PDA

View Full Version : நாய்க்குரு தீட்சை

நாகரா
19-02-2008, 06:17 AM
நாய்க்குரு தீட்சை
(நாகரா என்ற மனிதனுக்கு ஒரு நாயின் தீட்சை)

நாகரா!
உன் ஆணவத்தை
அருகிலுள்ள குப்பைத் தொட்டியில்
போட்டுவிட்டு
நான் குரைப்பதை
அதி கவனமாகக் கேள்.

இப்பொழுது
என் வால் பகுதியைத்
தீவிரமாகத் தியானித்து
அந்த வாலாகவே மாறி விடு.
"ஆறறிவு மனிதன்
ஐந்தறிவு நாயின்
வால் பகுதியைத் தியானிப்பதா?
அவ்வாலாகவே மாறுவதா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது!"
உன் கோபம் எனக்குப் புரிகிறது.
ஆனாலும்
நான் உனக்கு அளிக்க வேண்டிய
குரு தீட்சைக்கு
இத்தியானமும் மாற்றமும்
அத்தியாவசியமாகிறது.

ஆணவத்தின் மொத்த வடிவமாகவே
நீ இருப்பதால்
இத்தியானமும் மாற்றமும்
உன்னால்
எளிதில் ஏற்க முடியாததே.
உன் ஆணவத்தில்
எண்ணிலடங்காத் திமிர்கள்
அடங்காது ஆடுகின்றன.
மனிதத் திமிர்
மதத் திமிர்
சாத்திரத் திமிர்
சாதித் திமிர்
கோத்திரத் திமிர்
இனத் திமிர்
நிறத் திமிர்
மொழித் திமிர்
வட்டாரத் திமிர்
கலாசாரத் திமிர்
நாட்டுத் திமிர்
என்று உதாரணத்துக்காக
நனி மிகச் சிலத் திமிர்களை
நாய்த் திமிர் கூட ஒரு சிறிதும் இல்லாமல்
அடக்கத்தோடு
நான் உன் கவனத்துக்கு வைக்கிறேன்.

திமிர்களின் கிடங்கான
உன்னோடு பழகிய
சகவாச தோஷத்தால் எனக்கு வந்ததே
நாய்த் திமிர் என்றாலும்
உனக்கு தீட்சை தருவதற்காக
அத்திமிரைக்
குப்பைத் தொட்டியில் போடுவதற்கு
நான் பட்ட பாடு!
அத்திமிரை விட மனமின்றி
உனக்கு தீட்சை தருவதையே
நிறுத்திக் கொள்ளலாம் என்று கூட
எனக்குத் தோன்றியதென்றால்
உன் நிலை
நன்றாகவே புரிகிறது.

ஆனாலும்
உனக்கும் எனக்கும் எவர்க்கும்
ஆதியாம்
நம் போல் எந்தத் திமிரும் அறவே இல்லாத
அருட்பெருங்கடவுள்
உனக்கு தீட்சை தருவதற்கு
என்னைத் தேர்ந்தெடுத்து
அதற்கென்று கட்டாயமாக
நான் நாய்த் திமிர் கூட இல்லாமல்
சுத்த நாயாக
மன்னிக்கவும்
சுத்த நானாக
இருக்க வேண்டும்
என்று அன்புடன் விதித்தார்.
தீட்சை தந்து முடித்த மறு கணமே
நாய்த் திமிரோடு
நான் ஆசை தீரத் திரியலாம்
என்று உத்தரவாதமுந் தந்தார்.
நான் நனி மிக யோசித்த போது
மனிதனோடு பழகிய
சகவாச தோஷத்தால் தான்
நாய்த் திமிர்
எனக்கு வந்ததை
அவர் நினைவூட்டினார்.
நாய்த் திமிர் இல்லாமல்
வெறும் நாயாக
மன்னிக்கவும்
வெறும் நானாக
நான் சந்தோஷமாக
உலவிய யுகங்களை
அவர் எனக்குப்
படம் போட்டுக் காட்டினார்.

நமக்கெல்லாம் கடவுளாம்
அவர் தந்திரசாலியென்றும்
அப்போது தான்
நான் புரிந்து கொண்டேன்.
அதே சகவாச தோஷம் தான்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியம்
தன்னோடு தந்திரமாக
சில கணங்கள் இருக்க விட்டுத்
தன் போல் திமிரேதுமற்ற நிலை
மேற்கொள்ள என்னை அவர்
ஆயத்தம் செய்து விட்டார்.

சரியென்று முடிவாக
ஒப்புக் கொண்டு
நாய்த் திமிரைக்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு
உனக்கு தீட்சை தர
நான் வந்திருக்கிறேன்.
இப்போது
எனக்கு நன்றாகவே புரிகிறது
எண்ணிலடங்காத் திமிர்களின்
தொகுதியாம் ஆணவத்தின்
மொத்த வடிவமாகிய
மனிதனாம் உனக்கு
ஆணவத்தைக்
குப்பைத் தொட்டியில் போடுவது
எவ்வளவு கடினமென்று.

கவலைப் படாதே
நான் உனக்கு
தீட்சை தந்து முடித்த
மறு கணமே
ஆணவத்தைத் திருப்பி எடுத்துக் கொண்டு
எண்ணிலடங்காத் திமிர்களோடு
ஆர்ப்பாட்ட ஆட்டமெல்லாம்
நீ ஆசை தீர ஆடலாம்.
இது
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
நான்
உனக்குத் தரும் உத்தரவாதம்
அன்பு நாகரா!
(கடவுளோடு பழகிய
சகவாச தோஷத்தால்
மன்னிக்கவும்
சகவாச புண்ணியத்தால்
அவரது தந்திர புத்தி
இப்போது எனக்கும்)

மேலும்
சுத்த நாயான
மன்னிக்கவும்
சுத்த நானான
என் வாலைத் தியானித்து
என் வாலாகவே
நீ மாறியதும்
உனக்கு வரும் வாலறிவால்
(அதாவது
வள்ளுவர் சொல்லும்
தூய அறிவால்)
நீ சொல்லொணா
ஆன்ம இலாபத்தைப் பெறுவாய்
(தந்திர புத்தி தன் வேலையை
ஆரம்பித்து விட்டது)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
என் நாயுணர்வு
மன்னிக்கவும்
என் நானுணர்வு
என் வாலாம் உன்னில்
முழுமையாகப் பரவ
வாலுணர்வு நீங்கி
நீ
நாயாம் என்னில்
மன்னிக்கவும்
நானாம் என்னில்
அதாவது
நாயுணர்வில்
மன்னிக்கவும்
நானுணர்வில்
முழுமையாக நிலை பெறுவாய்
(தந்திர புத்தியின் உச்ச கட்டம்
என் சகவாசத்தால்
சுத்த நாயாம் எனது
மன்னிக்கவும்
சுத்த நானாம் எனது
இப்போதைய திமிரேதுமற்ற நிலை
கடவுளிடமிருந்து எனக்குத் தொற்றியதைப் போல
என்னிடமிருந்து உனக்குத் தொற்றட்டுமே)

மேலும்
என் வாலாகவே
நீ மாறியதும்
நாயாகிய என்னை
மன்னிக்கவும்
நானாகிய என்னையே
தீவிரமாகத் தியானித்து
நாயாகிய நானாகவே
மன்னிக்கவும்
நானாகிய நானாகவே மாறி
உன் வாலை
நீயே ஆட்டலாம்.
மனித உலகில்
நாய்க்குரு தீட்சை தரும்
பெருந்தீட்சையாளனாய்
வாலாட்டிச் சுதந்திரமாய்த் திரியலாம்.
(அருட்பெருங்கடவுளிடம் கற்ற
அரும்பெருந்தந்திரத்தால்
நாகராவை
நாயாக
மன்னிக்கவும்
நானாக
நன்றாக மாற்றிவிட்டேன்.
நாகரா
தழிழ் மன்றத்தில்
நாயாக
மன்னிக்கவும்
நானாக
தன் வாலாட்டித் திரிகிறது.

மனிதர்களே!
ஜாக்கிரதை
என் தந்திரத்துக்கு மாட்டிய
நாகரா போல்
மாட்டி விடாதீர்
மாறி விடாதீர்
கடவுள் எனக்களித்த வாக்கின் படி
நாய்த் திமிரோடு
நான் திரிகிறேன்
நீவிரும் தத்தம் திமிர்களோடு
மனிதராய்த் திரிவீர்
அருட்பெருங்கடவுள்
தம் அரும்பெருந்தந்திரத்தோடு
அவரே நாயாகி வரும் வரைக்கும்
அவர் விரைவில் வர இருப்பதாகக் கேள்வி
அதைப் பற்றி நமக்கென்ன கவலை
நாம் ஆசை தீரத்
தத்தம் திமிர்களோடு திரியலாம்)

இளசு
19-02-2008, 06:49 AM
உங்கள் சிந்தனை ஆழம் வியக்க வைக்கிறது நாகரா அவர்களே..

முழுதும் தெரியாவிட்டாலும்... மூழ்க முடியாவிட்டாலும்
சில ஆழங்கள் வியப்பைத் தருமல்லவா.. கடல் போல!

அதைப்போல உங்கள் சிந்தனைகள்..

அவற்றை லேசாய் தொடும் அளவுக்கும் நான் இன்றில்லை!
எனவே என் கருத்துகள் உரசியவன் சொல்பவை.. மூழ்கியவனுடையவை அல்ல..

ஒரு கருத்து, உட்கருத்து, உள்ளுள் கருத்து எனத் தூவுகிறீர்கள்..

கடவுளின் ''ஏஜெண்ட்டுகளை''க் கண்டிக்கிறீர்களா?
இல்லை ''குரு'க்களை மதிக்காதவர்களைச் சாடுகிறீர்களா?

நீண்ட கவிதை.. பலமுறை நாய்/நான்/மன்னிக்கவும் - தவிர்த்திருக்கலாமோ?

எல்லாத் திமிர்களும் வென்றவன்
என்ற திமிர் இருக்குமே..
என் செய்வது அப்போது?

நாகரா
19-02-2008, 08:42 AM
எல்லாத் திமிர்களும் வென்றவன் என்ற திமிர் இருக்குமே..
என் செய்வது அப்போது?

யோசிக்க வேண்டிய ஆழமான விஷயம். இளசுவில் இருக்கும் ஓர் முதிர்ந்த ஞான குருவாலேயே இத்தகைய சவால் விடும் கேள்வியைக் கேட்க முடியும், வணங்குகிறேன் அவரை, வணங்குகிறேன் இளசுவை, இளசுவுக்குள் அவர் இருப்பதால். எல்லாத் திமிர்களும் வென்றவன் என்ற திமிரையும் அடக்கத் தான் அருட்பெருங்கடவுளே வருகிறாரோ!

கடவுளின் ''ஏஜெண்ட்டுகளை''க் கண்டிக்கிறீர்களா?
இல்லை ''குரு'க்களை மதிக்காதவர்களைச் சாடுகிறீர்களா?

"இன்னவன்(ள்)" என்ற ஒரு குறுகிய அடையாளத்தில் குட்டையில் தேங்குவதைப் போல் தேங்கி இறுகிப் போவதையே நான் "திமிர்" என்கிறேன். மனிதனை சிறுமைப் படுத்தும் எண்ணிலடங்காத் திமிர்களின் ஒருமித்த தொகுப்பே ஆணவம் என்பது. அகந்தை என்பது பெயருள்ள உருவமுள்ள ஓர் உருவத் தொகுதியாய் நீங்கள் இருக்கும் நிலை. ஆணவம் என்பது அகந்தையாம் நீங்கள் பல தரப்பட்ட திமிர்களாய்த் தேங்கும் நிலை. அழிக்க வேண்டியது அகந்தையை அல்ல, ஆணவத்தை. இம்மிகப் பெரிய சிந்தனைப் பிழையில் சிக்க வைத்து மனிதரை ஏமாற்றித் தம் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கிறது கடவுளின் ஏஜெண்டுகள் என்று தங்களை விளம்பரப் படுத்தும் பொய்க்குருக்களின் கூட்டம். ஏனென்றால் ஆணவம் இருந்தால் தான் இவர்களின் ஆட்டத்திற்கு வழி.

அகந்தை எனபது ஆள்(ஆங்கிலத்தில் பெர்சன்)
கடவுள் என்பது நியதி (ஆங்கிலத்தில் பிரின்சிபுள்)

அகந்தையாம் ஆள் கடவுளாம் நியதியில் அடங்க வேண்டும். அவ்வாறு அடங்காமையே ஆணவம்.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்"

என்ற திருக்குறளில் ஆரிருள் உய்த்து விடும் அந்த அடங்காமையே ஆணவம். அகந்தையையே ஆணவமாக்கி விட்டால், ஆளுக்கு ஆரிருளே கதி என்றாக, கடவுளில் அடங்கவே முடியாத அவல நிலை. இந்த அவல நிலையிலிருந்து மீள, மேற்சொன்ன சிந்தனைப் பிழையிலிருந்து மனிதனாம் அகந்தையாம் ஆள் மீள வேண்டும்.

