PDA

View Full Version : நினைவுப் பிறைகள் 11 - 'நீ'.ஆதி
19-02-2008, 11:02 AM
என் இதய சிலையாய்
வடித்தது
காதல் உன்னை..

உனது வார்த்தைப் பறவைகள்
வாழ்க்கையையும்
நம்பிக்கையையும்
கூடு கட்டின எனக்குள்..

கசியும் கணங்களெலாம்
கசிய துவங்கின
உனது ஞாபகங்கள்..

உனது பெயரில்
ஒரு கிளை வளர்த்து
காதல் என
பெயரிட்டுக் கொண்டது மனது..

ஒரே சாலையின்
இரு வேறு விளிம்புகளாய்
நம் ஈர்ப்புகள்

பிறை வளரும்..

யவனிகா
19-02-2008, 12:09 PM
காதல் மழை பொழிகிறது....
நனைபவர் யாருமின்றி
வீணாகும் மழை....
மண்வாசனை
அழைத்துவரும்
உனக்கான
அவளை...
குளிரக் குளிர
நனைத்து
நீயும் குளிர்ந்து
போகப் போகிறாய்
மழையே...

வாழ்த்துக்கள் ஆதி...அருமையான கவிதைகளுக்கு...எப்படி முடிகிறது என்றே தெரியவில்லை. காதல் கவிதைக்குள் அமர்ந்து மாயம் செய்கிறதா...அல்லது ஆதியின் மனசுக்குள் அமர்ந்து மாயம் செய்கிறதா?...ஏதானாலும் சரி...மாயத்தால் கட்டுண்டோம்....வாழ்த்துக்கள் தம்பியே.

சிவா.ஜி
19-02-2008, 12:20 PM
என் மனது உங்களது பெயரில் ஒரு கிளை வளர்த்து...கவிதை என பெயர் சூட்டிக்கொண்டது...பிசிறில்லா சுசீலாம்மா குரலைப் போல...குறையே இல்லா வார்த்தை செறிவுடன்...உனர்வுகளைத் தூவிப்போகும்...வரிகள்.
கவிதையில் காதல் மின்னுகிறது....ஆதியின் தமிழும்...மின்னுகிறது.
வாழ்த்துகள் தம்பி.

அமரன்
19-02-2008, 01:56 PM
அழகுதமிழில் தழுவும்காதல் பூங்காற்றாக ஆதியின் முத்திரைக்கவிதைகள். பாராட்டுகள்.. மன்றத்தின் கானமயில்களைக் கண்டு இந்த வான்கோழியும் ஆட விழைகிறது. தப்பிருந்தால் மன்னிக்க.

இதயத்தில்
சிதறல் பரள்களுண்டு.
காதற் சிற்பியுமுண்டு.
பஞ்சமா சிலைக்கு !

சாலை ஓரங்களே
தயவுசெய்து இணையாதீர்கள்..
இணைந்துவிட்டால்
வீதியின் விசாலம் குறுகிவிடும்.
சிலர் விலாசம் மறைந்துவிடும்.

ஆதி
20-02-2008, 05:34 AM
காதல் மழை பொழிகிறது....
நனைபவர் யாருமின்றி
வீணாகும் மழை....
மண்வாசனை
அழைத்துவரும்
உனக்கான
அவளை...
குளிரக் குளிர
நனைத்து
நீயும் குளிர்ந்து
போகப் போகிறாய்
மழையே...

வாழ்த்துக்கள் ஆதி...அருமையான கவிதைகளுக்கு...எப்படி முடிகிறது என்றே தெரியவில்லை. காதல் கவிதைக்குள் அமர்ந்து மாயம் செய்கிறதா...அல்லது ஆதியின் மனசுக்குள் அமர்ந்து மாயம் செய்கிறதா?...ஏதானாலும் சரி...மாயத்தால் கட்டுண்டோம்....வாழ்த்துக்கள் தம்பியே.

எண் அவளை எண்ணும் பொழுதெலாம் பெய்ய ஆரம்பித்துவிடுகிறது மழை விழிகளிலும் இதயத்திலும்..

என் காதலுக்கும் தேவதைக்கும் நான் வைக்கும் படையல்..

அக்கா நினைவு பிறைகளுக்கு ஊக்கமாய் உங்கள் முதல் பின்னூட்டம் வந்த தருணத்திலேயே நம்பிக்கை வந்துவிட்டது இந்த நினைவு பிறைகள் நிலவாக வளரும் என..

காதல் மழையில் நனைய அவளில்லாத போதுகளில் இன்னும் அதிகமாய் பெய்ய துவங்கிறது மழை கண்ணீராய்..

வாழ்த்துக்களுக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றிகள் அக்கா..

அன்புடன் ஆதி

ஆதி
20-02-2008, 06:57 AM
என் மனது உங்களது பெயரில் ஒரு கிளை வளர்த்து...கவிதை என பெயர் சூட்டிக்கொண்டது...பிசிறில்லா சுசீலாம்மா குரலைப் போல...குறையே இல்லா வார்த்தை செறிவுடன்...உனர்வுகளைத் தூவிப்போகும்...வரிகள்.
கவிதையில் காதல் மின்னுகிறது....ஆதியின் தமிழும்...மின்னுகிறது.
வாழ்த்துகள் தம்பி.

மனம் பூரித்து போனது அண்ணா, எனக்கு கவிதை என பெயரிட்டது கொஞ்சம் அதிகம்தான்.. காதலைப் பாடாத கவிஞன் எவன் காட்டு என்பார் கவிபேரரசு.. இந்த தூசுக்கும் காதல் தேவதையைப் பாட வாய்ப்பு கிட்டியிருப்பது பெரும்பேருதான்..

வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அண்ணா..

அன்புடன் ஆதி

ஆதி
20-02-2008, 07:03 AM
அழகுதமிழில் தழுவும்காதல் பூங்காற்றாக ஆதியின் முத்திரைக்கவிதைகள். பாராட்டுகள்.. மன்றத்தின் கானமயில்களைக் கண்டு இந்த வான்கோழியும் ஆட விழைகிறது. தப்பிருந்தால் மன்னிக்க.

இதயத்தில்
சிதறல் பரள்களுண்டு.
காதற் சிற்பியுமுண்டு.
பஞ்சமா சிலைக்கு !

சாலை ஓரங்களே
தயவுசெய்து இணையாதீர்கள்..
இணைந்துவிட்டால்
வீதியின் விசாலம் குறுகிவிடும்.
சிலர் விலாசம் மறைந்துவிடும்.

அவரன் கொஞ்சம் ஓவரா தெரியலையா.. வான்கோழி என்று சொல்லிக்கொள்ளும் வானமயில் நீங்கள் உங்கள் பின்னூட்ட பீலியும் இந்த திரியில் உதிர்ந்திருப்பது என*க்கு பெருமையும் மகிழ்ச்சியும்

பின்னூட்டத்திற்கு மிக நன்றிகள் அமரன்

ஆதி
20-02-2008, 09:23 AM
செவ்விதழ் சேர்த்து
'ம்' என நீ
இசைப்பதற்காகவே
இன்னும் பேசலாமெனத் தோன்றும்..

'ம்'மிற்கு இணையாய்
ஒரு எழுத்தையும்
இதுவரை எழுத இயன்றதில்லை
என்னால்..

பிள்ளை வயதுகளில்
கேட்பது போன்று
எவரேனும் என்னை
என்னவாக ஆசையெனக் கேட்டால்
உன் உதடுகளில்
'ம்'மாக வேண்டும் என்பேன்..

உன் 'ம்'மில்
நானிருந்திருக்கிறேனோ என்னவோ
ஊறியிருக்கிறேன்

ஓங்காரத்தில் எல்லா
ஒலிகளும் அடக்கம்
'ம்'காரத்தில் எனது
ஊழியே அடக்கம்

பிறை வளரும்..

ஆதி
20-02-2008, 01:43 PM
சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

உனதிந்த 'ம்'மிற்கும்
உண்டு
நீட்டல் குறுகல்..

களைத்த உறக்கத்தில் நீ
உச்சரிக்கும் 'ம்'மில்
உருகி ஒழுகிவிடுவேன்..

'ம்'மோடு இயந்த
நினைவுகளும் 'ம்'மாக்கிவிட்டன..

எனது காதலுக்கு
நீ சொல்லாத 'ம்'தான்
கனத்துப் போதனது..


பிறை வளரும்..

யவனிகா
20-02-2008, 03:11 PM
சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

.


அய்யோ ஆதி....கலக்குது...அள்ளுது...அற்புதம் ஆதி இந்தக் கவிதை.

கண்டிப்பா தெரிஞ்சிருச்சு...இது உண்மைக் கவிதைன்னு...இனி ஏமாத்த முடியாது...

போற போக்கப் பாத்தா...நினைவுப் பிறைகளுக்கு சொத்தையே எழுதி வெச்சாலும் வெச்சிருவேன் போல.

செல்லத் தம்பியே...பிறைகள் வளரட்டும்.

ஆதி
21-02-2008, 07:33 AM
கண்டிப்பா தெரிஞ்சிருச்சு...இது உண்மைக் கவிதைன்னு...இனி ஏமாத்த முடியாது...

போற போக்கப் பாத்தா...நினைவுப் பிறைகளுக்கு சொத்தையே எழுதி வெச்சாலும் வெச்சிருவேன் போல.உண்மையைதான் அக்கா வடிக்கிறேன், கற்பனைகள் கவிதைகளை அழகாக்கலாம் என்றும் உலராத ஈரம் உடையதாய் வைக்காது.. எனக்குள் உள்ள அவளின் நனவுகள் மீது கொண்ட நம்பிக்கையிலையே நினைவு பிறைகளை எழுத துவங்கினேன்..

உங்கள் பின்னூட்ட வரிகளில் இன்னும் நெகிழ்ந்து போனேன் அக்கா, காதலின் தோல்வி எனக்கு ஆனாலும் கவிதையின் வெற்றி அவளுக்கு சேரட்டும்..

உங்கள் ஊக்க வரிகள் இன்னும் அழகாய் இந்த பிறைகளை பிராகசிக்க வழி வகுக்கும்..

மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் அக்கா


அன்புடன் ஆதி

அக்னி
21-02-2008, 07:46 AM
உனது பெயரில்
ஒரு கிளை வளர்த்து
காதல் என
பெயரிட்டுக் கொண்டது மனது..

ஒரு கிளைதான் வளர்ந்ததா...
அன்றேல்,
ஒரு கிளையும் வளர்ந்ததா...

காதல் என
பெயரிட்டுக் கொண்டது மனது...
பெயரிட்டுக் கொன்றது மனது(தை)...


சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்'

வம்பில் மாட்டாதவரை,
செம்பால் அடிக்காதவரை,
தும்பாய் துவைக்காதவரை,
அம்பால் எய்யாதவரை,
கம்பால் சுழற்றாதவரை,
நம்பியிரு ம் கவிதை என்று...

பிறை வளரட்டும்... பௌர்ணமியாகி நிலைக்கட்டும்...
மிகவும் ரசித்தேன்.
மிகுந்த பாராட்டுக்கள் ஆதி அவர்களே...

அமரன்
21-02-2008, 08:32 AM
எத்தனை 'ம்'மானாலும்
நீயும் நானும் நாம் ஆகாத
இதழிழைந்த 'ம்' மின்மை
ஈடாடவைத்தது வாழ்வை!

இம்மியளவும் இனிக்காத
இல்லற நிமிடங்களில் உன்
நினைவுகளில் நனைந்து
தும்மல் சாரலில் திளைத்தேன்!
தும்மலாவது உன்னைத்
துளைத்ததா அழகுக் கிளியே!!

