PDA

View Full Version : நேசிப்பின் நினைவுசுகந்தப்ரீதன்
18-02-2008, 05:34 AM
எங்கே தொடங்குவதென்று தெரியவில்லை-முடிவில்லாத
தொடர்கதைக்கு முற்றும்போட வேண்டிய கட்டாயம்!
சிறுதும்பி பிடித்து விளையாடிய காலம்தொட்டே
என்னவளைப்பற்றி எனக்குள் சில எதிர்பார்ப்புகள்..!
அத்தனையும் பூர்த்தியானது அவளை கண்டப்போது..!!
எண்ணற்ற இதயங்களின் எழில்கூடமாய் திகழும்
எங்கள் கல்லூரியின் கனவு மையத்தில்தான்
நிகழ்ந்தது எங்களின் முதல் சந்திப்பு...!!

முதல்பார்வையில் காதல் வருமா என்றால்
வருமென்ற தலைப்பில் வாதிப்பவன் நான்..!
ஏனோஅவளிடம் பேசமட்டும் அத்தனை தயக்கம்!
எத்தனையோ தோழிகளிடம் இயல்பாய் பழகியும்
என்னவளை கண்டால் எனக்குள் பதட்டம்..!!

விடியல்தோறும் சந்தித்தன விழிகள் நான்கும்
ஊமையாகவே இருந்தன உதடுகள் நான்கும்..!!
பலமுறை நாங்கள் பக்கத்தில் இருந்தும்
மௌனமாகவே இருந்தன மனங்கள் இரண்டும்..!!
எனக்குதான் தயக்கம் அவளுக்கென்ன குழப்பம்..?
கடைசிவரை கண்களால் கவிபாடினாளே தவிர
ஒருமுறைக்கூட உதடுகளால் உச்சரிக்க மறுத்துவிட்டாள்..!!

காலஓட்டத்தில் என்னவளைவிட்டு நானும் சென்றேன்
கனவுகளைத்தேடி கண்காணாத தூரம்..!- நீங்காது
நின்றன நினைவுகள் மட்டும் நெஞ்சத்தினோரம்..!!
தூரத்தைப்போலவே தொடர்ந்தது என்வாழ்வில் துயரம்..!
மீண்டும் கண்டேன் என்னவளை எதிர்பாராத தருணம்..!!

யதார்த்தமாய் விசாரித்தேன் எப்படி இருக்கிறாயென்று..?
ஆர்வமின்றி கேட்டாள் என்னை யாரென்று..?!
முகம் நோக்காமல் முழுவதும் உரைத்தேன்
கண்டநாள்முதல் காதல் கொண்டது வரை..!!

விழிகளில் நீர்வழிய விரக்தியாய் சிரித்தாள்..!
எத்தனைநாள் துடித்திருப்பேன்- எங்கே நீ
இறுதிவரை சொல்லாமலே இருந்துவிடுவாயோ என்று!
இன்று என் ஏக்கங்கள் தீர்ந்துவிட்டது-
இருந்தும் ஏமாற்றம்தானே எஞ்சி நிற்கிறது..!!

வேதனைகள் விழியை நனைக்க மெல்ல
அவளிடம் நீயாவது சொல்லியிருக்கலாமே என்றேன்..!!
சற்றே என்னை உற்று நோக்கியவள்- நானாக
சொல்லியிருந்தால் நான்கே நாளில் மறந்திருப்பாய்
இன்றுவரை என்னை நேசித்துக்கொண்டா இருந்திருப்பாய்..?!

எப்போதும்போல் நான் இப்போதும்- அவள் தொடர்ந்தாள்
நம்காதலுக்கு நாமே கல்லறை கட்டியிருக்கிறோம்!
நம்மௌனமே மௌன அஞ்சலி செலுத்தியிருக்கிறது..!!
இனி என்நினைவுகளை நீயும் உன்நினைவுகளை நானும்
சுமந்துகொண்டு பறப்போம் சுதந்திரமாய்- அவரவர் திசையில்!!
நெஞ்சம் வலித்தாலும் நிராகரிக்கவில்லை என்னவள் முடிவை..!!

பிரியும்முன் ப்ரியமுடன் கேட்டாள்- உன் நேசிப்பின்
நினைவாக உன்பெயரை இட்டிருக்கிறேன் என்குழந்தைக்கு..!!
எதிர்காலத்தில் நீயும் இட்டுவைப்பாயா என்பெயரை உன் குழந்தைக்கு..?!

