PDA

View Full Version : கவிதை சாகுபடிநாகரா
13-02-2008, 05:05 AM
விழிகளை விதைத்தேன்
கவிதையைக் கண்டேன்
செவிகளை விதைத்தேன்
கவிதையைக் கேட்டேன்
நாசியை விதைத்தேன்
கவிதையை நுகர்ந்தேன்
நாவினை விதைத்தேன்
கவிதையைச் சுவைத்தேன்
விரல்களை விதைத்தேன்
கவிதையைத் தொட்டேன்
மூளையை விதைத்தேன்
கவிதையை அறிந்தேன்
இருதயம் விதைத்தேன்
கவிதையை உணர்ந்தேன்
என்னையே விதைத்தேன்
நானே கவிதையானேன்

aren
13-02-2008, 05:11 AM
வாவ்!!! அருமையான கவிதை வரிகள்.

அனுபவித்து எழுதியிருப்பது உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.

நாகரா
13-02-2008, 05:18 AM
வாவ்!!! அருமையான கவிதை வரிகள்.

அனுபவித்து எழுதியிருப்பது உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது.

நன்றி ஆரென்