PDA

View Full Version : அடிமைச்சாசனமாய் அதிசயம்!



роЕрооро░ройрпН
12-02-2008, 03:31 PM
கலைகளின் தலைநகரின்
நிகரில்லா மலையழகின்
பாதிப்பங்காளானாய் ஈஃபிள்.


சிறகடிக்கும் சிட்டுக்குருவியின்
அருகாமை தந்த மயக்கத்தில்
உச்சியில் நான் சொக்கியவனாய்Е

வானலை வாடைக்காற்று
தேகம் தீண்டி உயிர் தடவ..


தனிச்சையாக
தலைகோதிய விரல்கள்
வரலாற்றின்
புரட்டிய பக்கங்களை நினைவூட்ட..


СவாடைТ வாட்டியது
பார்வையில்
அடிமைச் சாசனமானது
அதிசயம்..!!

роЪро╛ро▓рпИроЬрпЖропро░ро╛рооройрпН
12-02-2008, 03:40 PM
வாடை வாட்டியது. ஆம் நம் தேசத்தில் அந்நியன் நடமாடிய வாடையும் நம்மை வாட்டத்தான் செய்தது.

இங்கே நீங்கள் வாடைக் காற்றைக் கூறியிருக்கிறீர்கள் அமரன்.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டல்லவா.

அதனால் கலை நயமிக்க கண்ணுக்கு விருந்தான பல படைப்புகளில் ஈபில் டவரும் ஒன்று. அதன் அழகை வர்ணித்த கவிதை எங்களை டவரின் உச்சிக்கே கொண்டு சென்றது

роЗро│роЪрпБ
12-02-2008, 09:47 PM
பிரஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு நினைவுச் சின்னமாகத்தானே இதை எண்ணியிருந்தேன்..

அமரனின் விளக்கம் அறிய ஆவல்..

பக்கத்தில் இருந்து மயக்கம் தந்த சிட்டுக்குருவி யார் அமரா?
(இதற்கும் விளக்கம் அளிப்பாய் அல்லவா?)

роЕроХрпНройро┐
14-02-2008, 03:03 PM
இளசு அண்ணா சொல்லுவதைப் போல,
பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் வளைவாகவே,
நானும் அறிந்துள்ளேன்.
அமரனின் விளக்கம் என்னவோ...

aren
14-02-2008, 03:11 PM
அமரன் கவிதை அருமை. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் எனக்கும் கொஞ்சம் புரியும்.

புரட்சி உங்கள் ஊரிலும் வரவேண்டும் என்கிறீர்களா? வெற்றிச்சின்னமாக இதுமாதிரி ஏதாவது உங்கள் ஊரில் வடிக்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

ஆமாம் அந்த சிட்டுக்குருவியுன் பெயர் என்ன?

роЕрооро░ройрпН
14-02-2008, 03:54 PM
பெரிதாக ஒன்றுமில்லை. கட்டியபோது கூலியாட்களாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் பலர் கறுப்பின அடிமைகள் என்று படித்தேன். வழக்கமாக் காணும் சின்ன சின்ன சம்பவங்களின்போது இன்னும் அடிமைகளாக, தீண்டப்படாதவர்களாக பிரெஞ்சுக்காரர் மனங்களில் கறுப்பினத்தவர் பச்சை குத்தப்பட்டுளனர். இரண்டையும் தொடர்புபடுத்தி பார்த்தபோது எழுதிதள்ளிவிட்டேன். மீண்டும் படிக்கவும் இல்லை. சரியா தவறா என்று சிந்திக்கவும் இல்லை. இப்போ சிந்திக்கிறேன்..

роЪро┐ро╡ро╛.роЬро┐
16-02-2008, 04:02 AM
பொதுவாகவே அனைத்து செயற்கை அதிசயங்களும் அடிமை சாசனம்தான் அமரன்.மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்துமே அடிமைகளின் இரத்தத்தையும்,வியர்வையையும்,சதையோடு கலந்து கட்டப்பட்டவைதான்.சீனப் பெருஞ்சுவர்,தாஜ்மஹால்,பிரமிடுகள்...இன்னும் உள்ள அனைத்தும் அப்படித்தான்.அமைத்ததற்கான காரணங்கள்...வேறு வேறாக இருந்தாலும்...அடிப்படையில் அடிமை சாசனம்தான்.
வித்தியாசமான சிந்தனை அமரன்.வாழ்த்துகள்.