PDA

View Full Version : எங்கே நிறுத்துவது?



சிவா.ஜி
20-02-2008, 04:19 AM
பறவைக்கும் கூடுண்டு
என்னக்கொரு வீடில்லையென
சேர்த்து வைத்த காசில்
பார்த்து பார்த்து கட்டிய வீட்டில்
மொத்தமாய் இருந்த நாட்கள்
கொத்தனார் இருந்ததைவிட குறைவு!

இதை ஆதங்கமாய் சொல்லக்கூட
அருகதையில்லை எனக்கு...
அத்தியாவசியத்திற்காக
அயல்தேசம் வந்தவன்
அவசியம் அநாவசியத்திற்கான
வித்தியாசம் தெரியாமல்
வாழ்ந்து வருகிறேன்!

நிறுத்துவதும்,தொடர்வதும்
நிச்சயமாய் என் முடிவுதானென்றாலும்
ஒவ்வொரு முறையும் ஒரு காரணம்
மீண்டும் பயணிக்க வைக்கிறது....

நில்! வாழ்! எனும்
உள் மனதின் கட்டளை
என்னுள்ளிருந்து எழும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்....
கட்டிய வீடு இன்னும்
கட்டிடமாகவே காத்திருக்கிறது!

நாகரா
20-02-2008, 04:37 AM
மெய்யென்னும் வீடு உமக்குண்டு
அம்மெய் வீடு உறைவதற்கோர் பெருவெளி இல்லமுண்டு.
எங்கே இருந்தாலும்
மெய் வீட்டுக்குள்
பெருவெளி இல்லத்துள்
வாசியாய் வாழும்
நற்சிவமாம் மாமணியே
வாசி பார்த்து
சிவா சிவா என்றே
சும்மா நில்
மெய்யென்னுங் கடவுள் கட்டிய வீடு
வெறுங் கட்டிடமாய்க் காத்திராமல்
மெய்யென்றே மெய்யாய் நின்றுய்ய
உறுதி சொல்லும்
உம் உள் மனதின் கட்டளைப்படி
நில், வாழ்
இதோ, இங்கே, இக்கணமே

நன்றி சிவா.

யவனிகா
20-02-2008, 05:03 AM
அண்ணா...வீடு குறித்த அயல் நாட்டவரின் ஏக்கங்களை அப்படியே சொல்லிவிட்டீர்கள்...ஒற்றைத் தனிப் பிரதிநிதியாய். கட்டிடம் வீடாய் மாறும் காலம் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.வருடம் ஒரு முறை வீடாய் ஆகும் கட்டிடங்கள்...நம் ஊரில் ஏராளம் உண்டு.

கண் விற்று சித்திரம் வாங்கியது போல நமது நிலை. பெரு மூச்சு விடத்தான் தோன்றுகிறது. அநாவசியங்கள்...என்று எதைச் சொல்வது அண்ணா...அம்மா வயிற்றில் இருக்கும் வரை, இடை மறைக்கும் துணி கூட அநாவசியம் தான். வந்த பின் தேவை வந்து விடுகிறதே...

ஏதோ ஒரு விதத்தில் எல்லாரும் எதையோ இழக்கிறார்கள். கடன் வாங்கி வீடு கட்டி விட்டு அது கொடுக்கும் சுமையில் கட்டிய வீட்டை ரசிக்காமல் இருப்பவரும் உண்டு...நமக்கு ஒரு மாசமாவது ரசிக்கக் கிடைக்கிறதே....

இடைவிடாத தடையோட்டம் தான் வாழ்க்கை என்று ஆகிப் போன பின், கிடைப்பவற்றில் மகிழ்ந்து கொள்ளும் படி மனதை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்...

நதிக்கெல்லாம் சோகம் வந்தா...கடல் கிட்ட கண்ணீர் விடும். அந்த கடலே கலங்கி நின்னா....சிவாண்ணா...தங்கச்சிய இப்படி செண்டிமெண்டா எழுதவெக்கணும்னு தான இந்தக் கவிதையப் போட்டீங்க...வாழ்த்துக்கள்.

நேசம்
20-02-2008, 05:20 AM
ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்.குடும்ப நலனுக்காக அயல் தேசங்களில் நாம் இருக்கிறோம்.கட்டிய வீடும் ஒரு நாளும் வசந்த மளிகையாக மாறும் சிவாண்ணா.கவிதை அருமை.வாழ்த்துகள்

இளசு
20-02-2008, 05:57 AM
House , Home - வீடு, இல்லம்.

அயல்தேசத்தில் பணி செய்து பொருள் ஈட்டி
அடுத்த ஆண்டு '' நிச்சயம்'' எனும் நவீன '' திருநாளைப்போவார்''களின்
மனசலனச் சித்திரம்!

பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
20-02-2008, 06:42 AM
உம் உள் மனதின் கட்டளைப்படி
நில், வாழ்
இதோ, இங்கே, இக்கணமே


இதைத்தான் நாகரா அவர்களே அழுத்தமான கட்டளையாய் வரக் காத்திருக்கிறேம்.இடையில் எழும் உறுதியெல்லாம் பிரசவ வைராக்கியம் போன்றது.
மிக அருமையாக தத்துவார்த்தமாக பின்னூட்டம் எழுதி சிந்திக்க வைத்துவிட்டீர்கள் நாகரா.மிக்க நன்றி.

சிவா.ஜி
20-02-2008, 06:45 AM
இடைவிடாத தடையோட்டம் தான் வாழ்க்கை என்று ஆகிப் போன பின், கிடைப்பவற்றில் மகிழ்ந்து கொள்ளும் படி மனதை மாற்றிக் கொள்ள வேண்டியது தான்...

சரிதாம்மா...அப்படி இப்படி ஏதோ ஒரு சமாதனத்தை சொல்லிக்கொண்டு தொடர்ந்தாலும்...முற்றும் போட்டுவிடவே மனம் விரும்புகிறது.
பார்ப்போம் காலத்தின் விளையாட்டு எப்பாடி இருக்கிறதென்று.
நன்றிம்மா.

சிவா.ஜி
20-02-2008, 06:46 AM
ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்.குடும்ப நலனுக்காக அயல் தேசங்களில் நாம் இருக்கிறோம்.கட்டிய வீடும் ஒரு நாளும் வசந்த மளிகையாக மாறும் சிவாண்ணா.கவிதை அருமை.வாழ்த்துகள்

வசந்த மாளிகையாக மாறும் என்ற நம்பிக்கைதானே தம்பி நம்மை போராட்டத்தை தொடரச் செய்கிறது.நம்புவோம்.மிக்க நன்றி நேசம்.

சிவா.ஜி
20-02-2008, 06:49 AM
House , Home - வீடு, இல்லம்.

அயல்தேசத்தில் பணி செய்து பொருள் ஈட்டி
அடுத்த ஆண்டு \'\' நிச்சயம்\'\' எனும் நவீன \'\' திருநாளைப்போவார்\'\'களின்
மனசலனச் சித்திரம்!


சில வரிகளில் நறுக்கென்று உண்மை உரைத்திருக்கிறீர்கள்....திருநாளைப் போவார்....அமைதி கொள்வது எப்போது?
வீடு இல்லமாகும் போது இன்பத்தை அனுபவிக்கும் காலம் குறைந்து விடும்.ஆனால் அதுவாவது கிடைத்ததே என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
மிக்க நன்றி இளசு.

மதி
20-02-2008, 09:38 AM
நிதர்சனமான உண்மை...
நீங்கள் அயல்நாட்டைப் பற்றி சொல்கிறீர்கள்.. நான் உள்நாட்டிலேயே அதை உணர்கிறேன்.

அதனால் தானோ என்னவோ..ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பது..

நல்ல கவிதை அண்ணா..

ஜெகதீசன்
20-02-2008, 10:01 AM
நல்ல உண்மைக்கவிதை. நாகரா வின் பதிலும் அருமை
வாழ்க வளமுடன்

சிவா.ஜி
20-02-2008, 10:37 AM
நிதர்சனமான உண்மை...
நீங்கள் அயல்நாட்டைப் பற்றி சொல்கிறீர்கள்.. நான் உள்நாட்டிலேயே அதை உணர்கிறேன்.

வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் அது உள்நாடோ..வெளிநாடோ இரண்டுமே ஒன்றுதான் மதி.அதை ஒரு கட்டிடமாய் பார்க்காமல்...இல்லமாய் பார்க்கும்போதுதான்...அது இல்லாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது.நானும் உங்களைப்போலத்தான்...முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருப்பேன்.
நன்றி மதி.

சிவா.ஜி
20-02-2008, 10:43 AM
நல்ல உண்மைக்கவிதை. நாகரா வின் பதிலும் அருமை

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெகதீசன்.