அமரன்
19-02-2008, 01:23 PM
முக்கால யுகங்களில், காதலின் தொடர் துயர் "நெடுங்க(வி)தை". ஏற்கனவே காதல் ஞாபகக்குறிப்பாக நாமமிடல் சரியானதா என்பதில் துவங்கி, பழையகாதலை மறப்பது சரியா தவறா என்ற விவாதம் நிகழும் நிலையில் இப்படி ஒன்று.. ரசிக்கத்தக்க வகையில் வடித்தமைக்கு பாராட்டுகள் ப்ரீதன்..
சில வரிகளில் பயணித்தபோது இன்ஸ்டன்ட் கவிதைகள் தோன்றின. கடினப்பட்டு தடைபோட்டுள்ளேன். மறுபடியும் இங்கே வர நேர்ந்தால், அப்போதும் உயிர்த்தால் பதிகிறேன்..

aren
19-02-2008, 01:26 PM
கேட்டுவிடுவதே சிறந்தது சுகந்தன். கேட்காமல் விட்டால் நம் பெயரை அவர்கள் வைக்கவேண்டியதுதான்.

நல்ல கவிதை வரிகள். எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. பாராட்டுக்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
19-02-2008, 01:40 PM
சொல்லாத காதல் கதையொன்று கவிதையாய் அரங்கேறியிருக்கிறது.
நிறவேறாக் காதலென்பது சோகம்தான்....அதிலும்...இரு புறமும் சம்மதத்தை உரக்கச் சொல்லாமல் மௌனத்தில் வைத்திருந்த மாபெரும் குற்றத்துக்கு இருவருக்குமே தண்டனை.

வரிகள் நீளமாய் இருந்தாலும்...வாசிக்க சுகமாய் இருக்கின்றன.

இரண்டாவது சந்திப்பு ரணத்தை ஆற்றுவதற்கு பதிலாக கீறிவிட்டதே....பெயர் வைத்து தொடரவேண்டுமா...துயரத்தை....
என்னைக் கேட்டால்....மறந்தது மறந்ததாகவே இருப்பதுதான் நல்லது.காதலி இல்லையென்றாலும் காதல் இருக்கிறதே....

வாழ்த்துகள் சுகந்த்.அருமையான,அழகான கவிதை.

சுகந்தப்ரீதன்
20-02-2008, 05:21 AM
சில வரிகளில் பயணித்தபோது இன்ஸ்டன்ட் கவிதைகள் தோன்றின. கடினப்பட்டு தடைபோட்டுள்ளேன். மறுபடியும் இங்கே வர நேர்ந்தால், அப்போதும் உயிர்த்தால் பதிகிறேன்..

நன்றி..அண்ணா..! இன்ஸ்டன்ட் கவிதையை இன்ஸ்டன்டாக பதித்தால் நன்றாயிருக்குமே...?! சரி..காத்திருக்கும் என் கவிதை தங்கள் வரவுக்கு.. மிக்க நன்றி..!!


நல்ல கவிதை வரிகள். எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. பாராட்டுக்கள்..

மிக்க நன்றி அரேன் அண்ணா..! நேரமின்னைதான் நிறைய எழுத முடியாமல் போகிறது..இருந்தும் முயற்ச்சிக்கிறேன் என்னால் இயன்ற அளவு..உங்கள் அனைவரின் உந்துதலில்..!!


இரண்டாவது சந்திப்பு ரணத்தை ஆற்றுவதற்கு பதிலாக கீறிவிட்டதே....பெயர் வைத்து தொடரவேண்டுமா...துயரத்தை....
என்னைக் கேட்டால்....மறந்தது மறந்ததாகவே இருப்பதுதான் நல்லது.காதலி இல்லையென்றாலும் காதல் இருக்கிறதே....

வாழ்த்துகள் சுகந்த்.அருமையான,அழகான கவிதை.

மிக்க நன்றி அண்ணா..!! அமர் அண்ணா சொன்னது போல் முக்காலமும் கலந்து படைத்தாலும் இதில் இறந்தகாலம் மட்டுமே என்னுடையது... நிகழ்காலமும் எதிர்காலமும் கற்பனைக்கு சொந்தமான கவிதை வரிகள்..! இரண்டாம் சந்திப்பு எங்களுக்குள் நிகழ்ந்தால் எப்படி இருக்குமென்று எண்ணிய போது எனக்குள் தோன்றியது இப்படி..!!

