PDA

View Full Version : அவளிடம் கேட்டுவிட்டேன்!!!

aren
15-02-2008, 11:00 AM
அவளிடம் கேட்டுவிட்டேன்!!!

தெரியவில்லை
அவள் சரி என்று சொல்வாளா
என்று தெரியவில்லை!!!

என்னைப் எப்பொழுது பார்த்தாலும்
சிரித்தமுகத்துடன் பேசுகிறாள்!!!

என்னை அன்னியனாக நினைக்காமல்
அனைத்து விஷயங்களையும்
ஒளிவு மறைவில்லாமல்
சொல்கிறாள்!!!

என்மேல் மிகவும் பாசமாக
இருக்கிறாள்!!!

என் குடும்பத்தைப் பற்றி
தம்பி தங்கைகளைப் பற்றி
அக்கறையாக
விசாரிக்கிறாள்!!!

என் மீது நிச்சயம் அன்பு
வைத்திருப்பாள்
என்றே என் நெஞ்சு சொல்லியது!!!

இருந்தாலும் ஒரு பயம்
என்ன சொல்வாளோ
என்ற பயம்
பேசமுடியாமல்
வாயை அடைத்தது!!!

துணிந்துவிட்டேன்
அவளிடம் கேட்டேவிட்டேன்
கைமாத்தா ஒரு 1000 ரூபாய்!!!

அன்புரசிகன்
15-02-2008, 11:15 AM
கிடைத்ததா கைமாத்தா? அல்லது கைமாவா????

praveen
15-02-2008, 11:23 AM
நட்பை கரண்சியாக மாற்ற பார்க்கிறார். சற்று தாமதமானால் நட்பு முறிந்து விடும். ஒருவேளை அவள் இவன் வேறு கேட்பான் என்று நினைத்து காத்திருக்கையில் இதைக்கேட்டால் என்ன நினைத்திருப்பாள்.

தேறாத கேஸ் என்றா? :)

aren
15-02-2008, 11:24 AM
கிடைத்ததா கைமாத்தா? அல்லது கைமாவா????

நன்றி அன்பு.

ஒரு நகைச்சுவையாக இருக்கட்டுமே என்றுதான் அப்படி எழுதினேன். கைமாத்தா கைமாவா என்று தெரியவில்லை.

aren
15-02-2008, 11:26 AM
நட்பை கரண்சியாக மாற்ற பார்க்கிறார். சற்று தாமதமானால் நட்பு முறிந்து விடும். ஒருவேளை அவள் இவன் வேறு கேட்பான் என்று நினைத்து காத்திருக்கையில் இதைக்கேட்டால் என்ன நினைத்திருப்பாள்.

தேறாத கேஸ் என்றா? :)

நிச்சயம் இது சுயநலம்தான் சந்தேகமேயில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் பல தடவைகள் நடக்கிறது. நட்பையும் இழக்க விரும்பாமல் பணம் கொடுக்கவும் வழியில்லாமல் பரிதவிக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன். எனக்கே பல தடவை இப்படி நடந்திருக்கிறது. ஆனால் பணம் கொடுக்கும்பொழுது இந்தப்பணம் எள்ளுதான் என்று நினைத்துக்கொண்டுதான் பணம்கொடுக்கிறேன்.

அன்புரசிகன்
15-02-2008, 11:29 AM
நன்றி அன்பு.

ஒரு நகைச்சுவையாக இருக்கட்டுமே என்றுதான் அப்படி எழுதினேன். கைமாத்தா கைமாவா என்று தெரியவில்லை.

உண்மையில் ரசித்தேன்... உங்கள் கவிதையை..... இறுதி வரியை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிரவீன் கூறியது போல் உண்மையாக அவ்வாறு கேட்டால்..... அந்த பெண்ணின் நிலை... ஃப்பூ.... தேறாத கேஸ்..... இதுவாகத்தான் இருக்கும்.