ஆதி
21-02-2008, 05:55 AM
உதிரமும் சதையும் பிசைந்து
உய்ய வீடு செய்தோம்
உறைய ஒருவழி இல்லாததால்
ஊமை இதழ்களாய்
வெறுமையாக இருக்கிறது
வீடும் வாழ்க்கையும்..

அழகிய கவிதை அண்ணா, அடுத்த நாட்டில் சுதந்திரமாய் இருந்தாலும் சொந்த பூமியில் அடிமையாய் இருக்கும் சுகம் கிடைக்காது..

சொர்க்கமே என்றாலும் நம்மூருப் போல வருமா ?

ஏக்க கவிதைக்கும் ஏங்கும் உங்களுக்கும் ஆறுதல்களும் வாழ்த்துக்களும்

அன்புடன் ஆதி

அமரன்
21-02-2008, 08:58 AM
சொந்த வீட்டை
சொந்தங்கொண்டாடும் நிலைமை
எட்டும் தூரத்தில்
என்ற நம்பிக்கையில்தான்
கூட்டிலுள்ளது உயிர்
பலருக்கு!!

ஆகாயம் கூரை
தரையே படுக்கை
நடுவில் எதற்கு இன்னபிற..
சுய தேற்றலில்
சுற்றும் வாழ்க்கைச் சக்கரம்
சிலருக்கு!!!

ஒவ்வொருவருக்கு
ஒவ்வொரு விதமான ஏக்கம்!

வீடு வாங்குவதற்காகவே
மூன்றாவது மகவு ஈன்றெடுக்கும்
அவல(!)நிலையில்
பனிப்புலப் பெயர்வாழ் மக்கள்!

இருந்தும் வெறுமையாக...
காணிநிலம் 'சொந்த'மில்லையே!
"சொர்க்கமே என்றாலும்
நம்மூரைப்போல வருமா?"

தாக்கம் கொடுத்த ஏக்கக் கவிதை பாரமாக..
பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
22-02-2008, 04:47 AM
உதிரமும் சதையும் பிசைந்து
உய்ய வீடு செய்தோம்
உறைய ஒருவழி இல்லாததால்
ஊமை இதழ்களாய்
வெறுமையாக இருக்கிறது
வீடும் வாழ்க்கையும்..

சில வரிகளில் வலியுணர்த்திய அழகிய பின்னூட்டக் கவிதை.பாராட்டுகள் மற்றும் நன்றிகள் ஆதி.

சிவா.ஜி
22-02-2008, 04:49 AM
வீடு வாங்குவதற்காகவே
மூன்றாவது மகவு ஈன்றெடுக்கும்
அவல(!)நிலையில்
பனிப்புலப் பெயர்வாழ் மக்கள்!

ஏன் இப்படி ஒரு நிலை ...இதன் விவரம் தெரியவில்லை.வீடு வாங்க வேண்டுமென்றால் மூன்றாவது மகவு ஈன்றெடுக்க வேண்டுமா...ஏன் அமரன்...

பின்னூட்டக்கவிதையில்...நெஞ்சின் ஏக்கம் சொன்ன விதம் அருமை அமரன்.மிக்க நன்றி.

அமரன்
22-02-2008, 06:23 AM
மூன்று குழந்தைகள் இருந்தால் வீட்டுக்கடனில் பாதியை அரசு பொறுப்பேற்கும். அதைவிடப் பல சலுகைகளும் கிடைக்கும். இதனால் பலர்வீட்டில் மூன்று பிள்ளைகள் நிச்சயம். நகைச்சுவையாக மூன்றாவது குழந்தையை அரசுக்குழந்தை என்று சொல்வார்கள்.

சிவா.ஜி
22-02-2008, 06:30 AM
மூன்று குழந்தைகள் இருந்தால் வீட்டுக்கடனில் பாதியை அரசு பொறுப்பேற்கும். அதைவிடப் பல சலுகைகளும் கிடைக்கும். இதனால் பலர்வீட்டில் மூன்று பிள்ளைகள் நிச்சயம். நகைச்சுவையாக மூன்றாவது குழந்தையை அரசுக்குழந்தை என்று சொல்வார்கள்.
ஓ...அப்படியா?பிறந்து வளர்ந்து பெற்றோருக்கு எந்த வகையிலும் உதவிடாத பிள்ளைகளுக்கிடையில்...பிறப்பதே பெற்றோருக்கு உதவத்தான் என்பதைப்போல பிறக்கும் அந்த மூன்றாவது குழந்தை...வியக்கிறேன்.தகவலுக்கு நன்றி அமரன்.