கடவுளில் அடங்கிய அகந்தையையே அதாவது நியதியில் அடங்கிய ஆளையே, இந்துக்கள் "குரு" என்றும், கிறிஸ்துவர்கள் "கிறிஸ்து"" என்றும், இஸ்லாமியர்கள் "ரசூல்" அல்லது "நபிகள்" என்றும், பௌத்தர்கள் "புத்தர்" என்றும், யூதர்கள் "மசியா" என்றும், இன்னும் பல்வேறு மதத்தவர் தத்தம் சிறப்புப் பெயர்களால் போற்றுகின்றனர். ஆன்மீகப் பகுதியில் நான் பதித்திருக்கும் மத நல்லிணக்க அதிசய மாலையில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14446) இப்பேருண்மையே வலியுறுத்தப்படுகிறது. படித்து தியானஞ் செய்து தெளிவீராக! இயேசுவின் முழுப்பெயர் எப்படி இயேசு கிறிஸ்துவோ, அவ்வாறே இளசு எனும் அகந்தையாம் ஆளான நீவிரும் ஆணவத் திமிர்களையெல்லாம் விட்டு கடவுளாம் நியதியில் அடங்கும் போது, உம் முழுப் பெயரும் இளசு கிறிஸ்து அல்லது இளசு குரு, இளசு நபி என்று இவ்வாறாக அமையும்.

புனித வேதாகமத்தில், கடவுளின் குமாரன் என்று தம்மை அவர் சொல்லிக் கொண்டதற்காக அவரை தூஷித்த யூத மத குருமார்களிடம், இயேசு கிறிஸ்து, "நீவிர் அனைவரும் கடவுளர் என்று வேதத்தில்(பழைய ஏற்பாடு) கூறப் பட்டிருப்பதை நீவிர் அறியீரோ?" என்று கேட்டார்.

எனவே அறிய வேண்டியதை அறிந்து, அடங்க வேண்டியதில் அடங்குங்கள் இளசு.

நீண்ட கவிதை.. பலமுறை நாய்/நான்/மன்னிக்கவும் - தவிர்த்திருக்கலாமோ?
"நான்" என்ற இறைப் பேருணர்வை வலியுறுத்தும் உத்தியாகவே அவ்வாறு கையாளாப்பட்டது.

எனது சிந்தனையைத் தூண்டி இவ்வாறு என்னை விளக்கமளிக்கச் செய்த உமது அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, இளசு.

சாலைஜெயராமன்
19-02-2008, 04:50 PM
கேவலமான பிறப்பில் நாயும் பன்றியும் இருந்தாலும் அதையும் பைரவர் என்றும், வராகர் என்றும் தெய்வமாகக் கொண்டாடுகிறோம்,

கீழான இந்த உயிரிலும் கூட இறைத்தத்துவங்கள் கோடானு கோடி உள்ளது. தன்னையும் தன் ஆற்றலையும் மறந்து இருப்பது பன்றி, யானையைவிட பலம் வாய்ந்தது. எந்த நஞ்சும் தீண்டாதது. இருப்பினும் பேடித்தனத்தின் உச்சம்தான் பன்றியின் குணம்.

அதே போல் உடன் அனைத்து நிகழ்வுகளையும் மறக்கும் குணம் நாய்க்கு உண்டு. எஜமான விசுவாசம் போன்ற அதீத குணங்கள் இருந்தாலும் பிறப்பில் ஒரு இழிநிலையான உயிரினம்தான் இந்த மறதிக் குணம் கொண்ட நாயின் பிறப்பு.

இறைவனாக வேண்டிய அத்தனை தகுதிகளும் தான் பெற்று அந்த இறையை தன்னில் அறியாமல் விண்ணிலும் மண்ணிலும் கல்லிலும் தேடும் மனிதன் தன் இயல்பை மறந்து பன்றி, நாயைப் போல வாழ்ந்து கீழான இந்த உயிரினங்களுக்கு ஒப்பாக இருக்கிறான்.

இதை இவனுக்கு அறிவவுறித்தி நல்வழிப் படுத்துவதற்காக இறைவன் ஒரு அவதாரமே எடுக்க வேண்டியதாயிற்று. புராணத்தில் நாய் பன்றி இரண்டுக்கும் அவதார மகிமை உண்டு.

திருமிகு நாகரா அவர்கள் தான் யார் என்ற தன்னை மறந்த மனித குலத்தின் இயல்பை காலத்தே எடுத்துரைத்து அறிவாகரம் தந்துள்ளது இம்மன்றம் பெற்ற பேறு.

சொல்லாழமும், கருத்தாழமும் கலந்த கலவை.

பேடிக்குணம் அகல பெருமானை வேண்டுகின்றேன்.

பூஜா
19-02-2008, 05:23 PM
மன்னிக்கவும் இது ஒரு சில மேதாவிகளுக்கான கவிதை!

சாதாரனமான என்போன்றவர்களால் விளங்கிக் கொள்ளும் தரம் இல்லை.

பூஜா

ஓவியா
19-02-2008, 06:09 PM

பெரியவர், திரு.சாலைஜெயராமன் ஐயா அவர்களுக்கு இந்த சிறியவளின் முத்தான வணக்கங்கள். :)

உங்களுடைய ஒரு பதிவையும் நான் தோன்றி படித்ததில்லை இருப்பினும், அங்கொன்றும் இங்கொன்றுமாயுள்ள சில பின்னூட்டங்களை எப்பொழுதோ வாசித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஐயா,
எனக்கு உங்களின் பின்னூட்டத்தில் சில வரிகள் விளங்கவில்லை. அவைகளை தெளிவு படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். இதோ அவை:

முதலாவதாக
கேவலமான பிறப்பு என்றால் என்ன?

எதை வைத்து கேவலமான பிறப்பில் நாயும் பன்றியும் இருக்கின்றன என்று கூருகிறீர்கள்.

இரண்டாவதாக
கீழான உயிரினங்கள் என்றால் என்ன? அவை யாவை?

பன்றியையும் நாயையும் எதை வைத்து கீழான உயிரினம் என்று சொல்லுகிறீர்கள்?

தங்களின் விளக்கத்தை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறேன்.

நன்றி.

பணிவுடன்
ஓவியா

சாலைஜெயராமன்
20-02-2008, 01:24 AM
அன்பு ஓவியா வணக்கம் பல.

உயரினங்களில் மனிதப்பிறவி உன்னதமானது என்று எதைவைத்துக் கூறுகிறோம் என்றால் அது அவனிடம் இருக்கும் ஆறாம் அறிவின் வல்லமையை உரிமையாக்கிக் கொண்டதால்தான்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐயறிவையும் உங்களாலும் என்னாலும் பட்டியலிடமுடியும். ஆனால் ஆறாம் அறிவு இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் நாம் அது எங்கிருக்கிறது? எவ்வாறு இருக்கிறது? 5 அறிவுக்கு கருவியைத் தந்த இறைவன் ஆறாம் அறிவிற்கு தனியாக ஒரு கருவியை நம் பார்வையில் படாமல் மறைவாக வைத்திருக்கிறானே அதன் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை கண்டால் உயிரினம் அனைத்திலும் மனிதன் மேம்பாடடைந்தவன் என்று அறியும் மறுபிறவி எடுத்து கொள்ள நம்மால் முடியும். நம்மால் மட்டும்தான் முடியும், 6 அறிவிற்கான கருவியை நம்முள் தேடி தரிசனம் செய்வதே பிறவியின் பயன். அவ்வாறு அதைக் காணும்போது நாமே இறைவன் என்ற நிலையையும் அடையலாம். நமது கோவில்களின் ஆகம அமைப்பு அத்தனையுமே மனிதனுக்கு தன்னைத் தேடும் நினைப்பு வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலின் கருவறையும் நம்மிடம் உள்ளது. அந்தக் கருவரையை அடைய முடியாமல் இருக்கும் தடைகளாக நந்தி போன்ற அமைப்புக் நம் தேகத்தில் எங்கு இருக்கிறது. கொடிமரம் நட்டு வைத்திருக்கிறார்களே அது எங்கே இருக்கிறது. இப்படிப்பட்ட நினைப்பு என்றாவது இவனுக்கு வந்து தன்னுள் தேடட்டுமே என்று நுணுக்கமாக நமது கோவில்களை நம் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு காலம் வரை இறைவனை வெளியில் தேட வேண்டும். பின் இந்த உடம்பின் உன்னத்தைத் அறிந்து இதனுள் புகும்போது நாம் வெளியில் கண்ட கோவில்களின் அமைப்பை தேகத்தில் காணலாம். கருவரையின் ரகசியமே ஆறாம் அறிவின் முடிவு.

இதையே திருமூல நாயனார்

உடம்பினுள் கோயில் கொண்டானென்று
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் என்று கூறுகிறார்.

உடல் வளர்க்கும் உபாயம் மிருகத்திற்குரியது. உயிர்வளர்க்கும் உபாயம் மனிதனுக்கு மட்டும்தான் உள்ளது.

எனவேதான் மிருகப்பிறப்பு கீழானது என்று கூறுகிறேன்.

இந்த உன்னதமான மனிதப் பிறப்பினைத் தவிர உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் இந்த அனுபவம் வாய்க்கும் வாய்ப்பே இல்லாததால் கீழ்ப்பிறப்புதான்.

மற்றபடி மனிதனுக்கு ஜாதியாலோ மதத்தாலோ உயர்வு தாழ்வான பிறப்புக்கள் கிடையாது. அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான் மனிதன்.

ஆனால் அவன் இந்த உணர்வை எப்பொழுதும் அடைவதே இல்லை. இந்த மயக்கம் அவனுக்கு எதனால் வந்தது என்றால் தன்னிலை மறந்து உணவு, இனப்பெருக்கத்திற்காக மட்டும் வாழும் மற்ற ஐயறிவுப் பிராணிகளைப்போல் வாழ்ந்து வீழ்ந்து தன் கடமை என்ன வென்று அறியாமலே மரித்துப் போகும்போது ஒப்பற்ற இந்த பிறப்பின் உன்னதம் என்ன வென்று தெரியாமலேயே போகும் துர்ப்பாக்கிய நிலைதான் மனிதனை மகானாக்கமல் காணாமல் ஆக்கி விடுகிறது.

ஆனால் மனிதன் மட்டும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியும் என்பது மெய்கண்டோரின் அனுபவ அறிக்கை. இதைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகம் நிறைய செய்திகளைத் தந்திருக்கிறது.

இதில் மூதுரை தந்த மூதாட்டி நம் தெய்வப் பெருந்தகை ஒளவைப் பிராட்டியார் கூறுமிடத்து

ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி

இதில் கீழ்ப்பிறப்பு என்பது எதைக் கூறுகிறார் என்றால் நீதி வழுவா நெறிமுறைகளான மூதறிஞர்களின் இரை தேடும் பணியோடு இறையையும் தேடும் பணியில் தன்னை இட்டுக் கொள்ளும் ஒரு சாரரை பெரியோர் என்றும், அவ்வாறு தேடுதல் இல்லாத மற்ற உணவு உடைக்கான பாட்டிலேயே கழித்து அதற்கு ஒரு நியாயமும் கற்பித்து உலகியல் வாழ்க்கைக்கு தன்னைத் தேய்த்து உணவு இனப்பெருக்கத்திற்காக வாழும் இறைதேடலுக்கு தன்னை இட்டுக் கொள்ள ஒரு சாரரை இழிகுலத்தோர் என்றும் கூறுகிறார். மற்றபடி தர்மம் செய்பவர் உயர்ந்தோர் என்றும், அவ்வாறு தர்மம் செய்து பிச்சையிடாதவர் இழிகுலத்தோர் என்றும் நாம் அர்த்தம் கொள்வது போல் இல்லை என்பதும் என் கருத்து.

நல்ல நெறிமுறைகளுக்கு இட்டுக்கொள்வது உயர்பிறப்பு

அவ்வாறு தன்னை இட்டுக் கொள்ளாதது பிறந்ததன் பயனை அடையாத கீழ்பிறப்பு,
எனவே மனிதப் பிறவி எடுக்காத அனைத்து உயிரும் இழிபிறப்புதான். அதனாலேயே மிருக வாழ்க்கை வாழாதே என்று இடித்துரைப்பது நமது தமிழ் மரபு. இதில் நாய் நரி பன்றி என்ற இன வேறுபாடு அற்று இனத்தில் தோன்றிய அனைத்துமே இழிபிறப்புதான்.

ஆனால் உன்னதமாகப் பிறந்த மனிதன் தன் அறியாமையினால் தன்னையே மிருகத்தின் சாயலாக மாற்றிக் கொண்டு தன் பிறப்பின் உன்னதம் என்ன வென்று அறியாமல் சாதாரண அல்ப வாழ்க்கை வாழுவதற்கு முழுமுயற்சி செய்து மிருக இனத்தையே மிஞ்சிவிட்டான்.
இதுதான் கருத்து.

முதலில் இந்த என் பின்னூட்டத்திற்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். பிறப்பின் ரகசியங்கள் கோடான கோடி உள்ளதில் இன்னும் சில அரிய தகவல்களைத் தர முயற்சிக்கிறேன்.

நல்ல விவாதப் பகுதியாக இதை மாற்றிவைத்ததற்கு முதலில் நன்றி.

ஒரு சந்தேகம் என்ற உங்கள் பதிவிற்கு நான் தந்த பின்னூட்ம் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

இது உங்கள் பதிவிற்கான என் பின்னூட்டம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323923&postcount=61)

இந்த கருத்தை ஒட்டிய சில பின்னூட்டங்களை பொறுமையாகப் படித்து என்னுடன் விவாதிக்கவும்.

இங்கே பார்க்கவும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323648&postcount=15)

நாவின் வலிமை என்னதென்ற என் பின்னூட்டம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323299&postcount=26)

மேலும் என் தமிழில் பரிபாஷை என்ன பதிப்பையும் பார்த்து மேலோட்டமான கருத்துக்களை வைக்காமல் உணர்வு பூர்வமாக விவாதிக்க தயாராகுங்கள்.

என்னால் இயன்ற பதில்களைத் தர முயற்சிக்கிறேன்.

நாகரா
20-02-2008, 04:04 AM
பிறப்பின் ரகசியங்கள் கோடான கோடி உள்ளதில் இன்னும் சில அரிய தகவல்களைத் தர முயற்சிக்கிறேன்.

ஐயா, அரிய பெரிய விஷயங்கள் பலவற்றை உமது இந்த பின்னூட்டத்தில் தெரிந்து கொண்டேன். நீவிர் இன்னும் தரவிருக்கும் அரிய தகவல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மற்றபடி மனிதனுக்கு ஜாதியாலோ மதத்தாலோ உயர்வு தாழ்வான பிறப்புக்கள் கிடையாது. அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான் மனிதன்.

நீவிர் பதித்திருக்கும் இக்கருத்தே நாய்க்குரு தீட்சையின் கரு. மனிதன் மதம் ஜாதி போன்ற பல்வேறு உயர்வு தாழ்வுகளாகிய "திமிர்களை" விட்டு, ஒவ்வொரு மனிதனும் "அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான்" என்பதை உணர்ந்து, மனித நேய ஒருமையில் ஒன்ற வேண்டும். ஆன்ம நேய ஒருமை அடுத்த படி.

புனித வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் "கடவுள் மனிதனைத் தன் போலவே, தன் சாயலில் படைத்தார்" என்ற பேருண்மையின் அடிப்படையில் மனித இனம் பல்வேறு உயர்வு தாழ்வுகளாகிய எல்லாத் "திமிர்களை" விட்டு ஒன்ற வேண்டும்.

"சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க நான் சங்கம்" என்ற அந்த அமைப்புக்கு வள்ளலார் பெயரிட்டு இந்த ஞான யுகத்துக்கான வெளிப்பாடுகளையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) தந்திருக்கிறார்.

கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கான நேரம் நெருங்கிவிட்டது. மனித இனம் மனித நேய ஒருமையில் ஒன்றி அதன் அடுத்த படியான ஆன்ம நேய ஒருமையில் ஒன்ற ஆயத்த நிலையில் இருக்கிறது. உலகெங்கிலும் பல பண்பட்ட உள்ளங்கள் ஆண்டவரின் வருகைக்கான நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கி விட்டன.

தமிழ் மன்றத்தில் இத்தகைய நற்செய்தியை அறிவிக்க ஒரு வாய்ப்பைத் தந்த நல்ல உள்ளங்களுக்கு, நாகரா நாயார் மன்னிக்கவும் நானார் தன் வாலாட்டி நன்றியைத் தேரிவித்துக் கொள்கிறார்.

நாகரா
20-02-2008, 06:07 AM
மன்னிக்கவும் இது ஒரு சில மேதாவிகளுக்கான கவிதை!

சாதாரனமான என்போன்றவர்களால் விளங்கிக் கொள்ளும் தரம் இல்லை.

பூஜா

சாதாரணமான உம்(நம்) போன்ற மனிதர்களிலும், அசாதாரணக் கடவுள் எந்தவொரு பாகுபாடுமின்றிக் கோயில் கொண்டிருக்கிறார். இதை விளங்கிக் கொள்ளுங்கள், பூஜா. கவிதை விளங்கவில்லை என்றால் பரவாயில்லை. மனிதன் தன்னைப் பிரிவினைப்படுத்தும் அவன் தானே உருவாக்கிக் கொண்ட பல்வேறு உயர்வு தாழ்வுகளாம் "திமிர்களை" விட்டு முதல் படியாக மனித நேய ஒருமையிலும், பின் இன்னும் அறிவிலும் உணர்விலும் முதிர்ந்து ஆன்ம நேய ஒருமையிலும் ஒன்ற வேண்டும் என்ற கடவுளாணையையே இக்கவிதை தன் பாணியில் வலியுறுத்துகிறது. இதைப் புரிந்து கொள்ள எல்லா வித மேதாவித்தனங்களையும் விட்டு விட்டு, நனி மிகச் சாதாரணமாக இருந்தால் போதும். இது என் பணிவான கருத்து. இதை ஏற்பதும் மறுப்பதும் உம் விருப்பம். உமது பின்னூட்டத்திற்கு நன்றி. உம் மனதில் பட்டதை வெளிப்படையாக இத்திரியில் வைத்தீர். என் மனதில் பட்டதை நானும் இவ்வாறு வெளிப்படையாக வைக்கிறேன்.

ஓவியா
20-02-2008, 03:02 PM
அன்பு ஓவியா வணக்கம் பல.

உயரினங்களில் மனிதப்பிறவி உன்னதமானது என்று எதைவைத்துக் கூறுகிறோம் என்றால் அது அவனிடம் இருக்கும் ஆறாம் அறிவின் வல்லமையை உரிமையாக்கிக் கொண்டதால்தான்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட ஐயறிவையும் உங்களாலும் என்னாலும் பட்டியலிடமுடியும். ஆனால் ஆறாம் அறிவு இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் நாம் அது எங்கிருக்கிறது? எவ்வாறு இருக்கிறது? 5 அறிவுக்கு கருவியைத் தந்த இறைவன் ஆறாம் அறிவிற்கு தனியாக ஒரு கருவியை நம் பார்வையில் படாமல் மறைவாக வைத்திருக்கிறானே அதன் நோக்கம் என்ன என்ற கேள்விகளுக்கு விடை கண்டால் உயிரினம் அனைத்திலும் மனிதன் மேம்பாடடைந்தவன் என்று அறியும் மறுபிறவி எடுத்து கொள்ள நம்மால் முடியும். நம்மால் மட்டும்தான் முடியும், 6 அறிவிற்கான கருவியை நம்முள் தேடி தரிசனம் செய்வதே பிறவியின் பயன். அவ்வாறு அதைக் காணும்போது நாமே இறைவன் என்ற நிலையையும் அடையலாம். நமது கோவில்களின் ஆகம அமைப்பு அத்தனையுமே மனிதனுக்கு தன்னைத் தேடும் நினைப்பு வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலின் கருவறையும் நம்மிடம் உள்ளது. அந்தக் கருவரையை அடைய முடியாமல் இருக்கும் தடைகளாக நந்தி போன்ற அமைப்புக் நம் தேகத்தில் எங்கு இருக்கிறது. கொடிமரம் நட்டு வைத்திருக்கிறார்களே அது எங்கே இருக்கிறது. இப்படிப்பட்ட நினைப்பு என்றாவது இவனுக்கு வந்து தன்னுள் தேடட்டுமே என்று நுணுக்கமாக நமது கோவில்களை நம் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். ஒரு காலம் வரை இறைவனை வெளியில் தேட வேண்டும். பின் இந்த உடம்பின் உன்னத்தைத் அறிந்து இதனுள் புகும்போது நாம் வெளியில் கண்ட கோவில்களின் அமைப்பை தேகத்தில் காணலாம். கருவரையின் ரகசியமே ஆறாம் அறிவின் முடிவு.

இதையே திருமூல நாயனார்

உடம்பினுள் கோயில் கொண்டானென்று
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் என்று கூறுகிறார்.

உடல் வளர்க்கும் உபாயம் மிருகத்திற்குரியது. உயிர்வளர்க்கும் உபாயம் மனிதனுக்கு மட்டும்தான் உள்ளது.

எனவேதான் மிருகப்பிறப்பு கீழானது என்று கூறுகிறேன்.

இந்த உன்னதமான மனிதப் பிறப்பினைத் தவிர உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் இந்த அனுபவம் வாய்க்கும் வாய்ப்பே இல்லாததால் கீழ்ப்பிறப்புதான்.

மற்றபடி மனிதனுக்கு ஜாதியாலோ மதத்தாலோ உயர்வு தாழ்வான பிறப்புக்கள் கிடையாது. அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான் மனிதன்.

ஆனால் அவன் இந்த உணர்வை எப்பொழுதும் அடைவதே இல்லை. இந்த மயக்கம் அவனுக்கு எதனால் வந்தது என்றால் தன்னிலை மறந்து உணவு, இனப்பெருக்கத்திற்காக மட்டும் வாழும் மற்ற ஐயறிவுப் பிராணிகளைப்போல் வாழ்ந்து வீழ்ந்து தன் கடமை என்ன வென்று அறியாமலே மரித்துப் போகும்போது ஒப்பற்ற இந்த பிறப்பின் உன்னதம் என்ன வென்று தெரியாமலேயே போகும் துர்ப்பாக்கிய நிலைதான் மனிதனை மகானாக்கமல் காணாமல் ஆக்கி விடுகிறது.

ஆனால் மனிதன் மட்டும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முடியும் என்பது மெய்கண்டோரின் அனுபவ அறிக்கை. இதைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகம் நிறைய செய்திகளைத் தந்திருக்கிறது.

இதில் மூதுரை தந்த மூதாட்டி நம் தெய்வப் பெருந்தகை ஒளவைப் பிராட்டியார் கூறுமிடத்து

ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி

இதில் கீழ்ப்பிறப்பு என்பது எதைக் கூறுகிறார் என்றால் நீதி வழுவா நெறிமுறைகளான மூதறிஞர்களின் இரை தேடும் பணியோடு இறையையும் தேடும் பணியில் தன்னை இட்டுக் கொள்ளும் ஒரு சாரரை பெரியோர் என்றும், அவ்வாறு தேடுதல் இல்லாத மற்ற உணவு உடைக்கான பாட்டிலேயே கழித்து அதற்கு ஒரு நியாயமும் கற்பித்து உலகியல் வாழ்க்கைக்கு தன்னைத் தேய்த்து உணவு இனப்பெருக்கத்திற்காக வாழும் இறைதேடலுக்கு தன்னை இட்டுக் கொள்ள ஒரு சாரரை இழிகுலத்தோர் என்றும் கூறுகிறார். மற்றபடி தர்மம் செய்பவர் உயர்ந்தோர் என்றும், அவ்வாறு தர்மம் செய்து பிச்சையிடாதவர் இழிகுலத்தோர் என்றும் நாம் அர்த்தம் கொள்வது போல் இல்லை என்பதும் என் கருத்து.

நல்ல நெறிமுறைகளுக்கு இட்டுக்கொள்வது உயர்பிறப்பு

அவ்வாறு தன்னை இட்டுக் கொள்ளாதது பிறந்ததன் பயனை அடையாத கீழ்பிறப்பு,
எனவே மனிதப் பிறவி எடுக்காத அனைத்து உயிரும் இழிபிறப்புதான். அதனாலேயே மிருக வாழ்க்கை வாழாதே என்று இடித்துரைப்பது நமது தமிழ் மரபு. இதில் நாய் நரி பன்றி என்ற இன வேறுபாடு அற்று இனத்தில் தோன்றிய அனைத்துமே இழிபிறப்புதான்.

ஆனால் உன்னதமாகப் பிறந்த மனிதன் தன் அறியாமையினால் தன்னையே மிருகத்தின் சாயலாக மாற்றிக் கொண்டு தன் பிறப்பின் உன்னதம் என்ன வென்று அறியாமல் சாதாரண அல்ப வாழ்க்கை வாழுவதற்கு முழுமுயற்சி செய்து மிருக இனத்தையே மிஞ்சிவிட்டான்.
இதுதான் கருத்து.

