PDA

View Full Version : கருத்த காலம்..!

பூமகள்
13-02-2008, 09:05 AM
கருத்த காலம்..!

http://img31.picoodle.com/img/img31/4/2/13/poomagal/f_RedRoadm_de81c1a.jpg

வெளிச்சம் தேடி
விழி சென்ற
திக்கெல்லாம்
இருள் அப்பி
திரும்புகிறேன்..!

ஓரத்தில் பெயர்ந்திருக்கும்
சுவரின் பூச்சு..
சுவாசத்தில் சேறு பூசி
சிரித்தது போல்
திணறும் மூச்சு..!

பட்டினியின் பற்கள்
கணுக்கணுவாய் சுவைக்கும்
அணுவை அனுதினமும்..!

மூன்று நாள்
இருவேளை மேக்கியோடு
தலைசுற்றி இரைதேடி
சாலை கடக்க
சோ(சா)தனை முயற்சி...!

திட்டும் வாகனவோட்டிக்கு
புரியுமா என் பசிச்சுற்றல்??

அறைத் தோழி
அலுவல் செல்ல..
வெறுமை அறைந்து
அழ வைக்கும்..!

சந்தை என்று
வந்த பின்னே
பல்லு பிடித்து
பார்க்கும் உலகம்..!

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வலியோடு
அடுத்த நாளுக்கு
தயாராகும் மனம்..!

யாரும் இல்லாவிடினும்
நிதம் அருகில்
வந்து வாலாட்டி ஓடும்
வேப்பமர அணிலைப் போலவே
வாழ்க்கையும்..!!

பாரதி
13-02-2008, 02:36 PM
இருள் இருக்கிற போதே வெளிச்சம் இருப்பதும் நிச்சயம் என்றாகிறதே..! கருத்த மேகம் பொழியும் நிறமற்ற மழை...!
அணிலின் முதுகில் கூட ஆதரவாய் தடவிய மூன்று கோடுகள்..!
நம்பிக்கைதான் வாழ்க்கை பூ.
யோசித்து புரிந்து கொள்ள வேண்டிய வகையிலும் படைப்புகளைத் தர ஆரம்பித்து விட்டீர்களே..! வாழ்த்துக்கள்.

பூமகள்
13-02-2008, 02:41 PM
எதார்த்தமான விசயங்களில் ஆயிரம் அர்த்தம் பொதிக்கும் திறன் உங்களிடம் மட்டுமே காணக் கிடைக்கும் பாரதி அண்ணா.

நம்பிக்கையூட்டிய வரிகள்..!

முதல் பின்னூட்ட ஊக்கம் கொடுத்து மகிழ்வித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். :)

சுகந்தப்ரீதன்
14-02-2008, 03:51 AM
யாரும் இல்லாவிடினும்
நிதம் அருகில்
வந்து வாலாட்டி ஓடும்
வேப்பமர அணிலைப் போலவே
வாழ்க்கையும்..!!
வெறுமையும் வறுமையும் கலந்த வாழ்வை இத்தனை ஆழமாக சொல்லியமைக்கு பாராட்டுக்கள்...பூ..!!

பாரதி அண்ணா சொன்னதுபோல் எல்லாவற்றிர்க்கும் பக்கங்கள் இரண்டு..இன்று இல்லாவிட்டால் நாளை..! நாளையில்லாவிட்டால் நாளை மறுநாள்..! அதுவும் இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் நிச்சயம் இந்தநிலை மாறும்.. அதுதான் காலத்தின் கட்டாயம்...எனவே நம்பிக்கையோடு நடைப்போடுவோம் நாள்தோறும்...!!

நல்ல முன்னேற்றம் பூ..உன்னுடைய வரிகளில்..!! வழக்கமான கலகலப்பிலிருந்து விலகி உணர்வுபூர்வமான படைப்புகளை இப்போதெல்லாம் தருவதற்க்கு எனது வாழ்த்துக்கள்...!!

