PDA

View Full Version : தாய்க்குரங்குசிவா.ஜி
18-02-2008, 06:23 AM
தொட்டில் குழந்தை திட்டத்தில்
பெற்றதை இட்டுச் செல்லும்
பெற்றவளைப் பார்த்து
கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது
கக்கத்தில் குட்டியை வைத்து
விட்டுவிடாமல் வளர்க்கும்
தாய்க்குரங்கு.......!!

யவனிகா
18-02-2008, 06:25 AM
மடியில் இருந்து
தவறி விட்டால்
அண்ட விடாமல்
அடித்து விரட்டும்
தாய்க்குரங்கு...
தவறே வாழ்க்கையாய்க்
கொண்டாலும்
தன்மகனைப் போலுண்டா?
சொல்பவளும் தாய் தான்....

நல்ல கவிதை அண்ணா....வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
18-02-2008, 06:34 AM
தவறவிட்டாலும்
தாயின் கடமை மறக்காது
தனித்தியங்கும் வரை
தன்னுடன் வைத்திருக்கும்
தாய்க்குரங்கு
பெற்றவுடன் பிரித்துவிடும்
மற்றவளைப் போலல்லவே...

நன்றி யவனிகா.(நல்ல கருத்துள்ள பின்னூட்டக் கவிதை வாழ்த்துகள் தங்கையே)

மதி
18-02-2008, 07:20 AM
அட..அட..அட...
அண்ணனும் அக்காவும்.. கவிதையில் பூந்து விளையாடறாங்க...
கலக்கல்..

ஊரெல்லாம் சுற்றி
பத்து கிலோ ஏறி வந்தாலும்
துரும்பாய் இளைத்துவிட்டாயே
கேட்டவள் என் தாய்

அவலட்சணமே யானாலும்
என்பிள்ளை தான் அழகன்
பெருமிதம் கொண்டவள்
என் தாய்

சிவா.ஜி
18-02-2008, 07:24 AM
ஆஹா...அசத்தல் மதி.
அதுதான் தாய்.தன் பிள்ளை எப்படியிருந்தாலும் அவளுக்கு அவன் அழகன்,அறிவாளி,நல்லவன்...எல்லாமுமே.
ஆனால் அதே தாயினத்தில் சில களங்கங்களும் இருப்பதால்தான் அரசு தொட்டில்கள் நிரம்பி வழிகின்றன.
அசத்துங்க மதி.இன்னும் நிறைய கவிதைகள் எழுதுங்க வாழ்த்துகள்.

மதி
18-02-2008, 07:43 AM

அட நீங்க வேற.. நானாவது கவிதையாவது.. இப்போ தான் மொக்கை போடுறது எப்படின்னு கத்துகிட்டு வர்றேன்.. இனி தான் வார்த்தையை சுருக்கி... கவிதை எழுத பழகணும்.. அதுக்கெல்லாம்..இருக்கணும்ங்க..

சிவா.ஜி
18-02-2008, 07:48 AM
அட நீங்க வேற.. நானாவது கவிதையாவது.. இப்போ தான் மொக்கை போடுறது எப்படின்னு கத்துகிட்டு வர்றேன்.. இனி தான் வார்த்தையை சுருக்கி... கவிதை எழுத பழகணும்.. அதுக்கெல்லாம்..இருக்கணும்ங்க..

என்ன இருக்கணும்....முக்கியமா இருக்க வேண்டியது தமிழ்...அது நிறைய இருக்கு உங்ககிட்ட...அப்புறம் தேவையானதை பேர்லயே வெச்சிருக்கீங்க...இன்னும் என்ன வேணும்..?

ஒண்ணு தெரியுமா மதி...மொக்கை போடறதுக்குத் தான் நிறைய புத்தி வேணும்...எனவே...பூந்து வெளையாடுங்க....

பூமகள்
18-02-2008, 07:53 AM
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு..!
தாய்மையின் பரிமாணம்
ஐந்தறிவு ஆறறிவு பேதமின்றி..!!

எப்படி கிறுக்கி
சுவரில் எழுதினாலும்
ஓவியமாக பார்த்து
ரசிக்கும் மனம்
அன்னையின் உளம்..!

மண், சேறு அப்பி
அழுக்கு பிள்ளையாய்
விளையாடி வந்தாலும்
முந்தானை கொண்டு
முகம் துடைக்கும்
மனம் தாய்மனம்..!!

அழகிய கவிதை.. "பச்" என்று முகத்தில் அறைந்தது.

யவனி அக்காவும் சிவா அண்ணாவும் கூடவே அவர்களின் தம்பி மதியும் அசத்தலாக எழுதி கலக்குறீங்க.. வாழ்த்துகள் அனைவருக்கும். :)

ஏதோ என்னால முடிஞ்சதையும் எழுதுவோம்ல... சும்மாவா என்ர சிவா அண்ணா கவிதை ஆச்சே...!! ;)

மதி
18-02-2008, 08:02 AM
என்ன இருக்கணும்....முக்கியமா இருக்க வேண்டியது தமிழ்...அது நிறைய இருக்கு உங்ககிட்ட...அப்புறம் தேவையானதை பேர்லயே வெச்சிருக்கீங்க...இன்னும் என்ன வேணும்..?

ஒண்ணு தெரியுமா மதி...மொக்கை போடறதுக்குத் தான் நிறைய புத்தி வேணும்...எனவே...பூந்து வெளையாடுங்க....

இதை அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டேன்.. :D:D

மனோஜ்
18-02-2008, 08:05 AM
உள்ளத்தில் நல்ல உள்ளம்
தாய் உள்ளம்
உலகத்தில் சில நேரம்
உள்ளதில் கெட்ட உள்ளமாக
மாறிவிட்ட கொடுமையும் உண்டு
நல்ல கவிதை சிவா வாழ்த்துக்கள்

அமரன்
18-02-2008, 08:53 AM
தொட்டில் குழந்தை திட்டத்தில்
பெற்றதை இட்டுச் செல்லும்
பெற்றவளைப் பார்த்து
கெக்கலி கொட்டிச் சிரிக்கிறது
கக்கத்தில் குட்டியை வைத்து
விட்டுவிடாமல் வளர்க்கும்
தாய்க்குரங்கு.......!!

தொட்டில் கட்ட வழியின்றி
தொட்டில் குழந்தை வலிசுமந்து
வளர வழிசெய்தவளைப் பார்த்தா
கெக்கலிக்கிறது குரங்கு!

தனயனைப் பார்க்காது
தகப்பனை எதிர்பார்க்கும்
தன்னின பரிணாமம் பார்த்து-கை
தட்டிச் சிரிக்கிறது குரங்கு!

தப்பானவளென நினைந்து
தப்பைத் தூண்டிவிட்டு
தப்பிழைக்கும் குழுமம் கண்டு-கை
தட்டிச் சிரிக்கிறது குரங்கு.

தப்பெனப் புரிந்தும்
கைகட்டி வேடிக்கை பார்க்கும்
கையாலாகாதோர் கண்டு
கைகொட்டிச் சிரிக்கிறது குரங்கு!

முத்துமணி மாலை கோர்த்த அனைவருக்கும் பாராட்டுதலும் நன்றியும்.

சிவா.ஜி
18-02-2008, 09:32 AM
எப்படி கிறுக்கி
சுவரில் எழுதினாலும்
ஓவியமாக பார்த்து
ரசிக்கும் மனம்
அன்னையின் உளம்..!

மண், சேறு அப்பி
அழுக்கு பிள்ளையாய்
விளையாடி வந்தாலும்
முந்தானை கொண்டு
முகம் துடைக்கும்
மனம் தாய்மனம்..!!
http://www.tamilmantram.com:80/vb/

அழகான வரிகள்....சிலேட்டில்...நாலு கோடு வரைந்து..இதுதான் என் அம்மா என்று பிள்ளை காட்டினால்....பிக்காஸோவின் ஓவியத்தைப் பார்ப்பதைப்போல புருவம் உயர்த்தி..கண்கள் மலர்த்திப் பார்த்து...கண்ணேறு கழிக்கும் தாயுள்ளம்.அந்த சுகம் எதுவும் கிடைக்காமல்...வளரும் இந்த தொட்டில் குழந்தைகள்....இந்த இல்லத்தின் எத்தனையாவது குழந்தையாய் அந்த வாசல் தொட்டிலுக்கு வந்தாய் என ஒருவரை ஒருவர் விசாரித்துக்கொள்ளும் நெஞ்சை அறுக்கும் வேதனையைப் பார்த்தால்...மனம் பாரமாகிறது.

நல்ல கவிதையை பின்னூட்டமாயிட்ட தங்கை பூவுக்கு வாழ்த்துகள்+நன்றிகள்.

சிவா.ஜி
18-02-2008, 09:34 AM
உள்ளதில் கேட்ட உல்லமாக
மாறிவிட்ட கொடுமையும் உண்டு

ஆமாம் மனோஜ்..அப்படிப்பட்ட கொடுமையான உள்ளங்களும் உண்டு.பாவம் அந்த பிஞ்சுகள்...இப்படிப்பட்ட தாய் ஈன்ற கன்றுகளாய் கஷ்டப்படுகிறார்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றி மனோஜ்.

சிவா.ஜி
18-02-2008, 09:38 AM
தொட்டில் கட்ட வழியின்றி
தொட்டில் குழந்தை வலிசுமந்து
வளர வழிசெய்தவளைப் பார்த்தா
கெக்கலிக்கிறது குரங்கு!

தனயனைப் பார்க்காது
தகப்பனை எதிர்பார்க்கும்
தன்னின பரிணாமம் பார்த்து-கை
தட்டிச் சிரிக்கிறது குரங்கு!

தப்பானவளென நினைந்து
தப்பைத் தூண்டிவிட்டு
தப்பிழைக்கும் குழுமம் கண்டு-கை
தட்டிச் சிரிக்கிறது குரங்கு.

தப்பெனப் புரிந்தும்
கைகட்டி வேடிக்கை பார்க்கும்
கையாலாகாதோர் கண்டு
கைகொட்டிச் சிரிக்கிறது குரங்கு!

அமரனின் படைப்பில் உருவான இந்த குரங்கின் ஒவ்வொரு சிரிப்பும் முள் சாட்டைகளாக மனிதனை விளாசுகிறது.அசத்தலான வரிகள்.மூகத்தை அறையும் நிஜங்கள்.மௌனமாய் தலை குனிகிறது...தர்மம் காக்க மறந்த இனம்.மிக அருமை அமரன்.அழகான பின்னூட்டக் கவிதைக்கு மிக்க நன்றி.

நேசம்
18-02-2008, 12:55 PM
மொத்தத்தில் இந்த சமுகத்தை பார்த்து தான் குரங்கு சிரிப்பது போல் இருக்கிறது.குழந்தை தொட்டில் விட்டும் செல்லும் அந்த தாயின் மனநிலை நமக்கு எப்படி தெரியும் சிவாண்ணா..

சிவா.ஜி
18-02-2008, 01:01 PM
மொத்தத்தில் இந்த சமுகத்தை பார்த்து தான் குரங்கு சிரிப்பது போல் இருக்கிறது.குழந்தை தொட்டில் விட்டும் செல்லும் அந்த தாயின் மனநிலை நமக்கு எப்படி தெரியும் சிவாண்ணா..

மனநிலை எதுவானாலும்...அந்த குழந்தையின் தாய் அவள்.அந்த உயிரை உருவாக்கியவள்.குழந்தையை தத்து கொடுப்பவர்கள் கூட சிறிது காலம் தாங்களோடு வளர்த்து...அன்பைக் காட்டி விட்டுதான் பின்னர் கொடுக்கிறார்கள்.ஆனால் அந்த சின்னஞ்சிறிய பிஞ்சு என்ன பாவம் செய்தது...தாயின் அரவணைப்பு கிடைக்காமலேயே போய்விடுகிறதே..

பெரும்பாலும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளைத்தான் இப்படி விட்டுச் செல்கிறார்கள்.அதனால்தான் அவளைப் பார்த்து குரங்கு சிரிக்கிறது என்று எழுதினேன்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நேசம்.

நேசம்
18-02-2008, 01:12 PM
பெரும்பாலும் தவறான வழியில் பிறந்த குழந்தைகளைத்தான் இப்படி விட்டுச் செல்கிறார்கள்.அதனால்தான் அவளைப் பார்த்து குரங்கு சிரிக்கிறது என்று எழுதினேன்.
உங்க*ளூடைய* ஆத*ங்க*ம் என*க்கு புரியுது அண்ணா.த*வ*றான* வ*ழியில் பிற*க்கும் குழ*ந்தைக்கு ஒரு ஆணூம் கார*ண*ம் என்ற* வித*த்தில் இந்த* ச*முக*த்தை பார்த்து குர*ங்கு சிரிப்பாத*க* சொன்னேன்.ம*த்த*ப்ப*டி க*விதை விம*ர்ச்சிக்கும் அள*வுக்கு ஞான*மில்ல* ந*ம*க்கு

சிவா.ஜி
18-02-2008, 01:15 PM
தம்பி நான் நீங்கள் சொன்னதை தவறென்று சொல்லவேயில்லை...என்னுடைய விளக்கமாகத்தான் அதை எழுதினேன்.நிச்சயமாக நீங்கள் சொன்னது சரிதான்.ஒரு ஆணும்தான் காரணம்.
அமரனின் பின்னூட்ட கவிதையைப் பாருங்கள்...உங்களின் எண்ணத்தையே பிரதிபலித்திருக்கிறார் மிக அருமையாக...

நேசம்
18-02-2008, 01:21 PM
தம்பி நான் நீங்கள் சொன்னதை தவறென்று சொல்லவேயில்லை...என்னுடைய விளக்கமாகத்தான் அதை எழுதினேன்.நிச்சயமாக நீங்கள் சொன்னது சரிதான்.ஒரு ஆணும்தான் காரணம்.
அமரனின் பின்னூட்ட கவிதையைப் பாருங்கள்...உங்களின் எண்ணத்தையே பிரதிபலித்திருக்கிறார் மிக அருமையாக...

இந்த* ச*முக*த்தை ப*ற்றிய* உங்க*ள் பார்வை என*க்கு தெரியும் அண்ணா.அம*ர*னின் பின்னூட்ட*த்தை பார்த்த* பிற*கு ந*ம்ம* சும்மா இருந்து இருக்க*லாம் என்று தோன்றிய*து.உங்கள் கவிதை மாதிரி அவ்வளவு அருமையாக இருந்தது.

M.Jagadeesan
20-01-2013, 03:07 PM
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும், குழந்தை விஷயத்தில், மனிதனைவிட குரங்கே மேல். நல்ல கவிதையைத் தந்த சிவாவுக்குப் பாராட்டு.

கலைவேந்தன்
21-01-2013, 01:25 AM
பலவருடங்கள் கழித்து வாசித்தாலும் பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொள்வதே கவிதை. இது கவிதை..!! பாராட்டுகள் நண்பா..!!