முதலில் இந்த என் பின்னூட்டத்திற்கு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். பிறப்பின் ரகசியங்கள் கோடான கோடி உள்ளதில் இன்னும் சில அரிய தகவல்களைத் தர முயற்சிக்கிறேன்.

நல்ல விவாதப் பகுதியாக இதை மாற்றிவைத்ததற்கு முதலில் நன்றி.

ஒரு சந்தேகம் என்ற உங்கள் பதிவிற்கு நான் தந்த பின்னூட்ம் நீங்கள் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

இது உங்கள் பதிவிற்கான என் பின்னூட்டம் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323923&postcount=61)

இந்த கருத்தை ஒட்டிய சில பின்னூட்டங்களை பொறுமையாகப் படித்து என்னுடன் விவாதிக்கவும்.

இங்கே பார்க்கவும் (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323648&postcount=15)

நாவின் வலிமை என்னதென்ற என் பின்னூட்டம் இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=323299&postcount=26)

மேலும் என் தமிழில் பரிபாஷை என்ன பதிப்பையும் பார்த்து மேலோட்டமான கருத்துக்களை வைக்காமல் உணர்வு பூர்வமாக விவாதிக்க தயாராகுங்கள்.

என்னால் இயன்ற பதில்களைத் தர முயற்சிக்கிறேன்.

முதலில் இருகரங்கூப்பி என் வணக்கத்தையும் விளக்கவுரைக்கு என் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐயா,
உங்களுடைய விளக்கவுரை இந்து சமயத்தை ஒட்டியிருப்பதால் அடியேனுக்கு இதில் கலந்துக்கொள்ள மனமில்லை. மதம் சம்பந்தமான எந்த விவாதத்திலும் நான் கலந்துக்கொள்வதில்லை. :)

நான் அனைத்து ஜீவன்களையும் கடவுளின் ஆசை படைப்பாகவே காண்கிறேன்.
அதனால் ஒன்று உயர்வானது மற்றொன்று நீங்கள் கூறியது போல் கேவலமானதும், கீழானதுமாக பார்க்க என் மனம் சம்மதிக்கவில்லை.

மன்னிக்கவும்.

நன்றிகள் பல

சாலைஜெயராமன்
20-02-2008, 04:27 PM
அன்பு மன்ற நண்பர்களே,

ஓவியா அவர்கள் கூறியதுபோல் இந்த பின்னூட்டப் பதிவில் எங்கேனும் இந்துமத சார்பான விளக்கம் இருக்கிறதா என்பதை சுட்டிக் காட்டவும்.

மனிதனின் உயர்வையும், இந்த அழி உடம்பின் மூலம் அழியா னிலையை அடைய முடியும் என்பதுதானே எல்லா மதங்களின் சாரம், அதை ஒட்டிய விளக்கங்கள்தானே தரப்பட்டிருக்கிறது, எங்கே இந்து மத விளக்கங்கள் உள்ளது? கோவில்களின் ஆகம விதிப்படி உள்ள அமைப்பைப் பற்றிக் கூறியதைவைத்து இந்து மதத்தின் செய்திகளாக எடுத்துக் கொண்டது ஓவியாவின் கருத்துக்களில் ஏற்பட்ட ஒரு சின்ன தவறு.

ஒளவையையும், திருமூலரையும் இந்து மதப் பெரியார்கள் என நினைத்துவிட்டார் போலும். இவர்கள் மதங்களையெல்லாம் கடந்து நிற்கும் தமிழ் மேருகள் என்பதை ஓவியா அறியவில்லையே என நினைத்து வருந்துகிறேன்.

மற்றவர்கள் கருத்துக்கள் எவ்வாறு வருகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நுரையீரல்
20-02-2008, 05:14 PM
எல்லாத் திமிர்களும் வென்றவன்
என்ற திமிர் இருக்குமே..
என் செய்வது அப்போது?
உங்கள் சிந்தனை ஆழம் வியக்க வைக்கிறது இளசு அண்ணா...

என்னடா நீங்க போட்ட பின்னூட்டத்தின் முதல் வரியே, எனது பின்னூட்டமாக வருகிறதோ என்று நினைக்காதீர்கள்..

நீங்கள் சொன்ன சிந்தனை போன்ற ஒரு சிந்தனையும் யாரோ சொல்லி கேட்டதாக என்வசம் இருக்கிறது..

ஆசையே துன்பத்துக்கு காரணம்
உலகமே இதை உணர வேண்டும்
என்று புத்தரும் ஆசைப்பட்டார்..

ஆசைகளையோ, ஆணவத்தையோ துறக்கவோ, வெறுக்கவோ வேண்டியதில்லை.. மாறாக மனிதத்துவத்தை மறக்காமல் இருந்தாலே போதும்...

எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு ஆசைப்பட வேண்டும்.. சாப்பிடக்கூட ஆசைப்பட வேண்டும்.. கையே சோற்றை எடுத்து அனிச்சையாக வாய்க்குள் திணிக்க முடியாது..

கடவுள் மக்களைப் பார்த்து சொல்கிறார்,
யாமே மனிதர்களைப் படைத்தோம்..
யாமே மனிதர்களுக்கு ஜீவனைக் கொடுத்து,
இறுதியில் ஜீவ காருண்யம் செய்கிறோம்
என்று சொல்வதை செய்தியாக பார்ப்பரும் உண்டு, அதையே ஆணவ வார்த்தைகளாகவும் பார்க்கலாம்.

எது இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? 60 வயசுக்கு மேல ஆன்மீகத்துல ஐக்கியமாயிடுறேனு கடவுள்கிட்ட சத்தியம் பண்ணி சொல்லிருக்கேன்..

"60க்கு முன்னாடியே டிக்கட் வாங்கிட்டா எப்படி ஆன்மீகம் செய்வே" நு சாலையண்ணா குறுக்குக் கேள்வி கேப்பீங்க.. பாதிவழியிலயே இறக்கிவிட்டா நாங்க எப்படி ஆன்மீகம் செய்றது நு நாங்களும் திருப்பி பதில் கேள்வி கேப்போமில்ல...

அண்ணா ஒண்ணு தெரிஞ்சுக்கோணும்.. தாமஸ் ஆல்வா எடிசனுக்கு மாலைக்கண் நோய் இருந்துச்சு.. அதுவரைக்கும் மாலைக்கண் நோய் வந்துச்சுன்னா இது கடவுளின் சித்தம், இதோடயே வாழ்ந்து செத்துப்போயிடலாம் நு டிக்கட் வாங்கிடுவாங்க..

ஆனா எங்க எடிசன் அண்ணா சாயங்காலத்துக்கு மேலயும் பார்க்கணும் நு ஆசைப்பட்டார், அதுனால் கண்டுபிடிச்சது தான் மின்சாரமும், ஒளிவிளக்கும் அப்படி நு எடிசனோட தம்பி நுரை ஆணவப்படுறதுல தப்பில்லிங்கோ......

குறிப்பு: கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதால வாத்தியாரண்ணாவுடைய காப்பிரைட்டான 'நு' வை அதிகப்படியாக பயன்படுத்தியதற்காக என்னை மன்னிக்கவும்.

நாகரா
21-02-2008, 04:53 AM
(நாய்க்குருவின்
அரும்பெருந்தந்திரத்துக்கு
ஆட்பட்டு
நாயாரின் வாலையே
தீவிரமாகத் தியானித்து
அவ்வாலாகவே மாறிவிட்ட
நாகரா
நாயாரையே
தீவிரமாகத் தியானித்துத்
தன் மெய்ப்பொருள் விளக்கம்
பெறுதல்)

எச்சரிக்கை: நாய்க்குரு தீட்சை முதல் பகுதியை வாசித்து உமது மூளைப் பொறியின் மறை ஏற்கனவே தளர்வாகி இருக்கும் வாய்ப்பு உள்ளதால், இவ்விரண்டாவது பகுதியைப் படிக்கும் போது, மறை முழுவதுமாகக் கழன்று, மூளைப் பொறியே விழுந்து தூள் தூளாக நொருங்கும் பேரபாயம் இருக்கிறது. எனவே இப்பேரபாயத்தைச் சந்திக்கத் தயாராயுள்ள ஏற்கனவே மறை தளர்வாகி இருப்பவர்கள் மட்டுமே இதைப் படிக்கவும்.

வாலென்று
எனக்கே உரிய தனிப்பெயரோடும்
உருவத்தோடும்
நான் இருந்தாலும்
என்னை ஆட்டுவிப்பவராம் நாயாரோடு
எப்போதும் நான் ஒன்றியே இருக்கிறேன்.

நாயாரும்
வாலாம் என்னைத்
தன்னை விட்டு வேறான மாறான எதிரான
இன்னொன்றாகக் கருதி வெறுப்பதில்லை.

வாலாம் என்னில் நாயார்
பரிபூரணமாய் நிறைந்துள்ளார்.

நாயாரும் வாலாம் நானும்
ஒன்றேயன்றி வேறல்ல.

வாலாம் எனக்கு நாயாரே மெய்.
வாலாம் என் மேல்
பல்வேறு திமிர்களாய்ப் படிந்த
தூசுப் பொய்களை உதற
என்னில் பரிபூரணமாய் நிறைந்துள்ள
நாயாரை நான் நாட
அவரும்
தன் வாலாம் என்னை
நன்றாக ஆட்ட
அத்தூசுத் திமிர்கள்
என்னை விட்டு நீங்கி
"தூய்மை" என்ற அர்த்தமுள்ள
வாலாம் நான்
என் பொருள் விளங்கி
மெய்யாம் நாயாரில்
நீடூழி வாழ்கிறேன்.

என் தனிப்பெயர் வால்.
நாயாரின் அருளால்
ஆணவத் திமிர்களாம் தூசுகள்
நீங்கப் பெற்று
என் "தூய" நிலையை
இப்பெயர் குறிப்பதால்
இது என் சிறப்புப் பெயருங்கூட.

என் முழுப்பெயர் நாயார் வால்.

வாலாம் நான்
என்ன ஆட்டம் ஆடினாலும்
நாயாரிலேயே எப்போதும் அடங்கியிருக்கிறேன்.
நாயாரே
என்னை ஆட்டுவிப்பதையும்
எந்தவொரு ஐயமுமின்றி
எப்போதும் அறிந்திருக்கிறேன்.

இவ்வாறாக வாலறிவால்
நான் நன்றாகப் பக்குவமடைந்த
ஒரு கணத்தில்
நாயாரே என் குரு நாதராகி
எனக்கு தீட்சையளிக்கும் முறையாக
இக்கேள்விகளைக் கேட்டார்.

"வால் நீயா?
அல்லது
வால் உன் பெயரா?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"வால் என் பெயரேயன்றி
வால் நானல்ல."

அடுத்து நாயார் கேட்டார்:
"வால் உன் பெயரென்றால், பின் நீ யார்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நான் நாயாரே!"

அடுத்து நாயார் கேட்டார்:
"நீ நாயாரேயென்று எப்படி அறிகிறாய்?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே என்னில் பரிபூரணமாய்
நிறைந்துள்ள மெய்ம்மையால்."

அடுத்து நாயார் கேட்டார்:
"பின் வாலென்று எப்படி உன் பெயர்
நாயாரென்று ஏன் இல்லை?"

நான் பணிவோடு பதிலளித்தேன்:
"நாயாரே
வாலென்ற என் பெயரில்
என் உருவில்
தன் பணிக்காகத் தானே
ஆடுகிறார்.
நாயாரே என்னை நன்றாக ஆட்டுவிக்க
நானும் அவர் வாலாய் உவந்து ஆடுகிறேன்
நான் நாயாராம் அவரேயன்றி வேறில்லை
என்ற மெய்யுணர்வோடு."

அடுத்து நாயார் நனி மிக மகிழ்ந்து
என்னை வாழ்த்தினார்:
"வாலாரே!
நீர் நாயாராம் நானேயென்று
மெய்ப்பொருள் விளக்கம் பெற்றீர்.
இவ்வுலகில்
என் பணிக்காக
நான் உம்மை உவந்து ஆட்ட
நீவிர் என்னில் நிலைபெற்றே
நன்றாக ஆடுவீர்."

நானும்
நாயாரே நானென்ற
மெய்யுணர்ந்து
வாலாராய் நாயாரில் நிலைபெற்றே
நன்றாக ஆடுகிறேன்
நாயாராம் நானே
வாலாராம் பெயரோடு
அவ்வுருவோடு
என்னை உவந்து ஆட்டவே.

ஆதி
21-02-2008, 05:47 AM
ஐய்யா உங்களின் ஒவ்வொரு கவிதையும் நான் என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளன..