நாகரா
14-02-2008, 05:00 AM
யாரும் இல்லாவிடினும்
நிதம் அருகில்
வந்து வாலாட்டி ஓடும்

வேப்பமர அணிலைப் போலவே
வாழ்க்கையும்..!!

"நான் உன்னைக் கைவிடுவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை" என்ற வேதாகமக் கடவுள் வாக்கை, உமக்கு நினைவூட்டுகிறதோ வாழ்க்கை, உமது வரட்டுக் கணங்களிலும்?

"அணுவை அனுவும்..!" அனு??? அணு தானே அது? இல்லையென்றால் "அனு" பொருள் விளக்கவும். நல்ல கவிக்கு நன்றியும் பாராட்டும்.

பூமகள்
14-02-2008, 05:12 AM
வெறுமையும் வறுமையும் கலந்த வாழ்வை இத்தனை ஆழமாக சொல்லியமைக்கு பாராட்டுக்கள்...பூ..!!
நல்ல முன்னேற்றம் பூ..உன்னுடைய வரிகளில்..!!
அடடே.. என்ன ஒரு அழகான பின்னூட்டம் கொடுத்துவிட்டாய் சுகந்த்ப்ரீதன். அருமை.. அபாரம்..!:icon_b:
சுபி, ஒரு :icon_rollout:அப்படின்னு யாரும் இனி நினைக்க மாட்டாங்க..!!!:rolleyes:
மிக்க நன்றிகள் சுகந்தப்ரீதன். :)

பூமகள்
14-02-2008, 05:17 AM
"அணுவை அனுவும்..!" அனு??? அணு தானே அது? இல்லையென்றால் "அனு" பொருள் விளக்கவும். நல்ல கவிக்கு நன்றியும் பாராட்டும்.
அணு - மிக நுண்ணிய கூறு
அனு - அனுதினமும் அல்லது நிதமும்

என்ற இரு வேறு பொருள் கொண்டு தான் எழுதினேன். எழுத்துப் பிழை இல்லை நாகராஜன் அண்ணா.

ஏதும் தவறென்றால் சுட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

உங்களின் பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள். :)

ஜெயாஸ்தா
14-02-2008, 06:00 AM
எதுவும் நிரந்தமில்லை..
நிரந்தமாய் எதுவும் சொந்தமில்லை....
அது கவலை மற்றும் துன்பமாய் இருந்தாலும் கூட...!
மாறும் மாறும் எல்லாம் மாறும்...!
(குடுகுடுப்பைக்காரன் சொல்வது மாதிரி இருக்கா?)

ஒவ்வொரு இரவும்
ஓராயிரம் வலியோடு
அடுத்த நாளுக்கு
தயாராகும் மனம்..!

நிகழ்பவற்றை மறந்து
அடுத்த நொடி வாழத்தயாராகும் மனம்....
இதுதான் நமக்கு கடவுளின் கொடுப்பினை.

மற்றொரு நல்ல கவிதை பூமகள்.....! :icon_b:

சிவா.ஜி
14-02-2008, 06:31 AM
போராட்டங்கள்....புடம் போடும் கங்குகள்.
சாம்பலாக்க நினைத்தாலும்...ஃபீனிக்ஸாய் வெளிவர உதவும்...நம்பிக்கை.
இன்றைய கற்பாதை நாளைய மலர் பாதை....
கற்களுக்கு கால்கள் ஈடு கொடுத்து பழகிவிட்டால்....நொறுங்கி விடாத உறுதி உடலோடு ஒட்டிக் கொள்ளும்.

என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது..

பா.விஜய் அவர்களின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

பாரதி சொன்னதைப் போல அணிலுக்கும் இருக்கும் ஆதரவான மூன்று கோடுகளைப் போல அனைவருக்கும் கிட்டும்.