வருடங்களில் வருடலில்
அவ்வப்போது கலைந்த கனவுகளின்
"ம்மா"வில் கரைந்தது-நீ
சொல்லாத 'ம்'மின் வேதனை!

அடிக்கடி
ஷாக்(சா)கடிக்கும் 'ம்'மின் பாய்ச்சலில்
துடிக்க ஏங்குது மனம்!
தொடருங்கள் ஆதி!!

ஆதி
21-02-2008, 10:12 AM
பிறை வளரட்டும்... பௌர்ணமியாகி நிலைக்கட்டும்...
மிகவும் ரசித்தேன்.


ஊக்கத்திற்கு நன்றி அக்னி அவர்களே, முழுநிலவாக ஆக்க முடியாவிட்டாலும் தேயா பிறையாய் வைக்க நிச்சயம் முயல்வேன்..

அன்புடன் ஆதி

ஆதி
21-02-2008, 01:48 PM
நான் எழுத*
விரும்பும் இலக்கியம்..

என்னால் எழுத
ஒண்ணாமல் போன இலக்கணம்..

'ம்ஹும் ம்ஹும் ம்ஹும்'

உனது ஒவ்வொரு 'ம்ஹும்'மும்
உதிர்ந்து கிடக்கிறது
அதிகாலை விண்மீகளாய்
எனது இதயத்தில்..

எனது படைப்புகளின்
பிள்ளையார் சுழியாகவும்
மாறிவிட்டது
உனது 'ம்ஹும்'

'ம்ஹும்'மிற்கு இணையாய்
சிணுங்க தெரியாததால்
வெட்கி மௌனிக்கின்றன்
உன் கால் கொலுசுகளும்..

நீ உச்சரிக்கும் போது
இன்னும் அழகாகிவிடுகிறது
'ம்ஹும்'மும்
உனது இதழ்களும்..

அவ்வபோது எண்ணுவதுண்டு
ஏழிசையும்
வெவ்வேறு ஓசையும்
பிறந்தது 'ம்ஹும்'மில் இருந்தோ என..

அர்த்தங்கள் யாவும்
அர்த்தப் படுகின்றன*
உன் 'ம்ஹும்'மினுள்
நுழைந்துவிட்ட பிறகு..

குழந்தையின் 'ங்கா'வைப் போல்
உன் 'ம்ஹும்'மிற்கு
ஒப்பாய் எந்த*
உவமைகளையும் சொல்ல இயலவில்லை
என்னால்..

எப்படி எப்படியோ
எழுதிப் பார்க்கிறேன்
உனது உதடுகளைவிட*
எழிலாய் என்னால்
எழுத இயலவில்லை 'ம்ஹும்'மை..

பிறை வளரும்...

ஆதி
22-02-2008, 05:15 AM
அடிக்கடி
ஷாக்(சா)கடிக்கும் 'ம்'மின் பாய்ச்சலில்
துடிக்க ஏங்குது மனம்!
தொடருங்கள் ஆதி!!

'ம்'மால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறீர் போல அமரன்..

இந்த மின்சாரம் மீண்டும் பாய ஏங்கும் ஏக்கம் நிறைவாகட்டும்..

பின்னூட்டக் கவிதைக்கு நன்றி அமரன்..

அன்புடன் ஆதி

ஆதி
22-02-2008, 07:10 AM
குழந்தையின் முதல்
புன்னகையைப் போல
தூயவள் நீ

கண்ணாடி அணிந்த நிலா
நீ சிரிக்கும் பொழுதெலாம்
மனதினுள் விழுந்துவிடுகின்றன
வானவில் வண்ண விண்மீன்கள்..

எனது எழுத்துக்களின்
இலக்கணம் நீ
எனது காதலின்
தலைக்கனம் நீ
எனது மறதியும்
நினைவும் நீ..

இலக்குகள் அறியாமல்
நான் புரப்பட்டப்
பயணம் நீ

உன்னைச் சந்திக்காத
கிழமைகள்
மிக சாதாரண
நாட்களாகிவிடுகின்றன..

நீ என்னை
நீங்கிய பிறகு
ஒரு அர்த்தமற்ற
மௌனமாய் மாறிவிட்டேன் நான்..

பிறை வளரும்..

சிவா.ஜி
22-02-2008, 07:54 AM
உள்ளுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் அவளை இல்லாத இடமில்லையென
சொல்லிய கவிதை சுகம்.தெரிகிறது உங்கள்அழகுணர்வோடு கூடிய அகம்.
தலைக்கனம் அளித்த இலக்கணம் என்றும் கவி நாயகனுடன் இருக்கனும்.
தென்றல் வருடும் பூஞ்சோலையில் பயணித்த சுகானுபவம்..வாசிப்பில்.
மிக அழகு ஆதி.வாழ்த்துகள்.தொடருங்கள்...கவிச்சோலையில்.

ஆதி
23-02-2008, 07:12 AM
உள்ளுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் அவளை இல்லாத இடமில்லையென
சொல்லிய கவிதை சுகம்.தெரிகிறது உங்கள்அழகுணர்வோடு கூடிய அகம்.
தலைக்கனம் அளித்த இலக்கணம் என்றும் கவி நாயகனுடன் இருக்கனும்.
தென்றல் வருடும் பூஞ்சோலையில் பயணித்த சுகானுபவம்..வாசிப்பில்.
மிக அழகு ஆதி.வாழ்த்துகள்.தொடருங்கள்...கவிச்சோலையில்.

நீக்கமற நிறைய கடவுளாலும் காதலாலும் மட்டுமே ஓண்ணும் அண்ணா, காதல் தனது தேவதையாய் அவளை எனக்கு அளித்து சென்றது அவளுடன் பழகிய மிக சில நாட்கள் வெகு அழகானவை அந்த தேவதைக்கு எனது திருபுகழ் இது..

பின்னூட்டத்திற்கு நன்றிகள் அண்ணா..

