PDA

View Full Version : என் இதய வானில்.......!



வசீகரன்
14-02-2008, 08:06 AM
http://img34.picoodle.com/img/img34/9/7/27/f_lovem_2ec3144.jpg
எல்லைகளற்று விரிந்திருக்கும் என் வானில்
ஏற்றிய தீபமேன ஒளிர்ந்த திங்களே.....

உன் நிழல் படர்ந்த நிலவொளி எங்கும்
அழகறைந்து நிற்கிறது என் ஆகாயம்....

அனல் அற்று விட்டது என் அண்டம்...!

அதிகாலை பொழுதுவரை ஏற்று நின்றேன்
ஆதவன் வருகையில் அனுப்பி வைத்தேன்.....

அந்தி வருகையில் பார்த்திருந்தேன் ஆர்வ மிகுதியில்
மேகத்தோழியை தூதனுப்பினேன்....

கதிர்களை கரைத்து மெல்ல ஆதவன்
கீழ்வானில் சரிந்த நேரம் உற்று நின்றேன்
உன் வரவேண்ணி நிலைத்து நின்றேன்.....!

வானிலையில் மாற்றம்....
கருமேகங்களின் சூழல்
அலைக்கழிக்கும் காற்றலை...
நிறைய இருள் வியாபித்து விட்டது..... நிறை வெள்ளியை காணவில்லை....!

ஒரு கட்டத்தில் ஓய்ந்தேன்... கண்கள் சாய்ந்தேன்....
இரவு நீடிக்கிறது...!

திடீரென வாடை காற்று குறைந்து தென்றல்
வலம் வருவதாக பட்டது
சிரித்தபடி கண்சிமிட்டி சிரித்தபடி வெளிப்பட்டன விண்மீன்கள்.....

கருமேகங்களை கிழித்துக்கொண்டு வெள்ளிக்கதிர் ஒன்று
தென்வானில் முளைத்தது..... மெல்ல அதிகரித்தது......

சற்றைக்கெல்லாம்.... கவிந்திருந்த கரு மேகங்கள்.....
கலைந்து ஓடின...

என் உலகம் ஒளி வெள்ளத்தில் நிறைந்து நின்றது....
இதோ வந்துவிட்டேன் என புன்னகையுடன் நிறைமதி என்
இதய வானை நிறைத்து நின்றது......!

என் வானம் அன்றும் அழகானது.....!

நண்பர்கள் அனைவருக்கும்
காதலர்தின நல்வாழ்த்துக்கள்......!

சிவா.ஜி
14-02-2008, 08:32 AM
அழகான படத்துடன்.....அழகு தமிழிலில்...வசீகரிக்கும் வரிகளோடு வந்த..இந்த...கவிதை....அழகு.
அனலற்ற ஆகாயம்...நிறை மதியை எதிர் நோக்கி...வந்ததும் குதூகலித்து...கொண்டாடுவது அருமையாக இருக்கிறது.
வாழ்த்துகள் வசீகரா.

வசீகரன்
14-02-2008, 12:19 PM
அழகான படத்துடன்.....அழகு தமிழிலில்...வசீகரிக்கும் வரிகளோடு வந்த..இந்த...கவிதை....அழகு.
அனலற்ற ஆகாயம்...நிறை மதியை எதிர் நோக்கி...வந்ததும் குதூகலித்து...கொண்டாடுவது அருமையாக இருக்கிறது.
வாழ்த்துகள் வசீகரா.

மிக்க நன்றி சிவா அண்ணா....! காதலர்களின் முதல் காதலியே நிலவு தானே...!
நான் இதுவரை நிலவை வர்ணித்து எழுதியதில்லை....
பாராட்டியதர்க்கு நன்றி அண்ணா...!

ஆதி
14-02-2008, 12:31 PM
ராத்திரி வேளையில
ராசாத்தி நீவந்த
காலையில கண்ணதிறந்தா
காணாம போயிட்டியே..

