PDA

View Full Version : பிழைநாகரா
17-02-2008, 02:25 AM
தமிழை
உள்ளிருந்தே கொல்லும்
உட்பகை

தமிழமுதைக்
கெடுக்கும்
நஞ்சு

ஜெயாஸ்தா
17-02-2008, 02:34 AM
உறுதியான பலகையை
உள்ளிருந்து அரிக்கும்
கரையான் போல்....
தமிழினுள் எழுத்துப் பிழை...!

இயன்றவரை எழுத்துபிழைகளை தவிர்க்க முயற்சி செய்கிறோம் நண்பரே....! அறிவுறுத்தலுக்கு நன்றி.

நாகரா
17-02-2008, 05:04 AM
பிழை தவிர்க்க முயற்சி செய்ய உமக்கிருக்கும் உறுதிக்கு மிக்க நன்றி, ஜெயாஸ்தா.

தாமரை
17-02-2008, 05:43 AM
பிழை பிழைக்குமா
பிழையிலிருந்து பிழைக்குமா
பிழையும் தமிழ் தானே
அதனால் தான்
அழிக்க முடியவில்லையோ!

யவனிகா
17-02-2008, 05:48 AM
தமிழ் இனி
மெல்லப் பிழைக்கக் கூடும்...
தங்கத் தாமரைத்
தண்டுகளுண்டு
தாங்கிப் பிடிக்க...

நீர்மட்டத்தைக் கூட...

தாமரை
17-02-2008, 05:52 AM
தண்டுகள் வேருக்கும் பூவுக்கமான ஒரு பிணைப்பு
அவ்வளவுதான்
பூக்களுக்கு மிதக்கத் தெரியும் யவனிகா
உயிர் நீர் தருவது வேர்களல்லவா

இளசு
17-02-2008, 05:53 AM
அன்பு நாகரா அவர்களே!
பொறுப்புணர்வூட்டும் கவிதை. பாராட்டும் நன்றியும்!

மன்றச் சொந்தங்களுக்கு...

பாரதியின் முயற்சிப்போமே திரியில் சொன்ன என் கருத்தை http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8313
இங்கே மீண்டும் பதிக்கிறேன் - இக்கவிதைக்குப் பின்னூட்டமாய்!
]


புதியவர்கள், பள்ளித் தமிழ்க்கல்வி அதிகம் இல்லாதவர்கள்
எந்த அளவுக்குத் தட்டச்சினாலும் மகிழ்ச்சியே..

மெல்ல மெல்ல மொழி நன்கு பழகி
பிழை குறைத்து அவர்கள் வளர்வதைப் பார்ப்பதே
ஒரு சுகானுபவம்..

அதற்காகவே அவர்கள் அறிமுகப்பதிவை திருத்தாமல் விட்டுவைக்கணும்..

( சொக்காய் போடாத குழந்தை படம் அதன் கல்யாண வயதில் சபைக்கு
வரும் சங்கட சுகம் அது..)

அந்தத் தமிழ்க் குழந்தைகளுக்கு ஒரு பா(ரா)ட்டு -

அன்பால் குழந்தை கடிக்கின்றது
அதுவும் கொஞ்சம் வலிக்கின்றது
தடவிப்பார்த்தால் இனிக்கின்றது - தமிழ்த்
தாயின் உள்ளம் துடிக்கின்றது..


------------------------------------------------------

ஆனால், இந்தச் சலுகைகள் தமிழில் வளர்ந்துவிட்ட
(தடிக்)குழந்தைகளுக்கு அல்ல..
நீங்கள் கடித்தால் நம் தாய் அழுவாள்...:angry: கடிவாள்..!

1) சூடாக பதில் அளிக்கும் உரையாடல் திரிகளில் பிழைகள் வர வாய்ப்பு அதிகம்.
பதித்தபின் ஒரு முறை நீங்களே படியுங்கள்..
பிழை கண்டால் எடிட்டுங்கள்..

2) கதை,கவிதை போன்றவை பிழைகளால் படிப்பவரின் இதயம் சேராமல், சேதாரமாகும்.

