PDA

View Full Version : ரசிக்கிறேன் இறையே!!



அனுராகவன்
16-02-2008, 11:44 AM
ரசிக்கிறேன் இறையே

ஒவ்வொரு
நாளும்,
தூங்கும் போது
இறக்கிறோமே;

விழிக்கும் போது
பிறக்கிறோமே;

அப்படியே என்றாலும்
ஒவ்வொரு
மூச்சை இழுக்கும் போதும்
பிறந்து
வெளிவிடும் போதும்
இறக்கிறோமே
இது விந்தை அல்லவா?!!!

என்னே!! நம் இறைச் செயல்
விந்தை
மகா விந்தை..

-அனு

ஜெயாஸ்தா
16-02-2008, 12:50 PM
தூக்கம் தற்காலிக மரணம்
மரணத்தின் முன்னோட்டம்....!
நல்ல சிந்தனை நண்பரே..!

(சிறு சிறு பிழைகள் களைதல் நலம்)

அமரன்
16-02-2008, 05:13 PM
உயிரியக்கமே விந்தைதான்.
ஆன்மீகமும் விஞ்ஞானமும்
சொந்தங்கொண்டாடும் விந்தைக்கு
வித்திட்டது இவ்விந்தை.

பாராட்டுகள் அனு.

யவனிகா
16-02-2008, 05:40 PM
ஒவ்வொரு நாளும்
என் அஸ்தமனத்திற்கு
நட்சத்திரங்கள்
காவல் நிற்கின்றன...
எந்த ஒரு மூச்சில்
என்னை இழக்கிறேன்...
இன்று வரை
தெரியவில்லை...

விடியல் தரும் மூச்சும்
கண்விழிப்பதற்குள்
நாசியின்று வெளியேறி
கண்ணாமூச்சி ஆடுகிறது...

கட்டியம் கூற.. சூரியன்
கண் விழித்து விடுகிறான்

இந்த இரண்டு மூச்சையும்
கட்டுக்குள் கொண்டு வரும் நாள்
என் சூரியனும், விண்மீனும்
ஒருங்கே தோன்றக்கூடும்...
என் வானம் விடுதலை பெற்றதாகும்...

ஜெகதீசன்
16-02-2008, 06:34 PM
ரசிக்கிறேன் இறையே

ஒவ்வொரு
நாளும்,
தூங்கும் போது
இறக்கிறோமே;

விழிக்கும் போது
பிறக்கிறோமே;

அப்படியே என்றாலும்
ஒவ்வொரு
மூச்சு விடும் போதும்
பிறந்து
வெளிவிடும் போதும்
இறக்கிறோமே
இது விந்தை அல்லவா?!!!

என்னே!! நம் இறைச் செயல்
விந்தை
மகா விந்தை..

-அனு

அனு
இறைவனின் பல விந்தைகளில் இதுவும் ஓன்று. அவ்வளவுதான்.
எனக்கு மஹாவிந்தையால்லாம் தெரியல............:mini023:

.............
அப்படியே என்றாலும்
ஒவ்வொரு

மூச்சு விடும் போதும்:fragend005:
பிறந்து

வெளிவிடும் போதும்:fragend005:
இறக்கிறோமே

தங்களின் இரண்டு சிவப்பு நிற வரிகலுக்கும்
அர்த்தம் விளங்கவில்லை. மூச்சு விடுவது, மூச்சு வெளிவிடுவது

இரண்டுக்கும் ஓரே அர்த்தம்தான் என நினைக்கிறேன் தாங்கள் எப்படி?:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அனுராகவன்
16-02-2008, 10:59 PM
தூக்கம் தற்காலிக மரணம்
மரணத்தின் முன்னோட்டம்....!
நல்ல சிந்தனை நண்பரே..!

(சிறு சிறு பிழைகள் களைதல் நலம்)

நன்றி ஜெயாஸ்தா...
மரணம் என்பது நாம் வாழும் வாழ்க்கை முழுதும் சாகும்போது கஸ்டமில்லா நிலை வர வேண்டும்..
அதற்குதான் ஒவ்வொரு நொடியும் பிறந்தும்,இறந்தும் நமக்கு இந்த மகா சக்தி நினைவுப்படுத்திகிறது..
என் வாழ்த்துக்கள்..!!

அனுராகவன்
16-02-2008, 11:02 PM
உயிரியக்கமே விந்தைதான்.
ஆன்மீகமும் விஞ்ஞானமும்
சொந்தங்கொண்டாடும் விந்தைக்கு
வித்திட்டது இவ்விந்தை.

பாராட்டுகள் அனு.

