PDA

View Full Version : புன்னகை செய்



ஆர்.ஈஸ்வரன்
16-02-2008, 08:51 AM
அதிக ஆசையை
அழித்து விடு
புன்னகை
ஆரம்பமாகட்டும்

உன் மனத்தை
கட்டுப்படுத்தி வா
மகிழ்ச்சி
தாராளமாயிருக்கட்டும்

உன்னிடம் இருப்பவைகளை
அனுபவிக்கும் மனநிலையை
வளர்த்துக் கொள்

உன்னுடைய சந்தோசத்தை
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்
புன்னகை இரட்டிப்பாகும்.

அனுராகவன்
16-02-2008, 09:20 AM
நன்றி ஆர்.ஸ்.ஈஸ்வரன் அவர்களே...
உங்கள் புன்னகைக்கு நாங்கள் பொறுப்பு
எங்கள் புன்னகைக்கு நீங்கள் பொறுப்பு
அதனால் நாம் அனைவருக்கும் வேண்டும் ஒரு நகை
அது தான் புன்னகை..
என் நன்றி..
தொடர்க,,
பல தருக..

வசீகரன்
17-02-2008, 12:23 PM
புன்னகைத்தபோது என்னை அழகாய் உணர்ந்தேன்....

புன்னகைத்தபோது என்னை சுற்றியிருந்த புவியை
அழகாய் உணர்ந்தேன்.....


சின்னப்புன்னகை..... எண்ணில் கொண்டேன்..... எண்ணம்தன்னில்
வண்ணம் கண்டேன்.....

ஆர்ப்பரித்த ஆற்றாமையிணூடே ஒரு மெல்லிய புன்னகை கொண்டேன்....
மென்மைதனை மேனி தழுவ கண்டேன்.....

புன்னகைதன்னில் விளைந்து நின்றேன்.....
அழகுப்புனர்வு தன்னில் திளைந்து நின்றேன்.....!

நல்ல கவிதை நண்பரே..... தொடர்ந்து எழுதுங்கள்.....!

அமரன்
17-02-2008, 07:44 PM
அகக்கட்டுப்பாட்டின் பெறுதி
முகத்தின் பிரகாச தேசஜ்..!
முகமே புன்னைக்கும்போது
உதட்டுக்கு எதுக்கு சிரிப்பு....!

பாராட்டுகள் ஈஸ்வரன். தொடருங்கள் வளம்பெறுங்கள்.

ஆதி
18-02-2008, 01:36 AM
அதிக ஆசையை
அழித்து விடு
புன்னகை
ஆரம்பமாகட்டும்


ஆசையை விடு
அத்தனை துன்பமும்
உன்னை விடும்
புத்தன் பொன்மொழி..

ஆசைப் படுங்கள்
அத்தனை இன்பமும்
உங்கள் கைப்படும்
உலகவியல் வாய்மொழி..



உன் மனத்தை
கட்டுப்படுத்தி வா
மகிழ்ச்சி
தாராளமாயிருக்கட்டும்.

மனதை கட்டுப்படுத்து
மான்புகள் கட்டுப்படும்

மனதின் கட்டவிழ்த்துவிடு
மாயைகள் கட்டவிந்துவிடும்



உன்னிடம் இருப்பவைகளை
அனுபவிக்கும் மனநிலையை
வளர்த்துக் கொள்

திருப்தி கொள்
உள்ளவை கொண்டு

தேடிப் போ
திருப்தி இன்றி



உன்னுடைய சந்தோசத்தை
மற்றவர்களோடு பகிர்ந்து கொள்
புன்னகை இரட்டிப்பாகும்.

உன்றன் மகிழ்ச்சியை
உலகினுக்கு ஈ

இன்பதில் அல்ல
பிறர் துன்பதில்
துணை இரு..

மெய்ஞானமும் உய்ஞானமும் வேறுப்பாட்டுக் கருத்துக்கள் சொல்கிறது..

உங்கள் கவிதை மெய்ஞானம் பேசினாலும்.. வாழ்வியல் ஞானத்திற்கு உகந்த்தாய் இருந்தாலும் உலகத்தவர் அனிவராலும் கடைப்பிடிக்க வல்லது அல்ல..

ஆசை இல்லை எனில் அனைத்துயிரும் இல்லாமல் போகும்..

ஞானக்கவிக்கு வாழ்த்துக்கள் ஆ.ஈஸ்வரன்..

அன்புடன் ஆதி

இளசு
18-02-2008, 04:32 AM
உள்ளிட்ட செய்தி அருமை.
வாழ்த்துகள் ஈஸ்வரன்!

தொடர்ந்து பங்காற்றுங்கள் உற்சாகமாய்...! என் ஊக்கங்கள்!!

sarathecreator
18-02-2008, 05:04 AM
ஆசையை அழித்துவிட நான் முனிவனில்லை
மனதைக் கட்டுப்படுத்த நான் காந்தியில்லை
இருப்பதை வைத்துத் திருப்திப்பட அந்த பில்கேட்ஸ் கூட
இங்கே தயாராக இல்லை
சந்தோசத்தைப் பிறருடன் பங்குகொள்கிறேன் என்கிற
பேர்வழியில் வெள்ளி இரவுகளில் மப்பேற்றி மல்லாருவதற்கும்
நான் இங்கே தயாராக இல்லவேயில்லை
அத்தனைக்கும் ஆசைப்பட்டு அழகான வாழ்வை ரசித்து
அளவில்லாத மகிழ்ச்சியை அனுபவித்து
என் மகிழ்ச்சியைப் பிறருடன் பகிர்ந்து (தண்ணி, தம்,இன்ன பிற நீங்கலாக),
பிறர் துக்கத்தை நான் பகிர்ந்து
இருக்கும் வரை இன்பம் நுகர்ந்து
கணிணியுடனும் கட்டியவளுடனும் காதலில் திளைத்து
கடைசிவரை கடவுள் துதி பாடி கட்டையில் போகும்போது
தனியாகவே போக இறையை வேண்டுகிறேன்.
இதில் எது நடந்தாலும் / நடவாமல் போனாலும் எனக்குச் சம்மதமே
நல்லதுதான் நடக்கும் என்று நம்பியே இருக்கிறேன்.
கெட்டது நடந்தாலும் அதையே ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை
அதன் போக்கில் வாழ்ந்து மடிகிறேன்.