அமரன்
15-02-2008, 11:41 AM
என்னன்னமோ எண்ணங்கள் ஆரம்பத்திலிருந்து..
உதட்டோரம் புன்னகை இறுதியில்.. பாராட்டுகள்.
பல சமயங்களில் பார்த்த அனுபவம்.
அண்மையில் வெளிவந்த பிடிச்சிருக்கு படத்திலும் ஒரு காட்சி..
நாயகனிடம் தயங்கி தயங்கி கடிதம் கொடுப்பாள் நாயகி. திறந்து பார்த்தால் பயமாக இருக்கிறது தலையை ஸ்கேன் பண்ணிப்பாருங்கள் என்றிருக்கும்.

aren
15-02-2008, 11:56 AM
உண்மையில் ரசித்தேன்... உங்கள் கவிதையை..... இறுதி வரியை படித்தவுடன் சிரிப்பை அடக்க முடியவில்லை. பிரவீன் கூறியது போல் உண்மையாக அவ்வாறு கேட்டால்..... அந்த பெண்ணின் நிலை... ஃப்பூ.... தேறாத கேஸ்..... இதுவாகத்தான் இருக்கும்.

நன்றி அன்பு. இது தேறாத கேஸ் என்று சொல்வதைவிட நாட்டில் நடக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.

நீங்கள் ரசித்ததுகண்டு மிக்க மகிழ்ச்சி.

aren
15-02-2008, 11:58 AM
என்னன்னமோ எண்ணங்கள் ஆரம்பத்திலிருந்து..
உதட்டோரம் புன்னகை இறுதியில்.. பாராட்டுகள்.
பல சமயங்களில் பார்த்த அனுபவம்.
அண்மையில் வெளிவந்த பிடிச்சிருக்கு படத்திலும் ஒரு காட்சி..
நாயகனிடம் தயங்கி தயங்கி கடிதம் கொடுப்பாள் நாயகி. திறந்து பார்த்தால் பயமாக இருக்கிறது தலையை ஸ்கேன் பண்ணிப்பாருங்கள் என்றிருக்கும்.

நன்றி அமரன். பிடிச்சிருக்கு படம் இன்னும் பார்க்கவில்லை. நாயகிக்கு பயமாக இருக்கிறதா அல்லது நாயகருக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பயமா?

உங்கள் உதட்டோரத்தில் புன்னகை வந்தது கண்டு சந்தோஷமே.

தாமரை
15-02-2008, 11:59 AM
கைமாத்து தானே கேட்டீங்க..
கைமாறி இருக்குமே
ஆரென்..

aren
15-02-2008, 12:03 PM
கைமாத்து தானே கேட்டீங்க..
கைமாறி இருக்குமே
ஆரென்..

நன்றி தாமரை.

நீங்கள் ஆளைச் சொல்கிறீர்களா இல்லை பணத்தைச் சொல்கிறீர்களா

ஆதி
15-02-2008, 12:04 PM
கடைசி வரிகள்
இதழ்களில் முட்டி
மலர்த்துவிட்டு போகிறது
ஆரென் அண்ணா..

பாராட்டுகள் அழகிய கவிதைக்கும் உங்களுக்கும்..

அன்புடன் ஆதி

தாமரை
15-02-2008, 12:06 PM
நன்றி தாமரை.

நீங்கள் ஆளைச் சொல்கிறீர்களா இல்லை பணத்தைச் சொல்கிறீர்களா
அப்ப கடன் கிடைச்சுடுச்சா?

யவனிகா
15-02-2008, 12:08 PM
ஆரென் அண்ணா...
கடன் அன்பை முறிக்கும்
உங்களுக்குத் தெரியாததா?

மதி
15-02-2008, 12:08 PM
சூப்பர் ஆரென்..
நல்ல மொக்க கவிதை..

aren
15-02-2008, 12:08 PM
கடைசி வரிகள்
இதழ்களில் முட்டி
மலர்த்துவிட்டு போகிறது
ஆரென் அண்ணா..