தொடர்ந்து ஊக்கம் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் ஆதி

சுகந்தப்ரீதன்
23-02-2008, 09:44 AM
ஓங்காரத்தில் எல்லா
ஒலிகளும் அடக்கம்
'ம்'காரத்தில் எனது
ஊழியே அடக்கம்..

உங்கள் காதலின் ஆழம் அழகாய் வெளிபடுகிறது ஆதி..இந்த வரிகளில்..வாழ்த்துக்கள்..!எப்படி எப்படியோ
எழுதிப் பார்க்கிறேன்
உனது உதடுகளைவிட*
எழிலாய் என்னால்
எழுத இயலவில்லை 'ம்ஹும்'மை....

ம்ஹூம்...கண்டிப்பா எழுதமுடியாது போலிருக்கு யாராலையும் காதலை எழிலாய்...! உன் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் ஆதி..!


நீ என்னை
நீங்கிய பிறகு
ஒரு அர்த்தமற்ற
மௌனமாய் மாறிவிட்டேன் நான்....
யார் சொன்னது...?
இத்தனை அழகாய் பிறைகள் தோன்ற காரணம் காதலிதானே...?
அப்புறம் எப்படி அர்த்தமற்று போகும் ஆதியாரே...?

பௌர்ணமியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் வாருங்கள் நண்பரே...!!

ஆதி
24-02-2008, 06:43 AM
இத்தனை அழகாய் பிறைகள் தோன்ற காரணம் காதலிதானே...?[/COLOR]
அப்புறம் எப்படி அர்த்தமற்று போகும் ஆதியாரே...?

பௌர்ணமியை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் வாருங்கள் நண்பரே...!!


வாழ்க்கையின் எல்லா அர்த்தங்களை ஏந்தி எனக்குள் நுழைந்த அவளால் ஒரு பொருளுள்ள சொல்லாய் மாறியவன் நான், மீண்டும் அந்த அர்த்தங்கள் எல்லாம் என்னை நீங்கியப் பிறகு நான் வெற்று மௌனம் தானே, அவள் பேசிய திருவாசகங்களை வைத்து அவள் நினைவுகளாய் எழுதப்படும் நினைவு பிறைகள் முழு நிலவாய் வளர்ந்து அர்த்தப்படலாம், ஆனால் நானோ ஒரு அர்த்தமற்ற சொல்லாய் தான் கருதபடுவேன் என்னாளும்..

அன்புடன் ஆதி

ஆதி
24-02-2008, 09:59 AM
என் கூட்டல் நீ
உன் கழித்தல் நான்

உன்னிடம் நான் பேசாத*
வார்த்தைகளின் அர்த்தங்கள் போல*
என்னிடம் நீ பேசிய*
வார்த்தைகளின் அர்த்தங்களும்
ஏதேதோ செய்கின்றன என்னை..

எனது யாதொரு செய்கையிலும்
நீ இருக்கிறாய்
உனது நினைவிலேனும்
நான் இருக்கிறேனோ ?

வர்ணங்கள் சிதையாத*
அந்தி வானம்
உனது உதடுகள்..

வானத்தை உன் விழிகள்
பார்த்த தடங்கள் தனோ
விண்மீன்கள்.. ?

'டா' போட்டு
வருத்தப்பட்ட நீதான்
'டேய்'யும் போட்டாய் :D

எவ்வளவு தேடினாலும்
கிடைத்துவிடாத
ஒரு தேடல் நீ..

எனது கோயிலுக்கு வந்த*
நாத்தீக மலர் நீ..

முள்ளாய் நீ இருந்தாலும்
உனது கூர்மையில்
மொட்டாகிற*
நீர் துளி நான்..

பிறை வளரும்..

ஆதி
25-02-2008, 11:45 AM
ஒயர் கம்பியில்
உட்கார்ந்திருக்கும்
ஒற்றைப் பறவையாய்
அமர்ந்திருக்கிறேன் தனிமையில்

அகன்று சென்றவளே
உனக்கு எனை
இயற்கையே ஞாபகமூட்டும்

நீ நடக்கும் பாதைகளில்
பூத்திருக்கும் மலர்களில்
உன் பெயர் பாடும்
என் பெயரும்
எழுதப்பட்டிருக்கும்

காற்ற*டிக்கும் இல்லையில்
க*ரைந்தொழுகும் ஒலியில்
என் கவிதை வழிந்திருக்கும்

வற்றிய குளத்தில்
வாடிகிடக்கும் சருகில்
என் புலம்பல் கலந்திருக்கும்

இருள்கட்டிய வானில்
இருமும் இடியில்
என் கதறல்
சிதறி தெறிக்கும்

நீயற்ற உனது
இல்ல முகப்பில்
குழுமி இருக்கும் தனிமையில்
குவிந்திருக்கும் என் எண்ணங்களும்
உன*து நினைவுகளில்..

உனது வாசலில் விழும்
மழையிலும் நான்
அழுத கண்ணீரின்
ஈரமிருக்கும்..

எங்காவது குயிலிசை கேட்டால்
என்னை எண்ணிக்கொள்
உன்னைப் பாடும்
ஒரு குயில் இங்கே
இருக்கிறதென..

எங்கு மயில் கண்டாலும்
இதை நினை
என்றன் கவிதை நோட்டில்
பத்திரமாய் இருக்கும்
மாநிற மயிலிறகு நீ..

பிறை வளரும்..

சுகந்தப்ரீதன்
25-02-2008, 12:13 PM
முள்ளாய் நீ இருந்தாலும்
உனது கூர்மையில்
மொட்டாகிற*
நீர் துளி நான்....
அழகிய உவமை ஆதி... பிறை மெல்ல மெல்ல ஒளிபெறுகிறது...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...நண்பரே...!!


உனது வாசலில் விழும்
மழையிலும் நான்
அழுத கண்ணீரின்
ஈரமிருக்கும்....