இளசு
20-02-2008, 05:51 AM
வாசிக்கத் தொடங்கினால் ... முடிவு வரை சுவையாய் ...
நீண்ட கவிதையானாலும் .... அதற்காகப் பாராட்டுகள் சுகந்தன்!

------------------------------------------

காதல்!
புரியவே இல்லையே!
பின் எங்கே முதல், முடிவு அறிய!!

யவனிகா
20-02-2008, 06:20 AM
நல்ல கவிதை சுகந்தா...சொல்லாமல் போன காதல் ஒன்று எல்லாருக்கும் உயிரோடு இருக்கிறது. சொல்லிச் சேர்ந்த காதல் சுவை இழக்கக் கூடும் சிலநேரம். ஆனால் சொல்லாது போன காதல் சுகவலி தான்.

அதுசரி. "இதயம்" முரளி ரேஞ்சுக்கு இருந்திருக்க...போனாப் போகட்டும் சுகந்தா. ஆனா இந்த பேரு வெக்கறது எனக்கு ஒப்புதல் இல்லை.நம்மை நம்பி, இப்ப நம்ம கூட வாழ்பவர்களை முட்டாளாக்கும் அல்லது ரணப்படுத்தும் வேலை இது. அழகான காதல்....அழகான கவிதை.

பூமகள்
20-02-2008, 07:03 AM
சுவையான ஒரு காதல்..!
சொல்லாமலே சொல்லியது கவிதையாய் இறுதியில்..!!

சொல்லிய காதல் வலி மட்டுமே மிஞ்சும்..!
சொல்லாத காதல் சுகமான வலியோடு ரசிக்க வைக்கும்..!!

அப்படித்தான் உங்கள் கவிதையும்..!!
வாழ்த்துகள் சுபி..!!
--------------
எனக்கும் யவனி அக்கா போல், குழந்தைக்கு பெயர் வைப்பதில் உடன்பாடில்லை. நம்மவள் என்று ஒருத்தி வந்தவுடன், மாற்றான் தோட்டத்து மல்லிகை பற்றி நினைப்பதே பாவம். இதில் அனுதினமும் பெயரிட்டு அழைத்தால்??

யோசியுங்கள் காதல் தோல்வியுற்றவர்களே..!!

அமரன்
20-02-2008, 07:25 AM
முதல்பார்வையில் காதல் வருமா என்றால்
வருமென்ற தலைப்பில் வாதிப்பவன் நான்..!!
இதயமும் ஒரு வகை
இராணித் தேனிதான்!!
பார்வைகள் பல முண்டினாலும்
ஒற்றைப் பார்வைமட்டும் புணர்கிறது.
ஒரு தடவை புணர்ந்ததுமே
காதலை(கவிதையை) பிரசவிக்கிறது
தொடர்ச்சியாக..!!!

அமரன்
20-02-2008, 07:27 AM
விடியல்தோறும் சந்தித்தன விழிகள் நான்கும்
ஊமையாகவே இருந்தன உதடுகள் நான்கும்..!!
பலமுறை நாங்கள் பக்கத்தில் இருந்தும்
மௌனமாகவே இருந்தன மனங்கள் இரண்டும்..!!
எனக்குதான் தயக்கம் அவளுக்கென்ன குழப்பம்..?
கடைசிவரை கண்களால் கவிபாடினாளே தவிர
ஒருமுறைக்கூட உதடுகளால் உச்சரிக்க மறுத்துவிட்டாள்..!!!
மௌனம் எழுதிச்செல்லும்
வார்த்தைகளின் அர்த்தங்களை
இதய அகராதி திறந்து
பார்த்து வார்ப்பதுதானே காதல்!
இதய அகராதியை
புரட்ட மறுப்பவர்களை காதல்
புரட்டிப்போடுகிறது
காலங்காலமாய்...!!!!

ஆதி
20-02-2008, 07:40 AM
நேர்படுவது எல்லாம்
நிகழ்வாகிவிடும் என்றால்
சில நேர்ச்சிகளை
தவிற்திருக்கலாம்..

நெடிய கவிதை என்றாலும் நீரோட்டமுள்ள கவிதை.. வாழ்வோட்டத்தில் வந்து சென்ற வதனங்களை எண்ணி அசைப்போடும் போது இன்னும் அழகாகவிடும் அந்த கணம்.. ரணங்களில் இருந்து வழிய துவங்கும் சொர்க்கத்தின் நீர்வீழ்ச்சி சுகமாய்.. நினைவுகளோடு வாழ்தல் இதம்.. குழந்தைக்கு நினைத்தவளின் பெயரிட்டு நினைவுகளுக்கு நீரிட முயன்றால் உனக்கு கிடைத்தவளுக்கும் காதலுக்கும் செய்யும் துரோகம் என பெயர்படும்..

