PDA

View Full Version : திசை காட்டிய தேவதை



சிவா.ஜி
11-02-2008, 03:27 AM
இன்றைய நாள் என்
இதய நாட்காட்டியில்
இனிப்பான நாள்....

கடவுளின் வரமெனக்கு
கைவரப் பெற்ற நாள்...
இணையில்லாதவளை
துணையாய் எனக்கு
இணைத்த நாள்,
மனதை மகிழ்வால்
நனைத்த நாள்!

கெட்டியான பூமிக்குள்
நட்டு வைத்த விதையின் முளை
முட்டி முளைக்க முடியாமல்
எட்டுத் திக்கும் பரவி
திக்கித் திணறுவதைப் போல்
இலக்கற்றிருந்த எனக்கு
விளக்கானாள்!

திசை காட்டிய தேவதை!
மிசைமீதுயர
விசையூட்டிய வித்தகி!
அசை,சீர்,அடி,தளை என
அனைத்துமற்றிருந்த என்
வாழ்வெனும் கவிதையை
சீராக்கினாள்...என்னை
நேராக்கினாள்!

அன்றுமுதல் இன்றுவரை
அவளின்றி ஓரணுவும்
எனக்கசையாது...
அவள் சொல்லாத எதுவும்
எனக்கிசையாது!

அகவைகள் கூடியதால்
அவளுக்கும் எனக்கும்
தோல்கள் சுருங்கினாலும்
காதலின் எல்லை மட்டும்
விரிந்து கொண்டேயிருக்கிறது!

(இருபத்தியோரு வருடங்களுக்கு முன் இதே நாளில் என் வாழ்வில் இணைந்த என் துணைவிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்)

நாகரா
11-02-2008, 03:44 AM
நல்லதோர் கவிதை. வாழ்த்துக்கள் சிவா. நீவிரும் உம் துணைவியாரும் நீடூழி வாழவும், உம் காதல் இன்னும் இன்னும் விரியவும் சிறக்கவும் அருட்பெருங்கடவுளை வேண்டுகிறேன்.

சிவா.ஜி
11-02-2008, 03:49 AM
உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றி நாகரா.

யவனிகா
11-02-2008, 08:40 AM
ம்ம்ம்...அண்ணிகிட்ட காமிச்சீங்களா...என்னங்கண்ணா இது...எங்கண்ணன் போல வீட்டுக்காரர் கிடைக்க அண்ணி தான் லக்கி.இன்னும் பல்லாண்டுகாலம் இதே காதலுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா...சரி..அண்ணி செய்த பால்பாயாசம் எங்கே? பார்சல் வரலையே...

மதி
11-02-2008, 08:53 AM
அட...
அருமையான அர்ப்பண கவிதை...
வாழ்த்துக்கள்..

இது மாதிரி தான் நானும் எழுதணும்னு பாக்குறேன்.. கொஞ்ச காலம் போகட்டும்..

சிவா.ஜி
11-02-2008, 09:48 AM
ம்ம்ம்...அண்ணிகிட்ட காமிச்சீங்களா...என்னங்கண்ணா இது...எங்கண்ணன் போல வீட்டுக்காரர் கிடைக்க அண்ணி தான் லக்கி.இன்னும் பல்லாண்டுகாலம் இதே காதலுடன் வாழ வாழ்த்துக்கள் அண்ணா...சரி..அண்ணி செய்த பால்பாயாசம் எங்கே? பார்சல் வரலையே...
நல்லாருக்கும்மா கதை...சாமியே சைக்கிள்ல போகும் போது பூசாரி புல்லட் கேட்ட கதையாவில்ல இருக்கு.எனக்கே வடை பாயசத்தோட விருந்து நஹி...ஹீ..ஹி
ஆனாலும் ஊருக்கு வருவீங்கல்ல...அப்ப இன்னும் பெரிய விருந்தா வெச்சிடலாம்.

வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.

சிவா.ஜி
11-02-2008, 09:50 AM
இது மாதிரி தான் நானும் எழுதணும்னு பாக்குறேன்.. கொஞ்ச காலம் போகட்டும்..
இதைவிட அருமையா எழுதக்கூடிய வகையில் உங்கள் மணவாழ்வு இனிமையாய் அமைய வாழ்த்துகள் மதி.

அமரன்
11-02-2008, 09:50 AM
ஒரு புள்ளியில் ஓரிதயம்; மறு புள்ளியில் இன்னோரிதயம்.
இரண்டும் இணைந்த இருதயம் இல்லறத்தில் சாத்(வீக)தியமாகிறது.
இரண்டும் இணைந்த இருதயம் இல்லறத்தை சாத்தியமாக்கிறது..
தூரச்சுருக்கம் நெருக்கத்தை தரும். தோற்கண் சுருக்கமானது,
புள்ளிகளின் நெருக்கத்தை பெருக்கினால் இல்லறம் நல்லறமாகிறது.
சிவாவின் இல்லறம் நல்லறம். அக வைகளுக்கு இதிலிடமேது:):)

பாராட்டுகள்; வாழ்த்துக்கள்; நன்றிகள்;சின்னவனானாலும் ஆசிகள்.

(எப்படிப்பட்ட பெண் வேண்டுமெனும் நச்சரிப்புகளுக்கு இக்கவிதையை பதிலாக்கிடவேண்டியதுதான்.:))

சிவா.ஜி
11-02-2008, 09:53 AM
ஆஹா அமரன்....இனிய இல்லறத்துக்கு உங்கள் அசத்தலான விளக்கம் வெகு அழகு..அருமை.
இணைந்திருக்கும் இரு உள்ளங்களின் சார்பாக மிக்க நன்றி.

அக்னி
11-02-2008, 09:58 AM
கரம் பிடித்த இணை,
என்றும் எங்கும் எதிலும் துணையாக இருந்தால்,
வாழ்க்கை வற்றாத சுனையாக இருக்கும்...
என்பதை அனுபவமாக உணர்ந்து, அழகாக தந்திருக்கும்
சிவா.ஜி அவர்களுக்குப் பாராட்டுக்கள்...

தோல்களின் சுருக்கம் உடலில் என்றிருந்தாலும், பாசத்தின் பெருக்கம் மனதில் என்றும் வளர்ந்துகொண்டே...
என்று வாழும் சிவா.ஜி அண்ணாவுக்கும் அண்ணிக்கும்
என்றும் வாழ்வாங்கு வாழ
சிறியவன் எனது வாழ்த்துக்களோடு பிரார்த்தனைகளும்....

நேசம்
11-02-2008, 10:01 AM
சிவாண்ணாவும் அண்ணியும் இன்றும் போல் என்றும் மகிழ்வுடன் வாழ எல்லா வல்ல இறைவனிடம் பிராத்திக்கிரென்

அக்னி
11-02-2008, 10:04 AM
அப்ப இன்னும் பெரிய விருந்தா ? வெச்சிடலாம்.

கேள்விக்குறி அங்கதான் வருமோ...
அப்போ ஒருவேளை இது நக்கலாக இருக்குமோ...
என்னவோ ஏதோ... நமக்கென்ன... யவனிகாவே முடிவெடுக்கட்டும்...
வரட்டுமா சிவா.ஜி...:)

அமரன்
11-02-2008, 10:06 AM
கேள்விக்குறி அங்கதான் வருமோ...
அப்போ ஒருவேளை இது நக்கலாக இருக்குமோ...
என்னவோ ஏதோ... யவனிகாவே முடிவெடுக்கட்டும்...
வரட்டுமா சிவா.ஜி...:)
எனக்கென்னமோ நீங்க போட்ட கேள்விக்குறி அருவாளாட்டம் தெரிகிறது.. செகப்பு கலரில வேற போடிருக்கீங்க.. ______வெட்டி விருந்து வைக்கபோறாங்களோ