பாராட்டுகள் அழகிய கவிதைக்கும் உங்களுக்கும்..

அன்புடன் ஆதி

நன்றி ஆதி. உங்கள் வாழ்த்து என்னை மேலும் எழுதவைக்கும் என்பது நிச்சயம்.

aren
15-02-2008, 12:09 PM
அப்ப கடன் கிடைச்சுடுச்சா?

கடனும் கிடைத்து ஆளும் கிடைதால் எப்படியிருக்கும்.

தாமரை
15-02-2008, 12:10 PM
கடனும் கிடைத்து ஆளும் கிடைதால் எப்படியிருக்கும்.

கட்டிகிட்டு இருப்பீங்க (வட்டி)

aren
15-02-2008, 12:11 PM
ஆரென் அண்ணா...
கடன் அன்பை முறிக்கும்
உங்களுக்குத் தெரியாததா?

கடன் உறவை வளர்க்கும் என்று உங்களுக்குத் தெரியாதா. வேறு வழியில்லாமல் அடிக்கடி பார்த்துக்கொள்ளவேண்டுமே. அதன் மூலம் உறவு மலராதா என்ற நப்பாசைதான்.

கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கட்டுமே என்றுதான் இப்படி எழுதினேன்.

aren
15-02-2008, 12:11 PM
சூப்பர் ஆரென்..
நல்ல மொக்க கவிதை..

நன்றி மதி. கொஞ்சம் இங்கேயும் வந்து மொக்க போடலோமேன்னுதான் எழுதினேன்.

aren
15-02-2008, 12:12 PM
கட்டிகிட்டு இருப்பீங்க (வட்டி)

முதலும் கொடுத்து வட்டியும் கொடுத்தாலும் இன்னும் இருக்கிறது பாக்கி. இதுதான் வாழ்க்கை.

தாமரை
15-02-2008, 12:14 PM
முதலும் கொடுத்து வட்டியும் கொடுத்தாலும் இன்னும் இருக்கிறது பாக்கி. இதுதான் வாழ்க்கை.

முத(ல்)லயே கொடுத்தா பாக்கி இருக்கத்தான் செய்யும்..

aren
15-02-2008, 12:18 PM
முத(ல்)லயே கொடுத்தா பாக்கி இருக்கத்தான் செய்யும்..

அப்போ பாக்கியையும் கொடுத்துவிடவா

தாமரை
15-02-2008, 12:19 PM
அப்போ பாக்கியையும் கொடுத்துவிடவா

அன்பாக்கி கொடுங்கள்

aren
15-02-2008, 12:22 PM
அன்பாக்கி கொடுத்தால்
பணமாக கொடு என்கிறாளே

அன்புரசிகன்
15-02-2008, 06:28 PM
கடன் உறவை வளர்க்கும் என்று உங்களுக்குத் தெரியாதா. வேறு வழியில்லாமல் அடிக்கடி பார்த்துக்கொள்ளவேண்டுமே. அதன் மூலம் உறவு மலராதா என்ற நப்பாசைதான்.

புதுசா இருக்கு....

எனக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் கடன் தாங்க... வாழ்நாள் முழுவதும் உங்களுடன் உறவை வளர்க்க ஆசை... :D

இளசு
15-02-2008, 06:29 PM
ஓ ஹென்றி பாணிக் கதைகள் படித்ததுண்டு..
இறுதி வரியில் எதிர்பாராத் திருப்பம் - சரேல் என இறங்கும் மனதில்..

இங்கே அன்பின் ஆரெனின் கவிதையிலும் இறுதி வரித் திருப்பம்..

ஒரு பக்கம் பார்த்தால் நல்ல நகைச்சுவை..
மறுபக்கம் பார்த்தால் வாழ்க்கை நசுக்கும் பலர் நிலை..