கவிதைக்கும் உனக்கும் வாழ்த்துக்கள் நண்பா..

அன்புடன் ஆதி

சுகந்தப்ரீதன்
21-02-2008, 03:40 AM
வாசிக்கத் தொடங்கினால் ... முடிவு வரை சுவையாய் ...
நீண்ட கவிதையானாலும் .... அதற்காகப் பாராட்டுகள் சுகந்தன்!
!

மிக்க நன்றி அண்ணா...!! கவிதை நீளமானது என்று நான் ஏற்கனவே கூறியது சரிதானே அண்ணா..?!:icon_rollout:


அழகான காதல்....அழகான கவிதை.


மிக்க நன்றி அக்கா..!! விட்டா இதயத்துல நடிச்சதே நாந்தான்னு சொல்லுவீங்க போலிருக்கே..?!:mini023:எனக்கும் யவனி அக்கா போல், குழந்தைக்கு பெயர் வைப்பதில் உடன்பாடில்லை. நம்மவள் என்று ஒருத்தி வந்தவுடன், மாற்றான் தோட்டத்து மல்லிகை பற்றி நினைப்பதே பாவம். இதில் அனுதினமும் பெயரிட்டு அழைத்தால்??

யோசியுங்கள் காதல் தோல்வியுற்றவர்களே..!!

ஆமாம்...யோசியுங்கள் காதலில் தோல்வியுற்றவர்களே..!!(நான் இல்லப்பா...:smilie_abcfra:)
எனக்கும் உடன்பாடில்லை இந்த பெயர் சூட்டும் படலத்தில்..!!
சூட்டினாலும் சூட்டாவிட்டாலும் சில நினைவுகள் நெஞ்சுக்குள் இருந்துக் கொண்டே இருக்கும்...!

இங்கே கவிதைக்காகத்தான் அப்படி எழுதினேன்.. அதை யாரும் பின்பற்ற வேண்டாம்..என்பதே என் வேண்டுகோள்...!!:icon_rollout:

மிக்க நன்றி பூமகள்..!!

சுகந்தப்ரீதன்
21-02-2008, 03:44 AM
மௌனம் எழுதிச்செல்லும்
வார்த்தைகளின் அர்த்தங்களை
இதய அகராதி திறந்து
பார்த்து வார்ப்பதுதானே காதல்!
இதய அகராதியை
புரட்ட மறுப்பவர்களை காதல்
புரட்டிப்போடுகிறது
காலங்காலமாய்...!!!!
அருமை அண்ணா...!!
காதலையும் காலத்தையும் கலந்த விதம்..!!
வாழ்த்துக்கள்...!!

சுகந்தப்ரீதன்
21-02-2008, 03:52 AM
நெடிய கவிதை என்றாலும் நீரோட்டமுள்ள கவிதை.. வாழ்வோட்டத்தில் வந்து சென்ற வதனங்களை எண்ணி அசைப்போடும் போது இன்னும் அழகாகவிடும் அந்த கணம்.. ரணங்களில் இருந்து வழிய துவங்கும் சொர்க்கத்தின் நீர்வீழ்ச்சி சுகமாய்.. நினைவுகளோடு வாழ்தல் இதம்..
குழந்தைக்கு நினைத்தவளின் பெயரிட்டு நினைவுகளுக்கு நீரிட முயன்றால் உனக்கு கிடைத்தவளுக்கும் காதலுக்கும் செய்யும் துரோகம் என பெயர்படும்..

அழகிய கவிநயத்தில் ஒரு பின்னூட்டம்..! மிக்க நன்றி நண்பா..!!

கண்ணுக்கு பிடித்தவளையே இத்தனை நேசிப்பவன் அவன் கைப்பிடித்தவளை எந்த அளவுக்கு நேசிப்பான் என்று எண்ணி பாருங்கள்... அப்புறம் எப்படி அவளுக்கு துரோகம் செய்வான்..?! எல்லாமே கவிதைக்கு மட்டுமே பொருந்தும் நண்பா... யதார்த்தம் முற்றிலும் மாறுப்பட்டது நண்பா..!!