அம்மி கரைஞ்சாலும்
அழுது குலைஞ்தாலும்
அத்தானே வரமாட்டேன்
அம்மாவாச நாளையில..

ஆரம்ப காலங்களின் கவிதையென உளறிய சில வரிகளை ஞாபகமுட்டி போகின்றன வசீகரன்..

நிலவு பாட்டு என்றாலே ஒரு தனி சுகம்தான் மேகம் நிலா மழை மலை வானம் என அத்தனையிலும் எனக்கு தனி மையல்.. அந்த மையலை இன்னும் தளும்ப வைத்துவிட்டது இந்த கவிதை வசீகரன்..

சில இடங்களில் வர்ணிப்புகள் உரைநடை குறுக்கீடை ஏற்படுத்துதோ என எனக்கு ஓரு ஐயம்..!!

மற்றபடி கவிதை அருமை அழகு..

பாராட்டுக்கள் வசீகரன்

வசீகரன்
14-02-2008, 12:55 PM
ராத்திரி வேளையில*
ராசாத்தி நீவந்த*
காலையில கண்ணதிறந்தா
காணாம போயிட்டியே..

அம்மி கரைஞ்சாலும்
அழுது குலைஞ்தாலும்
அத்தானே வரமாட்டேன்
அம்மாவாச நாளையில..

ஆரம்ப காலங்களின் கவிதையென உளறிய* சில வரிகளை ஞாபகமுட்டி போகின்றன வசீகரன்..

மிக்க மகிழ்ந்தேன் கவிஞரே...... தங்கள் பின்னூட்டம் கண்டு.....
ஏசப்பாட்டுக்கள்..... வடிப்பது கிராமிய மனம் நான்கு உணர்ந்தவர்களுக்கு மட்டுமே கை வந்த கலை
தாங்கள் அநயாசமாக எழுதுகிறீர்கள்...... அயர வைக்கிறீர்கள்.....!


சில* இட*ங்க*ளில் வர்ணிப்புக*ள் உரைந*டை குறுக்கீடை ஏற்ப*டுத்துதோ என* என*க்கு ஓரு ஐய*ம்..!!

ம*ற்ற*ப*டி க*விதை அருமை அழ*கு..

பாராட்டுக்க*ள் வ*சீக*ர*ன்

ஆம்..... நான் தங்கள் போன்று கவிஞர்களை பார்த்துதான்
எழுத காற்றுக்கொண்டேன்
உரைநடையிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.... முயற்சிக்கிறேன்
தங்களின் விமர்சனம்..... மிக முக்கியம் என் போன்ற கத்துக்குட்டிகளுக்கு...!
தொடர்ந்து விமர்சியுங்கள்..... !

அமரன்
14-02-2008, 04:57 PM
நிலவை மொய்க்காத பாடும்தேனீக்கள் பாரினிலில்லை என்னும் நிலை.. நிலவென்ற ஒற்றை சொல்லைக் கண்டதும் அள்ள அள்ள வற்றாத வளமுடன் வார்த்தைகள் வந்து விழுகின்றன. வார்த்தைகள் வசப்படும் வழக்கத்தை வைத்திருக்கும் வசீகரனுக்கு சொல்லவும் வேண்டுமா?

காதலர்கள் பலருக்கு காதலியின் அருகாமை இல்லாத நேரத்தில் நிலவுதான் துணை. அதனால்தான் துணைக்கோள் என்று பெயரிட்டார்களோ என்னமோ. மனதில் வந்தவள் மனைவியாக வந்துவிட்டால் நிலைமை தலைகீழ். அதிலுமவள் வேலைக்குப்போகும் மங்கை எனில் சொல்லத்தேவை இல்லை.

அரக்கப்பரக்க பரிதி பிரகாசிக்கும் பொழுதில் ஆளுக்கொரு திசையில் சென்று, பகல்தூங்கும் நேரத்திற்காய் காத்திருந்து, கண்கள் பூத்திருந்து காண ஓடோடி வரும்போது வெறுமை வாசலில் நின்று வரவேற்றால்.... அந்த அந்திக்காலம் அந்திக்கால வேதனையாகும்.. அப்போது தூரத்தே... வெகு தூரத்தே.. கண்சிமிட்டும் துருவ நட்சத்திரமாக அவள். பரவசம் பிரவாகிக்கும்.. அந்தப் பிரவாகம் கவியாகக் கண்டேன்.