நன்றி அமரன் அவர்களே!!
உயிரின் ஒவ்வொரு அசைவையும் ஒரு சக்தி இயக்குகிறது..
நமது வாழ்க்கையில் கொஞ்சம் ஆன்மிகமும் இருந்தால் கவலை,கஸ்டம்.துன்பம் என்ற நிலைகள் வரவே வராது..
ம்ம் என் வாழ்த்துக்கள்!!

அனுராகவன்
16-02-2008, 11:07 PM
ஒவ்வொரு நாளும்
என் அஸ்தமனத்திற்கு
நட்சத்திரங்கள்
காவல் நிற்கின்றன...
எந்த ஒரு மூச்சில்
என்னை இழக்கிறேன்...
இன்று வரை
தெரியவில்லை...

விடியல் தரும் மூச்சும்
கண்விழிப்பதற்குள்
நாசியின்று வெளியேறி
கண்ணாமூச்சி ஆடுகிறது...

கட்டியம் கூற.. சூரியன்
கண் விழித்து விடுகிறான்

இந்த இரண்டு மூச்சையும்
கட்டுக்குள் கொண்டு வரும் நாள்
என் சூரியனும், விண்மீனும்
ஒருங்கே தோன்றக்கூடும்...
என் வானம் விடுதலை பெற்றதாகும்...

நன்றி தோழியே..
நல்ல ஒரு பின்னோட்ட கவி..
நாம் ஒருவெளை மூச்சை மறந்தால் நீங்கள் சொல்வது சாத்தியமே.
மூச்சை விடுவதும் ஒரு கலையே..
மூச்சுக்கு பல ஆசனங்கள் உள்ளன..அதனால் நாம் உயிர் வாழ்கிறோம் என்பதை நினைவுப்படுத்டுவதோ இந்த மூச்சு தானே..
ம்ம் என் வாழ்த்துக்கள்..!!

அனுராகவன்
16-02-2008, 11:17 PM
அனு
இறைவனின் பல விந்தைகளில் இதுவும் ஓன்று. அவ்வளவுதான்.
எனக்கு மஹாவிந்தையால்லாம் தெரியல............:mini023:

என்ன ஜெகதீஸ் அப்படி சொல்லிவிட்டீர்கள்.
ஒரு மூச்சு போனவுடன் இந்த உடம்புக்கு என்ன பெயர் :: பிணம் தானே..
மூச்சு இருக்கும் போது இன்னார் மகன்,
அவன் பெயர் என்பது...
இப்படி தான் அழைப்பார்கள்..
நன்கு ஆழ்ந்து உள்ளே சென்றால் தான் அதன் உள் ஆழம் ,அர்த்தம் புரியும்..
அதை விடுத்து கரையிலே நின்று ஆற்றின் ஆழத்தை காணுவது போல..
ம்ம் நான் சொல்வது புரியும் போல..
.............

அப்படியே என்றாலும்
ஒவ்வொரு

மூச்சு விடும் போதும்:fragend005:
பிறந்து

வெளிவிடும் போதும்:fragend005:
இறக்கிறோமே

தங்களின் இரண்டு சிவப்பு நிற வரிகலுக்கும்
அர்த்தம் விளங்கவில்லை. மூச்சு விடுவது, மூச்சு வெளிவிடுவது

இரண்டுக்கும் ஓரே அர்த்தம்தான் என நினைக்கிறேன் தாங்கள் எப்படி?:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

ஆமாம் ஜெகதேஸ்..
ஒரே அர்த்தம்தான்..
மூச்சை விடுவது என்பது உடனே மூச்சை நெருத்தி இறப்பது போல
மூச்சை வெளியிடுவது உடனுக்குடன் தானே உள்ளிழுத்து பின் விடுவது..
ம்ம் என் நன்றி உங்கள் தமிழ் ஞானம் புல்லறிக்கிது..

ஜெகதீசன்
17-02-2008, 06:00 PM
என்ன ஜெகதீஸ் அப்படி சொல்லிவிட்டீர்கள்.
ஒரு மூச்சு போனவுடன் இந்த உடம்புக்கு என்ன பெயர் :: பிணம் தானே..
மூச்சு இருக்கும் போது இன்னார் மகன்,
அவன் பெயர் என்பது...
இப்படி தான் அழைப்பார்கள்..
நன்கு ஆழ்ந்து உள்ளே சென்றால் தான் அதன் உள் ஆழம் ,அர்த்தம் புரியும்..
அதை விடுத்து கரையிலே நின்று ஆற்றின் ஆழத்தை காணுவது போல..
ம்ம் நான் சொல்வது புரியும் போல..
.............


