PDA

View Full Version : குரங்குகளும் பேசிக்கொள்ளும்...mgandhi
17-02-2008, 04:48 PM
குரங்குகளும் பேசிக்கொள்ளும் ஆய்வில் தெரியவந்த அதிசயம்

லண்டன்: குரங்குகளும் மனிதர்களைப் போல, ஒன்றுக் கொன்று பேசிக்கொள்வதும், குரல் வித்தியாசத்தை உணர் ந்து கொள்வதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஜெர்மன் குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது.ஆசிய குட்டை வால் இன குரங்குகள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. பல்வேறு ஒலிகளை எழுப்பி, அதை குரங்குகள் உணர்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது. மனிதர் களைப் போலவே, குரங்குகளிலும், மூளையில், ஒலிகளை உணரும் பகுதி இருப் பது தெரியவந்தது. ஒலியின் தன்மைக்கு ஏற்ப, மூளைப்பகுதியில் மாற்றம் ஏற்படுவது, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் உறுதி செய்யப் பட்டது. குரங்குகளின் மூளைப்பகுதியில், ஒலி உணரும் பகுதி இருப்பதால், தங்கள் இன குரங்குகளுடன் பல்வேறு ஒலி சமிஞ்சைகளுடன் அவை பேசிக்கொள்கின்றன. ஒவ்வொரு குரங்கின் குரலுக்கும் வித்தியாசம் உணர்ந்து கொள்கின்றன.குரங்குகளின் ஒலியை துல்லியமாக உணரும் அதே நேரத்தில், பிற விலங்குகள், பூச்சிகள், மழை, இடி போன்றவற்றை தெளிவாக உணர்வது இல்லை. இந்த ஒலிகள், இவற்றின் மூளையில் உள்ள ஒலி உணரும் பகுதியில், குறைந்தளவே மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம், குரங்குகளை வைத்து, மனிதர் களுக்கு குரல் இழப்பு, செவித்திறன் இழப்பு குறித்த காரணங்களை கண்டுபிடிக்க முடியும் என்ற புதிய கோணம் ஏற்பட்டுள்ளது.

அக்னி
17-02-2008, 05:09 PM
வருங்காலத்தில், குரங்கு பாஷை கற்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

அவசரச் செய்தி:
மனித முன்னோடிகளே! கவனம்...
மனிதர்கள் நடமாடும் இடங்களில் பேச்சைக் குறையுங்கள்.
தேவையற்ற பேச்சுக்கள் உங்களுக்குப் பரிசோதனை என்ற பெயரில் வேதனையாக வந்தடையலாம்.
என்று குரங்குகள் தமது செய்திப் பரிமாற்றத்தில் எச்சரிக்கையும் விடலாம்.

தகவலுக்கு நன்றி...

பூமகள்
18-02-2008, 04:39 AM
மூதாதையர் பேசுவதை இப்பத் தான் கண்டுபிடிச்சாங்களா??

இனத்தாலும், நிறத்தாலும், ஜாதியாலும், அந்தஸ்தாலும், மொழியாலும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளும் மனித இனம் பார்த்து கண்டிப்பாக எள்ளி நகையாடிக் கொண்டு தான் இருக்கும் நிச்சியமாக...!!

""மனிதம் வளர்ப்போம்..!" என்பது போய்,
"குரங்கம்(???:D) வளர்ப்போம்..!" என்று வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தகவலைப் பரிமாறிக் கொண்ட காந்தி அண்ணாவுக்கு எனது நன்றிகள்.

இளசு
18-02-2008, 04:46 AM
நன்றி மோகன்காந்தி அவர்களே..

( இதை என் பள்ளி ஆசிரியர்கள் முன்பே சொல்லிவிட்டார்களே.....
எங்கள் வகுப்பைப் பார்த்து..... பலமுறை...!!!!!!!!!!!!!)
-------------------------------------------------------


நமீபியா பாலைவனத்தில் யானைகள் உண்டு!
தினம் பல காலன்கள் நீர் தேவைப்படும் யானைகள் பாலைவனத்தில் வாழவும் தம்மை மாற்றிக்கொண்ட அதிசயம்!

ஒரு மூத்த தாய் யானை தன் முன்னோரிடம் கற்ற பாதையை நினைவில் இருத்தி வழிகாட்ட... ( கற்றல், நினைவிருத்தல், பிறருக்கு பயனாக்கல்)

அக்குழுவின் மற்ற யானைகள் பின் தொடரும்.. ( தலைமை, ஏற்று நடக்கும் பண்புகள்)

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் நடக்கும், இரவெல்லாம் நடை..
(உழைப்பு, மூளையுடன் உழைப்பு - இரவு நடந்தால் நீர்ச்சேதம் குறைச்சல்)

ஒரு நீர்நிலை, மரச்செறிவை அடைந்தால் தேவைக்கு மட்டும் அருந்தி, உண்டு - பின் அடுத்த தேடல் பயணம்.. ( சூழல் பாதுகாப்பு, பிறருக்கு விட்டு வைத்தல்)

மனிதன் கேட்க இயலா , அலைவரிசைகளில் உறுமி தன் குழுவுக்கு சேதி சொல்லுவது (சுயக்குழு தொடர்பு...)

உச்சம் இதுதான்: எங்கள் குழு இந்த நீர்நிலைக்குப் போகிறது.
நீங்களும் இதே இலக்கு நோக்கி வரவேண்டாம் என அருகில் ஏதும் யானைக்குழு இருந்தால் அதற்கும் கேட்குமாம் இந்த (மனிதச்செவியுணரா) யானை மொழி! (சமூகமளாவிய தொடர்பு..)

திக்குத்தெரியா பொட்டல் பாலையில் பலப்பல மைல் மணல் வெளியில்
வெயில், மணற்புயலில்.. குழுவாய் வாழ்ந்து, தலைமுறை பேணும் பாலைவன யானைகள்....

மதிப்பில் கண் கசிந்தேன்!

sarathecreator
18-02-2008, 04:53 AM
ஆயிரம் இருந்தாலும் ஆதிவாசியான ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் அவர்களை குரங்கு என்றெல்லாம் ஏசியது சரியே இல்லை.. இதற்கு வருத்தப்படத்தான் போகிறார்கள் ரசிகர்கள்.

சுகந்தப்ரீதன்
18-02-2008, 05:05 AM
திக்குத்தெரியா பொட்டல் பாலையில் பலப்பல மைல் மணல் வெளியில்
வெயில், மணற்புயலில்.. குழுவாய் வாழ்ந்து, தலைமுறை பேணும் பாலைவன யானைகள்....

மதிப்பில் கண் கசிந்தேன்!
குரங்கை பற்றி காந்தியண்ணா சொன்னதில் நாம் மூதாதையர் குரங்குதான் என்று தெளிவாக தெரிகிறது... நன்றி அண்ணா..!!

ஆனால் இளசு அண்ணாவின் தகவல் புதிதாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது...பாலைவனத்தில் யானைகள்..(கதைக்கு தலைப்பிடலாம் போல..).. அதுவும் குழுவாய் கூடி வாழ்வது...மனிதன் கற்று தேற வேண்டிய பாடம்...பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா..!!

பூமகள்
18-02-2008, 05:12 AM
குரங்கினைப் பற்றி கற்க வந்த நமக்கு
பாலைவன யானை பற்றி சொல்லி பெரியண்ணா அசர வைத்துவிட்டார்.

எத்தனை எத்தனை நற்குணங்கள்..!!

அண்ணலுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். :)

(அடுத்த ஜென்மத்தில் யானையா பிறக்கனும் பா...!! ;) )

சிவா.ஜி
18-02-2008, 06:39 AM
பேசத் தெரிந்ததாலேயே நாசமாய் போனவன் மனிதன்...இதுவரை அந்த அவலம் ஏற்படாத நமது முப்பாட்டன்களுக்கு இனி என்ன கதியோ...
தகவலுக்கு நன்றி மோகன்காந்தி.
இளசுவின் பாலைவன யானைகள் பற்றிய செய்தி பிரமிக்க வைக்கிறது.அப்பப்பா எத்தனை நற்குணங்கள் அந்த யானைகளுக்கு....அதில் ஏதேனும் ஒன்றாவது மனிதனுக்கு இருந்தால்..
ம்ம்ம்....பெருமூச்சுதான் வருகிறது.நன்றி இளசு.(ஆசிரியர் சொன்னது...சூப்பர்)

ஜெயாஸ்தா
18-02-2008, 02:02 PM
இங்கிருந்து இந்த 'குரங்குகள் பேசும்' செய்தி சுட்டு இன்றைய மாலைமலர் (நாகர்கோவில் பதிப்பில்) போட்டுவிட்டார்கள். யாருப்பா அது.... மலைமலரில் வேலை செய்வது?

mgandhi
18-02-2008, 05:17 PM
யானைகளுக்கு இத்தனை நற்குணங்களா!

நன்றி இளசு

அறிஞர்
18-02-2008, 06:06 PM
விலங்குகளுக்கும் பரிமாறிக்கொள்ள பாஷை (ஒலி) உண்டு என்பது.. முன்பறிந்த விசயம் தான்.

புதிய தகவல்களுக்கு நன்றி.. மோகன் காந்தி, இளசு..