என்நினைப்புக்கு கவிதை பொருந்தியதா? நினைப்பை நான் பொருத்திக்கொண்டேனா?தெரியாது. தெரிவதெல்லாம் கவிதையின் அழகுதான். பாராட்டுகள் வசீகரன்.

இளசு
14-02-2008, 07:17 PM
இயற்பியல் வானுக்கு வேண்டுமானால்
இரவு நிலவு ஒளிவிளக்காகலாம்..
இதயவானுக்கு உதய விளக்கு
இனியவள்(ன்) மட்டுமே..


இதமான வசீகரிக்கும் கவிதைக்கு
இனிய வாழ்த்துகள் வசீகரனுக்கு...

வசீகரன்
15-02-2008, 09:35 AM
அரக்கப்பரக்க பரிதி பிரகாசிக்கும் பொழுதில் ஆளுக்கொரு திசையில் சென்று, பகல்தூங்கும் நேரத்திற்காய் காத்திருந்து, கண்கள் பூத்திருந்து காண ஓடோடி வரும்போது வெறுமை வாசலில் நின்று வரவேற்றால்.... அந்த அந்திக்காலம் அந்திக்கால வேதனையாகும்.. அப்போது தூரத்தே... வெகு தூரத்தே.. கண்சிமிட்டும் துருவ நட்சத்திரமாக அவள். பரவசம் பிரவாகிக்கும்.. அந்தப் பிரவாகம் கவியாகக் கண்டேன்.

என்நினைப்புக்கு கவிதை பொருந்தியதா? நினைப்பை நான் பொருத்திக்கொண்டேனா?தெரியாது. தெரிவதெல்லாம் கவிதையின் அழகுதான். பாராட்டுகள் வசீகரன்.

வாருங்கள் அமரரே.... ரொம்ப நாட்களாக தம்பியின்
பதிவுகளுக்கு பின்னூட்டமிடாமல் இருந்தீர்கள்..... என்ன செய்வது அமரரே.... மன்றில் எல்லாரையும்போல் என்னால்
அதிகமாக பங்களிக்கமுடியாதது என் துரதிர்ஷ்டம்....!
நான் சொந்த கணினி வைத்திருக்கவில்லை இணைய தளத்திலிருந்து
மன்றத்தை தொடர்புகிறேன்....
தாங்களின் பின்னூட்டம் என் கவிதையை காட்டினும் அழகு அமரரின் அர்த்தம் பொதிந்த விமர்சனங்கள் எப்போதுமே சரியாகத்தானே இருக்கும்....

வசீகரன்
15-02-2008, 09:39 AM
இயற்பியல் வானுக்கு வேண்டுமானால்
இரவு நிலவு ஒளிவிளக்காகலாம்..
இதயவானுக்கு உதய விளக்கு
இனியவள்(ன்) மட்டுமே..

இதமான வசீகரிக்கும் கவிதைக்கு
இனிய வாழ்த்துகள் வசீகரனுக்கு...

மிக்க நன்றி இளசு அவர்களே.... தங்கள் வாழ்த்துக்கு!

சுகந்தப்ரீதன்
18-02-2008, 04:53 AM
என் வானம் அன்றும் அழகானது.....!!
வசீகரனின் வரிகள் என்றும் அழகானது...!!

நிறைமதியின் வருகையை எதிர்நோக்கி தவமிருக்கும் காதலனாய்...!

காட்சிகள் கண்களில் விரிகிறது..கவிதையை காண்கையில்...!

பொருத்தமான புகைப்படம் கவிதைக்கு மேலும் மெருகையையும் அழகையும் அள்ளி தருகிறது நண்பா...!

வாழ்த்துக்கள்..தொடருங்கள்...!!