நல்ல வரிகளை கொண்ட அழகிய கவிதை. வாழ்த்துகள் பூ.

(அதென்ன இருவேளை மேக்கி..?)
அதே போல அனுவும் என்பது அனுதினமும் என்று அர்த்தப்படாது.

பூமகள்
14-02-2008, 06:39 AM
எதுவும் நிரந்தமில்லை..
நிரந்தமாய் எதுவும் சொந்தமில்லை....
அது கவலை மற்றும் துன்பமாய் இருந்தாலும் கூட...!
மாறும் மாறும் எல்லாம் மாறும்...!
மற்றொரு நல்ல கவிதை பூமகள்.....! :icon_b:
சூப்பர் ஜெயாஸ்தா அண்ணா. :)
அழகா சொல்லிட்டீங்க.:icon_b:
.
கார்ல் மார்க்ஸ் சொன்னது போல்,

மாறுதல் ஒன்றே மாறாதது.:)
பின்னூட்ட ஊக்கம் கொடுத்தமைக்கு நன்றிகள் ஜெயாஸ்தா அண்ணா.

இளசு
14-02-2008, 06:45 AM
நேற்றும் வாசித்தேன்..
இன்றும் வாசித்தேன்..

சுவரின் பெயர்ந்த காரைபூச்சு
பார்க்கும் கணந்தோறும் மாறி மாறி
கரடிபோல்.. தேவதைபோல்..குழந்தைபோல்
காட்சியளிப்பதுபோல்..
கவிப்பொருளும்.. இருளும் ஒளியுமாய் மாறி மாறி..

இருளுக்குள் பொருள்தேடி இன்னும்.....இருக்கிறேன் பூ!

பின்னூட்டங்களால் கூட இன்னும் தெளிவாகவில்லை!

பின்னர் வருகிறேன்!

பூமகள்
14-02-2008, 06:49 AM
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது..
பா.விஜய் அவர்களின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
பாரதி சொன்னதைப் போல அணிலுக்கும் இருக்கும் ஆதரவான மூன்று கோடுகளைப் போல அனைவருக்கும் கிட்டும்.
உண்மை தான் அண்ணா.
அந்த நம்பிக்கை அச்சாணியில் தானே உலகம் சுழல்கிறது. :)

(அதென்ன இருவேளை மேக்கி..?)
மேக்கி நூடில்ஸ் அண்ணா.

அதே போல அனுவும் என்பது அனுதினமும் என்று அர்த்தப்படாது.
அப்போ அனுதினமும்னு மாத்திடறேன அண்ணா..!! :icon_b:
இப்பவெல்லாம் அனிதான்னு பேரு வைச்சாலும் அனுன்னு கூப்பிடுவாங்க.. கேட்டா... ஷாட் அண்ட் ஸ்வீட் அப்படின்னு சொல்லுவாங்க..!:aetsch013::rolleyes:

அப்படி "அனுதினம்" என்பதை ஷாட் அண்ட் ஸ்வீட்டா "அனு" என்று மாத்தினேன். :D:D

அழகிய விமர்சன பின்னூட்டத்துக்கு நன்றிகள் சிவா அண்ணா. :)

யவனிகா
14-02-2008, 06:50 AM
பூ சத்தியமா எனக்கு புரியல...கொஞ்சம் விளக்குவாயா?

பூமகள்
14-02-2008, 06:52 AM
நேற்றும் வாசித்தேன்..
இன்றும் வாசித்தேன்..
பார்த்தேன்..!:icon_rollout:
குழம்பினேன்..!:confused:
அண்ணலின் பார்வை பட்டும் ஏன் இன்னும் அவர் விரல்களால் கவி அழகுறவில்லை என எண்ணித் தவித்தேன்..!:icon_ush:

