PDA

View Full Version : சிங்கை - பெரியபுள்ளியின் சோகச்செய்தி



அன்புரசிகன்
12-02-2008, 04:43 PM
சிங்கையில் பெரியபுள்ளியின் சோகச்செய்தி


அண்மையில் சிங்கப்பூர் சென்று திரும்பினேன். சிங்கையில் இருந்த போது ஏதேச்சையாக ஒரு தமிழ்ப்பத்திரிக்கை (தமிழ் முரசு (http://tamilmurasu.tamil.sg)) வாசிக்க நேர்ந்தது. வாசித்தேன். மனதில் ஒருவித இனம்புரியாத ஒரு தடுமாற்றம்.

அந்த செய்தி வேறெதுவும் அல்ல. ஆமெங் எனப்படும் ஒரு மனிதக்குரங்கின் இழப்புத்தான் அது. அதன் இறுதிச்சடங்கிற்கு 4000 ற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனராம்.

இவர் தான் அந்த ஆமெங்.
http://www.smh.com.au/ffximage/2008/02/11/AhMeng_narrowweb__300x441,0.jpg

அதன் பின் தொலைக்காட்சியில் காட்டினார்கள். பலர் தெம்பி தெம்பி அழுதுகொண்டிருந்தனர்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு கீழ்க்காணும் சுட்டிகளுக்கு செல்லுங்கள்.
உலகம் அறிந்த ஆ மெங் (http://tamilmurasu.tamil.sg/singapore/TMStory_1840.html)
ஆமெங் இறந்தது (http://tamilmurasu.tamil.sg/frontpage/TMStory_1833.html)
Singapore Zoo's most famous icon Ah Meng dies (http://www.smh.com.au/news/news/singapore-zoos-most-famous-icon-ah-meng-dies/2008/02/11/1202578640342.html)

என்ன சாதித்துவிட்டோம் நாம் இந்த மண்ணில்??? இந்த செய்தியைப்பார்த்தபின்னர் மனதில் எழுந்த கேள்வி இது...

நன்றி: தமிழ்முரசு மற்றும் சில இணையங்கள்.

சாலைஜெயராமன்
12-02-2008, 04:52 PM
ஆம் என்ன சாதித்து விட்டோம் இம்மண்ணில்.

ஒருவரின் உள்ளங்கவர் கண்ணிய நெறியில் கூட நம்மால் ஆகிக் கொள்ள முடியவில்லை. வாழ்வின் பயன் என்னதென்று அறியாத மிருக வாழ்க்கை வாழ்ந்து, காலமும் பொல்லாங்கு செய்து, உறவைக் கெடுத்து, ஊன வாழ்க்கை வாழும் நாம் மிருகத்தைவிட என்ன பெரிதாகச் சாதித்துவிட்டோம்.

ஆமெங் பிறர் மனங்களைக் கவர்ந்த ஒரு சிறு செயலைக் கூட நம்மால் செய்ய முடியாத போது அது நிச்சயமாக நம்மைவிட உயர்ந்ததுதான்.

தகவலுக்கு நன்றி அன்பு ரசிகன்.

அனுராகவன்
14-02-2008, 12:57 AM
ஆமாம் அன்புரசிகன் அவர்களே..
மிகவும் சோகமான செய்திதான்..
காரணம் நான் என் நண்பருடன் அன்றைய தினம்தான் ஜூவிற்கு சென்று பார்த்துவிட்டு வந்தோம்..
ம்ம் நன்றி நண்பா.

ஓவியன்
14-02-2008, 01:10 AM
சிங்கையில் நானிருக்கும் போதா ஆமெங் இறக்க வேண்டும்.........!! :redface:

ஆமெங்கிற்கு என் அஞ்சலிகள்......!!