ஆமாம் ஜெகதேஸ்..
ஒரே அர்த்தம்தான்..
மூச்சை விடுவது என்பது உடனே மூச்சை நெருத்தி இறப்பது போல
மூச்சை வெளியிடுவது உடனுக்குடன் தானே உள்ளிழுத்து பின் விடுவது..
ம்ம் என் நன்றி உங்கள் தமிழ் ஞானம் புல்லறிக்கிது..

அனு
........
அப்படியே என்றாலும்
ஒவ்வொரு
மூச்சை இழுக்கும் போதும்
பிறந்து
வெளிவிடும் போதும்
இறக்கிறோமே
இது விந்தை அல்லவா?!!!


வார்த்தைகளை புரியம்படி திருத்தியதற்கு நன்றி.

ஒவ்வொரு
நாளும்,
தூங்கும் போது
இறக்கிறோமே;

விழிக்கும் போது
பிறக்கிறோமே.


செயற்கையாக முடியாத செயல்களை இறைவனின் மஹா விந்தை எனலாம்.
உதாரணத்திற்கு இயற்கையை இறைவனின் மஹா விந்தை எனலாம், ஏனெனில் இயற்கையை மனிதனால்
கடடுப்படுத்த முடியாது. ஆனால் ஓரு மனிதனுக்கு செயற்கையாக தூக்கத்தை வரவழைக்கலாம் மற்றும் செயற்கையாக
அவனை தூக்கத்திருந்து எழுப்பலாம். மேலும் ஓரு மனிதனுக்கு செயற்கையாக சுவாசம்கூட -மூச்சு-கொடுக்க முடியும்
புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.சுருக்மாக கூறின். இதயத்துடிப்பை செயற்கையாக ஏற்படுத்த முடியாது.

இடைவிடாது துடிக்கும்
இதயங்கள் :lachen001:
இறைவனின் மஹாவிந்தை.

அனு

முடிவா இப்ப உங்க கவிதையில இருந்து என்ன விளங்குது
தெரியுமா ஓரு மனுஸன் தினம் இரவுல செத்துப்போய் காலையில திரும்பவும்
பொறக்குறான் அப்பறம் மூச்சு உள்ளே இழுக்கும் போது பிறந்து மூச்ச வெளிய விடுறப்ப
திரும்ப செத்துப்போறான்.அப்படின்னா அந்த மனுஸன் இரவுல மூச்சே....உள்ள இழுக்குறது
இல்லை(யா) ? இன்னொரு கருத்து ஓரு மனுஸன் தினசரி மூச்ச இழுத்து இழுத்து விடுறதால செத்து செத்து பிழைக்கிறான்.
அப்படின்னு சொல்லறீங்க ம்ம்.......சரி:icon_rollout::icon_rollout::icon_rollout:

அதை விடுத்து கரையிலே நின்று ஆற்றின் ஆழத்தை காணுவது போல..
ம்ம் நான் சொல்வது புரியும் போல..[/b]
.............

அனுவக்கா:icon_rollout:

கடலானாலும் நதியானாலும்
கரையில்லையெனில் அழகில்லை.
கடலாழம் கொண்ட தம்
கவிதைக்கும் நான்
கரையானால் சந்தோஷமே.

பாராட்டுக்கள்.
வாழ்க வளமுடன்:icon_b:

மனோஜ்
18-02-2008, 08:12 AM
இறைவனின் விந்தை
சொல்லி மாலாது நமது உடலிலும் உலகிலும் அதை
விலக்கும் கவிதை வரிகள் அருமை அனுஅக்கா

அனுராகவன்
19-02-2008, 02:41 PM
மரணம் என்பது ஒரு நல்ல தியானமும் கூட..
அது கடைப்பிடிக்க மக்கள் நிறைய உள்ளனர்..
அதில் நீங்களும் ஆகலாம்...
என் நன்றி அனைத்து நண்பருக்கும்..
-அனு

அனுராகவன்
19-02-2008, 02:45 PM
இறைவனின் விந்தை
சொல்லி மாலாது நமது உடலிலும் உலகிலும் அதை
விலக்கும் கவிதை வரிகள் அருமை அனுஅக்கா

ஓ நன்றி மனோஜ்!!
ம்ம் தொடர்ந்து வருக!!

அனுராகவன்
19-02-2008, 02:49 PM
கடலானாலும் நதியானாலும்
கரையில்லையெனில் அழகில்லை.
கடலாழம் கொண்ட தம்
கவிதைக்கும் நான்
கரையானால் சந்தோஷமே.

ஓ நன்றி ஜெகதீசா..
ம்ம் என் நன்றி

ஜெகதீசன்
20-02-2008, 09:49 AM
சரிங்க அனு அக்கா

M.Jagadeesan
20-01-2013, 03:01 PM
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

என்று வள்ளுவன் அன்றே சொல்லிவிட்டானே !