இருளுக்குள் பொருள்தேடி இன்னும்.....இருக்கிறேன் பூ!
பின்னூட்டங்களால் கூட இன்னும் தெளிவாகவில்லை!
பின்னர் வருகிறேன்!
இருளில் மறைந்திருக்கும் பொருளை இது வரை எவருமே கண்டுபிடிக்கவில்லை.:frown:
காத்திருக்கிறேன் அண்ணலே..!:icon_rollout:

சிவா.ஜி
14-02-2008, 06:54 AM
வேலை தேடி வெளியில் சென்று,குறைந்த அளவு உணவை உண்டு,அதனால் ஏற்பட்ட களைப்பில்,பசி மயக்கத்தில் சாலை கடந்து தற்காலிகமாக தோழியுடன் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் சோகம் சொல்லும் கவிதை என்று நான் புரிந்து கொண்டேன்.
சந்தை என்று வந்து விட்டால் என்பதிலிருந்து...நேர்முகத்தேர்வில் நிறைய கேள்வி கேட்டு நோகடிக்கிறார்கள் என்று தெரிகிறது.
சரியா என்பதை பூதான் சொல்ல வேண்டும்.

அமரன்
14-02-2008, 06:54 AM
தோட்டத்தில் இருக்கும் வரைக்கும் காவல்காரன் பொறுப்பாளி.
சந்தைக்கு வந்துவிட்டால் ஆளாளுக்கு நசுக்கிப் பார்ப்பதும், ஒடித்துப் பார்ப்பதும் வழக்கம்.
அப்போ யாராவது தண்னீர் தெளித்து வாடாமல் வெச்சிருக்கிறார்களே என்ற சந்தோசத்தில் காலங்கடத்த வேண்டியதுதான்.
அதை எல்லாம் நினைத்து மனம் வருந்தினால் ஆரென் அண்ணா சொன்னது போல பிறவிப்பயன் அடைவது எப்போது.
தலைப்பே சொல்லுமே.. அடுத்தது அடைமழைதான் என்று.
அதைவிட
இருள் என்பது குறைந்த வெளிச்சம்தானே.. வெளிச்சம் என்பது குறைந்த இருட்டுத்தானே..

பூமகள்
14-02-2008, 06:55 AM
பூ சத்தியமா எனக்கு புரியல...கொஞ்சம் விளக்குவாயா?
அக்கா... உங்களுக்குமா???? :sprachlos020::eek:
காப்பாத்துவீங்கன்னு இருந்தேனே...! :icon_ush::frown:

யவனிகா
14-02-2008, 06:55 AM
விலை மாதுவைக் குறித்த கவிதையா...ஆனாலும் எங்கோ ஒட்டவில்லை பூ

ஆத்தா பர தேவதா நீயே கொஞ்சம் விம் போட்டு விலக்கறயா

பூமகள்
14-02-2008, 06:57 AM
சரியா என்பதை பூதான் சொல்ல வேண்டும்.
:huepfen024::huepfen024:

:icon_good::icon_good:

:icon_clap::icon_clap:

:icon_03::icon_03:

சிவா அண்ணா அசத்திட்டீங்க..!! :aktion033:
ஏதோ பெரிசா சொல்ல வருகிறேன்னு நினைச்சிட்டாங்களோ???!! :icon_shok::icon_wacko::icon_hmm::huh:

ஆதி
14-02-2008, 06:58 AM
அனுவும் = மீண்டும் மீண்டும், மறுபடியும்..

அனு = மறு, மீண்டும்

அதனால் அனுவும் தவறில்லை என நினைக்கிறேன்..

அன்புடன் ஆதி

அமரன்
14-02-2008, 06:58 AM
வேலை தேடி வெளியில் சென்று,குறைந்த அளவு உணவை உண்டு,அதனால் ஏற்பட்ட களைப்பில்,பசி மயக்கத்தில் சாலை கடந்து தற்காலிகமாக தோழியுடன் தங்கியிருக்கும் ஒரு பெண்ணின் சோகம் சொல்லும் கவிதை என்று நான் புரிந்து கொண்டேன்.
சந்தை என்று வந்து விட்டால் என்பதிலிருந்து...நேர்முகத்தேர்வில் நிறைய கேள்வி கேட்டு நோகடிக்கிறார்கள் என்று தெரிகிறது.
சரியா என்பதை பூதான் சொல்ல வேண்டும்.