நகைச்சுவைக்கும் அவலத்துக்கும் பலநேரம் இடைவெளி - ஒரு நூலிழை!

வாழ்த்துகள் ஆரென்!

sarathecreator
16-02-2008, 07:53 AM
இறுதி வரிகளில் திருப்பம் அதுவும்
நாம் ஒன்று நினைத்திருக்க விதியொன்று நினைத்த திருப்பம்

அனுராகவன்
16-02-2008, 09:38 AM
அன்பாக்கி கொடுத்தால்
பணமாக கொடு என்கிறாளே

வம்பாகி போகாமல் இருக்க (மனைவிக்கு)
பிடித்தது ஏதேனும் கொடுங்கள்..
அப்பறம் பாரும்..

பூஜா
20-02-2008, 11:27 AM
வாழ்வின் நிதர்சனம் இதுதான். நாம் ஒன்று நினைக்க அது வேறொன்றாய் முடியும், அதுபோல் தான் கவிதையின் முடிவும். நாம் காதலை நினைத்துப் படிக்க கடைசியில் கடனில் போய் முடிகின்றது,
படித்து ரசிக்கமுடிந்த கவிதை.

பூஜா

ஓவியன்
20-02-2008, 01:27 PM
சில வேளைகளில் இப்படித்தான் கடன் வாங்குவது கூட காதலை யாசிப்பது போல கடுமையாகி விடுகிறது....

ஆனால் நன்கு பழகியவரிடம் இலகுவில் கடன் கேட்டு விடலாம்
ஆனால்
நன்கு பழகியவரிடம் அவ்வாறே காதலை யாசிக்க முடியுமா.....???

aren
20-02-2008, 03:37 PM
புதுசா இருக்கு....

எனக்கு 10 இலட்சம் அமெரிக்க டொலர் கடன் தாங்க... வாழ்நாள் முழுவதும் உங்களுடன் உறவை வளர்க்க ஆசை... :D

அப்படியா, வாங்க ஒரு பேப்பரில் எழுதித்தருகிறேன், வாங்கிக்கொள்ளுங்கள்.

aren
20-02-2008, 03:38 PM
ஓ ஹென்றி பாணிக் கதைகள் படித்ததுண்டு..
இறுதி வரியில் எதிர்பாராத் திருப்பம் - சரேல் என இறங்கும் மனதில்..

இங்கே அன்பின் ஆரெனின் கவிதையிலும் இறுதி வரித் திருப்பம்..

ஒரு பக்கம் பார்த்தால் நல்ல நகைச்சுவை..
மறுபக்கம் பார்த்தால் வாழ்க்கை நசுக்கும் பலர் நிலை..

நகைச்சுவைக்கும் அவலத்துக்கும் பலநேரம் இடைவெளி - ஒரு நூலிழை!

வாழ்த்துகள் ஆரென்!

நன்றி இளசு. ஒரு நகைச்சுவையாக இருக்கட்டும் என்று அப்படி முடித்தேன்.

aren
20-02-2008, 03:39 PM
இறுதி வரிகளில் திருப்பம் அதுவும்
நாம் ஒன்று நினைத்திருக்க விதியொன்று நினைத்த திருப்பம்

நன்றி சரத். ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான்.

aren
20-02-2008, 03:40 PM
வம்பாகி போகாமல் இருக்க (மனைவிக்கு)
பிடித்தது ஏதேனும் கொடுங்கள்..
அப்பறம் பாரும்..

எனக்கு மிகவும் பிடித்தது என்னைத்தான். என்னையே என் மனைவிக்கு கொடுத்திருக்கிறேனே, அதைவிட அவர்களுக்கு என்ன வேண்டும்

aren
20-02-2008, 03:41 PM
வாழ்வின் நிதர்சனம் இதுதான். நாம் ஒன்று நினைக்க அது வேறொன்றாய் முடியும், அதுபோல் தான் கவிதையின் முடிவும். நாம் காதலை நினைத்துப் படிக்க கடைசியில் கடனில் போய் முடிகின்றது,
படித்து ரசிக்கமுடிந்த கவிதை.

