PDA

View Full Version : திருக்குறளில் தேட தேடியந்திரம்sarathecreator
18-02-2008, 10:19 AM
திருக்குறளில் 1330 குறள், 133 அதிகாரங்கள் இருந்தாலும் ஒரு திருக்குறள் நூலை (வன்னூல்)த் திறந்து அதில் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தேடுவதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

இங்கே (http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=26) அதை எளிமைப்படுத்தி அருமையான தேடு இயந்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.

தேடும் சொல்லானது
1) முதல் வார்த்தையாகவோ
2) கடைசி வார்த்தையாகவோ
3) எங்குவேண்டுமானாலுமோ இருக்கலாம்
4) குறளின் எண்ணைக் கொடுதால் குறள் திரையில் பளிச்சிடுகிறது

அன்பு என்று கொடுத்தால் 'அன்பு' வில் ஆரம்பிக்கும் குறள்கள்
இமைப்பதற்குள் திரையில் தோன்றுகின்றன.

http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=26 (http://muthu.org/index.php?option=com_wrapper&Itemid=26)

அமரன்
18-02-2008, 11:50 AM
ஆகா.. அருமையான தகவல் சரத். ஒருங்குறியில் அமைத்திருக்கிறார்கள். இலகுவாகப் பயன்படுத்த முடிகிறது. பகிர்வுக்கு உளமார்ந்த நன்றி.

அக்னி
18-02-2008, 12:46 PM
மிகவும் பெறுமதியான பொக்கிஷத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.
மிக நன்றி சரா அவர்களே...

சிவா.ஜி
18-02-2008, 12:52 PM
அடடா...அருமையான தகவல்.அற்புதமான இந்த அரிய தகவலை மன்ற உறவுகளுக்கு அளித்த சாராவுக்கு மனமார்ந்த நன்றி.

மயூ
18-02-2008, 12:57 PM
அருமையான பதிவு நன்றீ

சாலைஜெயராமன்
18-02-2008, 05:24 PM
நல்ல தகவலுக்கு நன்றி சரத். மிகவும் கவனமான முறையில் தொகுத்திருக்கிறார்கள். சௌகரியமான தேடல் வசதி பாராட்டுக்குறியது.

உங்களுக்கு மிகவும் நன்றிகள். அரிய பொக்கிஷம் அல்லவா நமது திருக் கொரல்.

நாகரா
19-02-2008, 03:02 AM
பயனுள்ள தகவல், நன்றி சரத்.

pgk53
20-02-2008, 05:41 PM
சோதனை செய்வதற்காக அகர என்று பதிவு செய்தேன்
இறுதியாக இருக்கும் சுட்டியை அழுத்தி முதல் என்று அமைத்தேன்.


பிறகு என்ன செய்வது ?
எதை அழுத்தினால் குறள் வரும்.??
தெரிந்தவர்கள் விளக்குவீர்களா?????????

அமரன்
21-02-2008, 07:22 AM
அடுத்ததாக, தேடுக என்பதை அழுத்தினால் குறளைத் தேடித்தருகிறது அண்ணா. எமக்கு முப்பாலில் எப்பாலில் குறள் தேவையோ அதைக் கீழே தெரிவுசெய்து, வழமைபோலத் தேடலாம்.

kavitha
21-02-2008, 09:31 AM
பெரியவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் சிறார்களுக்கும் இது அருமையான சுட்டி. நன்றி.

pgk53
21-02-2008, 01:28 PM
அடுத்ததாக, தேடுக என்பதை அழுத்தினால் குறளைத் தேடித்தருகிறது அண்ணா. எமக்கு முப்பாலில் எப்பாலில் குறள் தேவையோ அதைக் கீழே தெரிவுசெய்து, வழமைபோலத் தேடலாம்.

அன்புச் சகோதரரே.........அந்த தேடுக என்ற சொல்லைத்தான் எனது கண்ணியின் திரையில் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
என்னால் "தேடுக" எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
பொதுவாக அதே வரிசையில் கடைசியில் இருக்கும்.ஆனால் எனது கணினியில் காணப்படவில்லை.!!!!!!!!!!!!!!!!!!!புதிராக உள்ளதே???????

aren
21-02-2008, 02:46 PM
அன்புச் சகோதரரே.........அந்த தேடுக என்ற சொல்லைத்தான் எனது கண்ணியின் திரையில் தேடிக்கொண்டிருக்கின்றேன்.
என்னால் "தேடுக" எங்கே உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க இயலவில்லை.
பொதுவாக அதே வரிசையில் கடைசியில் இருக்கும்.ஆனால் எனது கணினியில் காணப்படவில்லை.!!!!!!!!!!!!!!!!!!!புதிராக உள்ளதே???????

புதிர் மன்னருக்கே புதிராக உள்ளதா. பேஷ் பேஷ். இப்போ தெரிந்திருக்கும் உங்களுக்கு நாங்கள் எப்படி மண்டையைப் பிச்சிக்கிறோம் என்று உங்கள் புதிரைப் பார்த்தவுடன்.

mgandhi
21-02-2008, 04:34 PM
நன்றி சரா

pgk53
21-02-2008, 04:42 PM
புதிர் மன்னருக்கே புதிராக உள்ளதா. பேஷ் பேஷ். இப்போ தெரிந்திருக்கும் உங்களுக்கு நாங்கள் எப்படி மண்டையைப் பிச்சிக்கிறோம் என்று உங்கள் புதிரைப் பார்த்தவுடன்.

சரி---சரி---ஒத்துக்கொள்கிறேன்......
அந்த "தேடுக" எங்கே இருக்கிறது என்று கூறுங்களேன்.

நாளை விடுமுறையில் புறப்பட உள்ளேன்.
வீட்டில் போய் பேரன் பேத்திகளுடன் திருக்குறள் விளையாட்டைக் காண்பிக்கலாம்.
{வேண்டுமானால் அடுத்த புதிருக்கு தனி அஞ்சலில் விடை அனுப்புகிறேன்}

அக்னி
21-02-2008, 05:10 PM
சரி---சரி---ஒத்துக்கொள்கிறேன்......
அந்த "தேடுக" எங்கே இருக்கிறது என்று கூறுங்களேன்.

சிவப்பு அம்புக்குறியால் காட்டியுள்ளேன் பாருங்கள்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/thirukural.jpg

இளசு
21-02-2008, 07:59 PM
நல்ல சுட்டி. நன்றி நண்பரே!

pgk53
22-02-2008, 06:34 AM
சிவப்பு அம்புக்குறியால் காட்டியுள்ளேன் பாருங்கள்...

http://i207.photobucket.com/albums/bb11/agnii_album/Images/thirukural.jpg


எனக்காக சிரமம் எடுத்து படத்துடன் விளக்கியமைக்கு மிக்க நன்றி.
எனது கணினியில்தான் ஏதோ கோளாறு இருக்கிறது.
சரி செய்துகொள்கிறேன்.
மிக்க நன்றி

இளசு
22-02-2008, 07:07 AM
நலமா பிஜிகே அவர்களே!

விடுப்பில் குடும்பத்துடன் சுகமான பொழுதுகள் அமைய வாழ்த்துகள்.

முன்பு போல் பல அறிவியல், தமிழ்மொழிக் கட்டுரைகள் நீங்கள் தரும் காலம் வருமா என ஏங்குகிறேன்.

பூமகள்
22-02-2008, 07:10 AM
வள்ளுவர் குறள்..!!
விண் முட்டும் இனி..!!

தேடு இயந்திரத்தில்
தேடுவோம் இனி
மானிட வாழ்வின்
மகத்துவம்..!!

பகிர்ந்த அன்புச் சகோதரர் சரத் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். :)

ஓவியன்
22-02-2008, 07:12 AM
வளர்ந்து வரும் அறிவியல், வள்ளுவ நெறியை அறிவதற்கும் துணை போகிறதே....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி நண்பரே....!!

சுகந்தப்ரீதன்
23-02-2008, 02:18 PM
மிக்க நன்றி நண்பரே...!!

நானும் எதிர்பார்த்து காத்திருந்தேன் இதுபோன்ற ஒன்றுக்காக...!!

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...!! தொடருங்கள் உங்களின் சேவையை எங்களுக்கு..!!

அனுராகவன்
23-02-2008, 02:20 PM
நன்றி நண்பரே..
என் வாழ்த்துக்களும்...
தொடர்ந்து தருக..

இளசு
23-02-2008, 02:21 PM
காவேரி அலைகள் வந்து கரையில் உன்னை தேடிடும்..!
காணாமல் வருத்தப்பட்டு தலைக் குனிந்து ஓடிடும்..!!தாமரைக்கு ஒரு வேண்டுகோள் -

சுகந்தனின் இக்கையெழுத்தைக் கன்னடத்தில் மொழிபெயர்த்து
கர்நாடகாவில் பரப்ப இயலுமா?:)

mayakrishnan
26-02-2008, 04:29 PM
இந்த மென்பொருள் முயற்சி உண்மையிலே பாராட்டதக்கது. மாணவர்களுக்கு மட்டுமல்ல பொது மக்கள் அனைவருக்கும் உதவ கூடியது.

இதற்கு காரணமானவர்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும். திரியினை பதித்து சுட்டியை கொடுத்த சரத்திற்கு மிக்க நன்றி.