சிவா.ஜி
11-02-2008, 10:14 AM
அக்னி உங்கள் வாழ்த்துகளும்,பிரார்த்தனையும் எங்களை இன்னும் காதலோடு வாழ்வைக்கும்.மிக்க நன்றி.
(அது சரி அதென்ன அடுத்த பதிவிலேயே வேலையை காமிச்சிட்டீங்க...?
உங்களுக்கும் அமரனுக்கும் ஒரே பதில்....ஆமா கிடா வெட்டி விருந்து....வருவதாய் இருந்தால் சொல்லுங்கள்...உங்கள் இருவருக்கும் டிக்கெட் வாங்கி அனுப்புகிறேன்.)

சிவா.ஜி
11-02-2008, 10:16 AM
மிக்க நன்றி நேசம்.உங்கள் வாழ்த்துகளும்,பிரார்த்தனையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

யவனிகா
11-02-2008, 10:17 AM
அடடா...அண்ணா உங்கள நம்பி ஊருக்கு வரவா...அண்ணி இருக்காங்க கவலை இல்லை..ஆனா ஊரில உங்க சமையல் தான்னு ஒரு தரம் சொன்ன ஞாபகம்...உங்களையும் புள்ளியையும் கிச்சன் உள்ளுக்கு அனுப்பிட்டு நாங்க கால் மேல கால் போட்டு உக்காந்திட்டு ஒரே ஜாலி தான்...இன்னும் மன்ற வாண்டுகள் வேற ரெண்டு...வெயிட்டிங் லிஸ்ட்...எங்க பாடு கொண்டாட்டம்...உங்க பாடு திண்டாட்டம்...ச்சே எப்பப்பா வரும் வெகேசன்?

அமரன்
11-02-2008, 10:19 AM
உங்களையும் புள்ளியையும் கிச்சன் உள்ளுக்கு அனுப்பிட்டு நாங்க கால் மேல கால் போட்டு உக்காந்திட்டு ஒரே ஜாலி தான்...?
இப்பமட்டும் என்னவாம்... அவுங்கதானே கிச்சன்ல.. நீங்க கால் மேல கால் போட்டு பேசிட்டுத்தானே இருக்கீங்க.:)

அக்னி
11-02-2008, 10:20 AM
ஆமா கிடா வெட்டி விருந்து....
அப்பச்சரி...
யவனிகா பார்த்துக்கோங்க...

உங்கள் இருவருக்கும் டிக்கெட் வாங்கி அனுப்புகிறேன்.)
அப்புறம் ஏன் இந்தக் கொலைவெறி... பேச்சு பேச்சா இருக்கணும்...
நமக்கு டிக்கெட் கொடுக்கிற அளவுக்கு ஏன்... நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தோம்...
அமரன் எஸ்கேப் ஆயிடுங்க... நான் ஆல்ரெடி எஸ்கேப்...

சிவா.ஜி
11-02-2008, 10:25 AM
.எங்க பாடு கொண்டாட்டம்...உங்க பாடு திண்டாட்டம்...ச்சே எப்பப்பா வரும் வெகேசன்?

யவனிகா...இத்தனை வருஷமாகியும் ராசாவப் பத்தி தெரியலையா...நாங்க கிச்சனுக்குப் போனதும் ஜன்னலைத் திறந்து ரோட்டுல போற யாரையாவது கூப்பிட்டு காசு கொடுத்து ஹோட்டல்லருந்து சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லி அதை தானே சமைச்சதா(வெட்டி பந்தா நினைவுக்கு வருதா...பிரியாணி..?)உங்களுக்கெல்லாம் குடுத்துடுவாரு.இதுல என்னையும் கூட்டு சேத்துக்குவாரு...ஹா...ஹா..

சிவா.ஜி
11-02-2008, 10:27 AM
அக்னி...நெஜமாவே...உங்களுக்கு வெட்டி விருந்துதான் கொடுக்கனும்....இருங்க அமரனை ரெண்டு நாளைக்கு முன்னாலேயே இங்கே வரவழைச்சு அதுக்கான ஏற்பாடு பண்ணிடறேன்.
எஸ்கேப்பாமில்ல...எஸ்கேப்பு....இருக்கு ஆப்பு...

பூமகள்
11-02-2008, 12:38 PM
எப்படி தவறவிட்டேன் இந்த அழகான கவிதையை அதுவுமிந்த அற்புத நன்னாளில்??!!

வரமாக கிட்டிய தேவதைக்காக
வரம் கொடுக்கும் ஈசன்
பாடும் அற்புத கவி..!

ஒவ்வொரு இல்லறமும்
இப்படித்தான் இருக்கனும்
எனும் கட்டியம் கூறும்
சித்திரம் இது..!

பத்திரமாய் பதிவெடுத்து
பாங்குடன் வைக்க
வேண்டிய இரு புள்ளி
கொண்ட வண்ணக்
குடும்ப கோலம் இது..!!

ஈசனை அடைந்த பார்வதி
எத்தனை எத்தனை
தவம் புரிந்தவர்..?!!

இப்படியொரு இனிய
சகோதர சொந்தம்
கிட்ட நான் என்ன
தவம் செய்தேனோ...??!!

------------------------

அழகிய கவிதையையே அண்ணிக்கு திருமண நாள் பரிசாக கொடுத்து அவரின் உள்ளம் முழுக்க ஆனந்தத்தால் நிரப்பி விட்டீர்கள் சிவா அண்ணா.

இன்னும் இன்னும் பல நூறு ஆண்டுகள் இனிய இல்லறம் சிறந்து இது போல் பெருங்காவிய கவிகள் உருவாக என்றென்றும் இறைவனை இறைஞ்சுகிறேன்..!

சிவா.ஜி
11-02-2008, 12:44 PM
ரொம்ப நன்றிம்மா பூ.என்னை இயக்கும் சக்திதான் என் துணை.நிச்சயம் நான் அனைவருக்கும் இதைப் போன்ற நல்ல இல்லறமும்,துணையும் அமைய மனதார வாழ்த்துகிறேன்.
என் தங்கைக்கும் மிகச் சிறப்பானதொரு இல்வாழ்வு அமைய என் மனப்பூர்வமான ஆசிகள்.

அக்னி
11-02-2008, 12:59 PM
ரொம்ப நன்றிம்மா பூ.என்னை
மியாவ்... மியாவ்...
நான் ஒண்ணும் சொல்லல. செய்யல. பாக்கல.
வரட்டுமா சிவா.ஜி...

சிவா.ஜி
11-02-2008, 01:26 PM
காத்துதான் எங்கேயுமிருக்கும்ன்னு சொல்வாங்க....இந்த அக்னியும் அப்படித்தானா....அட தேவுடா.....

சாலைஜெயராமன்
11-02-2008, 01:36 PM
காதலுக்குப் பின் கல்யாணமா? கல்யாணத்திற்குப் பின் காதலா ?

முந்தையது பொங்கி எழுந்து அடங்குவது. பிந்தையது காலங்களைக் கடந்து நிற்கும் ஆற்றலுடையது. 21 ஆண்டுகளுக்குப் பின் கவிதையை காதலுக்கு அர்ப்பணம் ஆக்குவதென்றால் அது திரு சிவா அவர்களால்தான் இயலும். அன்பை அப்படியே தாரை வார்த்துத் தந்திருக்கிறீர்கள் உங்கள் உயிரின் மறுபதிப்பிற்கு. சகோதரி மெத்தக் கொடுத்து வைத்தவர்கள். இப்படிப் பட்ட கணவனைப் பெற்றதற்கு பலகோடி புண்ணியம் செய்திருக்கிறார்கள்.