ஆதி
21-02-2008, 09:33 AM
கண்ணுக்கு பிடித்தவளையே இத்தனை நேசிப்பவன் அவன் கைப்பிடித்தவளை எந்த அளவுக்கு நேசிப்பான் என்று எண்ணி பாருங்கள்... அப்புறம் எப்படி அவளுக்கு துரோகம் செய்வான்..?! எல்லாமே கவிதைக்கு மட்டுமே பொருந்தும் நண்பா... யதார்த்தம் முற்றிலும் மாறுப்பட்டது நண்பா..!![/COLOR]

உனது வெள்ளிய மனதையும் தெள்ளிய சிந்தனையையும் புரிந்து கொண்டேன் சுகந்தா..

நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு அமிலம் உமிழ்ந்துவிட்டேன்.. பொறுமையாய் புரியவைத்தமைக்கும் நன்றி..

அன்புடன் ஆதி

kavitha
21-02-2008, 09:54 AM
கவிதை ஓட்டம் நன்றாக இருக்கிறது சுகந்தன். இருப்பினும் கருத்தில் உடன்பாடில்லை.

கண்டவுடன் காதல்...
காதல் சொல்லாமலே பிரிவு....
பிரிவும் ஒரு உறவின் நினைவு
நினைவு குழந்தையாக...

என்று... சினிமாத்தனம் தொனிக்கிறது.


எனக்கும் யவனி அக்கா போல், குழந்தைக்கு பெயர் வைப்பதில் உடன்பாடில்லை. நம்மவள் என்று ஒருத்தி வந்தவுடன், மாற்றான் தோட்டத்து மல்லிகை பற்றி நினைப்பதே பாவம். இதில் அனுதினமும் பெயரிட்டு அழைத்தால்??

யோசியுங்கள் காதல் தோல்வியுற்றவர்களே..!!


__________________
~பூமகள்.

குழந்தையை குழந்தையாகப்பார்ப்பது தான் உத்தமம். நானும் இக்கட்சிதான்.....
சூட்டினாலும் சூட்டாவிட்டாலும் சில நினைவுகள் நெஞ்சுக்குள் இருந்துக் கொண்டே இருக்கும்...! இருக்கலாம்.... அது தனி.


இங்கே கவிதைக்காகத்தான் அப்படி எழுதினேன்..
சரியாப்போச்சு... நீங்களும் இப்படித்தானா?
வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமில்லாத கவிஞர்களைப்பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாய் பற்றிக்கொண்டு வரும்.

எழுதுவது ... உங்கள் உரிமை...
மன்னியுங்கள்...பிடிக்கவில்லை என்று சொல்வது என் கடமை.

சுகந்தப்ரீதன்
21-02-2008, 11:10 AM
உனது வெள்ளிய மனதையும் தெள்ளிய சிந்தனையையும் புரிந்து கொண்டேன் சுகந்தா..


மிக்க நன்றி நண்பா...!!


சரியாப்போச்சு... நீங்களும் இப்படித்தானா?
வாழ்க்கைக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமில்லாத கவிஞர்களைப்பார்த்தாலே எனக்கு கோபம் கோபமாய் பற்றிக்கொண்டு வரும்.
எழுதுவது ... உங்கள் உரிமை...
மன்னியுங்கள்...பிடிக்கவில்லை என்று சொல்வது என் கடமை.
பரவாயில்லை கவி அக்கா..!!
எழுதுபவனுக்கு இருக்கும் உரிமை.. அதை படிப்பவனுக்கும் இருக்கு என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது..!! ஆகையால் தாங்கள் கருத்து என்னை பாதிக்கவில்லை மாறாக சிந்திக்க வைக்கிறது..!!

அடுத்து வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தமில்லா கவிஞர்களை பார்த்தாலே உங்களுக்கு கோபம் கோபமாக வருகிறது என்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..!! ஆனால் இதுவரை நான் எழுதிய கவிதைகளில் எனக்கு சம்மந்தமற்றதை எழுதியதாக நினைவில்லை..!! எல்லாமே என்னை பற்றிய சுயப்புராணமாகவே பெரும்பாலும் இருக்கும்..!! இங்கே இந்த கவிதையிலும் அதைதான் நான் செய்திருக்கிறேன்...!! அதையும் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன் அதை பாருங்களேன்..!!