மனதை கவரும் அதே வேளையில்... கண்களை கசிய வைக்கின்றன..கவிதையின் வரிகள்... சோகத்தின் ஆழம் அதிகமாய் தெரிகிறது...மனதை தேற்றிக்கொண்டு...தேய்பிறையை வளர்பிறையாய் வார்த்தெடுக்க வேண்டுகிறேன் ஆதி அன்புடன்...!!

ஆதி
27-02-2008, 07:02 AM
மனதை கவரும் அதே வேளையில்... கண்களை கசிய வைக்கின்றன..கவிதையின் வரிகள்... சோகத்தின் ஆழம் அதிகமாய் தெரிகிறது...மனதை தேற்றிக்கொண்டு...தேய்பிறையை வளர்பிறையாய் வார்த்தெடுக்க வேண்டுகிறேன் ஆதி அன்புடன்...!!

தொடர்ந்து வரும் உன் பின்னூடத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சுகந்தா..

அன்புட*ன் ஆதி

யவனிகா
27-02-2008, 08:52 AM
மாநிற மயிலிறகா?
கையில என்ன வித்தை வெச்சிருக்கீங்க ஆதி...
சில நேரம் கண்ணு கலங்குது...
தொடருங்கள்...
மனசு மென்மையாசிடுச்சா...
கவிதை மென்மைப்படுத்திருச்சா தெரியல...
மெத் மெத் புல் வெளியில் பதுங்க
நடந்து போகும் சுகானுபவம்
உங்க கவிதை படிக்கும் போது....
வாழ்த்துக்கள் தம்பியே...

ஆதி
27-02-2008, 10:08 AM
மனசு மென்மையாசிடுச்சா...
கவிதை மென்மைப்படுத்திருச்சா தெரியல...
மெத் மெத் புல் வெளியில் பதுங்க
நடந்து போகும் சுகானுபவம்
உங்க கவிதை படிக்கும் போது....


இப்படி ஒரு வார்த்தையை உங்களிடம் இருந்து கேட்க மிக மகிழ்ச்சியா இருங்குங்க அக்கா.. என்ன டா யாருமே அந்த மாநிற மயிலிறக கண்டுக்கலையே நு நினைச்சுட்டு இருந்தேன்.. உங்க கண்ணில் அதுபட்டு ஒரு அழகிய வாழ்த்து கிடைச்சுருச்சு.. இது போதும் எனக்கு..

தொடர்ந்து வரும் உங்க உர்ச்சாக ஊக்கத்திற்கு நன்றிகள் பல அக்கா..

அன்புடன் ஆதி

ஆதி
27-02-2008, 12:15 PM
என் விழிகளில்
பெய்யும் பெண்மழை நீ

உன்னையும் மழையையும்
எண்ணும் தருணங்களில்
நனைந்துவிடுகிறது
விழிகளும் மனதும்

கன்ன*த்தின் மீதூரும்
கண்ணீரில்
ஈரமாய் இருக்கிறது காதல்
வெப்பமாய் கொதிக்கிறது அகறல்

காதல் தேவதை
என்னை மட்டும்
கண்ணீரால் ஆசீர்வதித்துவிட்டாளோ ?

என் காதல்
கண்ணீரின் உதிர உறவோ ?

உன்னை வைத்தே
எழுதப்பட்டிருக்கிறது
எனது விதி..

என்னில் உன் பெயரை
எழுதிய பிறகு
மாறிப்போனேன்
ஒரு சோக கீதமாய்..

நம் கதை
ஒரு திரைப்பாடல் போலதான்
உனக்கும் எனக்கும்
எல்லாம் பிடிக்க*
என்னை உனக்கு பிடிக்கதென்றாய்..

பிறை வளரும்..

ஆதி
28-02-2008, 06:21 AM
வார்த்தை
புன்னகை
கோபம் என
நீ சிந்தும் ஒவ்வொன்றும்
மலர்த்துவிடுகின்றன
பெயர் தெரியாத
ஒரு பூவை..

விரியும் காலவெளிகளில்
காதலின் காலடிச் சுவடுகள்
நீயும்.. நானும்..

காதல்
என்னை தூண்டில் போட்டது
உன்னை பிடிக்க
அதில் சிக்கி கொண்டேன்
நான்..

உனக்குள் சிறைவைப்பாய்
என்றால்
நான் எவ்வளவு
த*ப்பு செய்யவும் தயார்..

என்னை உனக்குள்
அழைக்கும்
இரட்டை வரவேற்பு வளையங்கள்
உனது புருவங்கள்..

நீயும் நானும்
வாழ்க்கையின் இதழ்களும் இமையும்
காதல் நம்மில்
புன்னகையும் கண்ணீருமாய் இருக்கிறது..

உனது பிறை இதழ்களில்
மௌனம் பிறக்கிற போதெலாம்
இறந்திவிடுகிறது
ஒரு சொல்..

எனது வீட்டின் புரத்தே
உள்ள ஆலமரத்தின்
குயில் கூவும் போதெலாம்
ஞாபகம் வந்துவிடுகிறது
காதோரம் நீ இசைத்த பாடல்கள்..

சிறுவயதில் நான் வளர்த்த
பூச்செடிகளைப் போல
கருகிவிட்டது காதலும்..

உன் கழுத்தில்
ஏற விழைகிற
மிக மெலிந்த சங்கிலி நான்
அதில் தொங்கும் சிலுவை நீ..

பிறை வளரும்..

சுகந்தப்ரீதன்
28-02-2008, 08:04 AM
கண்ணத்தின் மீதூரும்

கன்னத்தின் மீதூரும்...
சரியா நண்பா...?!நம் கதை
ஒரு திரைப்பாடல் போலதான்
உனக்கும் எனக்கும்
எல்லாம் பிடிக்க*
என்னை உனக்கு பிடிக்கதென்றாய்...
எளிமையான எடுத்துக்காட்டு...
அந்த நாயகனைப் போலவே டேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள் என்று சொல்வதற்கில்லை... சினிமா வேறு நிஜம் வேறு.. நிஜவாழ்க்கையில் அதை உணர்ந்தவன் என்பதால்...!!