நான் என்பது என்ன ? எது ?

நான் என்பது அகந்தையா ? நானென ஆகுதல் ஞானமா ? நானெது என உணரல் புது பிறப்பா ?

சும்மாய் இருத்தல் பெருஞானம் ஜென் சொன்னது..

நானை இழத்தில் திருஞானம் ரமணர் சொன்னது..

நானாய் இருத்தலும் ஞானமா ? எனக்கு விளங்கவில்லையே ஐய்யா..

விளக்கம் தருவீரா ?

அன்புடன் ஆதி

நாகரா
21-02-2008, 06:41 AM
ஐய்யா உங்களு ஒவ்வொரு கவிதையும் நான் என்பதை வலியுறுத்துவதாகவே உள்ளன..

நான் என்பது என்ன ? எது ?

நான் என்பது அகந்தையா ? நானென ஆகுதல் ஞானமா ? நானெது என உணரல் புது பிறப்பா ?

சும்மாய் இருத்தல் பெருஞானம் ஜென் சொன்னது..

நானை இழத்தில் திருஞானம் ரமணர் சொன்னது..

நானாய் இருத்தலும் ஞானமா ? எனக்கு விளங்கவில்லையே ஐய்யா..

விளக்கம் தருவீரா ?

அன்புடன் ஆதி

நான் என்பது நியதி. ஆதி என்பது ஆள்
உமது முழுப்பெயர் நான் ஆதி
இன்னும் விளக்கமாக உமது முழுப்பெயர் நானே. நான். ஆதி.

நானே என்பது உமது அருட்தந்தை. நான் என்பது உமது அருட்தாய். அருட்தந்தையையும், அருட்தாயையும் அறிந்துணர்ந்து ஆதி என்ற ஆளாம் எறும்பில் அவதாரம் எடுத்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் நபிகள் நாயகம் முகம்மதுவே(அவர் ஒருவரையே வரைய முடியாது, வரைய முடிந்த மற்றவர்களையெல்லாம் படத்தில் மாட்டிக் கும்பிட முடியும்) அருட்குரு அல்லது சற்குரு அல்லது மெய்க்குரு. இம்மூவருரின் ஒருமையே உமது அருவ நிலை, உமது மட்டுமன்றி ஓவ்வொன்றினதும், நாகரா நாயினதுங் கூட.

உமது உருவ நிலையாம் ஆதியே அகந்தை. ஆதியாம் அகந்தையாம் ஆள், நான் நியதியில் அதாவது உமது அருவ நிலையில் அடங்குதலே ஜென் சொன்ன சும்மாய் இருத்தல் பெருஞானம், மற்றும் உமது புது அல்லது மறு பிறப்பு.

அருவ நிலையில் இவ்வாறு அடங்கியிருந்ததால் தான், குரு நாதர் இயேசு கிறிஸ்துவால்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்.
குரு நாதர் கிருஷ்ணரால்
நானே ஆதி நடு அந்தமாயிருக்கிறேன்.
என்ற மகா வாக்கியங்களைக் கூற முடிந்தது.
நானே. நான். என்னும் ஒருமைப் பேருணர்வே ஜீவனுள்ள வார்த்தை.

நானை இழக்க வேண்டும் என்று ஒரு போதும் ரமணர் சொல்லவில்லை. நான் யார்? என்று தியான பூர்வமாய் வினவி, எல்லா விடைகளையும் தவிர்த்து, நான் நான் நான் என்று உமது இருதய குகையில் இடைவிடாது ஒலிக்கும் ஒளிரும் பேருணர்வில் எப்போதும் சகஜமாக அடங்கியிருக்கச் சொன்னார்.

ஆம், ஐயா ஆதி அவர்களே, ஐயமின்றி நான் என்பதே மெய்ஞ்ஞானம். அது வெறும் வார்த்தையில்லை என்று உமக்கும் ஒவ்வொருவருக்கும் நனி மிக நன்றாகவே தெரியும். இதுவே பரம இரகசியம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14471), இது மிகவும் பகிரங்கமாகவே உமக்குள்ளும் எல்லோரிலும் இறைக்கப் பட்டிருப்பதால், இதன் அருமை தெரியாது நாம் அலட்சியத்தில் இருக்கிறோம்.

இவ்வளவே நாகரா நாய் அறிந்த கையளவான விளக்கம். இவ்விளக்கத்துள் உலகளவும் அடக்கம்.

உமதுண்மையில், இவ்வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் உணர்வில், இன்னும் இன்னும் ஆழ உமக்கும் புரியும் இவ்விளக்கம்.

நன்றியுடன் வாலாட்டி நிற்கிறேன்.

வணக்கம்.

ஆதி
21-02-2008, 06:56 AM
நானுள் இருக்கும் ஞானம் புரிந்து கொண்டேன் ஐய்யா, விளக்கத்திற்கு நன்றி..

பாரதி சொன்ன

ஒன்று நீ, நீ பல என்பது பொறியில் தட்டுகிறது..

நானும் நானாய் இருக்க முயல்கிறேன்.

அன்புடன் ஆதி

நாகரா
21-02-2008, 07:29 AM
நானுள் இருக்கும் ஞானம் புரிந்து கொண்டேன் ஐய்யா, விளக்கத்திற்கு நன்றி..

பாரதி சொன்ன

ஒன்று நீ, நீ பல என்பது பொறியில் தட்டுகிறது..

நானும் நானாய் இருக்க முயல்கிறேன்.

அன்புடன் ஆதி

நானே உம் ஆதியெனத் தெளிந்து, அந்த ஆதியில் நீவிர் நானேயென இருப்பீர் ஆதி! நன்றியும் வாழ்த்துக்களும்.

நாகரா
21-02-2008, 08:28 AM
அன்பு மன்ற நண்பர்களே,

ஓவியா அவர்கள் கூறியதுபோல் இந்த பின்னூட்டப் பதிவில் எங்கேனும் இந்துமத சார்பான விளக்கம் இருக்கிறதா என்பதை சுட்டிக் காட்டவும்.

மனிதனின் உயர்வையும், இந்த அழி உடம்பின் மூலம் அழியா னிலையை அடைய முடியும் என்பதுதானே எல்லா மதங்களின் சாரம், அதை ஒட்டிய விளக்கங்கள்தானே தரப்பட்டிருக்கிறது, எங்கே இந்து மத விளக்கங்கள் உள்ளது? கோவில்களின் ஆகம விதிப்படி உள்ள அமைப்பைப் பற்றிக் கூறியதைவைத்து இந்து மதத்தின் செய்திகளாக எடுத்துக் கொண்டது ஓவியாவின் கருத்துக்களில் ஏற்பட்ட ஒரு சின்ன தவறு.

ஒளவையையும், திருமூலரையும் இந்து மதப் பெரியார்கள் என நினைத்துவிட்டார் போலும். இவர்கள் மதங்களையெல்லாம் கடந்து நிற்கும் தமிழ் மேருகள் என்பதை ஓவியா அறியவில்லையே என நினைத்து வருந்துகிறேன்.

மற்றவர்கள் கருத்துக்கள் எவ்வாறு வருகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

உமது பின்னூட்டத்தில் இந்து மத சார்பான கருத்துக்கள் எவற்றையும் நான் காணவில்லை. உமது பின்னூட்டத்தின் பிழிவாகக் கீழ்க் காணும் பகுதிகளை நான் கருதுகிறேன்.

திருமூல நாயனார்

உடம்பினுள் கோயில் கொண்டானென்று
உடல் வளர்த்தேன் உயிர்வளர்த்தேன் என்று கூறுகிறார்.

உடல் வளர்க்கும் உபாயம் மிருகத்திற்குரியது. உயிர்வளர்க்கும் உபாயம் மனிதனுக்கு மட்டும்தான் உள்ளது.

எனவேதான் மிருகப்பிறப்பு கீழானது என்று கூறுகிறேன்.

இந்த உன்னதமான மனிதப் பிறப்பினைத் தவிர உலகில் தோன்றிய அனைத்து உயிர்களுக்கும் இந்த அனுபவம் வாய்க்கும் வாய்ப்பே இல்லாததால் கீழ்ப்பிறப்புதான்.

மற்றபடி மனிதனுக்கு ஜாதியாலோ மதத்தாலோ உயர்வு தாழ்வான பிறப்புக்கள் கிடையாது. அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான் மனிதன்.

ஆனால் அவன் இந்த உணர்வை எப்பொழுதும் அடைவதே இல்லை. இந்த மயக்கம் அவனுக்கு எதனால் வந்தது என்றால் தன்னிலை மறந்து உணவு, இனப்பெருக்கத்திற்காக மட்டும் வாழும் மற்ற ஐயறிவுப் பிராணிகளைப்போல் வாழ்ந்து வீழ்ந்து தன் கடமை என்ன வென்று அறியாமலே மரித்துப் போகும்போது ஒப்பற்ற இந்த பிறப்பின் உன்னதம் என்ன வென்று தெரியாமலேயே போகும் துர்ப்பாக்கிய நிலைதான் மனிதனை மகானாக்கமல் காணாமல் ஆக்கி விடுகிறது.

இப்பிழிவிலும் பிழிவாகக் கீழ்க்காணும் பகுதியை வைக்கிறேன்

மற்றபடி மனிதனுக்கு ஜாதியாலோ மதத்தாலோ உயர்வு தாழ்வான பிறப்புக்கள் கிடையாது. அரூபமான இறைவனின் அம்சமும் சாயலும்தான் மனிதன்.

ஐயா, நீவிர் கருத்தாழமுள்ள உமது பதிவுகளால் எம்மை வெளிச்சப்படுத்தும் உம் அரும்பணியைத் தொடர்வீர்.

நான் அனைத்து ஜீவன்களையும் கடவுளின் ஆசை படைப்பாகவே காண்கிறேன்.

ஓவியாவின் இக்கருத்து வணக்கத்திற்குரியதே.

ஆனால் மனித நேய ஒருமையைக் கூட ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியாத மனிதனால் ஆன்ம நேய ஒருமையில் எப்படிக் கனிய முடியும்?

ஓவியாவின் இக்கருத்து சுட்டும் ஆன்ம நேய ஒருமையில் மனிதம் கனிய அருட்செயல் செய்ய அருட்பெருங்கடவுளை வேண்டுகிறேன்.

நன்றி.

சாலைஜெயராமன்
21-02-2008, 10:36 AM
நன்றி திருமிகு நாகரா

ஆன்மாவையே இன்னதென்று அறியாத நாம் அதன் ஒருமைப்பாடை எப்படிக் கொண்டு வர முடியும்?

உயிர் வளர்க்கும் உபாயத்திற்கு உறுதுணையாய் இருப்பது உடலே. உடலின் ஆழத்தில் இருட்கோளத்தில் உறைந்திருக்கும் ஆன்மாவினை சுட்டிக் காட்டி இதுதான் ஆன்ம சொரூபம் என்று அறிவிக்க யாரும் இல்லாததால் மாயையின் மயக்கத்தில் வெறும் வார்த்தையளவில் நின்றுவிட்டது ஆன்மநேயம் என்பது. ஆன்மா என்னும் அப் பரம் பொருள் அனைத்து உடலிலும் மாயையாகக் கலந்து விட்டிருப்பதில் ஆன்மாவைத் தெரியாததால்தான் உயிரின் உடல் சுயநலம் ஒன்றைமட்டும் முன்னிருத்தி இன்பத்தை நோக்கியே ஓடுகிறது.

உடல் இன்பம் மாயை என்பதை ஆன்ம அறிவில் திளைத்திருக்கும் ஒரு அருட்செம்மலின் வாய்மையால் அவர்களின் பேரிரக்கத்திற்கு ஆளாகி. ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்றையும் அவ் அருட்பேராற்றலுக்கு அளித்து நிர்வாண நிலையாம் சகலத்தையும் அச் செம்மலின் பால் வைப்போமேயானால் ஆன்ம ஒளி சகல மனித உயிரில் எங்கு ஒளிந்திருக்கிறது என்பதை அறியமுடியும்.

எல்லா வேதங்களும் அதைத்தான் கூறுகிறது.

புனித விவிலியம் கொரிந்தியர் அதிகாரத்தில்

"நீங்கள் உலகிற்கு வெளிச்சமாயிருங்கள்" எனவும்

மச்சம் என்னப்பெற்ற மீனின் மாம்சமும் மற்றும் ஏனைய பிற உயிர்களின் மாம்சமூம் சதையும் இரத்த்தினால் தோற்றத்தில் மனிதனுடைய மாமிசத்தைப் போல இருந்தாலும் ஒவ்வொன்றும் தனிக் குணம் கொண்டுள்ளதைப் போல

ஆன்ம அறிவைப் பெற்றவர்களின் மாம்சம் என்ன வென்று அறியும்போது அழி உடலின் மாம்சத்திலிருந்து அவர்களின் சரீரம் எந்த அளவு மாறுபட்டு உன்னதத்தில் உள்ளது என்பதைக் காணலாம்.

