PDA

View Full Version : வரலாற்றில் இன்று-அச்சலா.Pages : [1] 2 3

அனுராகவன்
12-02-2008, 04:28 AM
வரலாற்றில் இன்று

நண்பர்களே!! இந்த பகுதில் இதே நாளில் நடந்த அனைத்து வரலாற்று நிகழ்ச்சிகளை காண உதவுகிறேன்..பிப்ரவரி 12/02/08

1) 1957 - வைரத்தை விட மிகக் கடினமாக போராஸான் எனும் பொருள் உருவாக்கப்பட்டதாக அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது.

2) 1809 - அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபர்களில் Abraham lincoln ஒருவராக திகழ்ந்ததால் அவர் பிறந்த தினம் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது
1892 ஆம் ஆண்டு.

3) டார்வின் பிறப்பு 1809 .

4) ஆபிரகாம் லிங்கன் பிறப்பு 1809.


-அனு

aren
12-02-2008, 04:57 AM
டார்வினும் லிங்கனும் ஒரே வருடத்தில் பிறந்தவர்களா?

அனுராகவன்
12-02-2008, 05:06 AM
டார்வினும் லிங்கனும் ஒரே வருடத்தில் பிறந்தவர்களா?

ஆமாம் ஆரென் அவர்களே..!1
இருவரும் ஒரே ஆண்டுதான்..
ஏன் சந்தேகமா..!!,ஆச்சிரியமா!!?
டார்வின், லிங்கனின் வாழ்க்கை குறிப்பை பாருங்கள்..
அப்பரம் வாருங்கள்..!
நான் சொல்வதில் தவறு இருப்பதாக சொல்கிறீகளா....
ம்ம் என் நன்றி!!

அனுராகவன்
13-02-2008, 10:48 AM
பிப்ரவரி 13/02/08

1960 - பிரான்ஸ் வெற்றிகரமாக சகாரா பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையைச் செய்தது. அதன் மூலம் அது உலகின் நான்காவது அணுவல்லரசானது அதுவரை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய மூன்று மட்டுமே அணுவாற்றலைப் பெற்றிருந்தன.

1976 - இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் வரதட்சணை வாங்குவதும், கொடுப்பதும் கூடாதென்று தடை விதிக்கப்பட்டது.

1879 - சரோஜினி நாயுடு பிறப்பு .

அனுராகவன்
14-02-2008, 10:42 PM
பிப்ரவரி 14/02/08

1. கி.பி. 498 - செயிண்ட் வேலன்டைன் தினம்.

2. 1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

3. 1946 - பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் எனியாக் - ENIAC என்ற கணினி பல மணி நேரம் பிடிக்க கூடிய கணக்குகளை சில விநாடிகளில் செய்து முடித்தது.

4. 1989 - இந்தியாவின் போபால் நகரில் 1984 ல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய Union carbide நச்சுக் கசிவு வழக்கில் இந்திய அரசுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு தர ஒப்புக் கொண்டது Union carbide நிறுவனம்.

அனுராகவன்
16-02-2008, 05:55 AM
பிப்ரவரி 16/02/08

1956 - மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

| 1980 - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.

1980 - உலகிலேயே மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் பிரான்சில் ஏற்பட்டது. Lyon நகரிலிருந்து வடக்கில் பாரிசை நோக்கி 175 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் நின்று விட்டன.

அறிவியல் அறிஞர் கலிலியோ பிறப்பு 1564

அனுராகவன்
17-02-2008, 03:58 AM
பிப்ரவரி 17/02/08

1863 - செஞ்சிலுவைச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

1942 - சிங்கப்பூர் ஜப்பானியரிடம் சரணாகதி அடைந்தது. இந்தியப் படையினர் கேப்டன் மோகன் சிங் தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவினர். உலக வரலாற்றிலேயே போர்க் கைதிகள் தனியாக ஒரு படைப் பிரிவை அமைத்தது அதுவே முதல் முறை.

மாதவர்
17-02-2008, 05:18 AM
நல்லதகவல்கள் வாழ்த்துக்கள்

அனுராகவன்
19-02-2008, 04:00 PM
நல்லதகவல்கள் வாழ்த்துக்கள்

நன்றி மாதவர்..,
நீங்களும் சேர்ந்து பல தாங்க..

அனுராகவன்
20-02-2008, 11:32 PM
பிப்ரவரி 20/02/08

1) 1947 - லார்ட் மவுண்ட் பேட்டன் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்டார்.

2) 1962 - John Glenn என்ற அமெரிக்க விண்வெளி வீரர் Friendship 7 Mercury என்ற விண்கலத்தில் ஏறி 4 மணி நேரம் 55 நிமிடங்களில் உலகை மூன்று முறை வலம் வந்தார். அவரே உலகை முதன்முதலில் வலம் வந்தவர்.

3) தமிழ்த் தாத்தா ஈ.வே. சுவாமிநாதர் பிறப்பு

4) இந்திரஜித் குப்தா இறப்பு

5) சத்தியாகிரகப் போராட்டம் (ஈழம்) 1989

aren
20-02-2008, 11:35 PM
பிப்ரவரி 20/02/08


3) தமிழ்த் தாத்தா ஈ.வே. சுவாமிநாதர் பிறப்பு *

4) இந்திரஜித் குப்தா இறப்பு

[/B][/COLOR]

எந்த வருடம் என்றும் சொல்லுங்களேன்

அனுராகவன்
21-02-2008, 11:13 PM
பிப்ரவரி 21/02/08

1851 - திருடர்களோ அன்னியர்களோ நுழைந்தால் மணி அடித்து எச்சரிக்கை செய்யும் Burglar ''s alarm முதன்முதலாக அறிமுகம் ஆனது அமெரிக்காவின் பாஸ்ட்டன் நகரில்.

1995 - சிக்காகோவைச் சேர்ந்த கோடீஸ்வரர் Steve Fossett ஒரு பலூனில் தனி மனிதனாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து சாதனை படைத்தார்.

அனுராகவன்
22-02-2008, 11:31 PM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 22

1914 - தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு சிறை சென்ற 16 வயது வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் மரணம் அடைந்தார்.

1995 - சிக்காகோவைச் சேர்ந்த கோடீஸ்வரர் steve fossett ஒரு பலூனில் தனி மனிதனாக பசிபிக் பெருங்கடலைக் கடந்து சாதனை படைத்தார்.

தில்லையாடி வள்ளியம்மை பிறப்பு 1898

மௌலானா அபுல்கலாம் ஆசாத் நினைவு 1958

அனுராகவன்
23-02-2008, 06:29 AM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 23


1868 - அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்க விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முதல் அதிபர் Andrew Johnson .

1954 - Polio எனப்படும் இளம்பிள்ளை வாதத்திற்கு எதிராக உலகிலேயே பெரிய அளவிலான தடுப்பூசி இயக்கம் அமெரிக்காவின் pittsburg நகரில் தொடங்கியது.

ஆங்கிலப் பெருங்கவிஞர் John Keats 1821 ல் மரணம் அடைந்தார்.

அனுராகவன்
24-02-2008, 03:54 AM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 24

1981 - இளவரசர் சார்ல்ஸ் இளவரசி டயானவின் திருமண ஒப்பந்தத்தை அறிவித்தது பக்கிங்ஹாம் அரண்மனை.

சுமார் 186,000 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சத்தின் பெரிய Magellan மேகத்திலுள்ள ஒரு நட்சத்திரம் வெடித்துக் சிதறியது. அப்போது புறப்பட்ட அதன் ஒளி 1987 ஆம் ஆண்டு தான் பூமியை வந்தடைந்தது.

அனுராகவன்
25-02-2008, 09:20 AM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 25

1964 - 22 வயதே நிரம்பிய cassius clay என்ற குத்துச் சண்டை வீரர் முதல் முறையாக உலக Heavy weight விருதை வென்றார்.

1988 - இந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்டது.

மதவெறியரால் இராணி மரியா படுகொலை - 1995

எலும்புருக்கி நோய் எதிர்ப்பு நாள்

அனுராகவன்
26-02-2008, 10:24 AM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 26

1935 - ரேடாரை Robert Waston watt என்பவர் கண்டுபிடித்தார். S . M . Tucker என்பவர்தான் அதற்கு ரேடார் என்ற பெயரைச் சூட்டினார்.

1993 - நியூயார்க்கில் உலக வர்த்தக மையக் கட்டடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அந்தத் தாக்குதலை நடத்திய Sheik Omar AbdUl Rahman -க்கு வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. அதே உலக வர்த்தக மையக் கட்டடங்களைத் தான் 2001 செப்டம்பர் 11-ம் தேதி தாக்கித் தகர்த்தனர் தீவிரவாதிகள்.

பேரறிஞர் பா.வே. மாணிக்கனார் பிறப்பு

அனுராகவன்
27-02-2008, 11:09 AM
வரலாற்றில் இன்று

பிப்ரவரி 27

1879 - Saccharin என்ற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. I Remsem , C . Fahlberg ஆகிய இருவரும் அதனைக் கண்டுபிடித்தனர்.

1955 - சிங்கப்பூரில், கடுமையான வேலை நிறுத்தத்தைத் தொடங்கியது சிங்காப்பூர் பஸ் ஊழியர் சங்கம். Paya lebar பஸ் நிறுவன ஊழியர்கள் அதில் ஈடுபட்டனர்.

ஆங்கில திரைப்பட நடிகை Elizabeth Taylor 1932 ல் பிறந்தார்.

தூத்துக்குடிப் பவளத் தொழிலாளர் போராட்டம் 1908

அனுராகவன்
28-02-2008, 11:37 PM
வரலாற்றில் இன்று
பிப்ரவரி 28

1928 - இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது.

1948 - பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை விட்டு வெளியேறின.

1984 - ஆங்கில பாப் பாடகர் Michael Jackson . Los Angeles - ல் நடைபெற்ற GrammY விருது வழங்கும் விழாவில் எட்டு விருதுகளை வென்று முந்திய சாதனையான முறியடித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அதிபரான பாவு ராஜேந்திரப் பிரசாத் 1963 ல் மரணம் அடைந்தார்.

தேசிய அறிவியல் நாள்

க.கமலக்கண்ணன்
29-02-2008, 01:51 AM
அருமை அனு இதை பார்க்க அந்த தொலைகாட்சியை ரொம்ப நேரம் பார்க்க வேண்டிஇருக்கும் அதை தவிர்க்க வைத்ததற்கு நன்றி...வரலாற்றில் இன்று
பிப்ரவரி 28

1928 - இராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது.

1948 - பிரிட்டிஷ் படைகள் இந்தியாவை விட்டு வெளியேறின.

1984 - ஆங்கில பாப் பாடகர் Michael Jackson . Los Angeles - ல் நடைபெற்ற GrammY விருது வழங்கும் விழாவில் எட்டு விருதுகளை வென்று முந்திய சாதனையான முறியடித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அதிபரான பாவு ராஜேந்திரப் பிரசாத் 1963 ல் மரணம் அடைந்தார்.

தேசிய அறிவியல் நாள்

தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...

அனுராகவன்
29-02-2008, 01:59 AM
ஆமாம் கமலகண்ணா...
தொலைக்காட்சி கண்ணுக்கு கெடுதி..
அதுவும் சிறுகுழந்தைக்கு சொல்லவே வேண்டாம்..
என் நன்றி உங்களுக்கு

அனுராகவன்
01-03-2008, 01:34 AM
வரலாற்றில் இன்று

மார்ச்-01

1) 0772 -போ ட்யூ-இ எனபவர் ஒரு சீன கவிஞர் இதே நாளில் பிறந்தார்.
அவர் Hang-tsjow நாட்டில் கவனராகவும் இருந்தவர்.

2) 1980- Shahid Afridi (பாகிஸ்தான்) கிரிகெட் போட்டியில் 37 பந்துகளில் சதத்தை ஒரு நாள் போட்டியில் பதிவு செய்தார்.

3) மு.க.ஸ்டாலின் பிறந்த தினம் இன்றே..

சுகந்தப்ரீதன்
01-03-2008, 07:46 AM
2) 1980- Shahid Afridi (பாகிஸ்தான்) கிரிகெட் போட்டியில் 37 பந்துகளில் சதத்தை ஒரு நாள் போட்டியில் பதிவு செய்தார்.
அனு அக்கா...! இது நடந்தது 1990 என்று நினைக்கிறேன்..:fragend005:

மனோஜ்
01-03-2008, 08:11 AM
தகவல்களுக்கு நன்றி அனு அக்கா
தொடர்ந்து தாருங்கள்

அனுராகவன்
02-03-2008, 12:46 AM
அனு அக்கா...! இது நடந்தது 1990 என்று நினைக்கிறேன்..:fragend005:

நன்றி தம்பி....
தொடர்ந்து வாருங்கள்

அனுராகவன்
08-03-2008, 05:18 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 8

1917 - சரியான உணவு கொடுக்கவில்லை என்பதற்காக ரஷ்யாவில் நெசவுத் தொழிற் சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அந்த வேலை நிறுத்தம் மற்ற நகரங்களுக்கும் பரவியது. அந்நிகழ்ச்சியே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது.

1978 - பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் புட்டோவிற்கு லாகூர் உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவர் உயிரைக் காக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் பயனின்றி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அனைத்துலக உழைக்கும் மகளிர் நாள் அறிவிப்பு 1857

க.கமலக்கண்ணன்
08-03-2008, 07:54 AM
உங்களைப் போல செய்திகள் என்னால் தர முடியவில்லையே என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அனு அனுதான் நான் நான்தான்...

அனுராகவன்
09-03-2008, 07:11 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 9

1832 - அரசியலில் ஈடுபடப் போவதாக Abraham Lincon அறிவித்தார். Illinois மாநிலத் தேர்தலில் நின்று தோல்வியைத் தழுவினார். அடுத்த முப்பதாண்டுகளில் அவர் அமெரிக்காவின் அதிபரானார்.

1451 - உலக வரைபட வல்லுநரான Amerigo Vespucci இத்தாலியில் பிறந்தார். அவரது பெயர்தான் அமெரிக்காவுக்குச் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

க.கமலக்கண்ணன்
09-03-2008, 09:10 AM
எப்படி அனு இந்த செய்திகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்குது...

அனுராகவன்
12-03-2008, 03:09 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 11

1302 - ஷேக்ஸ்பியரின் படைப்புக்களுள் ஒன்று ரோமியோ & ஜூலியட். அந்தப் படைப்பின்படி ரோமியோவும், ஜூலிட்டும் திருமணம் செய்து கொண்டனர்.

1993 - அமெரிக்காவின் முதல் பெண் தலைமைச் சட்ட அதிகாரி என்ற பொறுப்பை Janet Reno வுக்கு ஒருமனதாக வழங்கியது அமெரிக்க செனட் சபை.

