து நன்கு சிவக்க வறுக்க வேண்டும். வறுத்த பிறகு கீழே இறக்கும்போது பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

பிறகு மஞ்சள்தூள் சேர்த்து, புளித்த இட்லி மாவைக்கலந்து அதனுடன் தயிரையும் ஊற்றி கலந்து மூடி வைத்துவிடவும். அரைமணி நேரம் கழித்து இட்லி தட்டில் ஊற்றி வைத்து எடுக்கவேண்டும்.

க.கமலக்கண்ணன்
25-02-2008, 11:36 AM
அடடா இந்த திரியை பார்க்காம விட்டுவிட்டேனே

அருமையான சமையல் குறிப்பு

அடுத்து வீட்டு போன உடனே மனைவிடம் காட்டி

அமுதம் போல குறிப்பு இருக்கு

அப்பில் சமைத்திடு எனக்கு என்று சொல்ல வேண்டும்

அனுவின் சமையல் குறிப்பு

அற்புதம்... (ஆனா எப்போவுமே மலரோட சமையல் தான் ரொம்ப பிரபலம் நமது மன்றத்தில்)

அனுராகவன்
25-02-2008, 02:52 PM
அற்புதம்... (ஆனா எப்போவுமே மலரோட சமையல் தான் ரொம்ப பிரபலம் நமது மன்றத்தில்)

அப்ப என் குறிப்பு நல்ல இல்லையா..
மலர் என்ன செடியில மட்டும்தான் சிறப்பு
ஆனா நான் மரத்திற்கே சிறப்பு,..

மலர்
25-02-2008, 05:51 PM
அப்ப என் குறிப்பு நல்ல இல்லையா.. அய்யோ என் செல்ல அனுக்கா....
உங்களுடையது எல்லாமே நல்ல பயனுள்ள குறிப்பு.. :icon_b: :icon_b:

கமலக்கண்ணன் அண்ணா என்னோட
சமையலை கிண்டல் அடிக்கிறாங்க...:cool: :cool:
ரொம்ப கிண்டல் அடிக்காதீங்கண்ணா.. :sauer028: :sauer028:
அப்புறம் ஒரு நாள் என் கையால சமைச்சி தந்திடுவேன்.... :D :D :D

க.கமலக்கண்ணன்
26-02-2008, 02:00 AM
அப்ப என் குறிப்பு நல்ல இல்லையா..
மலர் என்ன செடியில மட்டும்தான் சிறப்பு
ஆனா நான் மரத்திற்கே சிறப்பு,..

அனு நான் சொன்னது சமையல்

மலரோட சமையல் நீங்கள் சொன்னது சமையல் குறிப்பு

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல உங்களுடையது எப்போவுமே சிறப்புதான்.

அனுராகவன்
26-02-2008, 10:51 AM
அய்யோ என் செல்ல அனுக்கா....
உங்களுடையது எல்லாமே நல்ல பயனுள்ள குறிப்பு.. :icon_b: :icon_b:

கமலக்கண்ணன் அண்ணா என்னோட
சமையலை கிண்டல் அடிக்கிறாங்க...:cool: :cool:
ரொம்ப கிண்டல் அடிக்காதீங்கண்ணா.. :sauer028: :sauer028:
அப்புறம் ஒரு நாள் என் கையால சமைச்சி தந்திடுவேன்.... :D :D :D

அப்படியா..!!
நான் ஏதோ நினைத்து விட்டேன்..!
அப்ப சரி மலர் ..!!
சமைக்க வேண்டியதுதானே..!!!

அனுராகவன்
26-02-2008, 10:53 AM
அனு நான் சொன்னது சமையல்

மலரோட சமையல் நீங்கள் சொன்னது சமையல் குறிப்பு

இரண்டுக்கும் வித்தியாசம் இருக்குல்ல உங்களுடையது எப்போவுமே சிறப்புதான்.

நன்றி கமல்..!!
அப்ப மலரோட சமையலை எப்ப சாப்பிட போறீங்க..!!
பாத்து சாப்பிடும் முன்னாடி டாக்டருக்கு ஒரு போன போடுங்க..!!

க.கமலக்கண்ணன்
26-02-2008, 10:57 AM
அது சரிவராது. டாக்டரை வரவழைத்து

அருகில்

அமர்த்திக் கொண்டு பின் சாப்பிட வேண்டும்

அனு, இல்லை என்றால்

அவ்வளவுதான்...