மனித உயிரிலிலேயே இவ்வாறு இரு நிலைப் பாடு கொண்ட தோற்றம் இருக்கும்போது, மிருகங்கள் கீழான பிறப்பின் வகையில்தான் வருகிறது.

ஆறு பிறவி அடைந்து மனு என்ற நிலையில் ஏழாம் பிறப்பாகிய ஒரு பிரம்மஷேட்டரின் திருமுகத்தில் அவர்கள் வாய்மையெனும் அறிவாகாரப் புதையலில் மறு பிறப்பெய்தினால் மனு என்ற நிலையிலேயே அமரனாகவும் ஆக முடியும்.

இதையே விவிலியம்

"ஒருவன் ஆவியினாலும் பரிசுத்த ஜலத்தினாலுமன்றி மற்றபடி மறுபிறப்பை அடைய முடியாது"

எனக் கூறி ஒவ்வொரு மனுவும் மறுபிறப்பை இந்த சரீர நிலையிலேயே அடையப் பாடுபடவேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தப் பொதுவான மெய்யுண்மை புனித திருக்குரானிலும், பகவத் கீதையிலும் பத்தி பத்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. எந்த மதம் மனிதனைக் கூறு போடச் சொன்னது? மிருக அறிவில் இருப்பதால்தான் மதத்தின் பெயரால் இவ்வேற்றுமை உலகில் நிலவுகிறது. அதுவும் மாயைதான்

மனித சரீரத்தின் ஒப்பற்ற பெருமையை பறை சாற்றி அறிவிப்பதற்காக அமைக்கப்பட்டதுதான் இத்தனை சாத்திரங்களும் சம்பிரதாயங்களும். தமிழ்த் தாய் இதில் நல்ல பங்காற்றியிருக்கிறாள்.

தோலை விழுங்கி சுளையை எறியும் அறிவற்ற பிறப்பாக இம் மானுடம் ஆனது கண்டு ஒவ்வொரு ஞானியர்களும் இரக்கத்தால் அவத்தை தாரமாக்கி அவதாரம் எடுத்து வருகிறார்கள்.

மனிதனின் அலட்சியப் போக்கால் இறை அவதாரங்களை சாதாரணமான மனித தோற்றமாகக் கருதிப் புறக்கணித்துவிட்டதால்தான் "கடைவிரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளல் பெருமானார் போல் பல ஞானிகளும் சலிப்புற்று இவ்வுலகைத் துறந்துவிட்டனர்.

இதனால்தான் இத்தனை கேடு இந்த மனித சமுதாயத்திற்கு.

நாகரா
21-02-2008, 01:16 PM
ஆறு பிறவி அடைந்து மனு என்ற நிலையில் ஏழாம் பிறப்பாகிய ஒரு பிரம்மஷேட்டரின் திருமுகத்தில் அவர்கள் வாய்மையெனும் அறிவாகாரப் புதையலில் மறு பிறப்பெய்தினால் மனு என்ற நிலையிலேயே அமரனாகவும் ஆக முடியும்.

இதையே விவிலியம்

"ஒருவன் ஆவியினாலும் பரிசுத்த ஜலத்தினாலுமன்றி மற்றபடி மறுபிறப்பை அடைய முடியாது"

எனக் கூறி ஒவ்வொரு மனுவும் மறுபிறப்பை இந்த சரீர நிலையிலேயே அடையப் பாடுபடவேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தப் பொதுவான மெய்யுண்மை புனித திருக்குரானிலும், பகவத் கீதையிலும் பத்தி பத்தியாகக் கூறப்பட்டிருக்கிறது. எந்த மதம் மனிதனைக் கூறு போடச் சொன்னது? மிருக அறிவில் இருப்பதால்தான் மதத்தின் பெயரால் இவ்வேற்றுமை உலகில் நிலவுகிறது. அதுவும் மாயைதான்

ஐயா, அரிய பல கருதுக்களை உமது பின்னூட்டத்தில் தந்திருக்கிறீர். மிக்க நன்றி. அனைத்து மதங்களின் உட்கருத்தாக, பொதுவான போதனையாக உமது பின்னூட்டத்திலிருந்து மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன். மேலும் மனிதன் அவசரமாக அறிய வேண்டியதை மேற்கோளுக்குள் தடித்த எழுத்துக்களில் காட்டியிருக்கிறேன். அறிய வேண்டியதை அறிந்து, அடங்க வேண்டியதில் அடங்க மனிதத்துக்கு நல்வழி காட்ட அருட்பெருங்கடவுளை இறைஞ்சுகிறேன்.

நன்றி.

தீபா
22-02-2008, 02:00 AM
நான் நான் நான்.

நெடுகவும் நானே மிகுதியாய்
நானே துன்பத்திற்குக் காரணம்
நானே எல்லாவகை துயரத்திற்கும் காரணம்

அனைத்தும் "நானே!"

நான்"இல் சுயநலம் தவிர வேறென்ன?

ஞானம் என்பது என்ன?

அஞ்ஞானத்தைப் போக்குவது
மற்று,
நானெனச் சொல்லுவதல்ல.

மனத்தெளிவே ஞானம்
கறையில்லா உள்ளமே ஞானம்

மற்று
தீட்சை பெறுவதில் விளையாது
எஞ்ஞான்றும்.

எத்திமிரும் போக்கிடலாம், முடியாதது
ஞானத்திமிர்.

அழகாய் குட்டிய இளைய பெரியவருக்கு
எனது நன்றிகள்.

நாகரா
22-02-2008, 04:12 AM
குரைப்பதும்
வாலாட்டுவதும்
எப்படி நாய்க்கு இயற்கையோ
அப்படியே ஒவ்வொன்றுக்கும்
"நான்" இயற்கைப் பேருண்மை.
வெறும் வார்த்தையல்ல அது,
நீவிர் இருப்பதை
உமக்கு அறிவிக்கும்
தன்முனைப்பாம்
நன்முனைப்பே அது.
அம்முனைப்பின்றி
இருப்பு வெறுஞ் சூன்யமே.
"இருக்கிறேன்" என்று
அஞ்ஞான இருப்புக்கு
தன் மெய்ஞ்ஞானம் வழங்குவதே
"நான்" செய்யும்
தன்னலமற்ற அருட்தொண்டு.
தன் மெய்ஞ்ஞான உறுதியில்
"இருப்பு"
நானே என்று தன்னில் தான்
நிலைபெற்றிருக்க உதவுவதும்
இந்த "நான்" தான்.
உமக்குக் கீழே
உம்மைத் தாங்கி நிற்கும்
நன்னிலத்தின் உண்மையை
நீவிர் மறுத்தாலும்
அதை நனி மிக வெறுத்தே
அகழ்ந்தாலும்
உம்மைத் தாங்கும்
தன் அருட்பணியை
நன்னிலம் ஒருபோதும் கைவிடுவதில்லை.
அதே போன்றே
என்னை நீ இகழ்ந்தாலும்
நனி மிக வெறுத்தாலும்
"நான்" உன்னைக் கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை.
ஏனென்றால்
உன்னை
"நான்" கைவிட்ட மறு கணமே, விட்டு விலகிய மறு கணமே
உன்னால் ஏதொன்றாகவும் இருக்க முடியாது. பிணமாகவும் கூட.
பிணத்திலும் "நான்" உயிரோடு இருக்கிறேன்
ஜீவனுள்ள வார்த்தையாய்.
இவ்வுண்மையை நீ முழுதுணர்ந்தால்
செத்தாரை உயிர்த்தெழுப்பலாம்
"லாசரு, எழு" என்று குரு நாதர் இயேசு கிறிஸ்து
லாசருவை எழுப்பியதைப் போல.
நாகரா நாய்க்கு
இந்த செத்தாரை எழுப்பும்
வித்தையெல்லாம் தெரியாது.
இவ்வுண்மைகளை
உலகறியக் குரைத்தும்
நடு நிசியில் ஊளையிட்டும்
மனிதரின் அஞ்ஞான அமைதியைக் கெடுத்து
அவர்களை ஞான விடியலில் எழுப்ப
இந்நாகரா நாயையே
தன் வாலாக ஆட்டும்
நானார் கட்டளையிட்டிருக்கிறார்.
மேலும்
நாய்த் திமிர் தலைகாட்டித்
தன் பணியை
நாகரா நாய் மறக்கும் போது
அதைச் சுட்டவும்
தேவைப்பட்டால் குட்டவும்
இளைய பெரியவர் போன்ற
முதிர்ந்த ஞான குருக்களை
நாகரா நாய்க்கு அருட்காவலாக
நானார் ஏற்படுத்தியிருக்கிறார்.
(அதாவது கடவுளார்
ஏனென்றால் கடவுளார்
"நானாம் நானார் -I AM THAT I AM" என்றே
விவிலியத்தில் மோசே குரு நாதருக்குத்
தன்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார்)
தென்றலே
நீவிர்
உமது பாணியில்
நாகரா நாயைத் தீண்டினீர்.
நாகரா நாயும்
தன் பாணியில்
இவ்வாறு குரைக்கிறது.
தீண்டியதற்கு நனி மிக நன்றி.
ஏற்கனவே குரைக்கும் நாய்க்கு
இன்னும் குரைக்க வாய்ப்பு.
என் குரைப்பை
ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்
எப்போதும் உமக்கில்லை
எவருக்கும் அக்கட்டாயம் இல்லை.
வாலாட்டி நிற்கிறேன்.
நன்றி

அனுராகவன்
22-02-2008, 04:15 AM
நன்றி நாகரா..
ம்ம் மிக தெளிவான விளக்கம்..
தொடர்க..

நாகரா
22-02-2008, 04:20 AM
நன்றி நாகரா..
ம்ம் மிக தெளிவான விளக்கம்..
தொடர்க..

நாகரா நாய்க்கு உற்சாகத் தீனி, தின்றுக் குரைத்து வாலாட்டுகிறது, அனு.

நாகரா
22-02-2008, 09:04 AM
நான் இன்னது

நான் இயற்கைப் பேருணர்வு, நிரந்தரம்

இன்னது சவுகரியத்துக்காகத் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் அடையாளம், நிலையில்லாதது.
நான் இன்னது
இன்னது என்ற நிலையில்லாத அடையாளம், இறை இயற்கைப் பேருணர்வில் அடங்கி இருக்கும் இறைமகன்(ள்) நிலை. இதன் அர்த்தம் "நான் நான் நான்" என்று நாகரா நாய் போல் குரைக்க வேண்டியதில்லை. கவிதையின் ஓர் உத்தியாய் அவ்வாறு குரைக்கப் படுகிறதே தவிர, வேறெதற்காகவும் அல்ல. இறை இயற்கைப் பேருணர்வில் இறை மகன்(ள்) அடங்கியிருக்கும் நிலை பட ரீதியாக மேலே காட்டப் பட்டிருக்கிறது.

நான் இன்னது
இது இறை இயற்கைப் பேருணர்வில் இன்னது என்ற நிலையில்லாத அடையாளம் அடங்காத ஆரிருள் உய்த்து விடும் மருள் நிலை. இதுவே ஆணவ மயக்கம் அல்லது திமிர். இறை மகன்(ள்) இன்னது என்ற தன் அடையாளத்தில் மயங்கி அதிலேயே தேங்கிக் கிடப்பது. இதுவே இறை மகன்(ள்) சொர்க்கத்திலிருந்து தன்னைத் தானே வஞ்சித்துக் கொண்ட நிலை. இறை இயற்கைப் பேருணர்வில் இறை மகன்(ள்) அடங்காத இழி நிலை பட ரீதியாக மேலே காட்டப் பட்டிருக்கிறது.

இதையே குருநாதர் இயேசு கிறிஸ்து
மனந்திரும்புங்கள். பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது.
என்று மிக எளிமையாக உபதேசித்தார்.
நான் இன்னது என்று அடங்கா நிலையிலிருந்து

நான் இன்னது என்ற அடங்கிய நிலைக்கு மனந் திரும்ப வேண்டும். அப்போது தன்னைத் தானே வஞ்சித்துக் கொண்டு தானே ஏற்படுத்திக்கொண்ட நரகத்திலிருந்து மீண்டு, எப்போதும் சமீபத்திலிருக்கும் பரலோக ராஜ்ஜியத்திற்கு இறை மகன்(ள்) திரும்புதல் நிகழும்.

