PDA

View Full Version : விதையான மூட நம்பிக்கைகள்.



அமரன்
19-02-2008, 12:44 PM
நிறைஞ்ச அமவாசை!
நிறைவுதரும் மூன்றாம் பிறை!

நாய் படாப்பாடுதரும்
நாலாவது நாள் நிலவு!
பஞ்சப்பாட்டு மெட்டுக்கட்டும்
அஞ்சாவது சந்திர நாள்!

தொட்டது பட்டுவிடும் அட்டமி!
நல்லதின் வைரி நவமி!

நிலவை வைத்து
பாட்டி விதைத்த மூடநம்பிக்கைகள்
விதையாகின
நினைவுகள் பிறையானபோது!

சிவா.ஜி
19-02-2008, 01:01 PM
நிலவை வைத்து
பாட்டி விதைத்த மூடநம்பிக்கைகள்
விதையாகின
நினைவுகள் பிறையானபோது!

புரியவில்லை அமரன்.
நினைவுகள் பிறையான போது என்றால் நினைவுகள் குறைந்த போதா..?
விதையானது என்றால் வயதான பிறகு மீண்டும் அந்த மூடநம்பிக்கை விதைகள் ஒருவரிடம் உண்டாகிவிடுமா...?விளக்கம் ப்ளீஸ்.

aren
19-02-2008, 01:03 PM
மூடநம்பிக்கைக்கள் மறுபிறவி எடுக்கினறன என்று சொல்கிறார் அமரன் என்று நினைக்கிறேன்.

நல்ல சாடல் அமரன். அருமை. தொடருங்கள்.

என்ன சொல்லி என்ன பிரயோஜனம் என்கிறீர்களா. என்ன செய்வது.

பூஜா
19-02-2008, 05:58 PM
"நினைவுகள் பிறையானபோது"


சரியாகச் சிந்தித்து செயல்படுத்தாமல் செயல்கள் தோல்வியடையும்போது
பாட்டி விதைத்த மூட நம்பிக்கைகளில் சமாதானம் தேட முயலும் மனங்களையே குறிக்கின்றதென்று நினைக்கின்றேன்.

அமரன் விளக்கம் சரியானதா?

பூஜா