PDA

View Full Version : டாக்ஸி(கார்)



அனுராகவன்
13-02-2008, 11:17 AM
டாக்ஸி(கார்)

அழைத்தால் வந்துவிடும்
எதிர்பார்க்காமல் தந்துவிடும்

உடலுகுள்ளே ஜில் ஜில்
உடனுக்குடன் பில் பில்

கண்களுக்கு குளிர்ச்சி
கட்டணத்தால் இகழ்ச்சி
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி
முதியோறுக்கு தளர்ச்சி

தொலைவிற்கு சொகுசு
நகரத்தில் மவுசு
நம் கிராமத்திற்கு புதுசு
கட்டவேண்டுமே காசு..

-அனு

யவனிகா
13-02-2008, 11:43 AM
வழிந்து கசியும்
மெல்லிசை...
இருட்டிக் கொண்டு
இரவின் கையில்
தூங்கி வழியும் சூரியன்...
அழுது வடியும்
தெருவோர சோடியம்வேப்பர்,
இதழோரப் புன்னகையுடன் நான்...
பேசித் தீர்த்த மவுனத்துடன் நீ...

அலுப்புத் தட்டி விட்டது
கார் பயணம்...

சீறிப் பறக்கும் தலைமுடி...
கண்ணாடியில் முகம் பார்த்தவண்ணம்
காதோரம் ரகசியம் பேசும் இதழ்கள்...
கடந்து செல்லும் பெண்ணை
உன் கண்கள் பார்த்தால்...
"நோண்டி விடுவேன்" என்ற
செல்ல மிரட்டல்....
புண்ணியம் தேடிக் கொள்ளும்
ஸ்பீடு பிரேக்கர்கள்...
தோளிலிருந்து இடுப்புக்கு
மாறி மாறி தொற்றிக் கொள்ளும் கைக்கிளிகள்...
இவன் என்னுடையவன் என்ற இறுமாப்பு...

நானும் உன் பைக்கும்
காத்திருக்கிறோம்...

அனுராகவன்
13-02-2008, 10:37 PM
வழிந்து கசியும்
மெல்லிசை...
இருட்டிக் கொண்டு
இரவின் கையில்
தூங்கி வழியும் சூரியன்...
அழுது வடியும்
தெருவோர சோடியம்வேப்பர்,
இதழோரப் புன்னகையுடன் நான்...
பேசித் தீர்த்த மவுனத்துடன் நீ...

அலுப்புத் தட்டி விட்டது
கார் பயணம்...

சீறிப் பறக்கும் தலைமுடி...
கண்ணாடியில் முகம் பார்த்தவண்ணம்
காதோரம் ரகசியம் பேசும் இதழ்கள்...
கடந்து செல்லும் பெண்ணை
உன் கண்கள் பார்த்தால்...
"நோண்டி விடுவேன்" என்ற
செல்ல மிரட்டல்....
புண்ணியம் தேடிக் கொள்ளும்
ஸ்பீடு பிரேக்கர்கள்...
தோளிலிருந்து இடுப்புக்கு
மாறி மாறி தொற்றிக் கொள்ளும் கைக்கிளிகள்...
இவன் என்னுடையவன் என்ற இறுமாப்பு...

நானும் உன் பைக்கும்
காத்திருக்கிறோம்...

ஆகா யவனிகா!!
காரின் மேல் அலுப்பு
இரு சக்கரத்தின் மீது ஈர்ப்பு
காரை புறக்ககணிப்பு
பைக்காக காத்திருப்பு..

நல்லது யவனிகா..
நல்ல ரசனை பைக்கில் செல்வது..
நான் சொன்ன கார் சிங்கையில் உள்ள அமைப்புதான்..
ம்ம் என் நன்றி உங்களுக்கு!!!