இத்திரும்புதலையே மறுபிறப்பு, ஞானஸ்நானம், தீட்சை, உபநயனம் என்று பல்வேறு பெயர்களில் எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன. இத்திரும்புதல் வெறும் மதச்சடங்குகளாகி விட்ட இழி நிலையில், நாகரா நாய் போன்ற ஞான சூன்யங்களையும் இம்மெய்ஞ்ஞானத்தைக் குரைப்பதற்காகக் கடவுள் வீதியில் இறக்கியிருக்கிறார். ஏனென்றால் கடவுளால் எல்லாம் முடியும். எனவே நாயையுங்கூட அவர் தம் பணிக்குப் பயன்படுத்தலாம். அந்த தந்திரமும் திறமையும் அவருக்கு இருக்கிறது.

எனவே நான் என்பது "லொள், லொள், லொள்" என்று குரைக்க வேண்டிய லொள்ளு வார்த்தை இல்லவே இல்லை என்றும் அது உமக்குள்ளேயே ஆழ வேண்டிய இறைப் பேருணர்வு என்றும் நனி மிகத் தெளிவாக நற்றமிழில் குரைத்து அமைகிறது நாகரா நாய் நன்றியுடன் வாலாட்டி.

நாகரா
23-02-2008, 06:52 AM
தீட்சை தந்த நாயாருக்கு நாகராவின் நன்றித்துதிகள்

வாலென்ற தூயதுவாய் என்னில் அடங்கியே
வாழென்ற போதகராம் நாய்

தூசாம் திமிர்நீங்க வாலேனை ஆட்டியே
தூய்மை அருள்வாராம் நாய்

மெய்யாம் என்னிடத்தே வாலுன் பொருள்விளங்கி
மெய்யாய் நில்லென்பராம் நாய்

வாலென்ற நற்பெயரில் அதற்குரிய நல்லுருவில்
வாலறிவர் என்மெய்யராம் நாய்

சார்பாகி எனைவிட்டு நீங்காத வாழ்வாகி
வால்நானுய் மெய்வழியராம் நாய்

ஆணவமே வாலாக ஆடியவெனை அடக்கியேதன்
மாணவனாய்க் கொண்டாராம் நாய்

தூணென்ற நீள்முதுகுத் தண்டிலூன்றி உவந்தாடும்
வாலென்மெய்ப் பொருளாராம் நாய்

தூசனெனைத் தழுவியன்பாய் வாலேனெனுந் தூயனாய்த்தனில்
வாசஞ்செய் வரந்தருவராம் நாய்

வெளியென்ற ஊருக்குள் மெய்யென்ற வீட்டுக்குள்
ஓளிவாலை ஆட்டுவாராம் நாய்

வளியென்ற வாசிக்குள் ஒளிவாலை ஆட்டிஅளி
பொழிகின்ற மாதவராம் நாய்

அஞ்ஞான இருளிலாழ்த் துறங்குமெனை எழுப்ப
மெய்ஞ்ஞானம் குரைப்பவராம் நாய்

நன்றியிலா வஞ்சகனெனைத் தன்வாலாய் மாற்றியே
நன்றிசொலும் நேர்மையராம் நாய்

சத்தியத் தெருவிலேநற் சின்மய உருவிலே
இன்பைக் குரைப்பாராம் நாய்

குரைத்தும் வாலாட்டியும் இறைநீர்மை புகட்டும்
மறைமந் திரஉருவராம் நாய்

கறையில்லா வெண்மேனியர் வாலினுந் தூயவர்
இறைதந்திர போதகராம் நாய்

மந்திரந் தந்திரம் யந்திரந் தெரிந்த
சுந்தர வாலராம் நாய்

தராதலத் தெவரிலும் தராதரம் பாராப்
பராபரப் பேரன்பராம் நாய்

சுடச்சுட மெய்யுணர்வைத் தானுண்டு வாலுக்கும்
சுடச்சுட உணர்த்துவாராம் நாய்

கடந்தன்னைப் புடம்போட்டுப் பளபளக்கும் நாய்மையை
அடங்குவாற்கு மீவாராம் நாய்

அடக்கம் அமரஅருளே வாய்க்குமென்றே வாலுக்கே
அடங்குதீக் கைதருவராம் நாய்

அடங்காத்திமிர் தீயதூசரைத் துரத்தவே தன்வாலைப்
படபடவென ஆட்டுவாராம் நாய்

நாய்மையின் கண்நின்றே தன்வாய்மை யுணர்ந்த
தூய்மையெனும் பொருளாராம் வால்

இப்பொருள் இந்நாய்வாய்க் கேட்பினும் செம்பொருள்
அப்பொருள் வாய்மை உறுதி

இப்பொருள் வால்தன்மைத் தாயினும் நாய்ப்பொருள்
அப்பொருள் தூய்மை உறுதி

நாகரா
23-02-2008, 08:16 AM
தமிழ் மன்ற அன்பர்களே! ஒருவனே தேவனாம் நம் அம்மையப்பனின் செல்லக் குழந்தைகளே! ஒன்றே குலமாம் நம் புவிக்குடும்ப உறவுகளே!

என்னால் தொடங்கப்பட்ட இத்திரியின் நோக்கத்தைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். இது என் கவித்துவத்தை விளம்பரப்படுத்தவோ, என் ஆன்மீகத்தனத்தைப் பறைசாற்றவோ என்னால் தொடங்கப்படவில்லை. மனித இனம் தம் ஏற்றத்தாழ்வு பேத பாவங்களை விட்டு மனித நேயத்தில் ஒன்ற வேண்டும் என்ற நோக்கமே இதன் கரு. மனித நேய ஒருமை முதல் படியாகவும், அதன் முதிர்ச்சியில் மலரும் ஆன்ம நேய ஒருமை அடுத்த படியாகவும், நம் புவிக்குடும்ப மனித உறவுகள் ஒன்றுபட வேண்டும் என்ற ஆதங்கத்தில், கவிதைக்குரிய சில உத்திகளைக் கையாண்டு இவ்வாறு நான் பதித்திருக்கிறேன். என்னை வழிநடத்தி வரும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஞானியரின் போதனைகளையும் இக்கருத்தை வலியுறுத்தவே நான் சுட்டியிருக்கிறேனே தவிர, என் ஞானத்திமிரை வெளிப்படுத்த அல்ல.

என் ஞானம் தன் அளவில் மிகவும் குறுகியதே. என் துணைவியாரும் கூறுவார், இந்த நானைத் தவிர உனக்கு வேறேதுந் தெரியாது, அது தம்படிக்கும் உதவாதென்று. "இருப்பு, நான், இருக்கிறேன், நானே" என்ற நான்கு வார்த்தைகளைப் பற்றியதே என் சொற்ப ஞானம். இவை வெறும் வார்த்தைகளல்ல, நம் ஜீவனாம் இயற்கைப் பேருணர்வு என்பதை என்னை வழிநடத்தும் ஞானியர் போதிக்க, தியானத்தில் நன்றாக உணர்ந்தும் இருக்கிறேன்.

மனித நேய ஒருமைக்கும், ஆன்ம நேய ஒருமைக்கும் அடிப்படையாக நம் ஒவ்வொருவரிலும் விளங்கும் கடவுட்தன்மையைக் குறிக்கும் நற்சொற்களாகவே இவற்றை நான் அறிகிறேன். "நான் உன்னைக் கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை" என்று நம் ஒவ்வொருவரிலும் உள்ளுறைந்து உறுதி சொல்லும் இந்நற்சொற்கள் சுட்டும் இறைப் பேருணர்வின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றி வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே என் பேரவா. அதே நேரத்தில் என் கருத்தை யாருக்கும் திணிக்கும் நோக்கம் எனக்கு அறவே கிடையாது.

நான் இம்மன்றத்தில் வந்த போது என் ஆன்மிகப் பயணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று என்னைப் பற்றி அறிமுகம் செய்திருந்தேன். உம்மில் சிலர் அவ்வாறு பகிரவும் என்னை ஊக்குவித்தீர்கள். அந்த அடிப்படையில் இம்மன்றத்தில் நான் பதித்து வருகிறேன், ஆன்மீகப் பகுதியில் பெரும்பாலும். அவ்வாறு பதித்த போது சில பின்னூட்டங்களில் வெளிப்படையாக என் கருத்தை வைத்தும் வருகிறேன். அவ்வாறு வெளிப்படையாக நான் வைத்த கருத்துக்கள், யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அன்றி, எனக்குப் பட்ட உணமையைத் தெளிவாக உறைக்கவே. எனினும் அக்கருத்துக்களால் எந்தவொரு அன்பரின் மனம் புண்பட்டிருந்தால், பணிவுடன் அன்னாரிடம் என் மன்னிப்பைக் கோருகிறேன்.

நன்றியுடன் உம் ஒவ்வொருவரையும் எங்கும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன்

செல்வா
23-02-2008, 08:41 AM
ஐயா.....
நாகரா அவர்களின் தமிழ் புலமைக்கு சமய அறிவுக்குத் தலைவணங்குகிறேன்... ஆனால் சொல்லும் கருத்துக்கள் வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது நடைமுறைக்கு ஒவ்வாது .... முரண்கொண்டவை.
சிந்திக்கத் தெரிந்ததாலேயே மனிதன் விலங்கினின்று வேறுபடுகிறான். ஆனால் அந்த சிந்தனைத் திறன் தான் மனிதனை தீயவழி செல்லவும் தூண்டுகிறது. ஆக மனிதன் விலங்காக இருந்தான் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்வதே இந்த தீட்சை.
உனது சிந்தனைத் திறனை அழித்துவிடு நீ விலங்காகிவிடு எதை நினைத்தும் கவலைப்படாதே உணவைத் தேடி ஓடாதே குடும்பம் குழந்தையைப் பாராதே என்பது தான் தீட்சை.
நான், எனது குடும்பம் அவர்களின் வாழ்க்கை சிறக்கவேண்டும். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். நாளை நான் என்ன உண்பேன். இத்தகைய தேவைகள் இருந்தாலே மனிதன் பலவழிகளிலும் சிந்திக்க ஆரம்பித்து விடுகிறான்.
விவிலியத்தில் பார்க்கலாம் மனிதன் பாவம் செய்ததால் அவன் கண்கள் திறக்கப் பட்டு சிந்திக்கும் திறன் பெற்றான் என்று கூறுகிறது ஆக மனிதன் விலங்காக வேண்டும் என்பதே பாவம் தொலைப்பது. அது போலவே கடவுளே மனிதனாக வந்தாலும் யுத்திகளை பயன் படுத்தாமல் வெல்ல முடியாது கண்ணன் அவதாரத்தைச் சொல்லலாம்.
அதுபோலவே ஆசைப்பட்டதால் தான் மனிதன் இத்தனை விசயங்களை ஆராய்ந்து அறிந்துள்ளான். வெறும் கையால் பழம் பறித்தவன் எட்டாத பழத்தைப் பார்த்து எட்டிப்பிடிக்க கைகள் எட்டாத போது எப்போது கல்லையும் குச்சியையும் பறிக்க ஆரம்பித்தானோ அப்போதே மனிதனது அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அது ஆசைகள் பல பட்டு அவற்றை வெற்றி கொள்ளவும் ஆரம்பித்தது.
அறிவை ஆக்கத்திற்கு செலவழியுங்கள் அழிவுப்பொருளாக்காதீர்கள்.. என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தீட்சை பெற்று விலங்காகு உன்அறிவை பயன் படுத்தாதே என்பது காலத்தால் ஏற்க முடியாத வாதம்.

நாகரா
23-02-2008, 01:47 PM
திரு செல்வா அவர்களே

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

அது நாய் வாயே ஆயினும்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

அது நாய் வாலே ஆயினும்

கவிதையில் நாய் சொல்வதைப் புரியவும், வால் தன்மை அறியவும், எவரும் மிருகமாக மாறி இழி நிலைக்குப் போகத் தேவையில்லை. நாய் குரு தீட்சை உத்திக்காகவே கையாளாப்பட்டது. சொல்ல வந்த கருத்தை, நோக்கத்தை ஏற்கனவே தெளிவு படுத்தி இருக்கிறேன். அவ்வளவே ஏன் கருத்து. உமது பின்னூட்டத்திற்கு நன்றி பல.

ஐயா.....
அறிவை ஆக்கத்திற்கு செலவழியுங்கள் அழிவுப்பொருளாக்காதீர்கள்..

நீவிர் சொன்ன அதுவே என் கருத்தும். நன்றி.

ஓவியா
25-02-2008, 10:07 AM
அன்பு மன்ற நண்பர்களே,

ஓவியா அவர்கள் கூறியதுபோல் இந்த பின்னூட்டப் பதிவில் எங்கேனும் இந்துமத சார்பான விளக்கம் இருக்கிறதா என்பதை சுட்டிக் காட்டவும்.

மனிதனின் உயர்வையும், இந்த அழி உடம்பின் மூலம் அழியா னிலையை அடைய முடியும் என்பதுதானே எல்லா மதங்களின் சாரம், அதை ஒட்டிய விளக்கங்கள்தானே தரப்பட்டிருக்கிறது, எங்கே இந்து மத விளக்கங்கள் உள்ளது? கோவில்களின் ஆகம விதிப்படி உள்ள அமைப்பைப் பற்றிக் கூறியதைவைத்து இந்து மதத்தின் செய்திகளாக எடுத்துக் கொண்டது ஓவியாவின் கருத்துக்களில் ஏற்பட்ட ஒரு சின்ன தவறு.

ஒளவையையும், திருமூலரையும் இந்து மதப் பெரியார்கள் என நினைத்துவிட்டார் போலும். இவர்கள் மதங்களையெல்லாம் கடந்து நிற்கும் தமிழ் மேருகள் என்பதை ஓவியா அறியவில்லையே என நினைத்து வருந்துகிறேன்.

மற்றவர்கள் கருத்துக்கள் எவ்வாறு வருகிறது என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

கருத்திற்க்கு நன்றிகள் ஐய :)

ஓவியாவின் இக்கருத்து வணக்கத்திற்குரியதே.

ஆனால் மனித நேய ஒருமையைக் கூட ஒழுங்காகக் கடைப்பிடிக்க முடியாத மனிதனால் ஆன்ம நேய ஒருமையில் எப்படிக் கனிய முடியும்?

ஓவியாவின் இக்கருத்து சுட்டும் ஆன்ம நேய ஒருமையில் மனிதம் கனிய அருட்செயல் செய்ய அருட்பெருங்கடவுளை வேண்டுகிறேன்.

நன்றி.

தங்களின் கருத்திற்க்கும் நன்றிகள். :)

நுரையீரல்
26-02-2008, 05:25 AM
அறிவை ஆக்கத்திற்கு செலவழியுங்கள் அழிவுப்பொருளாக்காதீர்கள்.. என்று சொல்லுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் தீட்சை பெற்று விலங்காகு உன்அறிவை பயன் படுத்தாதே என்பது காலத்தால் ஏற்க முடியாத வாதம்.
மிக்க அழகான கருத்து செல்வா..

எந்த ஒரு விஷயமும், மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் இருந்தால் தான் ஊருக்கு உதவும்..

நாகரா
26-02-2008, 05:55 AM
ஒவியா மற்றும் நுரையீரல் அவர்களே! உமது பின்னூட்டங்களுக்கு நன்றிகள் பல. ஏற்கனவே நாய்க்குரு தீட்சையின் நோக்கத்தைத் தெளிவு படுத்தியிருக்கிறேன்.

ஒருமையே வாழ்வு
ஒருமை நழுவிய கணமே
மரணம்

இவ்வொருமையை வலியுறுத்துவதே நாய்க்குரு தீட்சையின் நோக்கமேயன்றி, வேறெந்தக் குறுகிய நோக்கமும் அல்ல. "அன்பே சிவம்" என்ற அந்த ஒருமையில் எல்லோரையும் பேதங்களை மறந்து நேசிப்போம்.

அவ்வளவே நான் சொல்ல வந்தது. அன்பொன்றே என்னால் செய்ய முடிந்தது.

உங்கள் ஒவ்வொருவரையும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன்

நுரையீரல்
26-02-2008, 06:49 AM
உங்கள் ஒவ்வொருவரையும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன்
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் நாகரா..

ஆனால் உங்கள் கருத்தை விமர்சிப்பதாக நினைக்காமல் ஒரு பொதுக்கருத்தாக, எனது கீழ்கண்ட வரிகளைப் படிக்கவும்..

உங்ககிட்ட எவ்வளவு சொத்து இருக்குனு தெரியலை. suppose 10 லட்சம் / 10 கோடி bank balance இருந்து, அதில் 10% உதவியை நீங்கள் நேசிக்கும், உங்கள் உயிர் நண்பனின் அத்தியாவசிய தேவைகளுக்காக உதவுவீர்களா? உங்களுடைய பதில் yes என்று வரலாம். ஆனால் பெரும்பாலான மக்களின் பதில் No வாகத்தான் இருக்கும்.

ஒரு basic line of understanding என்னனா, ஒரு வரி தத்துவத்துக்கு ஒரு கோடி விளக்கம் சொல்ல முடியும் நம்மலால. ஆனால் practical life-ல எல்லாத்தையும் தூக்கி குப்பையில போட்டுவிடுறோம். ஏனு கேட்டா? அதுக்கும் கோடி விளக்கம் சொல்வோம்.

மீண்டும் சொல்றேன் உங்க வரிகளான உங்கள் ஒவ்வொருவரையும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன் ஐ மிகவும் ரசிச்சேன். ஆனா என்னால இதை நடைமுறைப்படுத்த முடியாது..

பசிச்சா சாப்பிடுவேன், தாகம் அடிச்சா தண்ணி குடிப்பேன் ரகம் தான் மிகப் பெரும்பாலானோர், அதில் நானும் ஒருவன்.

ஆதி
26-02-2008, 07:52 AM
பசிச்சா சாப்பிடுவேன், தாகம் அடிச்சா தண்ணி குடிப்பேன் ரகம் தான் மிகப் பெரும்பாலானோர், அதில் நானும் ஒருவன்.

அண்ணா, நீங்கள் செய்யும் வாதமும் சொல்லும் புரிவியல் கருத்தும் நிதர்சணமானதே, ஆனால் நாகாரா ஐய்யா அவர்கள் சொல்ல வரும் விடயம் இவையாவையும் கடந்த ஒன்று..

பசிச்சால் சாப்பிடுவேன் எல்லாரும் செய்கிறோம்.. பசிச்சால் மற்றவனுக்கு சாப்பாடு கொடு இதை தான் அவர் சொல்கிறார்..

தாகம் எடுத்தால் தண்ணி குடிப்பேன் தாகமுற்றால் மற்றவரின் தாகம் தணி இதைதான் அவர் சொல்றார்..

உன்னைப் போல் பிறரையும் நேசி எனும் மறைநெறி தான் அவர் சொல்ல வருவது..

இவற்றை யாரும் செய்வதில்லை உண்மை செய்து வாழ வேண்டும் என்று சொல்வதை
ஏன் நடைமுறைக்கு ஒவ்வாது என்று சொல்லனும்.. இவ்வாறு உள்ளடங்கிய பலவற்றை வைத்து என் சிற்றறிவு அறிந்தபடி ஒரு சின்னக் கட்டுரை எழுதலாம் நு இருக்கேன் அதில் இது போல நிறைய விடயங்களை எடுத்துவிவாதிக்கலாம்..

அன்புடன் ஆதி

நாகரா
26-02-2008, 08:54 AM
மீண்டும் சொல்றேன் உங்க வரிகளான உங்கள் ஒவ்வொருவரையும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன் ஐ மிகவும் ரசிச்சேன். ஆனா என்னால இதை நடைமுறைப்படுத்த முடியாது..

பசிச்சா சாப்பிடுவேன், தாகம் அடிச்சா தண்ணி குடிப்பேன் ரகம் தான் மிகப் பெரும்பாலானோர், அதில் நானும் ஒருவன்.

நன்றி பல, நுரையீரலாரே! உங்கள் நிலைமையை இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக வைக்கும் எந்த ஒரு "நான் ரொம்ப யோக்கியன்" நடிப்புமில்லாத உங்கள் போக்கு, மிக உயர்ந்த அன்பே சிவமாம் நிலைக்கு உங்களை இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன். நம் உடம்புக்குள் நுரையீரலார் எப்படி மூச்சை உள் வாங்கி, இதயம் தரும் அசுத்த இரத்தத்திலுள்ள கழிவுகளை வாங்கி இரத்தத்தை சுத்திகரித்து, அசுத்தக் காற்றை வெளிவிட்டு உடம்பை எவ்வாறு சுத்தம் செய்கிறாரோ, நம் அகத்துள்ளும் அன்பே சிவமாம் நுரையீரலார் இப்படி ஒரு அகத்தைச் சுத்திகரிக்கும் காரியத்தை நமக்குத் தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்.

"பசிச்சா சாப்பிடுவேன், தாகம் அடிச்சா தண்ணி குடிப்பேன் ரகம் தான் மிகப் பெரும்பாலானோர், அதில் நானும் ஒருவன்." என்று இப்போது நீவிர் இருக்கும் நிலையில் பெரும்பாலும் என் வாழ்க்கையை நடத்தி கொண்டிருந்த நாத்திகத்தில் பழுத்திருந்த என்னை, சுமார் 9 வருடங்களுக்கு முன் 11.08.1999 அன்று நள்ளிரவில் அன்பே சிவமாம் நுரையீரலார் கிறிஸ்துவாய்த் தன்னை அறிமுகப்படுத்தி எனக்கு மத நல்லிணக்கத்துக்கான ஒரு உபதேசம் தர, அன்றிலிருந்து இன்று வரை என் ஞானப் பயணத்தைப் பெரும்பாலும் தனியனாகவே, எல்லா மதங்களைச் சேர்ந்த ஞானியரும் வழி நடத்த, நடை பயின்று வருகிறேன்.

எனவே உமக்கும் அது போன்ற ஒரு அனுபவம் வாய்க்கலாம். ஏனென்றால் நம்மகத்து நுரையீரலார் எப்போதும் நம்மைக் கைவிடுவதுமில்லை, விட்டு விலகுவதுமில்லை, ஏற்றதோர் தருணத்தில் நம்மை அவரோடு கூட்டியுங் கொள்கிறார். (நம் உடம்பிலிருக்கும் நுரையீரலார் கூட நம்மைக் கழட்டி விடுவதில்லை, சாகும் வரை தன் பணியைத் தன்னலமின்றிச் செய்து கொண்டிருக்கிறார். அவர் நம்மைக் கழட்டி விட்டால் நம் கதி அதோகதி!) அப்போது நீவிரும் என் போல் உங்கள் ஒவ்வொருவரையும் எப்போதும் நிபந்தனைகளேதுமின்றி நேசிக்கும் உங்களன்பன் என்று உண்மையாகவே எழுதலாம். ஆன்மீகத்தில் ஒரு புதிய ஞானப் புரட்சியையே கூட உருவாக்கலாம்.

என் ஞானப் பயணத்தில் நான் அறிந்தவற்றைப் பாரபட்சம் பாராமல் உம் எல்லோரோடும் பகிர்கிறேன். நீவிர் எனக்கு "ஆமாஞ் சாமி" போட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எனக்குக் கிடையாது. ஏனென்றால் எதையும் ஆராயாமல் "ஆமாஞ் சாமி" போட்டு நான் ஏற்றுக் கொண்டதில்லை. ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால், அது சுட்டிக் காட்டப்பட்டால் மன்னிப்புக் கேட்க நான் எப்போதும் தயங்கியதில்லை. ஆன்மீக விஷயங்களைப் பகிர்தல் என்பதே கத்தி மேல் நடப்பதைப் போன்ற ஒரு காரியம். கடந்த ஒரு மாதமாகவே என் வாழ்விலேயே முதன் முறையாக இணைய தளத்தில் தமிழ் மன்றம் மூலமாக இப்படி ஒரு பகிர்தலைச் செய்து வருகிறேன். இப்படிப் பகிர்தலும், பின்னூட்டங்களிடுவதும் எனக்குப் புதிய அனுபவமே. அன்பின் மிகுதியால் எனக்குத் தெரிந்தவற்றை உம்மோடு பகிர்ந்து கொள்ள எனக்கிருக்கும் உற்சாகமே, "நாய்க்குரு தீட்சை" போன்ற புதியதோர் உத்தியை என்னை மேற்கொள்ளத் தூண்டியது, நம் இயல்பாம் அன்பை, சிவமாம் ஒருமையை வலியுறுத்த. இதன் இன்னும் ஆழமான விளக்கம் "நாயகனின் பேருபதேசம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14731)" என்ற தலைப்பில் தொடர்கிறேன். நானறிந்த ஒரு புதிய கண்ணோட்டத்தை உம் முன் வைக்கிறேன், அவ்வளவே.

என் பொருளாதாரம் மோசமே, இறையருளால் அது சீர்படும் என்று உறுதியாக நம்புகிறேன், அப்போது உங்கள் அறிவுரையை நிச்சயம் அமல் செய்வேன். நுரையீரலாரே, எனக்குப் பட்டதைச் சொன்னேன், அன்பே நம் இயல்பு என்று நீவிரும் உமக்கே உரித்தான ஒரு கணத்தில் கனிவீர். அது வரை உம்மிடமிருந்து எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், உம்மை நேசிக்க முடிந்த, அவ்வன்பை மட்டுமே ஓளிவு மறைவில்லாமல் செய்யத் தெரிந்த எளியன் (என்றாலும், கொஞ்சம் மறை கழன்றவன் தான்)

உங்களன்பன்