அனுராகவன்
03-05-2008, 01:55 AM
பறவைக்கும் கூடுண்டு
என்னக்கொரு வீடில்லையென
சேர்த்து வைத்த காசில்
பார்த்து பார்த்து கட்டிய வீட்டில்
மொத்தமாய் இருந்த நாட்கள்
கொத்தனார் இருந்ததைவிட குறைவு!
இதை படிக்க ஒருபக்கம் சிரிப்பும்,மறுபக்கம் அழுகையே வருது..
எல்லாம் இன்றைய வாழ்க்கை சூழலல்..


நில்! வாழ்! எனும்
உள் மனதின் கட்டளை
என்னுள்ளிருந்து எழும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்....
கட்டிய வீடு இன்னும்
கட்டிடமாகவே காத்திருக்கிறது!
ம்ம் நல்ல வரிகள் சிவா அவர்களே!!
எத்தனை மனிதர்கள் தங்கள் சொந்த வீட்டில் வாழமுடிகிறது....
எதையோ இழந்த சோகம் என் கண்முன்னே தெரியுது..
என் வாழ்த்துக்கள் !!!

ஆதவா
19-06-2008, 09:58 AM
வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காக நிறுத்தாமல் பயணிக்கிறோம். எங்கே? முடிவில்லாமல். ஆரம்பமும் முடிவும் கவிதையில் ஹைலைட்ஸ்.

இந்தப் பயணம் தேவையாக இருக்கிறது. சிலர் உள்நாட்டிலேயே அலைந்தாலும்.. பொருளாதாரம் இல்லையென்றால் எப்பொருளும் இல்லை.. ஆனால் உணர்வுகளை விற்றுத்தானே பொருளாதாரம் வாங்குகிறோம்..........

குடும்பத்தினுள் அங்கமாய் இல்லம்... அதன் பிரிவு, நம்மை நாமே பிரிவதைப் போல.

கட்டியவீடு கட்டிடமாக இருக்கிறது என்பது இன்னும் குடியேறாத நிலையைக் குறிக்கிறது. அழுக்கு படியாத வீட்டைக் கட்டிடமாகச் சொல்லுவது சரியான வார்த்தை.

அயல்தேசத்தில் வாழ்பவர்களுக்கு இந்த மனச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு.

நல்ல கவிதை அண்ணா.!!
--------------
நாகரா அண்ணா!! - இதுக்கு நீங்க நேரடியா உங்க கருத்தை சொல்லியிருக்கலாம். ஒண்ணும் புரியலை.

ஆதி,, உங்கள் வரிகள் பிரம்மாதம்.

சிவா.ஜி
19-06-2008, 10:14 AM
இப்படிப்பட்ட எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தாலும், சமீப காலங்களில் மிக அதிகமாக எழுகிறது ஆதவா. எப்படியும் வெகு சீக்கிரம் இந்த தனிமைக்கு விடுதலைக் கொடுக்க வேண்டும். நன்றி ஆதவா.

பென்ஸ்
20-06-2008, 04:36 AM
திரைகடலோடியும் திரவியம் தேடு....

முதலில் பசி, பட்டினியை போக்க,
பின் கடனை தீர்க்க....
பின் சொந்தமாய் ஒரு வீடு வாங்கிட...
பின் மகளின் திருமணத்திற்காய்...
இப்படி...
இப்படியாய்.....

தேவைகள் என்றும் குறையாது, தேடலும் முடியாது....

வாழ்க்கை எல்லா வகையிலும் பாலன்ஸ் (Balanced) ஆனதாக இருக்கவேண்டும்.... முதலில் நம் தேவைகள், குடும்பம், சமுதாயம் என்று நம் தேவைகளை எடைப்போட்டு பார்த்து முடிவெடுப்பது நலம்...
இன்றைய முடிவுகள் நாளைய சங்கடம் ஆகாமல் இருப்பது நலம்.

kavitha
20-06-2008, 05:10 AM
மொத்தமாய் இருந்த நாட்கள்
கொத்தனார் இருந்ததைவிட குறைவு!

....
....

நில்! வாழ்! எனும்
உள் மனதின் கட்டளை
என்னுள்ளிருந்து எழும் நாளுக்காய்
காத்திருக்கிறேன்....
கட்டிய வீடு இன்னும்
கட்டிடமாகவே காத்திருக்கிறது!
மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சிவா அண்ணா.
இந்த நிலை பலருக்கும் உண்டு. நல்லதொரு கவிதை.

