PDA

View Full Version : ஈரவெளிக் காற்று..!



பூமகள்
12-02-2008, 07:55 AM
ஈரவெளிக் காற்று..!

http://img26.picoodle.com/img/img26/4/2/12/poomagal/f_cryingboym_a91223e.jpg


குறுக்கு பாதையில்
சூழல் கிரகித்து
நடைபோடுகிறேன்..!

மார்பளவு சுவற்றில்
வண்டி பிடித்து
ஏறி நின்று..

அக்கா கை பிடித்து
அனிச்சையாய்
அநாயாசமாய்
நடைபழகும் மழலை..!

வேறு திசையில்
பெரியவர் நின்றிருக்க..
பிஞ்சு விழும் பதைப்பு
நெஞ்சில் எழுந்து
என்னை ஆட்டுவிக்கிறது..!

குறுகுறு பார்வையில்
எனைக் கண்டு
குறும்பாய் சிரிக்கிறது
இளம் தளிர்கள்..!

வரும் துயர் எண்ணி
அஞ்சி அழைத்துச்
சொல்லி என் வழி
செல்கிறேன்..!

ஏங்கும் விழிகளோடு
சோகமாய் பார்க்கும்
ஈரவிழிகள்..!

நிம்மதி பெருமூச்சு
நெஞ்சில் வந்தாலும்
எங்கோ ஓர் ஓரத்தில்
மழலையின் கண்கள்
கேட்ட கேள்விக்கு
விடை சொல்ல
இயலாமல் இன்னும்
நான்...!!

ஆர்.ஈஸ்வரன்
12-02-2008, 09:50 AM
இதற்கு விமர்சனம் சொல்ல இயலாமல் இன்னும் நான்.

சுகந்தப்ரீதன்
12-02-2008, 10:54 AM
அச்சம் அறியா பிஞ்சு நெஞ்சம் அதை அப்படியே விட்டால் விளையும் விபரீதம்.அதை அகற்றி ஆனந்த படுகையில் அனைவரும் கவனிப்பதில்லை என்பதைவிட கண்டுக்கொள்வதில்லை.பிஞ்சுகளின் நெஞ்ச நிலையை...! அதை உற்று நோக்கி உரைத்த உன்கவிக்கு பாராட்டுக்கள்..பூ..!!
குழந்தைகளை அதிகம் கவனிப்பீர்கள் போலிருக்கு.. அவர்களின் உணர்வுகளை தொடர்ந்து அழகாக கவிதையாக்குகிறீர்கள்..தொடருங்கள்...!!

யவனிகா
12-02-2008, 11:26 AM
மழலையின் கண்கள் கேள்வி தான் கேக்கும்...ஏன் கேக்காது...நல்ல வேளை பரதேவத...போட்டுக் குடுத்துட்டு போன...இதில மனசு வேதனப் பட்டு கவித வேற வடிச்சிருக்க....

எங்க வீட்டில ஒண்ணு இருக்கு...ஸ்பைடர் மேன் ஜன்னல் வழியா குதிப்பான்...பால்கனி வழியா குதிப்பான்...வெப் போடுவான்னு கிட்டு...கேட்டா திக்குன்னு இருக்கும்...இனி ஸ்பைடர் மேன் பாத்தா...நானே ஜன்னல் வழியா உன்ன தூக்கிப் போடுவேன்..அப்படின்னு பயமுறுத்தி வெச்சிருக்கேன்.

அடிக்கும் போதோ திட்டும் போதோ அந்த கண்களை பார்க்கவே பதைப்பாய்த் தான் இருக்கும். வரும் ஆபத்தைத் தடுக்கதானே...அதனால் கவலைப் படாதே பூ....யு ஹாவ் டன் அ குட் ஜாப்.

சிவா.ஜி
12-02-2008, 11:39 AM
பயமறியா பிஞ்சுகள்....கவனிப்பு நிச்சயம் தேவைதான்.
அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதங்களை எத்தனை நாம் கேள்வி பட்டிருக்கிறோம்...அப்படி ஒன்று ஆகி விடாமல் தடுப்பதற்கு நிச்சயம் மென்மையான மனம் வேண்டும் அது என் தங்கை பூவிடம் உள்ளது
(பூவிடம் மென்மையில்லாமலிருக்குமா)

அக்க சொல்லியிருக்கறதப் பாரும்மா....பிஞ்சுகளுக்கென்ன...கேள்வி மேல கேள்வி கேக்கத்தான் செய்யும்..நாமதான் பதைத்துப் போய்விடுகிறோம்.

நல்ல செயல் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் அழகான கவிதை.வாழ்த்துகள் பூ.

பூமகள்
12-02-2008, 02:52 PM
இதற்கு விமர்சனம் சொல்ல இயலாமல் இன்னும் நான்.
புரிந்ததாலா?
புரியாததாலா?
புரியாமல் நான்...!

அச்சம் அறியா பிஞ்சு நெஞ்சம் அதை அப்படியே விட்டால் விளையும் விபரீதம். குழந்தைகளை அதிகம் கவனிப்பீர்கள் போலிருக்கு.. அவர்களின் உணர்வுகளை தொடர்ந்து அழகாக கவிதையாக்குகிறீர்கள்..தொடருங்கள்...!!
உண்மை தான் சுகந்த்ப்ரீதன். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு இடராக நல்லதைச் சொன்னாலும் விளங்கா மனநிலையில் இது இயற்கை தானே..!