பூஜா

நன்றி பூஜா. ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு அப்படியே அதற்கு முரணாக சொல்லவேண்டும் என்று நினைத்தேன்.

aren
20-02-2008, 03:42 PM
சில வேளைகளில் இப்படித்தான் கடன் வாங்குவது கூட காதலை யாசிப்பது போல கடுமையாகி விடுகிறது....

ஆனால் நன்கு பழகியவரிடம் இலகுவில் கடன் கேட்டு விடலாம்
ஆனால்
நன்கு பழகியவரிடம் அவ்வாறே காதலை யாசிக்க முடியுமா.....???

நீங்கள் சொல்வது எனக்குத் தெரியாது. வேண்டுமானால் நான் முயற்சித்துப் பார்க்கிறேன்.

இதற்கு நான்கு ஸ்டாரை யாரோ புண்ணியவான் கொடுத்திருக்கிறார், கவனித்தீர்களா?

அறிஞர்
20-02-2008, 05:03 PM
ஆரம்பித்து.. கொண்டு சென்றது ஒரு பாணியில்
முடித்தது இன்னொரு பாணியில்
இது தான் ஆரென் பாணியா.....
அருமை ஆரென்.

அக்னி
20-02-2008, 05:17 PM
இவ்வகைக் கவிதைகளின் ரசிகன் நான்.
மனதை மிகவும் கவர்ந்தது. இது போல இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

aren
20-02-2008, 11:27 PM
ஆரம்பித்து.. கொண்டு சென்றது ஒரு பாணியில்
முடித்தது இன்னொரு பாணியில்
இது தான் ஆரென் பாணியா.....
அருமை ஆரென்.

நன்றி அறிஞரே.

அதானே, இப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசியில் கவிழ்த்துவிடுவார்களே, அதுமாதிரிதான் இதுவும்.

aren
20-02-2008, 11:27 PM
இவ்வகைக் கவிதைகளின் ரசிகன் நான்.
மனதை மிகவும் கவர்ந்தது. இது போல இன்னும் எதிர்பார்க்கின்றேன்.

பாராட்டுக்கள் ஆரென் அண்ணா...

நன்றி அக்னி. இன்னும் உங்களுக்கு இதுமாதிரி தருகிறேன். கவலைவேண்டாம், விதி யாரை விட்டது!!!

ஓவியன்
20-02-2008, 11:30 PM
இதற்கு நான்கு ஸ்டாரை யாரோ புண்ணியவான் கொடுத்திருக்கிறார், கவனித்தீர்களா?

அடாடா நான்கு ஸ்டார் கொடுத்தால் புண்ணியவானாகலாமா...??
இப்போது தானே எனக்கு தெரிந்தது.....!! :icon_rollout:

aren
20-02-2008, 11:32 PM
அடாடா நான்கு ஸ்டார் கொடுத்தால் புண்ணியவானாகலாமா...??
இப்போது தானே எனக்கு தெரிந்தது.....!! :icon_rollout:

ஏன் நீங்களும் இனிமேல் கொடுக்கப்போகிறீர்களா

ஓவியன்
20-02-2008, 11:43 PM
ஏன் நீங்களும் இனிமேல் கொடுக்கப்போகிறீர்களா

ஹீ,ஹீ...!!

தேவலை, ஏன்னா நான் ஏற்கனவே புண்ணியவானாச்சே....!! :D:D:D

aren
20-02-2008, 11:44 PM
ஹீ,ஹீ...!!

தேவலை, ஏன்னா நான் ஏற்கனவே புண்ணியவானாச்சே....!! :D:D:D

ஏன் அனைத்தையும் கொடுத்து இழந்தவர்கள் வரிசையில் இருக்கிறீர்களா. ஐயோ பாவம்!!!