ஓவியன்
20-06-2008, 05:15 AM
உணர்வுகளைப் புரிந்து கொள்ள
உரத்துக் கூறும் வார்த்தைகளோ - அன்றி
உறைக்க வைக்கும் வரிகளோ
தேவையில்லை சிவா...!!

மாறாக உணர்வுகளைப் புரிய
உணர்வுகளே போதும்...!!

என்னால் புரிந்து கொள்ள முடிகிறது,
என்னிடமே அந்த உணர்வுக்கு
விடை இல்லாத போது
உங்களுக்கு நான் எங்ஙனம்
ஆறுதல் கூற....???

நம்பிக்கையோடு இருப்போம்
நாளை என்றொரு நாள் வரும்
அந்த நாளில் எல்லாமே
நல்லதாக நடக்கும்....!!

நல்லதோர் கவிதைக்கு என் பாராட்டுக்களும் சிவா..!!

சிவா.ஜி
20-06-2008, 05:45 AM
வாழ்க்கை எல்லா வகையிலும் பாலன்ஸ் (Balanced) ஆனதாக இருக்கவேண்டும்.... முதலில் நம் தேவைகள், குடும்பம், சமுதாயம் என்று நம் தேவைகளை எடைப்போட்டு பார்த்து முடிவெடுப்பது நலம்...
இன்றைய முடிவுகள் நாளைய சங்கடம் ஆகாமல் இருப்பது நலம்.

மிக தீர்க்கமான கருத்து. நீங்கள் சொன்ன முன்னுரிமைக் கடமைகள் வெகு விரைவிலேயே முடிந்துவிடுகின்றன. ஆனால் இனி என்ன தேவை, எது எல்லை என வகுத்துக்கொள்வதில்தான் பிரச்சனையே இருக்கிறது. குடும்பத்தாரோடு சொந்த மண்ணில் இருக்கும்போது இந்த நிறுத்தலுக்கான அவசியம் வருவதில்லை. தனிமையும், பிரிவு வலியும்தான் அதனைப் பற்றி சிந்திக்க வைக்கின்றன.

ஆரம்பத்தில் அவசியத்துக்காக தொடங்கி, பின் ஆடம்பரத்துக்காக தொடர்ந்து கடைசியில் அடுத்தவருக்காக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால்தான் உள்மனம் தீர்மானிக்க வேண்டும். உறுதி கிடைக்கவேண்டும். அன்று இந்த ஓட்டம் நின்று இதுவே போதும் என்ற மன நிலையுடன் இனியுள்ள நாட்களை நிம்மதியுடன் கழிக்க முடியும்.

அதனால்தான் அந்த உள் மன கட்டளைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.
மிக்க நன்றி பென்ஸ்.

சிவா.ஜி
20-06-2008, 05:49 AM
மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் சிவா அண்ணா.
இந்த நிலை பலருக்கும் உண்டு. நல்லதொரு கவிதை.

ஆமாம்மா...என்னைப்போல இன்னும் எத்தனையோ பேர் அந்த கட்டலைக்குக் காத்திருக்கிறார்கள். போன வாரம் கூட என்னுடன் பணிபுரிந்த ஒரு மேலாளர் வெகு நல்ல ஊதியம் வாங்கிக்கொண்டிருந்தவர் திடீரென்று பணியை விட்டுவிட்டு தாய்நாடு திரும்பிவிட்டார். காரணம் அவரது மகள், கல்லூரிக்குப் போகத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு தந்தையின் அருகாமைத் தேவையென்று அவரே விரும்பி அதை தன் தந்தையிடம் சொல்ல அந்த நிமிடம் முடிவெடுத்து இனி அங்கே இருப்பது என்று சென்று விட்டார்.

இப்படியான ஆசைகள் பலருக்கும் இருக்க்கிறதென்றாலும் சிலர் மட்டுமே அதை சாதிக்க முடிகிறது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கவிதா.

சிவா.ஜி
20-06-2008, 05:51 AM
நம்பிக்கையோடு இருப்போம்
நாளை என்றொரு நாள் வரும்
அந்த நாளில் எல்லாமே
நல்லதாக நடக்கும்....!!


நம்பிக்கை....!! இது ஒன்றுதானே நம்மை வாழ வைக்கிறது. நம்புவோம். நல்லதே நடக்கட்டும். நன்றி ஓவியன்.