சின்னத்திருத்தம் சிவா...
வேலை தேடி வரவில்லை. பிடுங்கல்கள் காரணமாக வேலைதேடி ஓடி வந்திருக்க வேண்டும். தெளிவு கவிதாயினி கையில்.. தெளிவாக்கியதும் மீளவும் வருகிறேன்..

சிவா.ஜி
14-02-2008, 07:00 AM
ஆஹா...அப்ப புரிஞ்சிதான் பின்னூட்டம் போட்டிருக்கேனா...?

யவனிகா
14-02-2008, 07:03 AM
அடடா...பூவு திடிரீன்னு கலர்கலராப் பூக்குதே...உள்ள ஏதாவது கோலப் பொடி தூவி வெச்சிருக்கோன்னு நினைச்சேன்...அக்காதான் புரிஞ்சுக்கலையா?

பூமகள்
14-02-2008, 07:03 AM
இருள் என்பது குறைந்த வெளிச்சம்தானே.. வெளிச்சம் என்பது குறைந்த இருட்டுத்தானே..
பாசிடிவ் அப்ரோச்..!:icon_b:
புரிகிறது அமரன் அண்ணா.:cool:
பிறவிப்பயன் எய்த எத்தனை எத்தனை போராட்டம்..??!!:sprachlos020::eek:
அப்பப்பா.. ஏனோ மனம் இன்னும் பொதி போல் எல்லாவற்றையும் சுமந்தபடி...!:icon_ush:
சுமை இறக்க சுமை தாங்கி தேவையே...!:icon_rollout:

பூமகள்
14-02-2008, 07:06 AM
அடடா...பூவு திடிரீன்னு கலர்கலராப் பூக்குதே...உள்ள ஏதாவது கோலப் பொடி தூவி வெச்சிருக்கோன்னு நினைச்சேன்...அக்காதான் புரிஞ்சுக்கலையா?
அக்கா நீங்க இப்பவெல்லாம் கவிதையில என்னிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீங்கன்னு நினைக்கிறேன்.. அதான்..:rolleyes:
பூவு நேரே ஒரு கருத்து சொல்லவே சுத்தி சுத்தி வருவேன்..! :p:cool::icon_ush:
என்னை போயி இப்படி நினைச்சிப்புட்டீங்களே அக்கா..!! :rolleyes::D:D

பூமகள்
14-02-2008, 07:08 AM
சின்னத்திருத்தம் சிவா...
வேலை தேடி வரவில்லை. பிடுங்கல்கள் காரணமாக வேலைதேடி ஓடி வந்திருக்க வேண்டும். தெளிவு கவிதாயினி கையில்.. தெளிவாக்கியதும் மீளவும் வருகிறேன்..
ஏங்க.. பிடுங்கல் இல்லாட்டி யாரு வேலைக்கு போவா சொல்லுங்க??
போஜனம் வேணும்னு தானே எல்லாரும் போறீங்க???!!:icon_ush:
ஒரு ஜான் வயித்துக்குத் தானே இத்தனை பாடுங்க உலகத்துல???!!:icon_rollout:

(என்னை மாட்டிவிடுவதையே பிழைப்பா வச்சிருக்காங்கப்பா..:sauer028::rolleyes: பூவு பீ கேர் ஃபுல்..!:icon_rollout:)