அமர் அண்ணா சொன்னது போல் முக்காலமும் கலந்து படைத்தாலும் இதில் இறந்தகாலம் மட்டுமே என்னுடையது... நிகழ்காலமும் எதிர்காலமும் கற்பனைக்கு சொந்தமான கவிதை வரிகள்..! இரண்டாம் சந்திப்பு எங்களுக்குள் நிகழ்ந்தால் எப்படி இருக்குமென்று எண்ணிய போது எனக்குள் தோன்றியது இப்படி..!!
ஒருவேளை எதிர்பாராமல் நாங்கள் சந்திக்க நேர்ந்தால் இப்படி நடக்குமோ என்ற ஒரு எதிர்பார்ப்பிலும் ஏக்கத்திலும் கற்பனை கலந்து எழுதியவைதான் இக்கவிதையின் பிற்பாதி..!! அதைதான் நான் குறிப்பிட்டேன்..!! அதுமட்டுமின்றி அவள்தான் என்னிடம் அப்படி கேட்பதாக கற்பனை செய்து எழுதியிருப்பேனே தவிர நானும் என் குழந்தைக்கு இடப்போவதாக எழுதவில்லையே...!!

மற்றபடி என் உணர்வுகளின் வடிகாலாகத்தான் என் கவிதைகளை நான் என்றும் கருதுகிறேன்..!!
மிக்க நன்றி கவியக்கா..!! மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்த உங்களின் உயர்ந்த உள்ளத்துக்கு..!!

வசீகரன்
23-02-2008, 10:37 AM
முதலில் சாரி மாப்ள.... இவ்ளோ காலம் தாழ்த்தி...
இங்க விமர்சனம் கொடுக்க வந்ததுக்கு.... உனக்குதான் தெரியுமே ....!!
எந்தக் காலத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வே கிடையாது...காணும் கனவுகளே நனவாகிட்டா....!நாம ஆசப்பட்ட சின்ன வயசு நிலாவே நம்ம கைக்கு கெடச்சுட்டா...!அந்த அழகான காத்திருப்பு நேரங்களே மீண்டும் கெடச்சா....!காதலிச்சவளே வாழ்க்கையிலும் கெடச்சுட்டா...! இப்படி நாம் எவ்வளவோ நினைக்கிறோம்.... நடந்திடுடா...! அதிலும் காதல் ரொம்ப கொடும சுபி கண்டிப்பா அனுபவிச்சு எழுதி இருக்க... உன் வலி இங்கே எனக்கு தெரியுது..... விடு சுகந்த்.... என்ன பண்றது.... எப்படி போகனுண்னு இருக்கோ அப்படித்தானே போயாகணும்
எப்பவவுமே உன் கவிதைகள் மீது எனக்கு ரொம்ப அப்படி ஒரு காதல்.... வலியோடு நீ வடித்திருக்கும் இந்த வார்ப்பு மனசகனமாக்கிடுச்சு சுகந்தா....


அவளிடம் நீயாவது சொல்லியிருக்கலாமே என்றேன்..!![/COLOR]
சற்றே என்னை உற்று நோக்கியவள்- நானாக
சொல்லியிருந்தால் நான்கே நாளில் மறந்திருப்பாய்
இன்றுவரை என்னை நேசித்துக்கொண்டா இருந்திருப்பாய்..?!

அதிலையும் இந்த வரிகள்....
உள்ளத்து வரி(லி)கள் இவை...!

காதல் வலியில் இருப்பவர்களுக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் சுகந்த்.....

நிச்சயமாக என் பாராட்டுக்கள் நண்பா...!

சுகந்தப்ரீதன்
24-02-2008, 03:52 AM
முதலில் சாரி மாப்ள.... இவ்ளோ காலம் தாழ்த்தி...
எப்பவவுமே உன் கவிதைகள் மீது எனக்கு ரொம்ப அப்படி ஒரு காதல்.... வலியோடு நீ வடித்திருக்கும் இந்த வார்ப்பு மனசகனமாக்கிடுச்சு சுகந்தா.......!
விடு மாமு...உன்னால எப்ப முடியுதோ அப்ப வந்து உன் கருத்தை கூறு அதுபோதும் எனக்கு...:sprachlos020:...
அப்புறம் எப்படி மாமு இப்படியெல்லாம் எழுத முடியுது உன்னால மட்டும் வசீகரமா அது கவிதையானாலும் உரையானாலும்... உன் எழுத்துக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கிறதே அதெப்படி..?!:mad:காதல் வலியில் இருப்பவர்களுக்கு இந்த படைப்பு சமர்ப்பணம் சுகந்த்..... நிச்சயமாக என் பாராட்டுக்கள் நண்பா

மிக்க நன்றி நண்பா...!!