தொடருங்கள் பிறை வளரட்டும்...!! வாழ்த்துக்கள்..!!

ஆதி
29-02-2008, 08:33 AM
கன்னத்தின் மீதூரும்...
சரியா நண்பா...?!ஆம் சுகந்தா கண்ணீரை பற்றி யோசித்திருந்ததால் கன்னத்தின் "ன்" மாறிப்போச்சு.. திருத்திவிட்டேன் சுகந்தா..

தொடர்ந்து தரும் பின்னூட்ட ஊக்கத்திற்கு நன்றி நண்பா..

அன்புடன் ஆதி

யவனிகா
29-02-2008, 08:51 AM
உன் கழுத்தில்
ஏற விழைகிற
மிக மெலிந்த சங்கிலி நான்
அதில் தொங்கும் சிலுவை நீ..

பிறை வளரும்..

கிரேட் ஆதி...

எனக்கு பொதுவாவே..பெண்களை அதீதமாய் புகழ்ந்து எழுதும் காதல் கவிதைகள் பிடிக்காது...அதனாலேயே தபு சங்கரைக் கூட அதிகம் படிக்க மாட்டேன்.

ஆனால் ஏனோ தெரியவில்லை உங்களுடைய கவிதைகள் என்னை ஈர்க்கின்றன. வார்த்தைகளில் அபின் கலந்திருக்கிறது போல...பெங்களூர் வரும் போது உங்களுடைய டைரியை சுட்டிட்டு வரப் போறேன்.

அன்புத் தம்பி ஆதி...சிலுவைகள் இறக்கி...சிறகுகள் அணியுங்கள்....வானம் தான் உங்களுக்கான இலக்கு.

வாழ்த்துக்கள் தம்பி.

செந்தமிழரசி
04-03-2008, 09:43 AM
உனது பெயரில்
ஒரு கிளை வளர்த்து
காதல் என
பெயரிட்டுக் கொண்டது மனது..

ஒரே சாலையின்
இரு வேறு விளிம்புகளாய்
நம் ஈர்ப்புகள்மனமரத்தில் உறவுகள் அனைத்தும் ஒவ்வொருக் கிளை, அப்படி அவள் பெயரில் ஒரு கிளை முளைத்து காதல் என்று உறவாக்கிக் கொண்டது மனம்.

ஒரு சாலையில் இரு வேறு விளிம்புகள் நாம் என்று நீங்கள் சொன்னதில் இருந்தே புரிந்துவிட்டது தோல்வியில் தொலைந்த காதல் இது என்று.ஓங்காரத்தில் எல்லா
ஒலிகளும் அடக்கம்
'ம்'காரத்தில் எனது
ஊழியே அடக்கம்உங்களின் எல்லாமும் அவளே என்பதற்கு இதைவிட அழகிய விளக்கம் தேவையில்லை


சிரமப்படாமல்
மிகச் சாதாரணமாய்
நீ எழுதிவிடுகிற கவிதை
இந்த 'ம்''ம்' என்பதை வைத்து இத்தனை பாட்டா வியபுறுகிறேன் ஆதி, அதிலும் இந்த வரி எப்படீங்க இப்படி எல்லாம் தோன்றுது உங்களுக்கு.உனது ஒவ்வொரு 'ம்ஹும்'மும்
உதிர்ந்து கிடக்கிறது
அதிகாலை விண்மீகளாய்
எனது இதயத்தில்..


எப்படி எப்படியோ
எழுதிப் பார்க்கிறேன்
உனது உதடுகளைவிட*
எழிலாய் என்னால்
எழுத இயலவில்லை 'ம்ஹும்'மை..'ம்' தான் என்றால் 'ம்ஹும்'முமா ?

ஒன்று கேட்டால் கோபிக்க மாட்டீர்களே, இதுதான் வேலை என்று அமர்ந்திருப்பீர்களோ ?

அதிகாலை விண்மீகளாய் விழும் 'ம்ஹும்' அடடா அசத்தல்.

இப்படி எழுதிவிட்டு அழகாக எழுத இயலவில்லை என்றுச் சொன்னால் ஏற்க இயலாது.குழந்தையின் முதல்
புன்னகையைப் போல
தூயவள் நீவிட்டு சென்றிருந்தாலும் திட்டாமல் தூயவள் என்றுச் சொல்லும் குணம் கவிஞர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் சாபம்.


வானத்தை உன் விழிகள்
பார்த்த தடங்கள் தனோ
விண்மீன்கள்.. ?

'டா' போட்டு
வருத்தப்பட்ட நீதான்
'டேய்'யும் போட்டாய் :D

எனது கோயிலுக்கு வந்த*
நாத்தீக மலர் நீ..விழிகளின் சுவடுகள் விண்மீன்கள்

வேறுப்பட்ட பார்வை ஆதி, புருவம் உயர்த்தி ரசிக்க வைத்த கற்பனை

ஒரு வலியோடு நகர்ந்து கொண்டிருந்த கவிதையில் இதழோரமாய் குறுஞ்சிரிப்பையும் கொட்டும் விதமாய் ஒரு வரி.

நாத்தீகம் காதலிலுமா ? இதுவரை யாரும் கையாளாத உவமை.
எங்கு மயில் கண்டாலும்
இதை நினை
என்றன் கவிதை நோட்டில்
பத்திரமாய் இருக்கும்
மாநிற மயிலிறகு நீ..மாநிற மயிலிறகு மனம் இந்த வரிகளில் மீண்டும் மீண்டும் சென்று மொய்கிறது.

யவனிக்கா அவர்களும் இந்த வரியை ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தார்கள்.

பூமகளும் மாநிறக் குயில்கள் என்று பதில் மொழிந்திருந்தார்.

சொல் உருவாக்கி மற்றவரையும் உருவாக்க வைப்பதே கவிதையின் வெற்றி.


