PDA

View Full Version : மலேசியாவில் பொதுத்தேர்தல்Mano.G.
15-02-2008, 08:23 AM
கடந்த பிப்ரவரி 13ம் நாள் மலேசிய நாடாளுமன்றம்
நாட்டின் 12வது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் பொருட்டு
முன்னிட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

வருகிற பிப்ரவரி 24ம் நாள் வேட்பாளர் நியமன நாள்.
மார்ச் 8ம் நாள் வாக்களிக்கும் நாள்.

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்களுக்கு தேசிய முன்னனி
தனது வேட்பளர்களை போட்டிக்கு நிறுத்துகிறது. (தேசிய முன்னியில்
அம்னோ என அழைக்கப்படும் மலாய் இனத்தவரின் அரசியல் கட்சியும்,
எம் சி யே எனப்படும் சீனர்கள் அரசியல் கட்சியும், ம இ கா எனப்படும் இந்தியர் கட்சியும் மற்றும் நாட்டு பூர்வீககுடிகளின கட்சியும் சேர்ந்ததே)

கடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் தேசிய முன்னனிக்கு 196 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதில் ம இ காவிற்கு 9 நாடாளுமன்ற
இடங்களில் வெற்றி பெற்றனர்.

மாநிலங்களில் 505 தொகுதிகளிலும் தேசிய முன்னனி போட்டியிடுகின்றது.
கடந்த 2004 தேர்தலில் 453 iஇடங்களி வெற்றி பெற்றது. அதில் ஒரு மாநிலத்தை இஸ்லாமிய கட்சியிடம் தோல்வி கண்டது.

வருகிர 2008ம் ஆண்டு 12வது பொதுத்தேர்தல் மக்களின் அதிருப்தியின்
ஊடே நடத்தப்படுவதால் தேசிய முன்னனிக்கு பெரும்பான்மை குறைய
வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.

அதோடு அண்மைய காலமாக மலேசிய வாழ் இந்தியர்களின் அதிருப்தியும்
இதனூடே சேர்ந்துள்ளதால் இந்திய் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பும்
கேள்விக்குறியாக உள்ளது.

பொருந்திருந்து பார்ப்போம்.


மனோ.ஜி

aren
15-02-2008, 11:09 AM
எதிர்கட்சிகள் மூன்றும் ஒன்றாக சேர்ந்து போட்டியிடப்போவதாக பேப்பரில் படித்தேன். இதனால் மும்முனைப் போட்டியினைத் தவிர்க்கலாம் என்பதால்.

இந்த தேர்தலில் பெரிய அதிசயம் எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன். ஆனால் இதனால் அடுத்தவரும் தேர்தல்களில் உம்னோ மகவும் பலவீனப்படும் என்றே தோன்றுகிறது.

ஜெயாஸ்தா
15-02-2008, 12:54 PM
தேர்தலையொட்டி இந்தியாவைப்போல் அங்கும் இந்தியவம்சாவழியினருக்கு சலுகைகள் நிறைய கொடுக்கப்படுவதாகவும் ஊடகங்களில் படித்தேன். உண்மையா நண்பரே?

ஓவியா
15-02-2008, 02:28 PM
மூன்றரை வருடத்திலே அடுத்த தேர்தலை வைத்து, மக்கள் எதிர்கட்சியை ஆதரிக்கின்றனர் என்று அவர்களே உல்கத்திற்க்கு காட்டி கொடுத்து விட்டனர்.

என்று இந்த ஆளுங்கட்சியின் அஜாரகம் அழியுமோ என்று பலர் காத்திருக்கின்றனர்.

இரவு மீண்டும் எழுதுகிறேன்.

இளசு
15-02-2008, 06:22 PM
இந்திய வம்சாவழியினர் உட்பட எல்லாருக்கும் நன்மை செய்யும் அரசு அமையட்டும்..

பிரிவினை, ஏற்றத்தாழ்வுகள் போதுமய்யா.அரசியல்வாதிகளே.. . தாங்கல..

அறிஞர்
15-02-2008, 10:47 PM
மனோஜி.. தாங்களும் போட்டியிடலாமே...

ஜெயாஸ்தா
16-02-2008, 05:16 AM
மனோஜி.. தாங்களும் போட்டியிடலாமே...

அப்படி மனோ.ஜி போட்டியிட்டால் கள்ள ஓட்டு போட ரெண்டு லாரி ஆட்களை என் செலவில் அனுப்பி வைக்கிறேன். :lachen001: :lachen001:

Mano.G.
16-02-2008, 12:14 PM
மனோஜி.. தாங்களும் போட்டியிடலாமே...
தம்பி நமக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது.
தமிழ் மொழி இந்த நாட்டில் தழைக்க ஏதும் செய்ய முடியுமா என
வாய்ப்புக்களை தேடும் பொழுது கிடைத்ததே, நான் வசிக்கும் வட்டாரத்தில்
உள்ள தமிழ்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பதவி. இந்த பதவியினால் என்ன செய்ய முடியும் என நினைக்கையில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது என கூறி என்னோடு தோழ் கொடுத்தவர் சகோதரர் டாக்டர் அண்ணாதுரை (ஆனந்த்) 1530 இந்திய பிள்ளைகள் படிக்கும் இந்த பள்ளிக்கு வகுப்பரை பற்றாக்குறை . அதை நிவர்த்தி செய்ய கட்டிட குழு அமைத்து தமிழ்பள்ளி ஆதரவாளர்களையும்.நல்லுங்களையும் ஒன்று சேர்த்து தற்பொழுது 6 வகுப்பறைகள் எழுப்பி வருகிரோம், (225,000.00 ரிங்கிட்டில்) தற்பொழுது 50% விழுக்காடு முடிவடைந்து விட்டது.
நாளை பெற்றோர்களின் பங்களிப்பும் இருத்தல் வேண்டும் என
மாலை 3.00மணிக்கு சந்திப்பு கூட்டமும் எற்பாடு செய்யபட்டுள்ளது.

பட்டம் பதவி புகழை விட சமுதாயம் மொழி என சேவை செய்ய
வாய்ப்பு வழங்கிய இவ்வட்டார மக்களுக்கு நன்றி,
அதோடு நமது மன்ற உறவுகள் சகோதரர் ஆரேன் , இளசு மற்றும் பலரின்
ஊக்குவிப்பு வார்த்தைகள் மேலும் செய்ய தூண்டுகின்றன.


மனோ.ஜி

ஜெயாஸ்தா
16-02-2008, 12:31 PM
தமிழுக்காகவும் தமிழ்குழந்தைகளுக்காகவும் தாங்கள் ஈடுபட்டுள்ள காரியம் இறைவனின் கிருபையால் நல்லபடியாய் முடிந்திட இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

ஓவியா
18-02-2008, 10:50 PM
அண்ணா,
போட்டியிடா விட்டால் வருந்த வேண்டாம், அதான் 10 வருடம் கழித்து நான் போட்டி போடுவேனே. :eek::eek::eek: