PDA

View Full Version : கடைசியான முதல்



அமரன்
12-02-2008, 06:36 AM
சூரியனைச் சூடிக்கொள்ள
நட்டு வைத்த ஏணிபோல
அடுக்கு மாடிக் கட்டம்.

முதற்றளத்தின் பிரவேசிப்பில்
இறுமாப்பின் பிரமாண்டம்
பிரமிப்பாக
நரம்பெல்லாம் பரவுகிறது..

படிப்படியாய்
மேல் நோக்கிய தளங்களில்
சுவடுகளைப் பதிக்கிறேன்.

படிகளின் முடிவில்
விரிந்த பரந்த வெளியில்
ஆழ மூச்சை உள்ளிழுத்து
ஆசுவாசப் படுத்துகிறேன்.

இப்போது...

முதலாய் இருந்தது
நசுங்கிய நிலையில்
தளங்களை தாங்கியபடி
இறுதியாக தோன்றுகிறது..

நாகரா
12-02-2008, 08:43 AM
படிகள் முடியும்
முடியா வெளியில்
நசுங்கும் முதற்றள
பிரம்மாண்டம்
இறுதியில்

முகங்கள் முடிந்த
அகண்ட வெளியில்
நசியும் ஆணவ
ஆர்ப்பாட்டம்
இறுதியில்

சிந்திக்கத் தூண்டும் நல்லதோர் கவிதைக்கு நன்றி அமரன்.

சுகந்தப்ரீதன்
12-02-2008, 10:43 AM
முதலாய் இருந்தது
நசுங்கிய நிலையில்
தளங்களை தாங்கியபடி
இறுதியாக தோன்றுகிறது..
அண்ணா.. ஏதோ வாழ்க்கை தத்துவம் சொல்லுறீங்கன்னு தெரியுது...! இதுக்குமேல என்னால விளக்கம் கொடுக்க முடியாது... அதனால் வாழ்த்து சொல்லி விடைபெறுகிறேன்.. அன்புடன்...!

வரவிருந்த போது
வரவேற்ப்பிருந்தது!
வயது கடந்தபோது
வாழ்க்கை கசந்தது.!!
ஏற்க மறுத்தாலும்
எதார்த்தம் இனிக்கிறது
எனக்கு மட்டுமா..?
எல்லோருக்கும்தான்...!!

யவனிகா
12-02-2008, 11:56 AM
உள்ளே
நசுங்கிப் போன...நான்...

தாங்கி நிற்கும் இன்னும்
என்னை செருக்குடன்...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆமரன்.

சிவா.ஜி
12-02-2008, 12:05 PM
எது பெரிதோ அது பெரிதாகத்தானிருக்கிறது
எது சிறிதோ அது சிறிதாகத்தானிருக்கிறது....
ஆனால் சில நேரங்களில் சில சிறிதுகள்...தங்களை பெரிதாக நினைத்துக்கொள்கின்றன....சில பெரிதுகள்...மிகப் பெரிதுகளாக கர்வம் கொள்கின்றன...ஆனால் எல்லாமே அதைவிட பெரியதுகளின் முன் சிறியதுகள்தான்.
நல்ல தத்துவக் கவிதை.பிரமிப்புடன் வாழ்த்துகள் அமரன்.

யவனிகா
12-02-2008, 12:08 PM
எது பெரிதோ அது பெரிதாகத்தானிருக்கிறது
எது சிறிதோ அது சிறிதாகத்தானிருக்கிறது....
ஆனால் சில நேரங்களில் சில சிறிதுகள்...தங்களை பெரிதாக நினைத்துக்கொள்கின்றன....சில பெரிதுகள்...மிகப் பெரிதுகளாக கர்வம் கொள்கின்றன...ஆனால் எல்லாமே அதைவிட பெரியதுகளின் முன் சிறியதுகள்தான்.
நல்ல தத்துவக் கவிதை.பிரமிப்புடன் வாழ்த்துகள் அமரன்.

அண்ணா...முதுகைப் பாத்தாச்சு(தலை சுத்தி)...இப்ப திருப்தியா...?

சிவா.ஜி
12-02-2008, 12:14 PM
அண்ணா...முதுகைப் பாத்தாச்சு(தலை சுத்தி)...இப்ப திருப்தியா...?

ஏதோ நம்மால முடிஞ்சது...நம்ம பங்குக்கு.....உங்க முதுகையே உங்களை பாக்க வெச்சுட்டமில்ல....ஹா...ஹா...ஹ்ஹா

ஷீ-நிசி
12-02-2008, 01:41 PM
ஒரு கட்டிடத்துக்கும் கவிதையா...

மொட்டை மாடியிலிருந்து எழுதியதோ?! வாழ்த்துக்கள் அமரா!

அமரன்
12-02-2008, 02:53 PM
முகங்கள் முடிந்த
அகண்ட வெளியில்
நசியும் ஆணவ
ஆர்ப்பாட்டம்
இறுதியில்.

ஒன்று என்றாலே பலசமயங்களில் நிமிர்வு தானாக வருகிறது. அது கர்வமா? பெருமையா? எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நன்சுதானே. ஊக்கசக்திக்கு மனமார்ந்த நன்றி நாகரா.

அமரன்
12-02-2008, 03:00 PM
வரவிருந்த போது
வரவேற்ப்பிருந்தது!
வயது கடந்தபோது
வாழ்க்கை கசந்தது.!!
ஏற்க மறுத்தாலும்
எதார்த்தம் இனிக்கிறது
எனக்கு மட்டுமா..?
எல்லோருக்கும்தான்...!!

எழுதும் எனக்குள்ள உரிமை
வாசிக்கும் நெஞ்சங்களும் அதே அளவில்..
உனது கோணமும் நன்றே..
ஏற்புடையதல்ல என்பதை ஏற்கிலேன்..
அப்படியும் சிலருண்டு வையகத்தில்..
என் நெருக்கத்திலும் ஒருவர் அதேபோல..
நன்றி சுகந்தா..

அமரன்
12-02-2008, 03:03 PM
உள்ளே
நசுங்கிப் போன...நான்...
தாங்கி நிற்கும் இன்னும்
என்னை செருக்குடன்...
அருமையான கவிதை வாழ்த்துக்கள் ஆமரன்.
ரொம்ப நன்றிங்க..
அதென்ன அமரனை ஆமரனாக்கிவிட்டீர்கள். அவ்வளவுக்கு அறுவையா கவிதை:)

அமரன்
12-02-2008, 03:06 PM
எது பெரிதோ அது பெரிதாகத்தானிருக்கிறது எது சிறிதோ அது சிறிதாகத்தானிருக்கிறது....ஆனால் சில நேரங்களில் சில சிறிதுகள்...தங்களை பெரிதாக நினைத்துக்கொள்கின்றன....சில பெரிதுகள்...மிகப் பெரிதுகளாக கர்வம் கொள்கின்றன...ஆனால் எல்லாமே அதைவிட பெரியதுகளின் முன் சிறியதுகள்தான்.
நல்ல தத்துவக் கவிதை.பிரமிப்புடன் வாழ்த்துகள் அமரன்.

ஷாக்'ரட்டீஸ் பின் ஊக்கம்.. நன்றி சிவா..

அதது தந்தன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. வெளியே இருந்து பார்பவர்களதான் சிரிதென்றும் பெரிதென்றும், எண்களால் ஏறு/இறங்கு வரிசைபடுத்தியும் இமசிக்கிறார்கள்..

சாலைஜெயராமன்
12-02-2008, 03:21 PM
முதலும் முடிவும்
மூலவனின் கையில்
முடிவைத் தேடி
முதலை இழந்தோம்
ஆக்கிய முதலை
ஆணவம் அழிக்க
மானம் இழந்தனிலை
மனிதப்பிறப்பினுக்கு
படிகள் கடந்து
பகலவன் முகத்தில்
பளிச்சென்று நின்றால்
இழந்த முதலும் ஈடுகட்டி
இல்லம் வரும்
மூலவனும் முகம் பார்த்து
முக்தியெனும் முதலை
மும்முறை ஈவான்
கேடு கெட்ட இப்பிறப்பின்
பாடுகள் பலவும்
பாவம் என்பது
பகல்போல் தெரியும்
கோடிகண்ட கோமானின்
கோதறு அமுதத்தால்
முதலும் வட்டியும்
முழுதாய்ப் பெறலாம்

அகத்தில் கட்டி முடிக்க வேண்டிய பிரம்மாண்ட கட்டங்களை புறத்தில் கட்டி அழகு பார்க்கிறோம். ஆனால் நம்முள்ளே மூலம் இருக்கும் பாதைக்கு படிகண்டால் முக்தி நிலை என்ற ஒன்றை உணரலாம். படியினை வர்ணித்தவுடன் எழுந்த கவிதை வரிகள். உங்களுடைய கருத்துக்களோ தொடர்புடையதாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். கூர்ந்து நோக்கவும். இதில் ஒரு செய்தி இருக்கிறது.

பூமகள்
12-02-2008, 03:32 PM
சூரியனைச் சூடிக்கொள்ள

நட்டு வைத்த ஏணிபோல
அடுக்கு மாடிக் கட்டம்.
முகிலைக் கிழித்து
வானம் தொட்டு
விண்மீன் பறிக்க
அமைத்த கட்டிடமுற்றம்...!

முதற்றளத்தின் பிரவேசிப்பில்
இறுமாப்பின் பிரமாண்டம்
பிரமிப்பாக
நரம்பெல்லாம் பரவுகிறது..
தரைத்தளம் தாண்டி
கண் மேல பார்க்க
உடல் சிலிர்த்து
சில்லிடுகிறது..!

படிப்படியாய்
மேல் நோக்கிய தளங்களில்
சுவடுகளைப் பதிக்கிறேன்.
பதம் பட்டு
சுற்றம் தொட்டு
கண் பரவிச் செல்கிறேன்..!

படிகளின் முடிவில்
விரிந்த பரந்த வெளியில்
ஆழ மூச்சை உள்ளிழுத்து
ஆசுவாசப் படுத்துகிறேன்.
இறுதி தளம்
சடுதியில் வர
தகுந்த இடம்
வந்ததென நுரையீரல்
காற்றை விடுதலையாக்குறேன்..!

இப்போது...
முதலாய் இருந்தது
நசுங்கிய நிலையில்
தளங்களை தாங்கியபடி
இறுதியாக தோன்றுகிறது..
மெல்ல கீழ் பார்க்கிறேன்..!
வந்த சுவடுகள் துடைத்திருக்க
தரைத்தளம் தோன்றுகிறது
சிறுபுள்ளியின் கால் பாகமாய்...!

--------------
அசர வைத்த கவிதை.
பலதையும் சிந்திக்க வைத்த கவிதை. அது தான் உங்களின் கவிதைகளின் சிறப்பம்சம்.
வாழ்த்துகள் தொடருங்கள். :)

இளசு
12-02-2008, 09:59 PM
புரியும் வரை எதுவும் கடினம்
வெல்லும் வரை எதுவும் பெரிது
உயரும்வரை எதுவும் மேலே..

தன்னிலை மாறும்போது தான் சார்ந்த சூழல் மதிப்பீடும் மாறும்..

இதுவும் ஒரு வகை '' தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி''!!!

வாழ்த்துகள் அமரா!

அமரன்
14-02-2008, 05:02 PM
எனது ஆக்கத்துக்கு ஊட்டமிட்டு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி. ஜெயராமன் அய்யாவின் கொலுசுக்கவி பொருத்தமாக அமைந்து ஜொலிக்கிறது.