1955 - பெனிசிலினைக் கண்டுபிடித்த பிரிட்டிஷ் விஞ்ஞானி Alexander Fleming காலமானார். 1945 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

அனுராகவன்
13-03-2008, 12:21 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 12

1923 - டாக்டர் Lee DeForest என்பவர் மௌனப் படச்சுருளில் எப்படி சப்தத்தைச் சேர்க்கலாம் என்பதை செய்து காட்டினார். அதுவரை ஊமைப் படங்களே தயாரிக்கப்பட்டு வந்தன.

| 1930 - பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மகாத்மா காந்தி தண்டி யாத்திரையைத் தொடங்கினார்.

1960 - கெய்ரோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ''வீரபாண்டிய கட்டபொம்மன்'' படம் இடம் பெற்றது. ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களின் சிறந்த நடிகர் என்ற விருது சிவாஜி கணேசனுக்குக் கிடைத்தது.

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இன்சாட் 4 பி வெற்றிகரமாக பூமியைச் சுற்றி வருகிது. டிடிஎச், தகவல் தொடர்புக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் ..

prady
13-03-2008, 10:22 PM
தகவல்கள் அற்புதம். உறுதிப்படுத்திவிட்டு தருகிறீர்கள் என்பதால் நம்பிக்கையுடன் நாமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அனுராகவன்
13-03-2008, 11:55 PM
வரலாற்றில் இன்று

மார்ச் 13


1781 - Sir William Herschel எனும் பிரிட்டிஷ் வானியலார் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்.

1988 - உலகிலேயே மிக நீளமான கடலடிச் சுரங்க ரயில் பாதையான செய்க்கான் சுரங்கப்பாதை ரயில் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது.

1992 - 80 ஆண்டுகளுக்கு மேல் வெளி வந்து கொண்டிருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பிராவ்தா தனது பணியை முடித்துக் கொண்டது.

அனுராகவன்
13-03-2008, 11:56 PM
தகவல்கள் அற்புதம். உறுதிப்படுத்திவிட்டு தருகிறீர்கள் என்பதால் நம்பிக்கையுடன் நாமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நன்றி பிராடி அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்
என் நன்றி

அனுராகவன்
14-03-2008, 10:05 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 14

1931 - இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா முதன் முதலாகத் திரையிடப்பட்டது.

1985 - 100 வது டென்னிஸ் விருதை வென்றார் மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova ). அதற்கு முன் Jimmy Connors , Chris Evert Lloyd ஆகிய இருவர் மட்டுமே அந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் மாமேதைகளில் ஒருவராகக் கருதப்படும் Albert Einstein 1879 ஆம் ஆண்டு பிறந்தார்.

நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு நிலம் எடுப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி

அனுராகவன்
15-03-2008, 08:03 AM
வரலாற்றில் இன்று

மார்ச்15

கி.மு. 44 ஆண்டு: Shakespeare - ன் Julius Ceasar நாடகத்தைப் படித்தவர்களுக்கு ஒரு பிரபலமான வசனம் நினைவிலிருக்கும். அந்த வாசம் பேசப்பட்ட நாள் இன்று. ரோமானியப் பேரரசனும் சர்வாதிகாரியுமான ஜூலியஸ் சீசர் இன்று சதிகாரர்களால் குத்திக் கொல்லப்பட்டர்.

1937 - உலகின் முதல் ரத்தச் சேமிப்பு வங்கி சிக்காகோவில் Cook County மருத்துவமனையில் தொடங்கியது.

1938 - சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.

அனைத்துலக நுகர்வோர்

பாதுகாப்பு நாள்

உலக ஊனமுற்றோர் நாள்

அனுராகவன்
16-03-2008, 05:34 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 16

1968 - வியட்நாமில் நிகழ்ந்தது இந்தக்கோரச் சம்பவம். தலைநகர் சைகோனுக்கு வட கிழக்கில் மைலாய் கிராமத்தின் மக்கள் தொகை 525. அக்கிராமத்தில் அமெரிக்காவின் 11 - வது காலாட்படை புகுந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 504 பேரைக் கொன்று குவித்தது. இருபது நிமிடங்களில் நடந்து முடிந்த அந்தச் சம்பவம் மைலாய் படுகொலை என்று வருணிக்கப்படுகிறது.

2001 - தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு 2000 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருதை வழங்கிக் கௌரவித்தது இந்தியா.

அனுராகவன்
17-03-2008, 04:44 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 17

1963 - பாலியில் உள்ள Agung எரிமலை வெடித்ததில் 11 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்

1992 - தென்னாப்பிரிக்கக் கறுப்பினத்தவருக்கு விடிவு ஏற்பட்ட நாள். கறுப்பினத்தவர்களுக்கு சம உரிமை வழங்கும் அரசியல் சட்டதிருத்தத்திற்கு வெள்ளையினத் தென்னாப்பிரிக்கர்கள் ஆதரவளித்தனர்.

மாக்சிம் கார்க்கி பிறப்பு

meera
17-03-2008, 10:52 AM
நன்றி அனு.

இந்த தகவலை தொடர்ந்து தர வேண்டுகிறேன் + வாழ்த்துகிறேன்.

க.கமலக்கண்ணன்
17-03-2008, 10:58 AM
பாசமிகு அனு நானும் அவ்வவாறே

பாசத்துடன் வேண்டுகிறேன்...

அனுராகவன்
18-03-2008, 12:26 AM
நன்றி அனு.

இந்த தகவலை தொடர்ந்து தர வேண்டுகிறேன் + வாழ்த்துகிறேன்.

நன்றி மீரா அவர்களே!!
உங்கள் ஊக்கத்திற்க்கு என் நன்றி

அனுராகவன்
18-03-2008, 12:26 AM
பாசமிகு அனு நானும் அவ்வவாறே

பாசத்துடன் வேண்டுகிறேன்...

நன்றி கமலகண்ணன் அவர்களே!!
என் வாழ்த்துக்கள்!!
தொடர்ந்து வருக..

அனுராகவன்
19-03-2008, 03:52 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 18

1913 - கிரீசின் மன்னன் முதலாம் ஜார்ஜ் கொலை செய்யப்பட்டார்.

1965 - விண்ணில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார் ரஷ்ய விண்வெளி வீரர் Alexei Leonov . விண்கலத்திற்கு வெளியே இருபது நிமிடங்களை அவர் கழித்தார்.

1990 - கிழக்கு ஜெர்மனியின் முதல் சுதந்திரத் தேர்தல் நடைபெற்றது.

பொதுவுடமைக் கட்சி அறிக்கை வெளியீடு 1848

அனுராகவன்
19-03-2008, 04:37 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 19

1932 - உலகிலுள்ள பெரிய இரும்புப் பாலங்களில் ஒன்றான சிட்னி துறைமுகப் பாலம் போக்குவரத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போரில் தோல்வி மேல் தோல்வி கண்ட ஹ’ட்லர் எல்லா முனைகளிலும் பின்வாங்கி வரும் படைகளுக்கு அப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகள், உணவுப்பொருள் களஞ்சியங்கள், விளைநிலங்கள் ஆகியவற்றை அடியோடு அழித்துத் தீக்கிரையாக்கி விட்டு வரும்படி ஆணையிட்டார்.

உலகத் தந்தையர் நாள்.

அனுராகவன்
20-03-2008, 06:48 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 20

1602 - சரித்திரப் புகழ் பெற்ற டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.

1922 - பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் யெங் இந்தியா என்ற சஞ்சிகையில் கட்டுரைகள் எழுதியதற்காக காந்தியடிகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1992 - உலகப் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

1727 - புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த sir Isaac Newton லண்டனில் காலமானார்.

ஐசக் நியூட்டன் இறப்பு 1927 ..

miindum
20-03-2008, 10:52 AM
1799 முழக்கமிட்டு வெள்ளையரை எதிர்த்த வீரபான்டிய கட்டபொம்மு நாயக்கரும் தளபதி கட்டைய குடும்பர் சுந்தரலிங்க தேவேந்திரனாரும் இறந்த வருடம் ஆகும்.

ஆர்.ஈஸ்வரன்
20-03-2008, 11:20 AM
பயனுள்ள பகுதி, தொடருங்கள்.

அனுராகவன்
22-03-2008, 12:05 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 21

*1566 - மன்னன் எட்டாம் ஹென்றியின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் பாத்திரமாக இருந்த Canterberry Arch Bbishop Thomas Cranmer ஐ துரோகி என்று குற்றஞ்சாட்டி சிறையிலடைத்து உயிரோடு எரிக்கவும் ஆணையிட்டார் ராணி முதலாம் மேரி. புரோட்டஸ்டன்டு பிரிவினரை அடியோடு அழித்து கத்தோலிக்கர்களின் கை ஓங்கச் செய்ய ராணி எடுத்த நடவடிக்கை அது.

*1994 - Schindler ''s List என்ற படத்திற்காக சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார் ஆங்கிலத் திரைப்பட உலகின் மிகச் சிறந்த இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg ).

* உலகக் காடுகள் நாள்

அனுராகவன்
22-03-2008, 12:07 AM
1799 முழக்கமிட்டு வெள்ளையரை எதிர்த்த வீரபான்டிய கட்டபொம்மு நாயக்கரும் தளபதி கட்டைய குடும்பர் சுந்தரலிங்க தேவேந்திரனாரும் இறந்த வருடம் ஆகும்.
நன்றி நண்பரே!!
உங்கள் பகிர்வுக்கு என் நன்றி..
தொடர்ந்து தாருங்கள்!!
என் நன்றி!!

அனுராகவன்
22-03-2008, 12:08 AM
பயனுள்ள பகுதி, தொடருங்கள்.
நன்றி ஆர்.ஈஸ்வரன் அவர்களே!!
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..!!

அனுராகவன்
22-03-2008, 08:39 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 22

1457 - உலகிலேயே முதன் முதலில் புத்தக வடிவில் பதிப்பிக்கப்பட்ட நூல் பைபிள். Gutenberg Bible வெளியானது.

1888 - கால்பந்தாட்டத்தை உலகுக்குத் தந்த நாடு இங்கிலாந்து. அங்கு ஆங்கில கால்பந்து லீக் ஆரம்பிக்கப்பட்டது.

1903 - நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் நிலவிய கடுமையான வறட்சியால் நயாகரா நீர்வீழ்ச்சி நீரில்லாமல் காட்சி தந்தது.

உலகக் குடிநீர் நாள்

சுகந்தப்ரீதன்
22-03-2008, 10:36 AM
உலகக் குடிநீர் நாள்

குடிநீருக்காக ஒருநாளா...?
புதிய தகவல் எனக்கு..!!
பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா..!!

அனுராகவன்
23-03-2008, 05:33 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 23

கி.மு. 687 - சுமார் 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அபூர்வமான வானியல் நிகழ்வு. செவ்வாய் கிரகம் பூமியுடன் மோதுவது போல மிக அருகில் நெருங்கி வந்ததாம். இரண்டு கோள்களின் ஈர்ப்பு விசை காரணமாக இரண்டின் சுழற்சியும் சுற்று வேகமும் நிலை தடுமாறியது. இந்த இயற்கை நிகழ்வால் வானில் பெரிய இடி முழுக்கமும் வெடிச்சத்தமும் கேட்டது. ஆஸ்திரியப் படை வீரர்கள் 1,85,000 பேர் அந்த இடத்திலேயே கருகி மாண்டதாக Book of Kings & Chronicles என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே இரவில் ''புவியே அதிர்ந்தது" விண்மீன்கள் மழை போலப் பொழிந்தன என்று Bamboo Books என்ற சீனப் புத்தகத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது.

1933 - ஜெர்மனியின் சர்வாதிகாரியானார் Adolf Hitler .

1998 -உலக வானியல் ஆராய்ச்சி

அனுராகவன்
25-03-2008, 03:46 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 24

1947 - லார்ட் மவுண்ட்பேட்டன் (Lord Mountbatten ) இந்தியாவின் வைஸ்ராயாகப் பதவியேற்றார்.

1989 - மிகமோசமான சுற்றுச் சூழல் கேடு விளைந்தது அலாஸ்கா கடற்பகுதியில். சுமார் 1. 3 மில்லியன் பீப்பாய் எண்ணெயைச் சுமந்து கொண்டு சென்ற Exxon ValdeZ கப்பல் தரைதட்டியது. 11 மில்லியன் Gallon எண்ணெய் கடலில் கலந்தது. சுமார் 800 கிலோ மீட்டர் கடற்கரை நாசமானது.

1999 - யூகோஸ்லாவியாவுக்கு எதிராக ஆகாயத் தாக்குதலை ஆரம்பித்தது NATO கூட்டணி. 50 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ஒரு சுதந்திர நாட்டை நேட்டோ தாக்கியது.

அனுராகவன்
26-03-2008, 08:06 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 26

1979 - வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Camp David உடன்பாடு ஏற்பட்டது. எகிப்திய அதிபர் சதாத்தும் இஸ்ரேலியப் பிரதமர் பெகினும் வெள்ளை மாளிகையில் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய 31 ஆண்டு பகை முடிவுக்கு வந்தது.

1992 - தென் கொரியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அதிபர் நோ டே வூவின் ஆளுங்கட்சியான ஜனநாயக லிபரல் கட்சி படுதோல்வி அடைந்தது.

வங்காள தேசம் பிரிந்த நாள் 1971

அனுராகவன்
27-03-2008, 06:32 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 27

1899 - வானொலி ஒலிபரப்பு மார்க்கோனியால் முதன்முதல் உலக அளவில் சோதித்துப் பார்க்கப்பட்டது.

1931 - நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு மிக உயரிய Legion of Honour விருதை வழங்கிக் கௌரவித்தது பிரான்ஸ்.

1977 - . பான் அமெரிக்கன் விமானமும் கே.எல்.எம் - 747 விமானமும் Canary தீவுகளில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. விமான விபத்து வரலாற்றில் மிக அதிகமான உயிர்களைக் குடித்த விபத்து.

உலகப்புகழ் பெற்ற வால்ட் விட்மன் 1892 ல் காலமானார். "புல்லின் இதழ்கள்" எனும் அவரது கவிதை அமெரிக்கக் கவிதையுலகில் புதிய திருப்பத்தை உண்டுபண்ணியது.

உலக நாடகக் கலை நாள்

அனுராகவன்
28-03-2008, 06:40 AM
வரலாற்றில் இன்று
மார்ச் 28

1930 - Constantinople என்ற பெயரை இஸ்தான்புல் என்று மாற்றினர் துருக்கியின் புதிய தேசியவாதிகள். அதே சமயம் Angora என்ற பெயர் Ankara என்று மாறியது.

1986 - ஆப்பிரிக்கப் பசிக் கொடுமைக்காக பல்வேறு பிரபலங்கள் ஒன்று கூடி பாடி ஒலிப்பதிவு செய்த We are the World என்ற பாடலை அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை பத்தேகால் மணிக்கு அமெரிக்காவின் 6000 வானொலி நிலையங்கள் ஒரே நேரத்தில் ஒலிபரப்பின.

ஓவியன்
28-03-2008, 07:10 AM
1986 - ஆப்பிரிக்கப் பசிக் கொடுமைக்காக பல்வேறு பிரபலங்கள் ஒன்று கூடி பாடி ஒலிப்பதிவு செய்த We are the World என்ற பாடலை அமெரிக்க கிழக்கு நேரப்படி காலை பத்தேகால் மணிக்கு அமெரிக்காவின் 6000 வானொலி நிலையங்கள் ஒரே நேரத்தில் ஒலிபரப்பின[/COLOR][/B].

இதுதானா அந்த பாடல் அனு...??? :confused:

http://www.youtube.com/watch?v=WmxT21uFRwM

kavitha
28-03-2008, 10:43 AM
நல்ல முயற்சி அனு.
இதே போல் ஜெயா செய்திகளிலும் வரும். தொடர்ந்து பல அரிய செய்திகளைத்தாருங்கள்

அனுராகவன்
31-03-2008, 02:25 AM
வரலாற்றில் இன்று

மார்ச் 30

1981 அமெரிக்க அதிபர் Ronald Reagan வாஷ’ங்டனில் John W . Hingley என்பவனால் சுடப்பட்டார்.

1993 - இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண்ணை பஸ் ஓட்டுநராக நியமித்தது தமிழக அரசு. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. வசந்தகுமாரிதான் அந்தச் சிறப்பைப் பெற்றவர்.

1853 - உலகப் புகழ் பெற்ற ஓவியர் Vincent van Gogh பிறந்தார்.

வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டம் 1924

அனுராகவன்
03-04-2008, 10:54 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 3

கி.பி - 33 ஆம் ஆண்டில் தமது 33 வது வயதில் ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மரணம் அடைந்த நாள் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

1924 - The Godfather படத்தில் நடித்தவரும், சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை வென்றவருமான Marlon Brando - வின் பிறந்த தினம்

அனுராகவன்
04-04-2008, 08:15 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 4

1905 - இந்தியாவில் Kangra எனுமிடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 370 ஆயிரம் பேர் மாண்டனர்.

1949 - NATO எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பு பிரேசிலை தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

1968 - அகிம்சை போராட்ட வீரரும், அமெரிக்க நீக்ரோக்களின் விடுதலைக்குப் போராடியவரும் அமைத்திக்கான நோபல் பரிசை பெற்றவருமான மார்ட்டின் லூதர் கிங்கை James Earl Ray என்பவன் சுட்டுக் கொன்றான்.

kavitha
04-04-2008, 10:17 AM
1993 - இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு பெண்ணை பஸ் ஓட்டுநராக நியமித்தது தமிழக அரசு. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி. வசந்தகுமாரிதான் அந்தச் சிறப்பைப் பெற்றவர்.
சென்றவருடம் ஒரு பெண் பஸ் ஓட்டுநரைச் சந்தித்து அவரை ஆ வென வாய்பிளக்க அவர் பஸ் ஓட்டுவதை ஆச்சரியமாகப்பார்த்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். தாம்பரம் மாநகரப்பேருந்தில் இப்போதும் பணிபுரியும் அவரின் பெயர் லட்சுமி.

எத்தனை பெரிய அரிய விசயங்கள்.. தினம் தினம் ஒரு புது நாள் தான். இல்லையா அனு? தொடரட்டும் உங்கள் கோர்வைகள். :)

அனுராகவன்
05-04-2008, 04:29 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 5

1921 - போரின் போது கடைபிடிக்க வேண்டிய புதிய வரைமுறைகளை அறிவித்தது அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்.

1971 - வட துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் கனடாவைச் சேர்ந்த Fran Phipps .

1937 - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் போவெல் ( Colin Powell ) பிறந்தார்.

அனுராகவன்
09-04-2008, 03:36 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 8

1861 - போலாந்து வரலாற்றில் முக்கியமான நாள். வார்சா படுகொலை அரங்கேறியது.

1969 - மனிதனுக்கு முதல் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்டது.

கி.மு - 563 ல் புத்த மதத்தைத் தோற்றுவித்த கௌதம புத்தர் பிறந்தார்.

1894 - இந்தியாவின் பிரபலமான வந்தே மாதரம் என்ற சுதந்திரப் பாடலைத் தந்த பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயா காலமானார்.

1929 - சட்டமன்றத்தில் பகத்சிங் குண்டு வீச்சு ..

அனுராகவன்
10-04-2008, 12:03 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 9

1667 - உலகின் முதல் திறந்த வெளி ஓவியக் கண்காட்சி 300 ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் Palais -Royale எனுமிடத்தில் தொடங்கியது.

1963 - அமெரிக்காவின் முதல் கௌரவக் குடிமகன் என்ற பெருமையை வின்ஸ்டன் சர்ச்சில் (winston Churchill ) க்கு வழங்கிச் சிறப்பித்தது அமெரிக்கா. ஆனால் அவர் அப்போது உயிரோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1998 - ஹஜ் பயணத்தின் கடைசி நாளான மெக்காவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 150 யாத்திரிகள் மாண்டனர்.

அனுராகவன்
10-04-2008, 05:09 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 10

1948 - ராணுவ அதிகாரிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று கூறினார் டிவைட் டி ஐசன்ஹோவர் (Dwight D Eisenhower ) ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்த அவரே அமெரிக்காவின் அதிபர் பதவியை ஏற்றார்.

2001 - ஷார்ஜாவில் நடைபெற்ற இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையின் ஜெயசூர்யா ஒரு ஓவரில் முப்பது ஓட்டங்கள் குவித்து உலகச் சாதனை நிகழ்த்தினார்.

அனுராகவன்
11-04-2008, 10:58 PM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 11

பொதுவுடைமைக் கட்சி பிரிந்த நாள்

நாத்திகர் கோவூர் பிறப்பு 1896

இடி அமீனின் எதிர்ப்பாளர்கள் தான்சானியா படைகளின் துணையுடன் இன்று உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவைக் கைப்பற்றினர். அதோடு கொடுங்கோலன் இடி அமீனின் ஆட்சி முடிவுக்கு வந்தது - 1979

ஏழு வயது நிரம்பிய அமெரிக்கச் சிறுமி Jessica Dubroff விமானமோட்டுவதில் ஒரு சாதனை படைக்க விரும்பினார். ஆனால் அவர் ஓட்டிய விமானம் விபத்துக்குள்ளானதில் அவர் மாண்டார். விபத்து நிகழாதிருந்திருந்தால் உலகிலேயே மிக இளைய விமானி என்ற பெருமையை அவர் பெற்றிருப்பார் .

அனுராகவன்
12-04-2008, 08:04 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 12

உலக விண்வெளி நாள்

"காந்தி" திரைப்படத்திற்கு எட்டு ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன

முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது

கொழும்பு துறைமுகம் மீது புலிகள் தாக்குதல் 1996

3,000 கி.மீ. தூரம் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கக்கூடிய அக்னி-3 ஏவுகணை ஒரிஸா மாநிலம் வீலர்ஸ் தீவில் இருந்து விண்ணில் ஏறி வெற்றிகரமாக சோதனை

மனோஜ்
12-04-2008, 09:03 AM
தகவல்களுக்கு நன்றி அனுஅக்கா

mgandhi
12-04-2008, 06:02 PM
நன்றி அனு

அனுராகவன்
13-04-2008, 04:30 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 13

ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919

உ.ம.வி.இ. தமிழ்வழிக் கல்விக்காக மிதிவண்டிப் பயணம் 1999

அனுராகவன்
15-04-2008, 03:04 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 14

அம்பேத்கர் பிறப்பு

1967 - சென்னை மாநிலம் தமிழ்நாடாக மாற்றம்

ஈழத்தில் தந்தை செல்வா தமிழரசு அஞ்சல் சேவை

துவக்கம் 1961

அனுராகவன்
16-04-2008, 04:25 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 16

1905 - Andrew Carnegie 100 ஆண்டுகளுக்கு முன்பு, பத்து மில்லியன் டாலர் கொடுத்து கல்வி மேம்பாட்டுக்கான Carnegie அறக்கட்டளையை நிறுவினார்.

1947 - கெடுபிடிப் போரைக் குறிக்க உதவும் COLD WAR என்ற சொற்றொடர் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் இறப்பு 1995

அனுராகவன்
17-04-2008, 04:03 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 17


1917 - பிரிட்டிஷாரால் அளிக்கப்பட்ட ''கெய்சர் இ ஹ’ந்த்'' என்ற பதக்கத்தை அரசிற்கே திருப்பி அனுப்பும்படி அகமதாபாத்திலுள்ள ஆசிரமத்திற்குக் காந்தியடிகள் கடிதம் எழுதினார்.

| 1964 - உலகத்தைத் தனியாக விமானத்தில் பறந்து கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் ஜெர்ரி மோக் என்பவர்.

2007-அமெரிக்காவின் வெர்ஜ“னியா பல்கலைக் கழகத்தில் தென் கொரியாவைச் சேர்ந்த மாணவன் சாங் ஹூயு துப்பாக்கியால் சுட்டதில் தமிழக பேராசிரியர் லோகநாதன், இந்திய மாணவி உட்பட 33 பேர் படுகொலை

அனுராகவன்
18-04-2008, 06:00 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 18

1431 - சமய நம்பிக்கைகளுக்காவும் ஆட்சியாளர்களைத் தைரியமாக எதிர்கொண்டாதலும் உயிரோடு தீயிட்டுக் கொளுத்தப்பட்டவர் பிரான்சைச் சேர்ந்த வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க். அவர் மறைந்து 440 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை ஒரு புனிதராக அறிவித்தது வாடிகன்.

1910 - Walter R Brookins என்பவர் முதன் முதலில் இரவில் விமானத்தை ஓட்டிக் காட்டினர்.

1955 - உலகப் புகழ் பெற்ற அறிவியல் மேதையான Albert Einstein காலமானார்.

2007 - ஈராக்கில் 5 இடங்களில் கார் குண்டு வெடித்து 170 பேர் பேர் பலி

அனுராகவன்
19-04-2008, 04:22 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 19

1897 - உலகப் புகழ் பெற்ற நெடுந்தொலை ஓட்டமான Boston Marathon முதன்முறையாக நடைபெற்றது.

1951 - உலக அழகிப் போட்டி முதன் முதலில் ஸ்ட்ராண்ட் எனுமிடத்தில் நடைபெற்றது அப்போட்டியில் முதல் உலக அழகியாக ஸ்வீடனின் கிகி ஹாக்கோன்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1975 - ரஷ்யாவின் காபுஸ்டின்யார் ஏவுதளத்திலிருந்து இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியபட்டா செலுத்தப்பட்டது.

அனுராகவன்
21-04-2008, 06:00 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 21

1984 - ஆங்கில பாப் இசை உலகில் தொடர்ந்து 37 வாரங்கள் முதல் நிலையில் இருந்து சாதனை படைத்த ஒரு படைப்பு Michal Jackson -ன் Thriller .

1964 - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மரணம் அடைந்தார்.

2000 - ஆணையிரவு இராணுவத் தளத்தைப் புலிகள் கைப்பற்றினர்

mgandhi
21-04-2008, 05:46 PM
நன்றி அனு அவர்களே!!
தொடர்ந்து தாருங்கள்

அனுராகவன்
22-04-2008, 06:10 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 22

உலகக் குழந்தைகள் நாள்

1970 - உலகின் முதல் பூமி தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. காற்று, தண்­ர், நமது சுற்றுப்புறம் ஆகியவற்றின் தூய்மையைக் கட்டிக்காக்கக் குரல் எழுப்புவது பூமி தினத்தின் நோக்கம்.

பத்தாம் வயதிலேயே New York Symphony இசைக்குழுவில் வயலின் வாசித்து புகழ் பெற்ற இசை நடத்துனர் Yehudi Menuhin 1916 ல் பிறந்தார்.

umesh
22-04-2008, 09:45 AM
அருமையான தகவல்கள்....
நன்றி அனு அவர்களே

மனோஜ்
22-04-2008, 09:56 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 22

உலகக் குழந்தைகள் நாள்

1970 - உலகின் முதல் பூமி தினம் அமெரிக்காவில் அனுசரிக்கப்பட்டது. காற்று, தண்*ர், நமது சுற்றுப்புறம் ஆகியவற்றின் தூய்மையைக் கட்டிக்காக்கக் குரல் எழுப்புவது பூமி தினத்தின் நோக்கம்.


நல்ல தகவலுக்கு நன்றி அனு அக்கா:icon_b:

அனுராகவன்
23-04-2008, 04:08 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 23
ஆங்கில இலக்கியத்தில் அழியாப் புகழ் பெற்ற William Shakespeare ன் பிறந்த தினம். அவர் இதே நாளில்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

1992 - இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான உலகப்புகழ் பெற்ற சத்யஜித்ரே கல்கத்தாவில் இறந்தார்.

அனுராகவன்
24-04-2008, 06:44 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 24

1952 - இந்தியாவின் முதல் அதிபராக பாபு ராஜேந்திர பிரசாத்தும் துணை அதிபராக டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1953 - Winston Churchill -க்கு Sir பட்டம் வழங்கிச் சிறப்பித்தார் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்.

1981 - Personal Computer எனப்படும் இல்லக் கணினி பிறந்த தினம். அன்று தான் IBM இல்லக் கணினி அறிமுகம் கண்டது.

அனுராகவன்
25-04-2008, 04:05 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 25

1869 - மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் SueZ கால்வாய் கப்பல் போக்குவரவுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனி 1874 ல் பிறந்தார்.

1961 - சொல்லின் செல்வர் என்று வருணிக்கப்பட்ட ரா.பி. சேதுப்பிள்ளை மரணம் அடைந்தார். அவர் எழுதிய ''தமிழின்பம்'' எனும் நூல் சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் நூல்.

அனுராகவன்
26-04-2008, 04:29 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 26.....

1986 - செர்னோபில் அணுமின் உலை விபத்து

1920 - சென்னையில் கணித மேதை இராமானுஜம் காலமானார்.

2007 - இந்தியாவின் முதலாவது இலகுரக போர் விமானம் (எல்.சி.ஏ.) ''தேஜஸ்'' பெங்களூர் ''எச்.ஏ.எல்'', விமான நிலையத்தில் வெற்றிகரமாக பறந்தது

அனுராகவன்
27-04-2008, 06:02 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 27

1526 - மொகலாயப் பேரரசராக பாபர் டில்லியில் முடி சூட்டிக் கொண்டார்.

1949 - பிரிட்டிஷ் ஆட்சியின் கீழிருந்த பெரும்பாலான நாடுகளும் மற்றும் பல சுதந்திர நாடுகளும் அடங்கிய Common wealth அமைப்பு உருவானது.

1992 - ரஷ்யாவும் மற்றும் 12 முன்னாள் சோவியத் குடியரசுகளும் அனைத்துலகப் பண நிதியத்திலும் உலக வங்கியிலும் இடம் பிடித்தன.

அனுராகவன்
28-04-2008, 04:03 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 28

1967 - அமெரிக்க ராணுவத்தில் கட்டாயமாகச் சேருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்ததால் குத்துச்சண்டை வீரர் முகமது அலியிடமிருந்து உலக heavyweight விருது பறிக்கப்பட்டது.

1985 - மணலால் கோட்டை கட்டுவதில் ஓர் உலகச் சாதனை நிகழ்த்தப்பட்டது. St Petersburg நகரில் நான்கு மாடி உயர மண் கோட்டை கட்டப்பட்டு ஒருவாரத்திற்குப் பின்னர் அழிக்கப்பட்டது.

1997 - உலகளாவிய ரசாயன ஆயுதத்தடை நடப்புக்கு வந்தது.

mgandhi
28-04-2008, 05:25 PM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
29-04-2008, 01:25 AM
தகவலுக்கு நன்றி அனு
நன்றி காந்தி அவர்களே!!
ம்ம் என் வாழ்த்துக்களும்,நன்றியும்..
உங்கள் ஊக்கத்திற்க்கு என் கோடி நன்றி

பாலகன்
29-04-2008, 02:47 AM
அனுவின் வரலாற்றில் இன்று.... இந்த தொகுப்புகள் மிகவும் பாராட்டபடவேன்டியவை.......

தொடரட்டும் உங்கள் சேவை.........

அன்புடன்
பில்லா

அனுராகவன்
29-04-2008, 03:02 AM
நன்றி பில்லா அவர்களே!!
ம்ம் என் நன்றிகள்..
தொடர்ந்து வாருங்கள்!!!

அனுராகவன்
29-04-2008, 04:33 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 29

1852 - ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக்கு ஈடான வேறு சொற்களை வழங்கும் நூல் THESAURAS என்று அழைக்கப்படுகிறது. Peter Roget 's Thesaurus என்ற நூலின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

1978 - ஜப்பானைச் சேர்ந்த நவாமி யூமுரா என்பவர் தனியாக Sledge வண்டியின் மூலம் வடதுருவத்தைச் சென்றடைந்தார்.

1891 - பாவேந்தர் பாரதிதாசன் பிறப்பு

பாலகன்
29-04-2008, 08:37 AM
அட நம்ம THESAURAS இன்று தான் வெளியிடப்பட்டதா? அருமை

Sledge வண்டியின் மூலம் வடதுருவத்தைச் சென்றடைந்தார். = பாராட்டுக்கு உரியவர் இந்த ஜப்பானைச் சேர்ந்தவர்,,,


பாவேந்தர் பாரதிதாசன் பிறப்பு / இந்த நாள் மிகமுக்கியமான நாளல்லவா,

மிக்க நன்றி அனு,,,தொடருங்கள் உங்கள் பணியை,,

அன்புடன்
பில்லா

அனுராகவன்
30-04-2008, 04:05 AM
வரலாற்றில் இன்று
ஏப்ரல் 30

1789 - அமெரிக்காவின் முதல் அதிபராக பொறுப்பேற்றார் George Washington .

1931 - பங்களாதேஷைத் தாக்கிய கடும் சூறாவளியில் சுமார் 1,31,000 பேர் மாண்டனர். 1991 ஆம் ஆண்டு இதே நாளில் மற்றுமொரு சூறாவளி பங்களாதேஷைத் தாக்கி சுமார் 125 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்தது.

1975 - தென் வியட்நாம் வட வியட்நாமிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து வியட்நாம் போர் ஒரு முடிவுக்கு வந்தது.

குழந்தை உழைப்பு ஒழிப்பு நாள்

அனுராகவன்
30-04-2008, 04:06 AM
அட நம்ம THESAURAS இன்று தான் வெளியிடப்பட்டதா? அருமை

Sledge வண்டியின் மூலம் வடதுருவத்தைச் சென்றடைந்தார். = பாராட்டுக்கு உரியவர் இந்த ஜப்பானைச் சேர்ந்தவர்,,,


பாவேந்தர் பாரதிதாசன் பிறப்பு / இந்த நாள் மிகமுக்கியமான நாளல்லவா,

மிக்க நன்றி அனு,,,தொடருங்கள் உங்கள் பணியை,,

அன்புடன்
பில்லா
நன்றி பில்லா அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்!!
இன்னும் நிறைய அறியலாம்..

பாலகன்
30-04-2008, 10:09 AM
ஏப்ரல் 30 அனைத்தம் முக்கியமானவைகள்,,,

அன்புடன்
பில்லா

தொடர்ந்து வந்துக்கொன்டிருப்பேன்

அறிஞர்
30-04-2008, 02:00 PM
அனுதினமும்
அனுவின் தகவல்கள்..
அருமை...
அனு.....

அனுராகவன்
02-05-2008, 12:22 AM
வரலாற்றில் இன்று
மே 1

1890 - உலகத் தொழிலாளர்கள் நாள்

1931 - உலகின் பிரபலமான கட்டங்களுள் ஒன்றான Empire States கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

அனுராகவன்
02-05-2008, 12:22 AM
ஏப்ரல் 30 அனைத்தம் முக்கியமானவைகள்,,,

அன்புடன்
பில்லா

தொடர்ந்து வந்துக்கொன்டிருப்பேன்
நன்றி பில்லா அவர்களே!!

அனுராகவன்
02-05-2008, 12:24 AM
அனுதினமும்
அனுவின் தகவல்கள்..
அருமை...
அனு.....
அறிஞர் அவர்களே!!
அருமையான நன்றிக்கு வாழ்த்துக்கள்..
அனுதினமும் வாருங்கள்.....

அனுராகவன்
02-05-2008, 04:52 AM
வரலாற்றில் இன்று
மே 2

1997 - பிரிட்டனின் பிரதமராக தொழிற்கட்சியின் Tony Blair பதவியேற்றார். அதன் மூலம் 18 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1519 - உலகப் புகழ்பெற்ற அறிவியலாரும், தத்துவ மேதையும், ஓவியரும், சிற்பியுமான லியோனர்டோ டா வின்சி (Leonardo da vince ) காலமானார்.

பாலகன்
02-05-2008, 09:33 PM
மே 1 மற்றும் 2 ஆம் தேதி தகவல்கள்,,,,,, அருமை

டோனியின் சாதனை அருமை,,, ஒரு பழம்பெறும் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொணர்ந்த பெருமை அவரை சாரும்

நன்றி அனு

தினமும் வருவேன்,,,, சும்மா அதிருதுல்ல,,,,,,,,,, அதுதுதுதுதுதுதுது

அன்புடன்
பில்லா

அனுராகவன்
02-05-2008, 10:41 PM
டோனியின் சாதனை அருமை,,, ஒரு பழம்பெறும் கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொணர்ந்த பெருமை அவரை சாரும்

நன்றி பில்லா அவர்களே!!
உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்கள்!


தினமும் வருவேன்,,,, சும்மா அதிருதுல்ல,,,,,,,,,, அதுதுதுதுதுதுதுது

படத்துல வரபில்லா விட இந்த நிஜபில்லா ....
வசனம் அனல் பறக்குது...

பாலகன்
02-05-2008, 10:44 PM
நன்றி பில்லா அவர்களே!!
உங்கள் தமிழ் ஆர்வத்திற்கு என் வாழ்த்துக்கள்!


படத்துல வரபில்லா விட இந்த நிஜபில்லா ....
வசனம் அனல் பறக்குது...

மிக்க நன்றி அனு,,,,,,,, தங்களின் ஆசி இந்த சிறியவனுக்கு கிடைத்ததற்கு,,,,,

தங்களின் இந்த வரலாற்றில் இன்று திரிக்கான உழைப்பு மிகவும் போற்றுதற்குரியது

அன்புடன்
பில்லா

அனுராகவன்
03-05-2008, 04:26 AM
வரலாற்றில் இன்று
மே 3

1494 - St Lago என்ற தீவைக் கண்டுபிடித்தார் கொலம்பஸ் (Columbus ). அந்தத் தீவுதான் பின்னர் jamaica என்ற பெயரைப் பெற்றது.

1980 - ஜப்பானின் ''யாசுவோ கார்டோ'' எனும் நபர் மிக அபாயகரமான வழியான வடகிழக்குப் பாதை மூலம் எவரெஸ்ட் சிகரத்தைச் சென்றடைந்தார். எவரெஸ்ட் சிகரத்தின் தென்பகுதி மூலம் வடபகுதி மூலமும் முதலாவதாக ஏறினார்.

பாலகன்
03-05-2008, 07:42 AM
இரண்டுமே புதிய கண்டுபிடிப்புகள் வாழ்த்துக்கள் அனு

தொடர்ந்து வருவேன்,,,,,,,,,,, விரட்டினாலும் வருவேன்

அன்புடன்
பில்லா

அனுராகவன்
03-05-2008, 07:43 AM
நன்றி பில்லா..
தொடர்ந்து வாங்க..

mgandhi
03-05-2008, 07:10 PM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
04-05-2008, 12:19 AM
நன்றி மோகன் அவர்களே!!
நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்..
மிக்க நன்றி...

அனுராகவன்
04-05-2008, 07:58 AM
வரலாற்றில் இன்று
மே 4
1927 - அமெரிக்காவின் திரைப்படத் துறையினர் ஒன்றுகூடி The Academy of Motion Pictures Arts and Science என்ற அமைப்பை உருவாக்கி அதில் தரமான திரைப்படம் தயாரிப்பதை ஊக்குவித்து ஆண்டுதோறும் விருதுகள் வழங்க தீர்மானித்தனர். அவைதான் ஆஸ்கார் விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன.

1979 - இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் (Margaret Thatcher ).

mgandhi
04-05-2008, 06:02 PM
தகவலுக்கு நன்றி அனு

பாலகன்
04-05-2008, 07:25 PM
அட நம்ம ஆஸ்கார் விருதுகள் இன்றைக்கு தானா

முதல் பெண் பிரதமராயிற்றே மிக மிக முக்கியமான நாள் இன்று அனு

அருமையான தகவல் இன்று அனு

அன்புடன்
பில்லா

அனுராகவன்
04-05-2008, 11:39 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!
நன்றி பில்லா..
என் வாழ்த்துக்கள்!!

அனுராகவன்
05-05-2008, 04:51 AM
வரலாற்றில் இன்று
மே 5
1912 - ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தாளான பிராவ்தா அச்சடிக்கப்பட்டது.

1930 - உப்பு சத்யாகிரகம் காரணமாக கைது செய்யப்பட்டு எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார் மகாத்மா காந்தி

1818 - கம்யூனிசத்தின் தந்தையான காரல் மார்க்ஸ் பிறந்தார்

1821 - செயின்ட் ஹெலினா தீவில் சிறையிலிருந்த மாவீரன் நெப்போலியன் காலமானார்

1989 - இந்தியாவின் பிரபல தொழில்அதிபர் நவால் ஹெச் டாட்டா காலமானார்

காமரூன் நாட்டில் கென்ய விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இந்தியர்கள் உள்பட 114 பேர் சாவு

சூரியன்
05-05-2008, 05:55 AM
நல்ல முயற்சி அனு அக்கா.

அனுராகவன்
05-05-2008, 06:08 AM
நன்றி ஐயா சூரியன் அவர்களே!!
தொடர்ந்து வாங்க..

mgandhi
05-05-2008, 12:26 PM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
06-05-2008, 04:23 AM
வரலாற்றில் இன்று
மே 6
1733 - உலகின் முதல் அனைத்துலகக் குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது

1954 - ரோஜர் பான்னிஸ்ட்டர் (Roger Bannister ) மூன்று நிமிடம் 59 புள்ளி 4 விநாடியில் ஒரு மைல் தொலைவை ஓடி முடித்து உலகை வியப்பில் ஆழ்த்தினார்

2001 - போப் ஜான்பால் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள உமய்யத் என்ற பள்ளிவாசலுக்கு வருகை புரிந்தார். வரலாற்றிலேயே ஒரு போப் பள்ளிவாசலுக்குச் சென்றது அதுவே முதல்முறை

அனுராகவன்
07-05-2008, 04:37 AM
வரலாற்றில் இன்று
மே 7

சிங்கப்பூரின் வீரதீர சாகசக்காரர் Khoo Swee Chiow வட துருவத்தை அடைந்து சாதனை படைத்தார். அதன்மூலம் Adventure Grandslam எனப்படும் சாதனையை நிகழ்த்திய முதல் தென்கிழக்காசியர் என்ற பெருமையைப் பெற்றார்

1861 - இந்தியாவுக்கு முதல் இலக்கிய நோபல் பரிசைப் பெற்றுத் தந்த உலகப் புகழ்பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்

அனுராகவன்
07-05-2008, 04:45 AM
தகவலுக்கு நன்றி அனு
நன்றி மோகன் அவர்களே!!

பாலகன்
07-05-2008, 06:23 AM
அருமையான தகவல்கள் அனு,,, தொடருங்கள் உங்கள் பணியை

வாழ்த்துக்கள்,,

நோபல் பரிசு அதுவும் இந்தியாவிற்கு முதன்முதலாக,, அருமையான தகவல் அனு

அன்புடன்
பில்லா

அனுராகவன்
07-05-2008, 09:30 AM
நன்றி பில்லா..
தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
08-05-2008, 04:12 AM
வரலாற்றில் இன்று


மே 08
உலக செஞ்சிலுவைச் சங்க நாள்

1902 - பிரெஞ்சு கிரீபியன் தீவான மார்ட்டினிக்கிலுள்ள பீலி எனும் எரிமலை குமுறத் தொடங்கியது. அதிலிருந்து சீறிப் பாய்ந்த எரிமலைக் குழம்பினாலும் சாம்பலினாலும் மூன்றே நிமிடங்களில் செயிண்ட் பியரி நகரமே முற்றாக அழிந்தது. 20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான எரிமலை சீற்றம்.

1944 - உலகின் முதல் கண் வங்கி நியூயார்க்கில் நிறுவப்பட்டது

பாலகன்
08-05-2008, 10:28 AM
3 தகவல்களுமே முத்தான தகவல்கள்,,,, இந்த எரிமலை என்ன ஒரு இயற்க்கையின் சீற்றம்....... மனது வலிக்கிறது அனு

அன்புடன்
பில்லா

அனுராகவன்
09-05-2008, 12:59 AM
3 தகவல்களுமே முத்தான தகவல்கள்,,,, இந்த எரிமலை என்ன ஒரு இயற்க்கையின் சீற்றம்....... மனது வலிக்கிறது அனு

அன்புடன்
பில்லா
நன்றி பில்லா..
தொடர்ந்து வாங்க..
என்றும் நல்ல நிகழ்வுகள் காணலாம்..:icon_b:
:icon_rollout::icon_rollout:

இராஜேஷ்
09-05-2008, 03:03 AM
நல்ல தகவல், என்னுடைய அறிவுப் பசிக்கு நல் விருந்து

அன்புடன்
இராஜேஷ்

SathyaThirunavukkarasu
09-05-2008, 04:19 AM
தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்


நன்றி!!!!!!!!!!!!!!!!

அனுராகவன்
09-05-2008, 06:54 AM
வரலாற்றில் இன்று
மே 9

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நாள் 1945

1926 - கடும் குளிர் பிரதேசமான வட துருவத்தின் மேல் முதன்முறையாக விமானம் ஓட்டி சாதனை படைத்தனர் அமெரிக்கர்களான ரிச்சர்டு பைர்ட்(Richard Byrd )ம், பிளோயிட் பென்னட்டும் (Floyd Bennet ) ம்

1960 - உலகிலேயே கருத்தடை மாத்திரைகளை முதன் முதலில் சட்டப்பூர்வமான ஒன்றாக ஆக்கியது அமெரிக்காதான்

மதுரையில் பத்திரிகை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, 3 பேர் பலி. தி.மு.க.வினர் 50 பேர் கைது

அனுராகவன்
09-05-2008, 06:56 AM
நல்ல தகவல், என்னுடைய அறிவுப் பசிக்கு நல் விருந்து

அன்புடன்
இராஜேஷ்
நன்றி ராஜேஷ் அவர்களே!!
தொடர்ந்து வாங்க..
என் நன்றி:)
:icon_rollout:

அனுராகவன்
09-05-2008, 06:57 AM
தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்
நன்றி!!!!!!!!!!!!!!!!
நன்றி சத்தியா..
தொடர்ந்து வந்து பல தெரிந்துக்கொள்..
என் நன்றி!!
:icon_rollout:

MURALINITHISH
09-05-2008, 07:30 AM
இதெல்லாம் மனதில் இருந்து வருவதா இல்லை நூலில் இருந்து வருவதா
மனதில் இருந்து வந்தால் அனு அக்கா சூப்பருக்கா (எனக்கு இதெல்லாம் படிப்பதோடு சரி பிறகு கேட்டால் தான் ஞாபகம் வரும்)
நூலில் இருந்து வந்தால் நன்றி அனு அக்கா (எங்களுக்காக தேடி எடுத்து கொடுத்தீர்களே அதுக்கு)

அனுராகவன்
10-05-2008, 04:15 AM
வரலாற்றில் இன்று
மே 10

1901 - இந்திய அறிவியலார் சர் ஜகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உலோகங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை ஆய்வுகளின் மூலமாக மெய்ப்பித்துக் காட்டினார்

1993 - இந்திய பெண்களான சந்தோஷ் யாதவ், கங்கா பூட்டியா, டிக்கிடோல்மா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தனர்

1994 - தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகப் பதவியேற்றார் நெல்சன் மண்டேலா

அனுராகவன்
10-05-2008, 04:17 AM
இதெல்லாம் மனதில் இருந்து வருவதா இல்லை நூலில் இருந்து வருவதா
மனதில் இருந்து வந்தால் அனு அக்கா சூப்பருக்கா (எனக்கு இதெல்லாம் படிப்பதோடு சரி பிறகு கேட்டால் தான் ஞாபகம் வரும்)
நூலில் இருந்து வந்தால் நன்றி அனு அக்கா (எங்களுக்காக தேடி எடுத்து கொடுத்தீர்களே அதுக்கு)
நன்றி முரளி..
தொடர்ந்து வாங்க..
என் நன்றியும்,வரவேற்ப்பும்..

இராஜேஷ்
10-05-2008, 04:22 AM
தாவரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு சரி, உலோகங்களுக்குமா?
புதிய செய்தி, நன்றி

அன்புடன்
இராஜேஷ்

அனுராகவன்
10-05-2008, 04:44 AM
நன்றி ராஜேஷ்..

இராஜேஷ்
10-05-2008, 06:13 AM
உலோகங்களுக்கு உணர்ச்சிஉள்ளதை சற்று விளக்கினால் நன்றாக இருக்கும்

அனுராகவன்
11-05-2008, 04:07 AM
வரலாற்றில் இன்று
மே 11

பொக்ரான் அணுகுண்டுச் சோதனை நாள்

1812 - பிரிட்டிஷ் பிரதமர் ஸ்பென்சர் பெர்சிவல் (Spencer Percival ) நாடாளுமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1988 - அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தில் மாண்ட்கோமெரி எனுமிடத்தில் தனியாக விமானம் ஓட்டி சாதனை புரிந்தார் பிரிகெட்டி எல்லிஸ் என்ற ஒன்பது வயதுச் சிறுமி

உலக அன்னையர் தினம்..:)

mgandhi
11-05-2008, 05:41 PM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
12-05-2008, 07:32 AM
வரலாற்றில் இன்று
மே 12

1988 - கனடாவில் க்யூபெக்கில் பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருந்தது. அதனை சரிப்படுத்த அந்த மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்திலும் பிறக்கும் முதல் இரு குழந்தைகளுக்கு 500 டாலர் ஊக்க ஊதியம் கொடுப்பதாக அறிவித்தது. இரண்டிற்கு மேல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு 30000 டாலர் கொடுப்பதாகவும் அறிவித்தது.

சுட்டிபையன்
12-05-2008, 07:39 AM
மே 12

உலக செவிலியர் நாள்
1828 ப்ளாரென்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்
1656 - ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றினர்.
1942 - 1,500 யூதர்கள் போலந்தில் Auschwitz என்னும் இடத்தில் நச்சு வாயு அறையில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
1965 - சோவியத் நாட்டின் விண்கலம் லூனா சந்திரனில் மோதியது.
1982 - போர்த்துகலில் பாப்பரசர் இரண்டாவது ஜோன் போல் அவர்களைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது
1908 -ஒயரலஸ் ரேடியோ இன்றுதான் முதல் முதலில், நாதன் பி ஸ்டப்பில்ட் (Nathan B Stubblefield)என்பவரால்,ஓலிப்பு துவங்கப்பட்டது.

அனுராகவன்
12-05-2008, 07:42 AM
நன்றி சுட்டிபையன் அவர்களே!!
ம்ம் இனி நீங்களும் கொடுங்கள்..
என் நன்றி உங்கள் தகவலுக்கு..
என்றும் பகிர்க..

சுட்டிபையன்
12-05-2008, 07:45 AM
நன்றி சுட்டிபையன் அவர்களே!!
ம்ம் இனி நீங்களும் கொடுங்கள்..
என் நன்றி உங்கள் தகவலுக்கு..
என்றும் பகிர்க..

உங்களுக்கும் நன்றிகள் அனு, என்னால் முடிந்த அவ்ரை தினம் பதிய முயல்கின்றேன், மோகன் காந்தி அண்ணாவல் முன்னர் ஒரு திரி ஆரம்பிக்கபட்டது அது என்னாச்சு?

அனுராகவன்
12-05-2008, 07:52 AM
மோகன் காந்தி அண்ணாவல் முன்னர் ஒரு திரி ஆரம்பிக்கபட்டது அது என்னாச்சு?
அந்த திரி நன்றாகவே போகுது..
என் நன்றி காந்திக்கு..

அனுராகவன்
15-05-2008, 12:10 AM
வரலாற்றில் இன்று
மே 13
1888 - பிரேசிலில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது
1998 - இந்தியா இரண்டாவது சுற்று அணுவெடிச் சோதனையை நடத்தியது. இரண்டாவது சோதனை மேற்கொள்ளப்பட்ட சில மணி நேரங்களில் இந்தியா மீது கடுமையான பொருளியல் தடைகளை அறிவித்தன அமெரிக்காவும் ஜப்பானும்.

2001 - உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர் ஆர்.கே. நாராயணன் காலமானார்.

அனுராகவன்
15-05-2008, 12:13 AM
வரலாற்றில் இன்று
மே 14
1948 - புதிய நாடாக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலை அடியோடு அழிக்க அரபு நாடுகள் ஒன்று சேர்ந்து தாக்குதல் தொடுத்தன. முதல் இஸ்ரேல் - அரபுப்போர் தொடங்கியது

1975 - கம்போடியாவின் கெமர்ரூஸ் அரசினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க சரக்குக் கப்பல் மீட்கப்பட்டன

அனுராகவன்
16-05-2008, 12:54 AM
வரலாற்றில் இன்று
மே 15

உலக அன்னையர் நாள்

1990 - உலகப் புகழ் பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ வின் Portrait of Doctor Gachet என்ற ஓவியம் உலகச் சாதனை விலையாக 82 புள்ளி 5 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது

1993 - இந்திய ராணுவத்தின் முதலாவது தளபதியாக இருந்த ஃபில்டு மார்ஷல் கரியப்பா காலமானார்

SathyaThirunavukkarasu
16-05-2008, 03:53 AM
தொடர்ந்து தாருங்கள்

மிக்க நன்றி!!!!!!!!!!!!!

அனுராகவன்
16-05-2008, 04:07 AM
தொடர்ந்து தாருங்கள்

மிக்க நன்றி!!!!!!!!!!!!!
ஊக்கத்திற்கு நன்றி சத்தியா..!!
மிக்க நன்றி..

அனுராகவன்
16-05-2008, 04:10 AM
வரலாற்றில் இன்று
மே 16

1929 - ஆஸ்கார் விருது முதன் முதலாக வழங்கப்பட்டது.

1985 - யோஷ’யா புரிசி என்ற ஜப்பானியர் ஒரு விபத்தில் இரு கால்களையும் இழந்து வெறும் கைகளாலேயே இமயமலையில் ஏறி சாதனை படைத்தார் ..

அனுராகவன்
17-05-2008, 04:04 AM
வரலாற்றில் இன்று
மே 17உலகச் செய்தித் தொடர்பு நாள்

1951 - ஒலிம்பிக் போட்டிகளைப் போல் ஆசிய கண்டத்திலுள்ள நாடுகள் மட்டும் பங்கு பெறும் Asian Games எனப்படும் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் புது டெல்லியில் தொடங்கின.

1975 - அமர காவியம் என்று வருணிக்கப்படும் ''Gone with the wind '' என்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒரே ஒரு முறை ஒளிபரப்புவதற்காக ஐந்து மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தியது அமெரிக்காவின் NBC தொலைக்காட்சி.

அனுராகவன்
18-05-2008, 04:34 AM
வரலாற்றில் இன்று
மே 18


1953 - ஒலியின் வேகத்தை விஞ்சும் அளவுக்கு வேகமாக விமானம் ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் Jacqueline Cochran .

1920 - கத்தோலிக்க மதத் தலைவரான இரண்டாம் பாப் ஜான் பால் போலந்தில் பிறந்தார்

உலக அரும் பொருட்காட்சியக நாள்

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற மெக்கா மசூதியில் குண்டு வெடித்து 12 பேர் பலி

mgandhi
18-05-2008, 05:05 PM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
19-05-2008, 06:42 AM
வரலாற்றில் இன்று
மே 19


1918 - முதலாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது லண்டன் நகர் மீது போர் விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஜெர்மனி. ஒரு மணி நேரத்திற்குள் 14 டன் குண்டுகள் வீசப்பட்டன.

1934 - Lawrence of Arabia என்று புகழப்பட்ட Thomas Edward Lawrence சாலை விபத்தில் காலமானார்

இராஜேஷ்
19-05-2008, 08:50 AM
அக்கா நல்ல தகவல், இந்த Thomas Edward Lawrence என்பவர் யார்?

mgandhi
19-05-2008, 08:50 AM
தகவலுக்கு நன்றி அனு

rmskanna
19-05-2008, 05:00 PM
அனு அனுவாக வரலாற்று நிகழ்வுகளை தந்த நன்பர் அனுவுக்கு நன்றி

விகடகவி
20-05-2008, 03:25 AM
நன்றி தோழியே..
உந்தன் தகவல் நன்று.

அனுராகவன்
20-05-2008, 10:38 AM
அக்கா நல்ல தகவல், இந்த Thomas Edward Lawrence என்பவர் யார்?
அவரை பின்பு கூறுகிறேன்..
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி..

அனுராகவன்
20-05-2008, 10:40 AM
அனு அனுவாக வரலாற்று நிகழ்வுகளை தந்த நன்பர் அனுவுக்கு நன்றி
நன்றி உங்கள் வருகைக்கு கண்ணா..
தொடர்ந்து வாருங்கள்!!
என் நன்றி..

அனுராகவன்
20-05-2008, 10:42 AM
வரலாற்றில் இன்று
மே 20


1978 - அமெரிக்காவின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஓடிக் கடந்து சாதனையை நிகழ்த்திய முதல் பெண் என்ற பெருமையை Mavis Hutchison பெற்றார்.

1506 - அமெரிக்காவைக் கண்டுபிடித்த புகழ் பெற்ற கடலோடியான கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஸ்பெயினில் வறுமையில் வாடி காலமானார்

அனுராகவன்
20-05-2008, 10:44 AM
நன்றி தோழியே..
உந்தன் தகவல் நன்று.
நன்றி..

அனுராகவன்
20-05-2008, 10:45 AM
தகவலுக்கு நன்றி அனு
நன்றி மோகன் அவர்களே!!
மிக்க மிக்க நன்றி:icon_b:

க.கமலக்கண்ணன்
20-05-2008, 01:49 PM
தினமும் சளைக்காமல் தரும் தகவல்களை சேகரிக்க உங்களுக்கு

திறமை அதிகமாக வேண்டும் அதை நீங்கள் மிக அற்புதமாக செய்து

தினம்தினம் அளிக்கும் அனு அவர்களுக்கு நன்றிகள் பல...

அனுராகவன்
21-05-2008, 10:16 AM
வரலாற்றில் இன்று
மே 21

1927 - Charles A Lindberg என்பவர் தனிமனிதனாக ஒரு விமானத்தில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார்

1991 - ராஜூவ் காந்தி சென்னையில் ஸ்ரீ பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேச வந்த போது மனித வெடிகுண்டுத் தாக்குதலினால் உடல் சிதறி அந்த இடத்திலேயே மாண்டார்.

அனுராகவன்
21-05-2008, 10:56 AM
தினமும் சளைக்காமல் தரும் தகவல்களை சேகரிக்க உங்களுக்கு

திறமை அதிகமாக வேண்டும் அதை நீங்கள் மிக அற்புதமாக செய்து

தினம்தினம் அளிக்கும் அனு அவர்களுக்கு நன்றிகள் பல...
கமலகண்ணன் என் நன்றி!!
கலங்காமல் படிங்கள்!!
கருத்துக்கள் ஏராளம்!!
கவர்கள் செய்திகள் பல..

சூரியன்
21-05-2008, 11:18 AM
1991 - ராஜூவ் காந்தி சென்னையில் ஸ்ரீ பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேச வந்த போது மனித வெடிகுண்டுத் தாக்குதலினால் உடல் சிதறி அந்த இடத்திலேயே மாண்டார்.
அது ஒரு கருப்பு தினம்.

அனுராகவன்
22-05-2008, 04:42 AM
வரலாற்றில் இன்று
மே 22

1927 - சீனாவின் Xining என்ற பகுதியை தாக்கிய நிலநடுக்கம் சுமார் 2 லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.

2001 - ஷெர்பா இனத்தைச் சேர்ந்த இளைஞர் டெம்போ ஹேரி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டைத் தொட்டவர் என்ற பெருமையை பெற்றார்.

1972 - சிங்கள பௌத்தக் குடியரசாக இலங்கை அரசியல் சாசனம் மாற்றம் ...

அனுராகவன்
22-05-2008, 04:50 AM
அது ஒரு கருப்பு தினம்.
நன்றி சூரியன் அவர்களே!!

அறிஞர்
22-05-2008, 03:59 PM
2001 - ஷெர்பா இனத்தைச் சேர்ந்த இளைஞர் டெம்போ ஹேரி மிகக் குறைந்த வயதில் எவரெஸ்ட்டைத் தொட்டவர் என்ற பெருமையை பெற்றார்.
..
நல்ல தகவல்கள்..

அவரின் வயது என்ன??

அனுராகவன்
23-05-2008, 04:26 AM
வரலாற்றில் இன்று
மே 23


1785 - Bifocal Lens எனப்படும் இரு குவியக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார் பெஞ்சமின் பிராங்ளின்(Benjamin Franklin ).

1949 - மேற்கு ஜெர்மனி குடியரசு உருவானது.

1734 - நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு மனோவசிய முறைகளைப் பயன்படுத்திய Franz Anton Mesmer பிறந்தார். Mesmer என்ற பெயரிலிருந்துதான் Mesmerism அதாவது வசியம் என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது.

1844 - பஹாய் சமயம் பாரசீக நாட்டில் பாப் (Bab) அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

1873 - சான் பிரான்சிக்கோவில் முதல் தடவையாக தபாலட்டை விற்கப்பட்டது..

1568 - ஸ்பெயினிடம் இருந்து நெதர்லாந்து விடுதலை பெற்றது..

அனுராகவன்
24-05-2008, 04:38 AM
வரலாற்றில் இன்று
மே 241844 - Morse Code என்ற சமிக்ஞை அறிமுகப்படுத்திய Samuel Morse முதன் முறையாக தந்தி அனுப்பினார்.

1883 - நியூயார்க்கில் Manhattan , Brooklyn பகுதிகளை இணைக்கும் Brooklyn பாலம் 14 ஆண்டு கட்டுமானப் பணிக்குப் பிறகு போக்குவரவுக்கு முதன்முதலாகத் திறந்து விடப்பட்டது.

1686 - Alcohol மற்றும் mercury thermometers எனப்படும் வெப்பமானிகளைக் கண்டுபிடித்த Daniel Gabriel Fahrenheit பிறந்தார்.

புத்தர் பிறப்பு

1738 - மெதடிஸ்த இயக்கம் ஜோன் வெஸ்லியால் ஆரம்பிக்கப்பட்டது. (Aldersgate Day).

1956 - சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது.

1993 - எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.

2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து வெளியேறினர்.

2000 - இலங்கையில் நோர்வேத் தூதரகம் மீது குண்டு வீசப்பட்டது.
2006 - விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது

1893 - நயாகரா பார்க் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்ட தினம்

1993 - Windows NT அறிமுகமான தினம்

1941- பாடகர் பாப் டைலான் பிறந்த தினம்

1844- சாமுவேல் மோர்ஸ் முதல் தந்தியை அனுப்பிய தினம்

1954 - லுஃப்தான்சா விமான சர்வீஸ் ஆரம்பித்த தினம்

mgandhi
25-05-2008, 06:01 PM
தகவலுக்கு நன்றி அனு

பாலகன்
25-05-2008, 07:10 PM
அப்பாடா ஏகப்பட்ட தகவலா இன்று,,,,,,,,,,,,,,,,

மிக்க நன்றி அனு

அன்புடன்
பில்லா

இராஜேஷ்
26-05-2008, 03:32 AM
அக்கா கலக்கறிங்க போங்க..

சுட்டிபையன்
26-05-2008, 05:52 AM
வரலாற்றில் இன்று

2) 1980- Shahid Afridi (பாகிஸ்தான்) கிரிகெட் போட்டியில் 37 பந்துகளில் சதத்தை ஒரு நாள் போட்டியில் பதிவு செய்தார்.

அனு அக்கா...! இது நடந்தது 1990 என்று நினைக்கிறேன்..:fragend005:

:violent-smiley-034::teufel021::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-027::icon_hmm::icon_nono:

இது நடந்தது 1996 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி கென்யா நைரோபியில் இலங்கைக்கு எதிராக தனது முதல் போட்டியில்

சுட்டிபையன்
26-05-2008, 06:05 AM
மே 25

ஆர்ஜென்டீனா - மே புரட்சி நாள்
சாட், லைபீரியா, மாலி, மவ்ரித்தானியா, நமீபியா, சாம்பியா, சிம்பாப்வே - ஆபிரிக்க விடுதலை நாள்
லெபனான் - விடுதலை நாள்

1810 - புரட்சியின் போது ஆயுதம் தரித்த பியூனஸ் அயரஸ் மக்கள் ஸ்பெயின் ஆளுனரை வெளியேற்றினார்கள்.
1895 - போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது. டாங் சிங்-சுங் அதன் அதிபரானார்.
1955 - ஐக்கிய அமெரிக்காவில் கான்சாஸ் மாநிலத்தில் உடால் நகரில் நிகழ்ந்த சூறாவளியில் 80 பேர் கொல்லப்பட்டு 273 பேர் காயமடைந்தனர்.
1977 - ஸ்டார் வோர்ஸ் படம் வெளிவந்தது.
1979 - சிக்காகோவில் அமெரிக்க விமானம் டிசி-10 விபத்துக்குள்ளாகியதில் 273 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - வங்காள தேசத்தில் நிகழ்ந்த சூறாவளியில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1997 - சியேரா லியோனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதன் அதிபர் அஹமது கப்பா பதவியிழந்தார்.
2000 - 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இஸ்ரேலியப் படையினர் லெபனான்னில் இருந்து முற்றாக வெளியேறினர்.
2001 - அமெரிக்காவைச் சேர்ந்த 32 வயது எரிக் வைஹன்மாயர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது கண் பார்வை இழந்த மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
2002 - சீனாவைச் சேர்ந்த போயிங் விமானம் வெடித்துச் சிதறியதில் 225 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - மொசாம்பிக்கில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 197 பேர் கொல்லப்பட்டனர்.

சுட்டிபையன்
26-05-2008, 06:08 AM
மே 26


அவுஸ்திரேலியா - National Sorry Day
போலந்து - அன்னையர் நாள்
ஜோர்ஜியா - தேசிய நாள்

1293 - ஜப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
1912 - இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
1958 - இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 - பிரித்தானிய கயானா விடுதலை யடைந்து கயானா ஆனது.
1987 - யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படைனரின் ஒப்பரேஷன் லிபரேஷன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
2006 - ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் கொல்லப்பட்டு 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1981 சத்ய பால் அசிஜா என்னும் இந்தியர் அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேருக்கான் முதல் Patent பெற்றநாள்
1872 தீயணைப்புக் கருவிக்கான Patent வழங்கப்பட்ட தினம்

mgandhi
26-05-2008, 08:24 AM
தகவலுக்கு நன்றி அனு

க.கமலக்கண்ணன்
27-05-2008, 02:49 AM
அருமையாக இருக்கு...

அனுராகவன்
27-05-2008, 06:39 AM
விடுமுறையில் சென்றுள்ளேன் நண்பர்களே தொடர்ந்து கொடுங்கள்..

அனுராகவன்
27-05-2008, 06:41 AM
நண்பர் சுட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கலும்,நன்றியும்.
என்னால் கொஞ்ச நாள் வர முடியல..
உங்கள் தகவல் தொடர்ந்து தருக..

சுட்டிபையன்
27-05-2008, 07:07 AM
மே 27


பொலீவியா - அன்னையர் நாள்
நைஜீரியா - சிறுவர் நாள்


1965 - அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தெற்கு வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967 - அவுஸ்திரேலியாவில் நடந்த வாக்கெடுப்பில் ஆதிவாசிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அடக்கவும் அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1994 - சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் (Alexander Solzhenitsyn) 20 வருடங்களின் பின்னர் ரஷ்யா திரும்பினார்.
1997 - முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2006 - ஜாவாவில் நிகழ்ந்த (உள்ளூர் நேரம் காலை 5:53:58, UTC நேரம் மே 26 இரவு 10:53:58) நிலநடுக்கத்தில் 6,000 பேர் வரை பலியாயினர்.
1964 - ஜவஹர்லால் நேரு இறந்த தினம்
1977- மகெல ஜயவர்தன பிறந்த தினம்

அனுராகவன்
13-06-2008, 06:53 AM
வரலாற்றில் இன்று
ஜூன் 13

1900 - சீனாவில் வெளிநாட்டவருக்கு எதிரான Boxer இயக்கம் தொடங்கியது.

1912 - மிஸ்ஸ’சிப்பியில் கேப்டன் ஆல்பர்ட் பெர்ரி (captain Albert Berry ) வெற்றிகரமாக ஒரு விமானத்திலிருந்து வான்குடை மூலம் குதித்தார்.

1993 - இந்தியா பிரித்திவி ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

மாவீரன் மகா அலெக்சாண்டர் கிறிஸ்துவுக்கு முன் 323 ஆம் ஆண்டு பாபிலோனில் காலமானார்.

அனுராகவன்
15-06-2008, 07:21 AM
வரலாற்றில் இன்று
ஜூன் 15

1502 - மார்ட்டினிக் தீவை கண்டுபிடித்தார் கொலம்பஸ்.

1947 - தனது முதல் அணுகுண்டுச் சோதனையை சைபீரியாவில் நடத்தியது ரஷ்யா.

அகாடமி விருது பெற்ற நடிகை Helen Hunt 1963 ல் பிறந்தார்.

கல்வி அரசர் சர் அண்ணாமலைச் செட்டியார் 1948 ல் மரணம் அடைந்தார்.

உலக மக்கள் தொகை நாள்

அனுராகவன்
17-06-2008, 02:59 PM
வரலாற்றில் இன்று
ஜூன் 17

1928 - வெற்றிகரமாக அட்லாண்டிக் பெருங்கடலைப் பறந்து கடந்தார் Amelia Earhart .

1950 - உலகின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் சிகாகோ மருத்துவமனையில் Dr . Richard H . Lawler என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.

1991 - பிறப்பு பதிவுச் சட்டத்தை ரத்து செய்தது தென்னாப்பிரிக்கா.

அனுராகவன்
18-06-2008, 05:43 PM
1583 - ஆயுள் காப்புறுதி வில்லியம் கிப்பன்ஸ் என்பவர் பேரில் லண்டனில் எடுக்கப்பட்டது.

1815 - வரலாற்றுச் சிறப்பு மிக்க Waterloo போர் நிகழ்ந்த நாள். நெப்போலியன் சிறைபிடிக்கப்பட்டு செயின்ட் ஹெலினா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

அனுராகவன்
19-06-2008, 06:03 PM
1910 - தந்தையர் தினம் கொண்டாடும் வழக்கம் முதன் முதலில் வாஷ’ங்டனில் திருமதி ஜான் புரூஸ் என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1985 - தென்துருவம் ஆஸ்திரேலியாவை நோக்கி சற்று நகர்ந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், மனோதத்துவவாதியுமான Blaise Pascal 1632 ல் பிறந்தார்.

அனுராகவன்
20-06-2008, 06:26 PM
ஜூன் 20
1837 - விக்டோரியா மகாராணி இங்கிலாந்தின் அரியணை ஏறினார்.
1858 - சரித்திரப் புகழ் வாய்ந்த ஜான்சிராணி வீரமரணம் அடைந்த நாள். 2001 - பாகிஸ்தான் அதிபராக ராணுவ ஆட்சியாளர் Pervez Musharaaf பதவியேற்றுக் கொண்டார்.

mgandhi
20-06-2008, 06:27 PM
தகவலுக்கு நன்றி அனு

ராஜா
20-06-2008, 06:50 PM
நன்றி அனு..!

ஒரு வேண்டுகோள்..

நாளையத் தேதியில் நடந்த சரித்திர நிகழ்வுகளை ஒருநாள் முன்னதாக இன்றே வெளியிட முடியுமா..?

உதாரணமாக 21/ 06 ல் நடந்த நிகழ்ச்சிகளை 20/ 6 ம் தேதியான இன்றே வெளியிடலாமே..

இன்றே இதைப் படிக்கும் நம் உறுப்பினர்கள் நாளை தங்கள் நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியும் அல்லவா..?

SathyaThirunavukkarasu
21-06-2008, 03:50 AM
அனு தகவலுக்கு நன்றி, தொடருங்கள்

அனுராகவன்
24-06-2008, 07:14 AM
வரலாற்றில் இன்று
ஜூன் 24

1976 - வட வியட்நாமும் தென் வியட்நாமும் ஒன்றாக இணைந்தன.

1991 - ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை தமிழ் நாட்டில் பதவியேற்றது.

1927 - கவிஞர் ண்ணதாசன் பிறப்பு.

mgandhi
24-06-2008, 05:02 PM
வரலாற்றில் இன்று
ஜூன் 24

1976 - வட வியட்நாமும் தென் வியட்நாமும் ஒன்றாக இணைந்தன.

1991 - ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அமைச்சரவை தமிழ் நாட்டில் பதவியேற்றது.

1927 - கவிஞர் ண்ணதாசன் பிறப்பு.

தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
25-06-2008, 04:47 AM
தகவலுக்கு நன்றி அனு
நன்றி மோகன் அவர்களே!!:)

அனுராகவன்
25-06-2008, 05:09 AM
வரலாற்றில் இன்று

ஜூன் 25


1678 - Elina Lukirecia Carnaro Piscapio எனும் பெண் Padua பல்கலைக் கழகத்திலிருந்து Doctor of Philosophy எனும் பட்டம் வாங்கினார். உலகின் முதல் பெண் பட்டதாரி.

1993 - கனடாவின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கிம் காம்பெல்

1998 - கணினி இயக்க மென்பொருளான WinDows 98 உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது...

1983 - உலக கோப்பையே வென்ற கப்பில்தேவ் அணி..
வரலாற்று நிகழ்வு

mgandhi
25-06-2008, 08:12 AM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
28-06-2008, 07:02 AM
வரலாற்றில் இன்று

ஜூன் 28

1914 - முதல் உலகப் போர் தொடங்கியது.

1919 - முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

1924 - சிங்கப்பூரையும், மலேசியாவையும் இணைக்கும் Causeway எனப்படும் ஜொகூர் பாலம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

mgandhi
02-07-2008, 07:04 AM
தகவலுக்கு நன்றி அனு

அனுராகவன்
04-07-2008, 02:34 PM
வரலாற்றில் இன்று
ஜூலை
4

1884 - பிரெஞ்சு சிற்பி Frederick Augusty Holldi என்பவரால் சுதந்திர தேவி சிலை செய்து முடிக்கப்பட்டது

1960 - ஐம்பது நட்சத்திரங்கள் கொண்ட அமெரிக்கக் கொடி அறிமுகம் கண்டது

1997 - 1996 டிசம்பர் மாதம் ஏவப்பட்ட MArs Pathfinder என்ற விண்கலம் செவ்வாய்க் கோளில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது ..

1598 - Atlas எனப்படும் உலக வரைபடத்தை முதன் முதலில் தயாரித்து வெளியிட்ட ஆப்ரஹாம் ஓர்ட்டோனியஸ் காலமானார்.

mgandhi
04-07-2008, 05:42 PM
தகவலுக்கு நன்றி அனு

பாலகன்
04-07-2008, 06:51 PM
நாலு தகவலுமே ரொம்ப அருமை அனு

வாழ்த்துக்கள்- தொடரட்டும் உங்கள் பணி

அன்புடன்
பில்லா

அனுராகவன்
14-08-2008, 07:09 AM
வரலாற்றில் இன்று
ஆகஸ்ட் 14

பாகிஸ்தான் விடுதலை நாள் 1947

1880 - ஜெர்மனியில் கோலோன் நகரில் புகழ் பெற்ற கொலோன் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கப்பட்டது 632 ஆண்டுகளுக்குப் பிறகு அது நிறைவு பெற்றது

1979 - உலகிலேயே அதிக நேரம் நீடித்த வானவில் இன்று தோன்றியதாக வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. அது தோன்றிய இடம் இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் மாநிலம். நீடித்த நேரம் மூன்று மணி

மறத்தமிழன்
14-08-2008, 07:19 PM
ஆம் இதே தினத்தில்தான்(2006/08/14) ஈழத்தின் முல்லைத்தீவு என்கிற பகுதியில் செஞ்சோலை சிறுமிகள் காப்பகம் மீது இலங்கை அரச பயங்கரவாத்தின் ஒரு மிலேச்சத்தனமான தாக்குதலில் 63 அப்பாவி சிறுமிகள் கருகி மாண்டார்கள். இன்று இரண்டாம் ஆண்டு நினைவுதினம்.

அனுராகவன்
24-08-2008, 10:31 AM
வரலாற்றில் இன்று

ஆகஸ்ட் 24

1949 - நோட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு உதயம் கண்டது. அந்த அமைப்பின் உறுப்பு நாடு மீது எதிரிகள் தாக்குதல் மேற்கொண்டால் அனைத்து உறுப்பு நாடுகளும் அதற்கு எதிராகப் போரிட வகை செய்வதுதான் நோட்டோ அமைப்பு

1968 - தென் பசிபிக்கில் ஹைட்ரஜன் குண்டை வெடித்ததன் மூலம் உலகின் ஐந்தாவது அணு வல்லரசு என்ற அந்தஸ்த்தைப் பெற்றது பிரான்ஸ்

ஆர்.ஈஸ்வரன்
24-08-2008, 10:44 AM
பயனுள்ள தகவலுக்கு நன்றி

அனுராகவன்
17-09-2010, 02:56 PM
வரலாற்றில் இன்று
செப்-17

'' பகுத்தறிவு பகலவன் '' ஈ. வெ. ரா. பெரியார், திராவிடர் கழகத் தந்தை பிறந்த நாள்.

அனுராகவன்
18-09-2010, 07:02 PM
வரலாற்றில் இன்று
செப்-18

(George Washington ) அடிக்கல் நாட்டினார் 1709 - ஆங்கிலத்தில் முதன் முதலில் டிக்ஸ்னரி எனப்படும் அகராதியை உருவாக்கியவரான Samuel Johnson பிறந்தார்

ஜிங்குசாங்கு
18-09-2010, 08:25 PM
வரலாற்றில் இன்று
செப்-18

(George Washington ) அடிக்கல் நாட்டினார்

அவர் அமெரிக்க 'கேபிடல்' கட்டிடத்திற்கு (பாராளுமன்றம்?) அடிக்கல் நாட்டினார்.
மேலும் விவரங்களுக்கு: http://en.wikipedia.org/wiki/United_States_Capitol

அனுராகவன்
19-09-2010, 04:45 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 19


1888 - உலகின் முதல் அழகிப் போட்டி பெல்ஜியத்தில் நடைபெற்றது. அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 வயது பெர்த்தா சௌசாரெட்டுக்கு 5000 பிராங்குகள் பரிசாக வழங்கப்பட்டது
1893 - முதல் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு நியூசிலாந்து. அதற்கு வழி வகுக்கும் தேர்தல் சீர்திருத்தச் சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்
1945 - இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்தது 1957 - அமெரிக்கா அதன் முதல் நிலத்தடி அணுவெடிச் சோதனையை நடத்தியது

அனுராகவன்
20-09-2010, 09:40 AM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 20

1963 - மூத்த அமைச்சர்கள் பதவி விலகிக் கட்சியை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய காமராஜர் அதன்படியே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

1966 - Queen Elizabeth இரண்டு என்ற சொகுசுக் கப்பல் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது

அனுராகவன்
21-09-2010, 10:09 AM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 21

புவி மண்டல நாள் 1977 - அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட 15 நாடுகள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

அனுராகவன்
22-09-2010, 09:24 AM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 22

1776 - அமெரிக்க விடுதலை இயக்க வீரர்களில் ஒருவரான நேதன் ஹேல் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட நாள். இந்த வீரனின் கடைசி வார்த்தைகள் ''தாய் நாட்டிற்காக தியாகம் செய்ய எனக்கு ஓர் உயிர் மட்டுமே இருப்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்''

1949 - அப்போதைய சோவியத் யூனியன் அதன் முதல் அணுகுண்டு வெடிச் சோதனையை நடத்தியது

1791 - உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும் இயற்பியலாலருமான Michael Faraday பிறந்தார்

அனுராகவன்
23-09-2010, 11:45 AM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 23

1846 - ஜெர்மன் வானியலாரான (Johann Gottfried Galle ) ஜோஹன் கோட்பிரைட் கேல்லி நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார் ரோமை ஆண்ட புகழ் பெற்ற மன்னனான Augustus Caesar கிறிஸ்துவுக்கு முன் 63 ஆம் ஆண்டில் பிறந்தார்

அனுராகவன்
25-09-2010, 03:16 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 25

1818 - லண்டனில் கைஸ் மருத்துவமனையில் முதன் முதலில் ஒரு நோயாளிக்கு மனித ரத்தம் ஏற்றப்பட்டது. அதற்கு முன் விலங்குகளின் ரத்தம்தான் ஏற்றப்பட்டு வந்தது

1959 - இலங்கையின் அப்போதைய பிரதமராக இருந்த சாலமன் பண்டாரநாயகா புத்த மதத் துறவி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்

அனுராகவன்
27-09-2010, 08:57 AM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 27

உலகச் சுற்றுலா நாள் இந்திய நூலகயியலின் தந்தை சீர்காழி இரா. அரங்கநாதன் இறப்பு 1972 ஈழம்: கிளிநொச்சி - ஓயாத அலைகள் - 2

அனுராகவன்
28-09-2010, 01:58 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 28

1924 - அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இரண்டு அமெரிக்க ஆகாயப் படை விமானங்கள் தரையிறங்கின. அவைதான் முதன் முறையாக உலகை வலம் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. உலகை வலம் வர அவை எடுத்துக் கொண்ட நேரம் 175 நாட்கள் கி.மு 551 - சீனாவில் புகழ்பெற்ற சிந்தனையாளரும் தத்துவஞானியுமான கான்பூசியஸ் பிறந்தார் ..

சூறாவளி
28-09-2010, 03:35 PM
பாராட்டுக்கள்... பழைய காலங்களில் சன் டீவியில் பார்த்த ஞாபகம் தான் வருது..

ஆனால் படிக்கும் போது மட்டுமே ஞாபகம் இருக்கு... இதையெல்லாம் ஞாபகம் வச்சி நிறுத்தனும்னா....!!! :frown: ரொம்ப கஷ்டம்ங்க...

தினமும் தொடருங்கள்... வாழ்த்துக்கள்

அனுராகவன்
28-09-2010, 04:21 PM
நன்றி சகோ..
தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
29-09-2010, 12:56 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 29

1983 - லண்டனி மாநகருக்கு முதன் முதலில் ஒரு பெண் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

சுட்டிபையன்
29-09-2010, 05:57 PM
செப்டம்பர் 29

1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

அனுராகவன்
30-09-2010, 03:37 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 30


1962 - அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக் கழகத்தில் பெருங்கலவரம் மூண்டது. அதுவரை வெள்ளையர்களே படித்து வந்த அந்தப் பல்கலைக் கழகம் ஜேம்ஸ் மெரிடித் எனும் கறுப்பின மாணவரை முதன் முதலாக அனுமதித்ததைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அமெரிக்க ராணுவப் பாதுகாப்புடன் ஜேம்ஸ் மெரிடித் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். அப்போது மூண்ட கலவரத்தில் மூவர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

அனுராகவன்
30-09-2010, 03:38 PM
செப்டம்பர் 29

1941 - உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1993 - மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
நன்றி சுட்டிபையா..

சூறாவளி
30-09-2010, 06:06 PM
வரலாற்றில் இன்று
செப்டம்பர் 30


1962 - அமெரிக்காவின் மிசிசிப்பி பல்கலைக் கழகத்தில் பெருங்கலவரம் மூண்டது. அதுவரை வெள்ளையர்களே படித்து வந்த அந்தப் பல்கலைக் கழகம் ஜேம்ஸ் மெரிடித் எனும் கறுப்பின மாணவரை முதன் முதலாக அனுமதித்ததைத் தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது. அமெரிக்க ராணுவப் பாதுகாப்புடன் ஜேம்ஸ் மெரிடித் பல்கலைக் கழகத்திற்கு வந்தார். அப்போது மூண்ட கலவரத்தில் மூவர் கொல்லப்பட்டனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

1962 இனக்கலவரம் நடந்த நாடு இப்போது இருக்கும் நிலையை நினைத்து பார்க்கும் போது,.... நம் நாட்டில் இன்னும் ஜாதி இனம் மதம் மீது உள்ள வெறியை எப்போதுதான் குறைக்க முடியுமோ...!!!

நன்றிகள்...

அனுராகவன்
30-09-2010, 07:27 PM
என்ன செய்வது நண்பா..
எல்லாம் காலம் செய்யும் கோளம்..
நாம்தான் விழிக்க வேண்டும்..

அனுராகவன்
01-10-2010, 07:31 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 1

கி.மு. 331 கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன் அலெக்சாண்டர் படைகளும் டேரியஸ் தலைமையில் வந்த பெர்சிய படைகளுக்கும் அரபெல்லா எனுமிடத்தில் பெரும் போர் நடந்தது.பெர்சியப் படைகள் அலெக்சாண்டரின் படைகளை விட எண்ணிக்கையில் நான்கு மடங்கு பெரியது.அதை உணர்ந்த அலெக்சாண்டரின் தளபதி இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என்று ஆலோசனை கூறினான்.ஆனால் மாவீரன் அலெக்சாண்டரோ, 'வீரர்கள் வெற்றியைத் திருடுவதில்லை' என்று கூறி காலையிலேயே போரைத் தொடங்கினான் மாபெரும் வெற்றியும் பெற்றான்.

1854 - இந்தியாவில் தபால் போக்குவரத்து முறையாகத் துவங்கப்பட்டது. 1949 - பெய்ஜிங்கில் žன மக்கள் குடியரசு உதயமானதாக அறிவிக்கப்பட்டது.சீனக் குடியரசின் தலைவராக மாசேதுங்கும் பிரதமர் மற்றும் வெளியறவு அமைச்சராக சூயென்லாயும் அறிவிக்கப்பட்டனர். தோற்கடிக்கப்பட்ட தேசியவாதிகள் தைவானுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

1953 - இந்தியாவில் ஆந்திர மாநிலம் உருவானது.

1988 - ரஷ்யாவின் அதிபராக மிகையீல் கோர்பச்சேவ் பதவியேற்றார்.

அனுராகவன்
02-10-2010, 01:49 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 2

இன்றைய தினத்தில் பிறந்தவர்:- இந்தியாவின் தந்தை என்று போற்றப்படுபவரும், அகிம்சையின் உண்மையான பொருளை உலகுக்கு உணர்த்திய வருமான மகாத்மா காந்தி 1869 இல் பிறந்தார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்கள்:- இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவரும் லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் பிரதமர்களாக வழி ஏற்படுத்தியவரும், சிறந்த அரசியல்வாதியுமான திரு.காமராஜர் 1975 இல் காலமானார்.

சூறாவளி
05-10-2010, 05:22 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 05

1962ல், முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் வெளியானது.

1905 ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் தமது விமானத்தில் 39 நிமிடங்களில் 29 மைல் தூரம் பறந்தார்.

1864 கல்கத்தா நகரில் சூறாவளியால் 60000 பேர் இறந்தனர்.

சூறாவளி
06-10-2010, 06:15 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 06

1961 அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி ரஷ்யாவுடன் ஏற்படப்போகும் அணு ஆயுத போருக்கு எதிராக தங்களை பாதுகாத்து கொள்ள பாதுகாப்பு அறைகளை வாங்குமாறு அல்லது அமைத்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

1981 நோபல் பரிசு பெற்ற எகிப்து அதிபர் அன்வர் சதாத் தீவீரவாதிகளால் கொலை செய்யப்படார்.

1979 போப் ஜான்பால் முதல் முதலாக வெள்ளைமாளிகை விஜயம் செய்தார்கள், இதுவே வெள்ளைமாளிகை விஜயம் செய்த முதல் போப் ஆவார்கள்.

சூறாவளி
07-10-2010, 05:38 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 07

1950 ல் கல்கத்தாவில் அன்னை தெரஸா "மிஷன் ஏரிஸ் ஆப் ஷாரிட்டி" என்ற கருணை இல்லத்தை தொடங்கினார்.

1919 தேசப்பிதா காந்தியடிகளின் "நவஜீவன்" பத்திரிக்கை வெளி வர ஆரம்பித்தது.

1961 ல் பிலிப்ஸ் கம்பெனியை நிறுவிய ஆண்டனி ப்ரெடரிக் பிலிப்ஸ் நெதர்லாண்டில் காலமானார்.

அனுராகவன்
07-10-2010, 06:58 PM
நன்றி சூறாவளி சகோ..:medium-smiley-029:
மிகவும் நன்றி உங்கள் பகிர்வுக்கு....
வாழ்த்துக்கள் என்றன்றும்...:082502hi_prv:

அனுராகவன்
07-10-2010, 07:00 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 7

1919 - காந்தியடிகளின் நவஜ“வன் எனும் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது.

1949-'ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு' எனப்படும் கிழக்கு ஜெர்மனி உதயமானது.

1950 - கல்கத்தாவின் அன்னை தெரசா Mission - aries of Charity என்ற அவரது கருணை இல்லத்தைத் தொடங்கினார். இன்றைய தினத்தில் பிறந்தவர்:-தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின பிஷப்பும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான டெஸ்மன் டுட்டு பாதிரியார்

1931 ஆம் ஆண்டில் இன்றைய தினம் பிறந்தார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்:- மின்னியல் பொருட்களை உற்பத்தி செய்யும் உலகின் முன்னோடி நிறுவனங்களுள் ஒன்றான பிலிப்ஸ் கம்பெனியை நிறுவிய ஆண்டன் பிரடெரிக் பிலிப்ஸ் நெதர்லாண்டில் 1961 ஆம் ஆண்டில் காலமானார்.

அனுராகவன்
08-10-2010, 05:38 PM
வரலாற்றில் இன்று
அக்டோபர் 8

1871 - வரலாற்றிலேயே மிக மோசமான தீ விபத்துக்களுள் ஒன்று இன்றைய தினம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்தில் நிகழ்ந்தது. 1666 இல் லண்டன் தீ விபத்து, 1812 இல் மாஸ்கோ தீ விபத்து ஆகியவற்றை விட மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. மொத்தம் ஆறு மாநிலங்களுக்குப் பரவிய தீயில் 17450 வீடுகள் எரிந்து சாம்பலாயின. 98 ஆயிரம் பேர் வீடிழந்தனர். 1100 பேருக்கு மேல் உயிரிழந்தனர். சொத்துச் சேதத்தின் மொத்த மதிப்பு 200 மில்லியன் டாலர் 1958 - பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி மூலமாக ஆட்சியைக் கைப்பற்றினார் அயூப் கான். பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் இராணுவப் புரட்சி அது.

இன்றைய தினத்தில் பிறந்தவர்:- மனித உரிமைக்காகப் போராடியவரும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டவருமான Reverend Jesse Jackson 1941 ஆம் ஆண்டில் இன்று பிறந்தார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்கள்:- 1869 - அமெரிக்காவின் பதினான்காவது அதிபர் பிராங்களின் பியர்ஸ் (Franklin Pierce ) கான்கார்ட் எனுமிடத்தில் காலமானார்.

திரைபடப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 1959 ஆம் ஆண்டில் இன்றைய தினம் காலமானார்.

அனுராகவன்
09-10-2010, 10:46 AM
வரலாற்றில் இன்று
அக்டோபர் 9

1875 - கால்பந்து போட்டி ஒன்று இங்கிலாந்தின் ஹாம்ப்டன் பார்க்கில் நடைபெற்றது. உலகிலேயே முதன் முதலில் நடைபெற்ற கால்பந்து இது என்று நம்பப்படுகிறது.

1940 - லண்டனிலுள்ள St . Paul தேவாலயத்தைக் குண்டுவைத்துத் தாக்கினர் நாஜிப் படையினர். தேவாலயத்தின் மாடம் எந்தச் சிதைவும் இல்லாமல் தப்பியது.

1975 - அமைதிக்கான நோபல் பரிசு ரஷ்யாவின் Andrei Sakharov -க்கு வழங்கப்பட்டது ஹைட்ரஜன் குண்டின் தந்தை என்று அவர் வருணிக்கப்படுகிறார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்கள்:- 1974 - யூதர்களின் வணக்கத்துக்குரிய Oskar Schindler என்பவர் ஜெர்மனியில் காலமானார். யூத இனத்தையே கூண்டோடு அழிக்கும் செயலில் ஹிட்லரின் படைகள் ஈடுபட்டிருந்த காலத்தில் சுமார் 1200 யூதர்கள் தப்பிக்க உதவியவர்தான் இந்த Schindler . அவரது மனித நேயக் கதைகள் Schindler 's List என்ற திரைப்படமாக சில ஆண்டுகளுக்கு முன் வெளி வந்தது.

1852 -ஆஸ்திரிய உளப்பகுப்பாய் வாளாரான அன்னா ப்ராய்டு (Anna Freud ) லண்டனில் காலமானார். அவர் புகழ் பெற்ற சிக்மண்ட் ப்ராய்டின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

சூறாவளி
09-10-2010, 07:08 PM
தொடருங்கள்... தினம் ஒரு தகவல் தொகுப்பை..

நாங்களும் வாசிக்கிறோம் அறிகிறோம் என்பதற்க்காக உங்களுக்கு அறிவிக்கணும்தானே.. அதான் இன்நன்றி நவிழ்தல் மடல்...:4_1_8:

அனுராகவன்
09-10-2010, 07:13 PM
சூறாவளி உங்களின் பங்களிப்பையும் இங்கு பகிரலாமே!!
இன்னும் மெருகேற்றலாமே!!
உங்கள் படைப்புக்களும் என்னை கவருகின்றன..
அது புகழ்ச்சியல்ல..
ஊக்கம்தானே!!

அனுராகவன்
10-10-2010, 02:49 PM
வரலாற்றில் இன்று
அக்டோபர் 10

1903 - ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் எனுமிடத்தில் குதிரைப் பந்தயம் ஒன்று நடைபெற்றது. அதில் ஒரு போட்டியில் ஹைபிளையர், லாக்லோச்சி, பார்த்தினி என்ற பெயர்களைக் கொண்ட மூன்று குதிரைகளும் ஒரே நேரத்தில் வெற்றிக் கம்பத்தை தொட்டன. குதிரைப் பந்தய வரலாற்றிலேயே முதன் முறையாக நிகழ்ந்த சம்பவம் இது.

1972 - திரு.எம்.ஜி. ராமச்சந்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இன்றைய தினந்தில் பிறந்தவர்:- பெண்கள் டென்னிஸ் உலகில் பல விருதுகளை வென்ற மார்ட்டினா நவரத்திலோவா 1956 ஆம் ஆண்டில் இன்றைய தினம் பிறந்தவர்.

இன்றைய தினத்தில் இறந்தவர்கள்:- 1872 - வில்லியம் ஹென்றி ஸ“வார்டு என்பவர் நியூயார்க்கில் காலமானார், அலாஸ்காவை ரஷ்யாவிடமிருந்து அமெரிக்காவிற்கு வாங்கிக் கொடுத்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் அறிஞரும் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவருமான மு. வரதராசனார் 1977 ஆம் ஆண்டில் இன்று காலமானார்.

பாலகன்
10-10-2010, 03:59 PM
ஒருகருப்பர் படிச்சதுக்கே அவ்வளவு கலவரம்
ஆனா இப்போது பார்த்தால் அங்கு அப்படி இல்லையே?
நல்ல மாற்றம்

அனுராகவன்
11-10-2010, 06:47 AM
வரலாற்றில் இன்று
அக்டோபர் 11

1886 - 19 வயதே நிரம்பிய தாமஸ் எடிசன் ( Thomas Edison ) தனது முதல் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமம் பெற விண்ணப்பித்தார். அவர் கண்டு பிடித்த மின் இயந்திரம் அமெரிக்கக் காங்கிரசின் வோட்டுக்களை எண்ணுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

1919 - விமானப் பயணத்தின்போது உணவு பரிமாறும் முறையானது முதன் முதலில் இன்று இலண்டன் - பாரிஸ் பயணத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இன்றைய தினத்தில் பிறந்தவர்:-

அமெரிக்காவின் 32 வயது அதிபர் Franklin Roosevelt இன் மனைவி Elanor Roosevelt 1884 இல் இன்றைய தினம் பிறந்தார்.

சூறாவளி
11-10-2010, 07:25 PM
19 வயதுமுதலே கண்டுபிடிப்புகளுக்கு ஆரம்பம் ஆகிடுச்சி.. இன்றுதான் அறிந்தேன் இத்தகவலை..

நன்றிகள்

அனுராகவன்
13-10-2010, 06:15 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 13

1992 - ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானம் ஒன்று உலகச் சாதனை புரிந்தது. அது உலகை 33 மணி நேரத்தில் முழுமையாக வலம் வந்தது..

அனுராகவன்
14-10-2010, 03:14 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர் 14

1964 - ரஷ்யாவில் பத்து ஆண்டுகளாகப் பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் இருந்த குருஷ்சேவ் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் கோசிஜின் பிரதமராகவும் பிரஷ்னேவ் கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.

1964 - அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் இனப்பாகுபாட்டுக்கு எதிராக அமைதியான வழியில் போராடி வந்த டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்தச் பரிசை வென்ற மிக இளையவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமக்குக் கிடைத்த 54 ஆயிரம் டாலர் பரிசை
அமெரிக்காவின் மனித உரிமைப் போராட்ட அமைப்புக்களுக்கு வழங்கினார் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்.

இன்றைய தினத்தில் பிறந்தவர்:-
1890 - Dwight Eisenhower பிறந்தார். அவர் பின்னாளில் இரண்டாம் உலகப் போரில் நேசப் படைகளின் தலைமைத் தளபதியாகவும், அதனையடுத்து அமெரிக்காவின் 34வது அதிபராகவும் பணியாற்றினார்.

சூறாவளி
14-10-2010, 06:23 PM
டாக்டர் மார்டின் லூதர்கிங்... பாடப்புத்தகங்களில் மட்டுமே வாசித்து பழகிய பெயர்.. கிடைத்த மொத்த தொகையையும் மனித உரிமை போராட்ட அமைப்புக்கு வழங்கினார்... ம்ம்.. உண்மையான மனிதர்..

அனு... நன்றிகள்.. வாழ்த்துக்கள்..

தொடருங்கள்

அனுராகவன்
14-10-2010, 06:36 PM
நன்றி சகோ..
அப்பரம் என்ன உங்கள் படைப்புகள் காண முடியல...
தொடருங்கள்.................

அனுராகவன்
15-10-2010, 04:05 PM
வரலாற்றில் இன்று
அக்டோபர்15

1917 - மாத்தாஹாரி என்ற பெயரைக் கேட்டாலே அவர் பிரபலமான பெண் ஒற்றர் என்பதும், நன்கு நடனமாடுபவர் என்பதும் பெரும்பாலோருக்குத் தெரியும். டச்சு மங்கையான அவர் முதல் உலகப் போரில் ஜெர்மனியின் ஒற்றராகப் பணிபுரிந்து, இராணுவ ரகசியங்களை ஜெர்மனிக்கு உளவு கூறி வந்தார். பிரெஞ்சு அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து பாரிசில் 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி கைது செய்தனர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு இன்றைய தினம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்:-
உடற்பயிற்சியின் தந்தை என்று கருதப்படும் ஜெர்மனியைச் சேர்ந்த டப்விக் ஜான் 1852 இல் இன்றைய தினம் காலமானார்

அனுராகவன்
16-10-2010, 03:04 PM
வரலாற்றில் இன்று
அக்டோபர் 16

1799 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய தமிழக வரலாற்று நாயகன் வீரபாண்டிய கட்டபொம்மன் இன்றைய தினம் கயத்தாற்றில் கட்டை புளிய மரத்தில் தூக்கலிடப்பட்டார்.

1846 - அமெரிக்காவின் பாஸ்ட்டன் நகரில் மாஸாசூஸட்ஸ் பொது மருத்துவமனையில் இன்று டாக்டர் காலின் வாரன் என்பவர் ஈதர் எனப்படும் மயக்க மருந்து கொடுத்து ஓர் இளைஞனின் தாடையில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற்றினார். மயக்க மருந்து கொடுத்து செய்யப்பட்ட முதல் அறுவை சிகிச்சை அது.

1906 - 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரம் பிள்ளையால் பங்கு ஒன்றுக்கு பத்து ரூபாயை கொண்டு சுமார் பத்து லட்சம் ரூபாய் மூதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட சுதேசி கப்பல் கம்பெனி இன்று பதிவு செய்யப்பட்டது.

1944 - எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' எனும் திமிழ்த் திரைப்படம் வெளியாயிற்று. சொன்னை பிராட்வேயில் 768 நாட்கள், அதாவது 110 வாரங்கள் ஓடிய அந்தப் படமானது மூன்று தீபாவளிகளைக் கண்டு சாதனை படைத்தது. 1946 - நூரம்பர்க் விசாரணையின் தீர்ப்பைத் தொடர்ந்து பத்து நாஜி போர்க் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர்.

1951 - பாகிஸ்தானின் பிரதமர் லியாகத் அலிகான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதியினால் படுகொலை செய்யப்பட்டார்.

1964 - அணுகுண்டை வெடித்துச் சோதனை செய்ததன் மூலம் உலகின் ஐந்தாவது அணு வல்லரசு என்ற அந்தஸ்தைப் பெற்றது சீனா.

இன்றைய தினத்தில் இறந்தவர்:-

நடிகர் கார்த்திக்கின் தந்தையான நடிகர் முத்துராமன் காலமான தினம் இன்று. 1981 ஆம் ஆண்டில் இன்று ஊட்டியில் ஒரு படப்பிடிப்பிற்குச் சென்றிருந்த அவர் காலையில் எழுந்து ஓடும் போது மாரடைப்பால் காலமானார்.

அனுராகவன்
24-10-2010, 05:58 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர்
24

1579 - எஸ்.ஜே.தாமஸ் ஸ்டீபன்ஸ் என்ற ஆங்கிலேயப் பாதிரியார் போர்ச்சுகீசியக் கப்பலில் கோவா வந்தார். இந்தியாவிற்கு வந்த முதல் ஆங்கிலேயரும் முதல் ஆங்கிலேய பாதிரியாரும் அவரே.

1605 - அக்பரின் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் சலீம், ஜஹாங்கீர் என்ற பட்டத்துடன் மொகலாயச் சக்கரவர்த்தியாக இன்று டில்லி அரியணை ஏறினார்.

1934 - மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

1945 - உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை, சமாதானம் முதலியவற்றை வளர்ப்பதற்காக நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இன்று ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டது. எனவே இன்று ஐக்கிய நாடுகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நான்கு ஆண்டுகள் கழித்து, 1949 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாட்டுச் சபை கட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

இன்றைய தினத்தில் பிறந்தவர்:-

1632 - விஞ்ஞானி Anthony Van Leeuwenhoek என்பவர் பிறந்தார் அவர்தான் முதன் முதலில் மைக்ரோஸ் கோப் கண்ணாடியை உருவாக்கினார். அந்த சக்தி வாய்ந்த கண்ணாடியைக் கொண்டு நுண்ணுயிர்களை ஆராய முடிந்தது.

சூறாவளி
24-10-2010, 06:02 PM
தகவல்கள் மீண்டும் தொடர வந்து விட்டீர்கள் .. சந்தோஷம்... (கொஞ்ச நாளா மறைஞ்சிட்டிங்களே...:confused:)

aathma
25-10-2010, 02:29 PM
அனு அவர்களே , உங்களது தீவிர முயற்சியும் , அயராத உழைப்பும் போற்றுதற்கு உரியன . வாழ்த்துக்கள்

அனுராகவன்
29-10-2010, 06:53 PM
வரலாற்றில் இன்று

அக்டோபர்
29

1863 - சுவிட்சர்லந்தைச் சேர்ந்த ஹென்ரி டூனன்ட் என்பவரால் செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

1923 - குடியரசு என்ற அந்தஸ்தைப் பெற்றது துருக்கி. முதல் அதிபராக MUSTAFA KEMAL பதவியேற்றார்.

1945 - நியூயார்க்கில் GIMBELS பகுதிவாரிக் கடை பால்பாயிண்ட் பேனாவை அறிமுகம் செய்தது.

1960 - குத்துச் சண்டை துறையில் புகழை ஈட்டிய முகமது அலி முதல் போட்டியில் வெற்றி பெற்றார்.

இன்றைய தினத்தில் இறந்தவர்:-

புகழ் பெற்ற அமெரிக்கப் பத்திரிகையாளரும், புலிட்ஸர் பரிசை நிறுவியவருமான ஜோசங் பியூலிட்சர் 1911 ல் காலமானார்.