ஓவியா பரிசு பெற்ற கவிதைகள் நம் நண்பர்களால்
பிழை களையப்பட்டு, பின் பதிக்கப்பட்டன..

தனிமடலில் நம் நண்பர்களை அணுகுங்கள்..
நேரமிருந்தால் நிச்சயம் செய்வார்கள்..

3) கண்காணிப்பாளர்களும் அவ்வப்போது நேரமிருப்பின்
மற்றவர் பதிவுகளில் உள்ள முக்கிய பிழைகளைத் திருத்துங்கள்.

பதிவாளர்களுக்கு நீங்கள் எடிட்டியது தெரியும்..புரியும்.


4) ஒற்றுப்பிழைகள், சந்திப்பிழைகளை கணினித் தமிழ் அங்கீகரிக்கும்
என மொழியியலாளர்கள் கருதுகிறார்கள்..
(நானும் இவ்வகைப் பிழைகள் என் பதிவுகளில் ஊடுருவ அனுமதிக்கிறேன்..)


-------------------------------------------------

பொதுவாய் அனைவருக்கும்,

கணினித் தமிழும் கைவிரல் பழக்கம்!

தவறாகவேனும் தட்டச்சி பதியுங்க மக்கா..
தட்டச்சாமலே இருப்பதுதான் பெரிய தவறு..

நம் பின்னூட்டங்களை மட்டுமே எதிர்பார்த்து
பொன்னான நேரமிட்டு நம் நண்பர்கள் தரும் ஆக்கங்களுக்கு
வேறென்ன நாம் செய்ய கைம்மாறு???


நன்றி..

நாகரா
17-02-2008, 07:30 AM
தாமரை, யவனிகா, இளசு உமது பின்னூட்டங்களுக்கு நன்றி.

இன்னும் சில:

தமிழ் மெய்யைக்
குத்திப் புண்ணாக்கும்
வன்செயல்

பிழையின் றெழுதுக தமிழை அதனால்
தழைக்கும் தமிழும் உவந்து.

அமுதாம் தமிழில் ஒருசிறு பிழையும்
அமுதைக் கெடுக்கும் நஞ்சு

விழைந்தே கற்க தமிழைக் கற்றபின்
பிழையின் றெழுதுக தமிழ்

அனுராகவன்
23-02-2008, 03:12 AM
தமிழை
உள்ளிருந்தே கொல்லும்
உட்பகை

தமிழமுதைக்
கெடுக்கும்
நஞ்சு

நன்றி நாகரா!!
எனக்கு புரியவில்லை
விளக்கம் தர வேண்டுகிறேன்..

நாகரா
23-02-2008, 04:34 AM
நாம் செய்யும்
நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால்
நம்மால் எளிதில் தவிர்க்க முடிந்த
சிறு சிறு பிழைகளால்
நற்றமிழின் அழகு கெடுவதைச் சுட்டவே
இந்த சுடு வரிகள்.
புரிந்ததா அனு.
விரைந்தே புரிக!
பிழைகள் புரியாமல் விடுக!
நம் தாயாம் நற்றமிழுக்கு நலங்கள் பல புரிக!
வளர்க!
வருக!
நித்தானந்தத்தோடு கூடிய வளமான வாழ்வை எமக்கு அருள்க!
அருட்தாயின் நல்ல மகளே! செல்ல மகளே! அனு.
மெய் விளக்கமே உருவாம் அருட்தாயின் நல்வடிவாம் நீவிரே
எம்மை விளக்கங் கேட்டால்
எம்மை விளக்குவார் யாரோ!
விளங்கி நின்றே
எம்மை விளக்குக!
எம் பிழை சுட்டித் திருத்துக!
சுட்டியும் திருந்தாத போது
எம்மைச் சுட்டே திருத்துக!
அருட்தாயின் நல்ல மகளே! செல்ல மகளே! அனு.
விளக்கங் கேட்டு
எம்ம்ம்ம்ம்ம்ம்ம்மை இவ்வாறு ஒரு கவி புரியச் செய்தீர்.
நன்றி பல உமக்கே அனு.