மலர்
26-02-2008, 09:10 PM
அது சரிவராது. டாக்டரை வரவழைத்து
அவ்வளவுதான்... நல்லா நோட் பண்ணி வச்சிக்கிட்டேன்.... :cool: :cool:

அனுராகவன்
29-02-2008, 04:18 AM
தேங்காய் வெங்காயத் துவையல்


தேவையான பொருட்கள்:

தேங்காய்த் துருவல் - ஒரு கை
கொத்தமல்லித் தழை - 2 கை
சிறிய பூண்டுப்பற்கள் - 5
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 7
நறுக்கிய இஞ்சி - கால் ஸ்பூன்
புளி - நெல்லியளவு
கறிவேப்பிலை - 15இலைகள்

செய்முறை:


புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும். பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்து மையாக அரைக்காமல் ஒன்று பாதியாக அரைப்பது போல அரைக்க வேண்டும்

அனுராகவன்
29-02-2008, 04:22 AM
தேங்காய் சாம்பார்

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு 200 கிராம்

துருவிய தேங்காய் 100 கிராம்

வற்றல் மிளகாய் 10

வெங்காயம் 150 கிராம்

புளி 40 கிராம்

சாம்பார்ப் பொடி 4 தேக்கரண்டி

வெந்தயம் ஒரு தேக்கரண்டி

தக்காளி 100 கிராம்

கடுகு 1 தேக்கரண்டி

பெருங்காயம் 3 சிட்டிகை

தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள்

செய்முறை:

துவரம்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
புளியை நீர் விட்டுக் கரைத்து அதனுடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல் மிளகாய் போடவும். கடுகு வெடித்ததும், வெந்தயம் போட்டு வதக்கவும்.
வெந்தயம் சிவந்ததும் உரித்த வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமானதும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும்.

பின்பு அதனுடன் புளி கரைசலை ஊற்றி கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை சாம்பார்த் தூள், தேங்காயுடன் போட்டுக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், அதை இறக்கி வைத்து பரிமாறவும்.

தேங்காய் சாம்பார் ரெடி..
சாதம் வைத்து சாப்பிடுவதுதான் பாக்கி...

அனுராகவன்
08-03-2008, 05:56 AM
தேங்காயில் தனியாக துவையல் செய்வதை பார்க்கலாம்...

தேங்காய் துவையல்

தேவையான பொருட்கள்:

தேங்காய் - ஒரு மூடி
பெருங்காயம் - பட்டாணி அளவு
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகாய் - 6
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:


தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பருப்புடன் சிறு எலுமிச்சை அளவு புளி மற்றும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். முக்கால் பதத்திற்கு அரைபட்டவுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்க வேண்டும். மிகவும் நைசாக அரைத்து விடாமல், தேங்காயும் பருப்பும் சேரும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

க.கமலக்கண்ணன்
08-03-2008, 08:58 AM
அனு இன்று வீட்டுக்கு சென்று நான் செய்ய சொல்லி சாப்பிட்டுப் பார்க்கிறேன்.

தங்கவேல்
08-03-2008, 11:17 AM
இப்படியும் சாம்பார் வைக்கலாமா ? அனு சாப்பிட்டு விட்டு பதிலிடுவேன்

அனுராகவன்
09-03-2008, 09:23 AM
நன்றி தங்கவேல் அவர்களே!!
செய்து விட்டு வாங்க..

க.கமலக்கண்ணன்
09-03-2008, 10:08 AM
அனு சூப்பர இருக்கு நேற்று செய்து சாப்பிடோம் மிக்க நன்றி...

அனுராகவன்
12-03-2008, 04:04 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
12-03-2008, 04:22 AM
தேங்காய்ப்பால் பொங்கல்

தேவையானப் பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கப்
பாசிப் பருப்பு - கால் கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 15
தூளாக்கிய வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 5
தேங்காய்ப்பால் - 1 கப்

செய்முறை:

வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்*ர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணி*ர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.
பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும்.
தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டும் கிளறி விட்டு இறக்கி வைக்கவும். மீதி உள்ள நெய்யை ஒரு வாணலியில் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவப்பாக வறுத்து பொங்கலில் போடவும்.
ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கொள்ளவும். பின் தேங்காய்ப்பால் விட்டு சிறிது நேரம் கிளறவும். பொங்கல் ரெடி இதன் சுவை மிகவும் அலாதியாய் இருக்ககும்.

அப்ப சூடான சுவையான பொங்கல் ரெடி...
பரிமாறுங்கள் சுவையாக இருக்கும்

அனுராகவன்
12-03-2008, 04:25 AM
தோங்காய் பால் கேக்


தேவையான பொருட்கள்:

ஒரு முற்றிய தேங்காயின் பால் - 1 லிட்டர்
சக்கரை பொடீத்தது - 500 கிராம்
நெய் - 2 டீஸ்பூன்
அமோனியம் பை கார்பனெட் - 1/2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
திராட்சை - 100 கிராம்
முந்திரிப் பருப்பு - 100 கிராம்
பால் எடுத்த தேங்காய்ப்பூ

செய்முறை:

தேங்காயைத் துருவி பாலை எடுத்துவிட்டு, பூவை உலர வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பால், நெய், சக்கரைப் பவுடர், ஏலப்பொடி, திராட்சை, முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல் எல்லாம் போட்டு கிளறிவிட்டுக் காய்ச்ச வேண்டும். இட்லி மாவுப் பதம் வந்ததும் அம்மோனியம் பைகார்பனேட்டையும் போட்டுக் கிளற வேண்டும். பின் தகர ட்ரேயில் டால்டாவைத் தடவி, அதில் ஊற்றி விட வேண்டும். ஆறிய பின் தேங்காய்ப்பால் கேக் தயார்

தேங்காய் பால் கேக் ரெடியாகிவிட்டது..

க.கமலக்கண்ணன்
12-03-2008, 09:41 AM
அனு வித்தியாசமாக ஒன்றை கொடுத்திருக்கிறீர்கள்...

அடுத்த பரிட்சைக்கு தயாராக சொல்லிட்டேன் அனு என் வீட்டில்...

kavitha
12-03-2008, 11:35 AM
தேவையான பொருட்கள்:

தேங்காய்த் துருவல் - ஒரு கை
கொத்தமல்லித் தழை - 2 கை
சிறிய பூண்டுப்பற்கள் - 5
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3
பச்சைமிளகாய் - 7
நறுக்கிய இஞ்சி - கால் ஸ்பூன்
புளி - நெல்லியளவு
கறிவேப்பிலை - 15இலைகள்

செய்முறை:


புளியை சிறிது வென்னீரில் ஊற வைக்கவும். பிறகு மற்ற பொருட்களைச் சேர்த்து மையாக அரைக்காமல் ஒன்று பாதியாக அரைப்பது போல அரைக்க வேண்டும் பச்சையாகவே அரைத்துச் சாப்பிடலாமா அனு? புது விதமான பழைய ரெசிப்பிகள்... நானும் செய்து பார்க்கிறேன். நன்றி அனு.

அனுராகவன்
13-03-2008, 02:04 AM
பச்சையாகவே அரைத்துச் சாப்பிடலாமா அனு? புது விதமான பழைய ரெசிப்பிகள்... நானும் செய்து பார்க்கிறேன். நன்றி அனு.

ஓ!! நன்றி.
கவிதா அவர்களே!!
துவையல் பச்சையாகதான் அரைத்து உண்ணலாம்.
ஏன்யென்றால் அப்போதுதான் முழு சத்தும்,ருசியும் இருக்கும்..
நான் செய்யும் மிக சுலப துவையல் இது..
தேவைபட்டால் சிறிது எண்ணையில் கடுகு,கருவேப்பிலை
போட்டு உண்ணடால் சுவைகூடும்..
அப்ப செய்து பாத்துவிட்டு வாங்க கவிதா..
என் நன்றி

அனுராகவன்
14-03-2008, 03:06 AM
தேங்காய் அப்பம்


தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்
தேங்காய் - 1
சீனி - 250 கிராம்
ஈஸ்ட் - ஒரு சிட்டிகை

செய்முறை:


பச்சரிசியைக் கழுவி, பிறகு நன்கு ஈரம் போக உலர வைத்து, மாவாக இடித்து பிறகு சலிக்க வேண்டும். தேங்காயைத் துருவ வேண்டும்.
தேங்காய்த் துருவல், சீனி, மாவு அனைத்தையும் சேர்த்து முதல் நாள் இரவு இட்லி மாவு போல கரைத்து வைக்க வேண்டும்.
சிறிது நீரில் ஈஸ்டைக் கரைத்து மாவுடன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.

மறுநாள் காலை வட்ட வடிவமான தட்டுகளில் மாவை அரை இஞ்ச் அளவுக்கு ஊற்றி இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
வெந்த பின்பு அது அளவில் பெரியதாகிவிடும்.

சாப்பிட சுவையான அப்பம் ரெடி..
எடுத்து பரிமாறுங்கள்..

அனுராகவன்
14-03-2008, 03:14 AM
தேங்காய் பர்பி

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் 1 கோப்பை

சர்க்கரை 1 கோப்பை

முந்திரிப் பருப்பு 25 கிராம்

ஏலக்காய் தூள் 4 (பொடித்தது)

நெய் 4 ஸ்பூன்.

செய்முறை:


தேங்காயை நன்றாகத் துருவி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும். முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கி நெய்யில் போட்டு பொன் நிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடி கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சர்க்கரையைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கம்பிப் பாகு வைக்க வேண்டும்.

பாகு வெந்ததும் அதில் தேங்காய்த் துறுவலை சேர்த்துக் கிளற வேண்டும். நன்றாக சுருண்டு வரும்போது வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூளைச் சேர்த்து, நெய் ஊற்றி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.

பாதி ஆறியதும், துண்டு போட்டு வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும், ஒரு பேப்பரை வைத்து அதன் மீது தட்டைக் கவிழ்த்தால் பர்பி ஒட்டாமல் பேப்பரில் வந்து விடும்.

க.கமலக்கண்ணன்
14-03-2008, 08:32 AM
அப்பமும் பர்பியும் தேங்காயில்

அமுதமாய் செய்முறையை படைத்திட்ட

அனு வாழ்க நீங்கள் நீடுடி. இன்று செய்து சாப்பிட்டு விட்டு வந்து சொல்கிறேன்

அனு...

அனுராகவன்
14-03-2008, 10:17 AM
கமலகண்ணன் அவர்களே!!
கணடதிற்கு மிக்க மகிழ்ச்சி
காலையில் இதை செய்யலாம்..

அனுராகவன்
17-03-2008, 06:13 AM
தேங்காய் திரட்டுப் பால்

தேவையானப் பொருட்கள்

தேங்காய் - 2
பயத்தம்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்


செய்முறை

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.
கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். முந்திரியை வறுத்து போடவும்.
இதுவே தேங்காய் திரட்டிப்பால்.
இது சுவைமிகுந்த பாரம்பரிய உணவு.

அனுராகவன்
17-03-2008, 06:27 AM
தேங்காய் குழம்பு

தேவையானப் பொருட்கள்

தேங்காய் -- 2 மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் -- 1/2 கப் (வட்டவடிவமாக வெட்டியது)
பச்சை மிளகாய் -- 3 (நீளமாக வெட்டியது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
அரைக்க:
சிவப்பு மிளகாய் -- 5 என்னம்
சீரகம் -- 1 டீஸ்பூன்
சோம்பு -- 1 டீஸ்பூன்
உப்பு -- தே.அ

தாளிக்க :

கடுகு -- 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்

செய்முறை

*தேங்காய் துருவல் ,சோம்பு, சீரகம், வத்தல் சேர்த்து *நன்றாக அரைத்து பால் எடுக்கவும்.
*இரண்டு முறை பால் எடுக்கவும்.
*வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு *தளித்து கறிவேப்பிலை போடவும்.
*அதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
*பின் தேங்காய்பாலை சேர்த்து உப்பு போடவும்.
*ஒரே ஒரு கொதிவந்ததும் இறக்கிவிடவும். நிறைய நேரம் கொதிக்கக் கூடாது.
*ரெடி

அனுராகவன்
17-03-2008, 06:34 AM
கார தேங்காய் பணியாரம்

தேவையானப் பொருட்கள்

கடலை மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


செய்முறை

*பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் ஒரு கப், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*அதில் கடலை மாவு சேர்த்து மறுபடியும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

*வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

*வதக்கியதை மாவில் கலந்து பணியார சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.

க.கமலக்கண்ணன்
17-03-2008, 11:55 AM
அனு தேங்காய்

அப்பம் மிகவும் சுவையாக

அற்புதமாக இருந்தது நன்றி உங்களுக்கு

அப்புறம் அனு பால்பணியாரம் செய்முறை

அலுப்படையாமல் தரமுடியுமா?

அனுராகவன்
18-03-2008, 01:42 AM
அப்புறம் அனு பால்பணியாரம் செய்முறை

அலுப்படையாமல் தரமுடியுமா?

அப்படியே ஆகட்டும்..
தொடர்ந்து வாங்க..

க.கமலக்கண்ணன்
18-03-2008, 10:01 AM
நன்றி அனு
நன்றாக சுவைத்திட வருகிறேன்....

அனுராகவன்
26-03-2008, 09:49 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
தொடர்ந்து வருக..
என் நன்றியும்,வாழ்த்தும்

அனுராகவன்
11-04-2008, 01:18 AM
தேங்காய் பால் சூப்

தேவையான பொருள்கள்:-

தேங்காய் பால் - 1கப்

பால் - 1கப்

வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது

பச்சைமிளகாய் - 4 பொடியாக நறுக்கியது

இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி தழை - சிறிதளவு பொடியாக நறுக்கியது

எலுமிச்சை இலை - சிறிதளவு வாசனைக்கு

எலுமிச்சை சாறு - 2ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் (அல்லது) தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன்

சோள மாவு - 2ஸ்பூன்

செய்முறை:-

வாணலியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கவும்.

அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, எலுமிச்சை இலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

பின்பு கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.

1கொதி வந்த பின்பு தேங்காய் பாலுக்கு தேவையான உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.

சுவையான தேங்காய் பால் சூப் தயார்.

இப்பால் அருமையாக இருக்கும். இதை சீக்கிரமாக செய்து முடித்து விடலாம். குழந்தைகள் நலத்திற்கு நல்லது. இப்பாலை உணவு அருந்துவதற்கு முன்னும் பின்னும் பருகலாம்.இந்த சூப்பை எங்கள் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.