என் விழிகளில்
பெய்யும் பெண்மழை நீ


கன்ன*த்தின் மீதூரும்
கண்ணீரில்
ஈரமாய் இருக்கிறது காதல்
வெப்பமாய் கொதிக்கிறது அகறல்

காதல் தேவதை
என்னை மட்டும்
கண்ணீரால் ஆசீர்வதித்துவிட்டாளோ ?

என் காதல்
கண்ணீரின் உதிர உறவோ ?பெண்மழையாய் அவளால் பிறக்கும் கண்ணீர்

அகறல் என்ற சங்க வார்த்தையையும் பயன்படுத்தியது இன்னொரு அழகு.

கண்ணீரில் ஈரமாய் காதல் வெப்பமாய் பிரிவு.

கண்ணீருக்கு புது விளக்கம்.

காதல் தேவதையின் ஆசீ
நிரம்ப பெற்றவர்தாம் நீங்கள்.

அதற்கு சான்று இந்த கவிதையே.

நினைவு பிறைகளை படிக்க உங்கள் உள்ளத்துறைந்தவளுக்கு வாய்ப்பு கிடைக்க பெறுமோ பெறாதோ.

அவளின் நினைவு காலங்களில் அழியாதவையாய் இருக்க போவது நிஜம்.

இவ்வாறு உருகி உருகி பாடுவதில் நனையவே காதல் பல தோல்விகள் தரும் போல.

கவிதை நூல் வெளியிட்டால் அதற்கு நினைவு பிறைகள் என்று பெயர்சூட்டுங்கள் ஆதி.

பிறை வளரட்டும் ஆதி.

பாராடுக்கள்.

ஆர்.ஈஸ்வரன்
04-03-2008, 09:48 AM
உனது வார்த்தைப் பறவைகள்
வாழ்க்கையையும்
நம்பிக்கையையும்
கூடு கட்டின எனக்குள்..

கசியும் கணங்களெலாம்
கசிய துவங்கின
உனது ஞாபகங்கள்..

உனது பெயரில்
ஒரு கிளை வளர்த்து
காதல் என
பெயரிட்டுக் கொண்டது மனது..

நல்ல கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

ஆதி
18-03-2008, 12:48 PM
மாநிற மயிலிறகு மனம் இந்த வரிகளில் மீண்டும் மீண்டும் சென்று மொய்கிறது.

யவனிக்கா அவர்களும் இந்த வரியை ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தார்கள்.

பூமகளும் மாநிறக் குயில்கள் என்று பதில் மொழிந்திருந்தார்.

சொல் உருவாக்கி மற்றவரையும் உருவாக்க வைப்பதே கவிதையின் வெற்றி.
கவிதை நூல் வெளியிட்டால் அதற்கு நினைவு பிறைகள் என்று பெயர்சூட்டுங்கள் ஆதி.மிக நிதானமாய் முழுகவிதையையும் வாசித்து நீண்ட ஒரு பின்னூட்டம் கொடுத்தமைக்கு முதற்கண் என் நன்றிகள் செந்தமிழரசி.

இந்த மாநிறமயிலிறகு என் அக்காவுடன் நடந்த உரையாடலில் உதித்த உவமை..

அக்கா : அந்த பொண்ணு எப்படி இருக்கும் தம்பி ?

நான் : மாநிற ரோஜா

அக்கா : இது செல்வமணிக்கு தெரியுமா ? :D

நான் : நான் சொன்னது பூவை நடிகையை இல்ல, மாநிற மலர், மாநிறப் பூ, மாநிற மேகம், மாநிற நிலா, மாநிற நட்சத்திரம், மாநிறக் கொடி, மாநிற நதி, மாநிறக் கடல், மாநிற அலை, மாநிற நீர்வீழ்ச்சி, மாநிற தேவதை, மாநிறப் புறா, மாநிற மயில், மாநிறக் குயில், மாநிற மயிலிறகு, இப்படி, இன்னப் பிற

அக்கா : தம்பி கொஞ்சம் நஞ்சமாதான் பிடிச்சிருக்குனு நினைச்சேன், கன்பாம் முழுசா பிடிச்சிருக்கு உனக்கு பைத்தியம்

இப்படிதான் பிறந்தது இந்த உவமை செந்தமிழரசி.. எனக்கும் பிடிச்ச உவமை..

நான் மனதில் நினைத்ததை நீங்க சொல்லிருக்கீங்க, நிச்சயமாய் நினைவு பிறைகள்
என்ற பெயரிலேயே புத்தகம் போடுகிறேன். இந்த வருடத்திற்குள் ஒரு புத்தகம் போடலாம் என்று ஒரு எண்ணம் நிறைவேறுமா பார்ப்போம்.

பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி செந்தமிழரசி..

அன்புடன் ஆதி

ஆதி
19-03-2008, 12:47 PM
மனச்சுணையில் வெடிக்கின்ற
ஏக்க குமுழிகளில்
மணக்கிறது
மலராய் உன் நினைவுகள்

பேதைக் கனவுகளை
பேசிய இமைகள்
மாதை எண்யெண்ணி
மணிக்கணக்கில் கசிகிறது

குளிர்ச்சொட்டாய் இதயம்நீ
கொட்டிய சிரிப்பாளே
சிலிர்ப்புற் றிருந்ததை
சிந்தையிலே ஏந்தி

கணக்கின்றி நித்தம்
கண்வெளியில் உலவவிட்டு
கனவுகளாய் மாந்துகிறேன்
கவிதைகளில் நீந்தி