அமரன்
14-02-2008, 07:08 AM
பாசிடிவ் அப்ரோச்..!:icon_b:
புரிகிறது அமரன் அண்ணா.:cool:
பிறவிப்பயன் எய்த எத்தனை எத்தனை போராட்டம்..??!!:sprachlos020::eek:
அப்பப்பா.. ஏனோ மனம் இன்னும் பொது போல் எல்லாவற்றையும் சுமந்தபடி...!:icon_ush:
சுமை இறக்க சுமை தாங்கி தேவையே...!:icon_rollout:
போராடிப் பெறுவதில் பெருமையும், பேருவகையும். அப்போதான் அருமை அதிகளவு புரியும்.
போராடிப்பெற்ற சுதந்திர தேசத்தும் பிச்சையாக பெற்ற சுதந்திர தேசமும் சுதந்திரம் என்பதை எவ்வளவு போற்றுகிறன என்னும் உலக நாடுகள் இதற்கு சான்று..
இன்றைய சுமை இறக்கிகள்தாம் நாளைய சுமைதாங்கிகள். ஆகும் வயது வேறுபாடுண்டே தவிர ஆவது காலத்தின் கட்டாயம்.

மதி
14-02-2008, 07:09 AM
இத்தனை பேர் பின்னூட்டம் போட்டு தான் இந்த மரமண்டைக்கு (என்னைய தான் சொன்னேன்) புரிஞ்சது.. புரிய வைத்தமைக்கு நன்றி.சிவாண்ணா.

பூமகள்
14-02-2008, 07:09 AM
ஆஹா...அப்ப புரிஞ்சிதான் பின்னூட்டம் போட்டிருக்கேனா...?
என்னங்க அண்ணா இப்படி சொல்லிட்டீங்க??!!:frown::frown:
என்ற அண்ணனா இருந்துபோட்டு, இப்படி சொல்லலாமா??:traurig001::traurig001:

அமரன்
14-02-2008, 07:12 AM
ஏங்க.. பிடுங்கல் இல்லாட்டி யாரு வேலைக்கு போவா சொல்லுங்க??
போஜனம் வேணும்னு தானே எல்லாரும் போறீங்க???!!:icon_ush:
ஒரு ஜான் வயித்துக்குத் தானே இத்தனை பாடுங்க உலகத்துல???!!:icon_rollout:

(என்னை மாட்டிவிடுவதையே பிழைப்பா வச்சிருக்காங்கப்பா..:sauer028::rolleyes: பூவு பீ கேர் ஃபுல்..!:icon_rollout:)

செந்தாமரைன்னா சேத்துக்க்குள்ள இருந்து முளைத்து வரணும். சூரியனைக் கண்டால் இதழ் விரிக்கணும். சூரியன் மறைந்தால் தானும் உறங்கவேண்டும்.. அதே பூ மறுபடியும் சூரியனைக் கண்டால் சிரிக்க வேண்டும்.. அப்பதான் கெத்து அதிகம்..
அதனால்தான் சூரிய் நகர்வுக்கு ஏற்ப நகரும் சூரியகாந்தியை விட செந்தாமரை போற்றிப்பாடப்படுகிறது.. போற்றிப்பாடடி பெண்ணே. போராட்டம்தான் கண்ணே..

ஆதி
14-02-2008, 07:32 AM
"கருத்த காலம்" தமிழக வரலாற்றின் இருண்ட காலம் போல் வேலை தேடும் பட்டதாரியின் வாழ்வில் கருத்த காலம் வேலை இல்லா வேளைதான்..

நித்தமும் வெளிச்சம் தேடி புரப்பட்டு
நிராகரிப்புகளால் இருளுறிய முகமும்..
தோல்வி தோய்ந்த மனதும்
குனிந்த தலையுமாய்
கேள்விக் குறிகளோடு
கேள்விக்குறியாய் திரும்பும்
கருத்த காலங்கள் பற்பல
பட்டதாரிகளுடையவை..

வெளிரிய புன்னகை..
வெளிச்சமற்ற பார்வை
வெறும் நம்பிகை..
பாலைநிலத்தில் எப்போழ்தாவது வரும்
வானவில் போல் வாழ்க்கையென..

அனைத்தையும் அழகுற காண்பித்திருப்பது அழகு..

பூமகளுக்கும் அவர் வனைந்தக் கவிக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அன்புடன் ஆதி

பூமகள்
15-02-2008, 09:33 AM
இத்தனை பேர் பின்னூட்டம் போட்டு தான் இந்த மரமண்டைக்கு (என்னைய தான் சொன்னேன்) புரிஞ்சது.. புரிய வைத்தமைக்கு நன்றி.சிவாண்ணா.
அப்பாடா..:redface::aetsch013: புரிந்ததே கடைசில..! :icon_rollout:
அதுவே சந்தோசம். :D:D
என் கவிதை புரியலன்னு சொல்லிட்டாங்களேன்னு நான் ரொம்பவே அழுதுட்டு இருந்தேன்..! :icon_ush::rolleyes:

ஜெயாஸ்தா
15-02-2008, 09:37 AM
அப்பாடா..:redface::aetsch013: புரிந்ததே கடைசில..! :icon_rollout:
அதுவே சந்தோசம். :D:D
என் கவிதை புரியலன்னு சொல்லிட்டாங்களேன்னு நான் ரொம்பவே அழுதுட்டு இருந்தேன்..! :icon_ush::rolleyes:

நாங்கதான் புரிஞ்சாலும் புரியாவிட்டாலும் பின்னூட்டம் போட்டுவிட்டு போய்கிட்டே இருப்போமுல.....! இதுக்கெல்லா சும்மா அழலாமா? :lachen001: :lachen001: :lachen001: (சும்மா சொன்னேன்... இரு முறை படித்ததும் கவிதை தெளிவாக புரிந்தது. என்ன 'மேக்கி' என்பது ஏதோவொரு தமிழ் இலக்கியவார்த்தையாக இருக்குமோ என்று எண்ணிவிட்டேன். பின்தான் தெரிந்தது அது 'மேக்கி' என்று....ஹி...ஹி..ஹி.. :icon_b:)

ஆர்.ஈஸ்வரன்
15-02-2008, 09:51 AM
நல்ல சுத்தமான கவிதை.

பூமகள்
15-02-2008, 09:52 AM
அனுவும் = மீண்டும் மீண்டும், மறுபடியும்..
அனு = மறு, மீண்டும்
அதனால் அனுவும் தவறில்லை என நினைக்கிறேன்..
பெரியவங்க சொன்னால் சரியாத் தான் இருக்கும். :icon_rollout:
எங்க வீட்டில் உள்ள அகராதி பார்த்தா அனு என்ற வார்த்தை தனியா காணவே காணோம்.:icon_ush:
நன்றிகள் ஆதி.

பூமகள்
15-02-2008, 09:56 AM
அப்பதான் கெத்து அதிகம்..
கெத்தா அப்படின்னா என்னங்க?? :sprachlos020::eek::confused:
(பூவுக்கு வராதத எல்லாம் வர வைக்க சொல்றாங்க....!!:lachen001::lachen001:ஹையோ ஹையோ..!:D:D)

போற்றிப்பாடடி பெண்ணே. போராட்டம்தான் கண்ணே..
வாழ்க்கையே போர்க்களம்..!
வாழ்ந்து தான் பார்க்கனும்..!
போர்க்களம் மாறலாம்..!
போர்கள் தான் மாறுமா??