மிக்க நன்றிகள் சுகந்த்ப்ரீதன். :)

பூமகள்
12-02-2008, 03:20 PM
மழலையின் கண்கள் கேள்வி தான் கேக்கும்...ஏன் கேக்காது...நல்ல வேளை பரதேவத...போட்டுக் குடுத்துட்டு போன...இதில மனசு வேதனப் பட்டு கவித வேற வடிச்சிருக்க...
ஆமா அக்கா.. சுவையான சம்பவங்களல்ல போடலாம்னு இருந்தேன்.. அப்புறம் எல்லாரும் வந்து.. ஒன்னுமே இல்லாத மேட்டருக்கு இவ்வளோ பில்டப்பான்னு ஒத்த வார்த்தையில என்னை கேட்டு அழ வைச்சிட்டு போயிடுவாங்க..!
அதனால கவிதையில் சின்னதா(?) சொல்லிடலாம்னு எழுதினேன்..!:D:D

எங்க வீட்டில ஒண்ணு இருக்கு...ஸ்பைடர் மேன் ஜன்னல் வழியா குதிப்பான்...பால்கனி வழியா குதிப்பான்...வெப் போடுவான்னு கிட்டு...கேட்டா திக்குன்னு இருக்கும்...
இதைப் போயி இன்னொரு ஸ்பைடர் கேர்ள் கிட்ட சொல்லிட்டு இருக்கீங்களே... :lachen001::lachen001:
நானும் அம்ரூ குட்டி போலத் தான் செய்துட்டு அழிச்சாட்டியம் பண்ணுவேன்..!! :rolleyes::aetsch013:
அதுக்காக, முதுகுல ரெண்டு வச்சிறாதீங்க அக்கா..!:icon_ush::icon_ush:

அடிக்கும் போதோ திட்டும் போதோ அந்த கண்களை பார்க்கவே பதைப்பாய்த் தான் இருக்கும். வரும் ஆபத்தைத் தடுக்கதானே...அதனால் கவலைப் படாதே பூ....யு ஹாவ் டன் அ குட் ஜாப்.
அப்பாடா.. இப்பதான் அக்கா நிம்மதி. அந்த சின்ன குழந்தைகளின் சந்தோசத்தை கெடுத்திட்டேனோன்னு ஒரு சின்ன உறுத்தல் இருந்துட்டே இருந்துச்சி..! நல்லதுக்கு தானே போட்டு கொடுத்தேன்னு என்னை நானே சமாதானம் செய்துட்டேன். இப்போ உங்க பதில் பார்த்து மனம் அமைதியாகிவிட்டது.

பின்னூட்டம் போட்டு என்னை மகிழ்வித்தமைக்கு நன்றிகள் அக்கா. :)

பூமகள்
12-02-2008, 03:37 PM
பயமறியா பிஞ்சுகள்....கவனிப்பு நிச்சயம் தேவைதான். நல்ல செயல் செய்யச் சொல்லி அறிவுறுத்தும் அழகான கவிதை.வாழ்த்துகள் பூ.
உண்மை தான் அண்ணா.
கவனிப்பும் கவன ஈர்ப்பும் என்றுமே அவசியம்.
மிக்க நன்றிகள் சிவா அண்ணா. :)

இளசு
12-02-2008, 08:03 PM
புது அனுபவம் ஒருவர் தேடுவதும்
ஆபத்து அறிந்து மற்றவர் தடுப்பதும்

தடுக்கப்பட்டவர் ஏக்கமும்
தடுத்தவர் இருநிலைக் குழப்பமும்...


பல வடிவங்களில் பல பருவங்களும் தொடரும் கதை..

முன்னவர், பின்னவர் இருநிலைகளும் ஒருவருக்கே
வெவ்வேறு சூழல்களில் வாய்ப்பதும் அறிந்த கதை!

சூழல் உள்வாங்கி நடக்கும் பாமகளுக்கு அண்ணனின் வாழ்த்து!

பூமகள்
13-02-2008, 01:46 PM
தடுக்கப்பட்டவர் ஏக்கமும்
தடுத்தவர் இருநிலைக் குழப்பமும்...

பல வடிவங்களில் பல பருவங்களும் தொடரும் கதை..

முன்னவர், பின்னவர் இருநிலைகளும் ஒருவருக்கே
வெவ்வேறு சூழல்களில் வாய்ப்பதும் அறிந்த கதை!
இருதலைக் கொல்லியாக
ஏக்கமும் தவிர்ப்பும்
தவிர்க்காமல் பலசமயம்
மனம் படும் பாடு..!

----------------

அப்பப்பா..!
எத்தனை பெரிய விசயத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட்டீர்கள் பெரியண்ணா..!:sprachlos020::eek: :icon_b:

அசத்தல்.. பின்னூட்டம்.. நிரம்பவே என்னை யோசிக்க வைத்தது.

மிகுந்த நன்றிகள் பெரியண்ணா. :)