பிறையுதடு பிரித்து
இரவுகளில் செவியோரம்
நிறைவாக இனிக்க
நித்தம் பேசி

காலைப் பறவைகளாய்
கானம் பாடியனாய்
நாளை மகிழ்ச்சிகளால்
நாளும் நிரப்பி

எழுத் முடியாத
எத்தனையோ கவிதைகளை
எழுதிப் போனாய்
இதழாலே இதழாலே

இதுஅழகா உனக்கு?
இந்த கவிமகனை
ஒதுக்கிஉன் நினைப்பில்
உருக விட்டுவிட்டு

எந்த உறவும்
இனியில்லை என்றே
சிந்திச் சென்றாயே
தீ!வார்த்தை நெஞ்சில்

ஒருஉறவும் அற்றோ
உன்னையும் விஞ்சி
பெருமழையாய் சிலநொடிகள்
பீரிட்டு அழுதாய்

தளுதளுத்த குரலாலே
தருணம் கடந்தது
பழுத்தக் காதல்
பாறையூடு விழுந்ததுதான்

என்றே சொன்னாயே
எல்லாம் மறந்தாயோ
இன்றே சொன்னாய்
என்னை காயமாக்க
விருப்பம் இன்றிதான்
வெறுமனே பேசியதாய்
விருப்பம் இன்றி
விருப்பத்தோடு பேச
உன்னால்தான் எப்படி
ஒண்ணியது? அதையும்
என்னால் உணர
இயலாமல் போனது!

பிறை வளரும்..

அன்புடன் ஆதி

ஆதி
19-03-2008, 01:23 PM
நல்ல கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

நன்றி ஈஸ்வரன்

ஆதி
22-03-2008, 01:45 PM
நீ பூக்களால்
பேசுகிறாய்

நான் கண்ணீர்துளிகளில்
வாழ்கிறேன்

நீ வானவில்லை கரைத்து
ஹோலிக் கொண்டாடுகிறாய்

வறண்டப் பாலையில்
என் வேர்கள்
பாறைகளின் இடுக்கில்
வெந்து சாகின்றன..

நீ விண்மீன்களில்
வைத்தப் பொட்டில் இருந்து
சிவந்து கசிகின்றன
என் ரத்ததுளிகள்..

உன் வீட்டில்
அடர்ந்த இரவில் நீ
உறங்கிய போதும் கூட
நடந்து கொண்டுதானிருந்தாய்
என் இதயத்தில்..


அன்புடன் ஆதி

பிறை வளரும்..

யவனிகா
22-03-2008, 06:47 PM
உன் வீட்டில்
அடர்ந்த இரவில் நீ
உறங்கிய போதும் கூட
நடந்து கொண்டுதானிருந்தாய்
என் இதயத்தில்..


அழகான வரிகள். ரசித்தேன் ஆதி...

ஆதியும் உறங்கவேண்டும்
அதிர நடைபோட வேண்டாம்
சொல்லி விடு உன் தோழிக்கு...!

நம்பிகோபாலன்
24-03-2008, 07:06 AM
தங்கள் நினைவில்
நிஜமாய் வாழ்கிறாள்
அருமையான வரிகள்.....

ஆதி
30-03-2008, 04:46 PM
அழகான வரிகள். ரசித்தேன் ஆதி...

ஆதியும் உறங்கவேண்டும்
அதிர நடைபோட வேண்டாம்
சொல்லி விடு உன் தோழிக்கு...!

நன்றீங்க்கா..

சொல்லீடங்க அக்கா..

ஆனா மீண்டும் ஒருப் பிரச்சனை முளச்சிருக்கு..

மாங்கனியும் சிவகாமியும் சலங்கைக் கட்டி மனதை விலங்காய் பூட்டி ஆட, ஆயணச் சிற்பி அபினையங்களை வடிக்கும் உளிச்சத்தம் கற்சில்லுகளுடன் தெறிக்க தூக்கம் மீண்டும் கெட்டுப்போது அக்கா..

அன்புடன் ஆதி

ஆதி
30-03-2008, 04:47 PM
தங்கள் நினைவில்
நிஜமாய் வாழ்கிறாள்
அருமையான வரிகள்.....

நன்றி நம்பி.. நம்பியமைக்கு..

அன்புடன் ஆதி

ஆதி
09-04-2008, 12:23 PM
நிரம்பி வழிந்து
வடிந்து தீர்ந்த
இரவின் பிற்பகுதியில்
இது நடக்காது என்றாய்..

"என்ன செய்யட்டும் நான்"
என கேட்க

"எனக்காக தாஜ்மாகால் கட்டு"

"தாஜ்மாஹால் இயலாது
உன் பெயரில் ஒரு மாஹால் கட்டுகிறேன்"

சலங்கை கட்டிய மின்னலென
சிரித்தாய்

விடை தேடிய
விஞ்ஞானக் கவிஞனுக்கு
புலப்படாதது எனக்கு
புரிந்துவிட்டது
"பூமலரும் ஓசையை நான்
கேட்டுவிட்டேன்"
என்று ஆர்ப்பரித்தேன்
எனக்குள்..

பிறை வளரும்..

செல்வா
09-04-2008, 12:28 PM
விடை தேடிய
விஞ்ஞானக் கவிஞனுக்கு
புலப்படாதது எனக்கு
புரிந்துவிட்டது
"பூமலரும் ஓசையை நான்
கேட்டுவிட்டேன்"
என்று ஆர்ப்பரித்தேன்
எனக்குள்..

பிறை வளரும்..
பூ.. பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை....
கேட்டுட்டியா? சொல்லவே இல்ல... ஓ அதைத்தான் சொல்லிருக்கியா...
வளரட்டும்...... பிறை....

ஆதி
09-04-2008, 01:40 PM
பூ.. பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை....
கேட்டுட்டியா? சொல்லவே இல்ல... ஓ அதைத்தான் சொல்லிருக்கியா...


ஆமா டா, இதைத்தான் சொல்லி இருக்கேன், வைரமுத்துவின் ரத்ததானம் தொகுப்பில் இதையொத்த ஒரு கவிதை இருக்கு அதில் அவர் பூ மலரும் சப்தம் கேட்க இரவு முழுக்க விழித்திருப்பார், நடுவில் சிலப் பொழுது கண்ணயர்ந்து விடுவார், அந்த சமயத்தில் பூமலர்ந்துவிடும் அதையும் மனதில் வைத்துதான் எழுதினேன் டா..