சரி யாரைப் போற்றி பாட சொல்றீங்க..??!!:aetsch013::D
நான் பாடினா ஒருத்தரும் மன்றத்தில் இருக்க மாட்டாங்க.. பரவாயில்லன்னா சொல்லுங்க பாடிடறேன்...!!!:lachen001::lachen001:

பூமகள்
15-02-2008, 10:06 AM
"கருத்த காலம்" தமிழக வரலாற்றின் இருண்ட காலம் போல் வேலை தேடும் பட்டதாரியின் வாழ்வில் கருத்த காலம் வேலை இல்லா வேளைதான்..
அனைத்தையும் அழகுற காண்பித்திருப்பது அழகு..
பூமகளுக்கும் அவர் வனைந்தக் கவிக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
பின்னூட்ட கவி அருமை ஆதி.
அசத்திட்டீங்க..! :icon_b:
ஒவ்வொருவரின் வாழ்விலும் இப்படியான கருத்த காலம் இருக்கவே செய்கிறது.
மிகுந்த நன்றிகள். :)

அமரன்
15-02-2008, 10:09 AM
ஒவ்வொருவரின் வாழ்விலும் இப்படியான கருத்த காலம் இருக்கவே செய்கிறது. :)
அப்படியான கருத்தகாலங்களில் வெள்ளைக் காக்கைகளும் அதிகம் பறந்திருக்கு.:D

வசீகரன்
15-02-2008, 10:10 AM
வறுமை பட்டினி வறியவன் வாழ்வு இவை பற்றியெல்லாம் எழுத
ஆரம்பித்தாலும் படித்தாலும்..... மனசு கணமும் ரணமுமாக மாறிவிடும்... பூவு ஆக்கிடீச்சு மனாசெல்லாம் நோவு......! ஆனால் சில உதாரணங்கள்
ஓட்டவில்லை பூ.... இருந்தாலும் பூவுக்காக லீவ் இட்....!

பூமகள்
15-02-2008, 10:13 AM
(என்ன 'மேக்கி' என்பது ஏதோவொரு தமிழ் இலக்கியவார்த்தையாக இருக்குமோ என்று எண்ணிவிட்டேன். பின்தான் தெரிந்தது அது 'மேக்கி' என்று....ஹி...ஹி..ஹி.. :icon_b:)
:lachen001::lachen001:
பூவு எழுதினாவே அது தூய தமிழ் சொல்லாத்தான் இருக்கனும்னு ஏதும் சட்டம் இருக்கா என்ன??:aetsch013::icon_rollout: :smilie_abcfra:

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப
இரணகளமாக்கிடறாங்கப்பா...!:rolleyes::D:D

பூமகள்
16-02-2008, 06:36 AM
வறுமை பட்டினி வறியவன் வாழ்வு இவை பற்றியெல்லாம் எழுத
ஆரம்பித்தாலும் படித்தாலும்..... மனசு கணமும் ரணமுமாக மாறிவிடும்... பூவு ஆக்கிடீச்சு மனாசெல்லாம் நோவு......! ஆனால் சில உதாரணங்கள்
ஓட்டவில்லை பூ.... இருந்தாலும் பூவுக்காக லீவ் இட்....!
நன்றிகள் வசீ..!

உதாரணங்கள் நிஜமென்றாலும்
ஒட்டாது போனது ஏனென்று
விளங்கவில்லை..!

ஒருவேளை நிதர்சனம் கூட
அரிதாரம் பூசிவிட்டது போல்
சில சமயம் இப்படித்தான்
தோன்றுமோ??

பின்னூட்ட ஊக்கம் தந்தமைக்கு எனது நன்றிகள். :)

அனுராகவன்
16-02-2008, 09:47 AM
அடடே பூ..
நல்ல கவி....
நல்ல கருத்துகளும் கூட.
என் நன்றி...

பூமகள்
16-02-2008, 01:14 PM
அனு அக்கா..!
உங்க பின்னூட்டம் பார்த்து மகிழ்ச்சி.
நன்றிகள் அக்கா. :)

பூமகள்
17-02-2008, 06:13 AM
அப்படியான கருத்தகாலங்களில் வெள்ளைக் காக்கைகளும் அதிகம் பறந்திருக்கு.:D
:confused::confused:
புரியாம பேசுவதையே பிழைப்பாய் வைத்தால் எப்படிங்க அமரன் ஜீ??:sprachlos020::eek::eek: