PDA

View Full Version : பாரதி -திருக்காதல்



baluaravinth
13-02-2008, 08:29 AM
திருவே! நினைக்காதல் கொண்டேனே - நினது திரு
உருவே மறாவாதிருந் தேனே - பல திசையில்
தேடித் திரிந்திளைத்தேனே - நினக்கும் மனம்
வாடித் தினங்களைத் தேனே அடி, நினது
பருவம் பொறுத்திருந் தேனே - மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தே தேனே - இடை நடுவில்
பையச் சதிகள் செய் தாயே - அதனி லுமென்
மையல் வளர்தல் கண்டாயே! - அமுதமழை
பெய்யக் கடைக்கநல் காயே - நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே - பெருமை கொண்டு
வையந் தழைக்கவைப் பேனே - அமரயுகஞ்
செய்யத் துணிந்து நிற் பேனே - அடியென்று
தேனே! எனதிரு கண்ணே - எனையுகத்து
நானே! வருந் திருப் -பெண்ணே!

ஓவியன்
20-02-2008, 11:27 PM
அன்பரே மகாகவியின் கவிதையை (http://thatstamil.oneindia.in/art-culture/2001/12/02/bharathi.html) புதிய கவிதைகள் பகுதியில் பதித்துள்ளீர்களே...???

புதிய கவிதைகள் பகுதி மன்ற உறவுகளின் கவிதை ஆக்கங்களுக்கு மட்டுமே, ஆதலால் இந்த திரியை இங்கே நகர்த்துகின்றேன்...