உங்களுக்கு இன்னொரு பின்னூட்டத்திலும் வாழ்த்துக் கூறியிருக்கிறேன். இதில் ஒரு ஒற்றுமை என்னுடைய பிறந்த நாளும் இன்றுதான். எனவே என்றும் மறக்க இயலாது உங்கள் திருமண நாளை.

வாழ்க வளர்க.

யவனிகா
11-02-2008, 01:44 PM
பூவு யாருக்கு ஐஸ் வெக்கறேன்னே தெரியல...என்ன ஊருக்கு வந்தா உனக்கு மட்டும் விசேச உபசரிப்பு நிச்சயம்...என் காதில பொகை வரப்போகுது.
பட்டி மன்றம் ஆரம்பிங்கப்பா...
அண்ணி கொடுத்து வைத்தவரா?
அண்ணன் கொடுத்து வைத்தவரா?

ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்கப் போறதையெல்லாம்...வாங்கி வைத்துக் கொள்ளப் போகும் யவனிகா கொடுத்து வைத்தவரா என்று....

rocky
11-02-2008, 02:03 PM
அன்புள்ள சிவா.ஜி அண்ணனுக்கு,

உங்களின் திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லும் வயதில்லை எனக்கு, நான் இன்னும் சின்னப்பையன், ஆகையால் உங்களின் திருமண நாளில் சிறுவனான எனக்கு நீங்கள் வாழ்த்துக் கூறுங்கள் ஒரு நல்ல மனைவி அமையவேண்டுமென்று, எனக்கு மட்டுமல்ல நம் மன்றத்தில் இருக்கும் அனைத்து இளைஞர்களுக்கும். நன்றி.

உங்களின் இந்தப் பதிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது, காரணம் நம்ம மன்றத்துல சிலபேர் என்னை ரொம்ப பயமுறுத்திட்டாங்க. (முக்கியமா ஆரென் அண்ணன்). நான் தற்கொலை செய்ய வழி கேட்டதும் கல்யாணம் பன்னிக்கச் சொன்னது அவர்தான். ஆனா இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கு.

இளசு
11-02-2008, 07:39 PM
பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான பரிசுக்கவிதை!

வாழ்க்கை, வாலிப தாகங்கள் - அரூபமானவை.. அதீதமானவை...
இதை ஒரு திரைப்பாடல் வரி அழகாய்ச் சொல்லும்..
''கடல் தாகம்''

சரியான இணை அமைந்தால் அமைதி வரும்...
அத்தேடல் முற்றுப்பெற்று ஓரிடம் நிலைக்கும்...
மற்ற களங்களில் மனத்துடுப்பு செலுத்தி வெல்ல முடியும்..

''காதல் தீண்டவே ... கடல்தாகம் தீர்ந்ததே..''

தாகம் தணிந்த இதயம் சொல்லும் இப்பாராட்டுக்கு
என் பாராட்டுகள்...


முதுமை வந்த பொழுதும்
இளமை கொள்ளும் இதயம்...
நீ வழங்க நான் வழங்க
இன்பம் நாளுக்கு நாள் வளரும்...


கண்ணதாசனை விஞ்சிய கடைசி வரிகளுக்கு சிறப்புப் பாராட்டுகள்!

ஓவியா
12-02-2008, 12:12 AM
(இருபத்தியோரு வருடங்களுக்கு முன் இதே நாளில் என் வாழ்வில் இணைந்த என் துணைவிக்கு இந்த கவிதை சமர்ப்பணம்)

வாழ்த்துக்கள் அண்ணா. :icon_b::icon_b::)

பூவோடு சேந்த வர்ணமாய், வாசமாய் நீங்கள் இருவரும் என்றும் இணந்து பிணைந்து வாழ இந்த பாச தங்கையின் வாழ்த்து பாமாலைகள் என்றும் லண்டனிலிருந்து உங்கள் இருவருக்கும் சூடப்படும்.

இன்நன்நாளில் நீங்கள் இருவரும்தான் என்னை ஆசிர்வதிக்கனும். :D:D:D:D

அண்ணியிடம் என் அன்பை பரிசாக கொடுத்தேன் என்று சொல்லுங்கள். :lachen001::lachen001:

சிவாஜியண்ணாவும் அண்ணியும் (பத்மினி பார்ட் டூ) வாழ்க பல்லாண்டு.

சுகந்தப்ரீதன்
12-02-2008, 03:23 AM
அருமை அண்ணா...!!
அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் அண்ணிக்கு நீங்க கவிதை எழுதுவதிலே அப்பட்டமாய் எனக்கு புலப்படுகிறது..உங்களின் அளப்பறியாத அன்பு...! இது மேலும் மேலும் தழைத்தோங்க என் வாழ்த்துக்கள்....கவிதை அழகு அண்ணா..உங்கள் வாழ்வை போலவே..!!

சிவா.ஜி
12-02-2008, 03:28 AM
உங்களின் இந்தப் பதிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது, காரணம் நம்ம மன்றத்துல சிலபேர் என்னை ரொம்ப பயமுறுத்திட்டாங்க. (முக்கியமா ஆரென் அண்ணன்). நான் தற்கொலை செய்ய வழி கேட்டதும் கல்யாணம் பன்னிக்கச் சொன்னது அவர்தான். ஆனா இப்ப கொஞ்சம் தைரியமா இருக்கு.
அப்படியெல்லாம் பயப்படாதீர்கள் ராக்கி....ஆரென் சும்மா கலாட்டா செய்கிறார்.ஒருவரின் வாழ்வை முழுமையாக்குவது திருமணம் தான்.அன்பை கொடுத்து அன்பை வாங்குவது எவ்வளவு சுகம் தெரியுமா..?
உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
12-02-2008, 03:33 AM
பொருத்தமானவர்களுக்கு பொருத்தமான பரிசுக்கவிதை!


மிக்க நன்றி இளசு.என் மனைவிக்கு இணையத்தில் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.அலைபேசியில் அழைக்கும்போது வாசித்துக் காட்டச் சொன்னார்..வாசித்ததும்...இதற்கு நான் தகுதியானவளா....என்றார்.
நீ மட்டுமே என்றேன்.
அது மட்டுமல்ல....இத்தனை உறவுகளின் வாழ்த்தைச் சொன்னதும் நெகிழ்ந்து விட்டார்கள்.எனக்கு இந்த திருமண நாள் மிகச் சிறந்த நாளாக அமைந்துவிட்டது.

சிவா.ஜி
12-02-2008, 03:35 AM
வாழ்த்துக்கள் அண்ணா. http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
இன்நன்நாளில் நீங்கள் இருவரும்தான் என்னை ஆசிர்வதிக்கனும். http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/

அண்ணியிடம் என் அன்பை பரிசாக கொடுத்தேன் என்று சொல்லுங்கள். http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/


அடடே...யார் இது...? என் அன்புத் தங்கை ஓவியாவா....நலமாம்மா?
என்றைக்கும் எங்கள் ஆசீர்வாதம் என் தங்கைக்கு உண்டு.
தங்கையின் அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

சிவா.ஜி
12-02-2008, 03:37 AM
அருமை அண்ணா...!!
அன்னிக்கு மாதிரியே இன்னிக்கும் அண்ணிக்கு நீங்க கவிதை எழுதுவதிலே அப்பட்டமாய் எனக்கு புலப்படுகிறது..உங்களின் அளப்பறியாத அன்பு...! இது மேலும் மேலும் தழைத்தோங்க என் வாழ்த்துக்கள்....கவிதை அழகு அண்ணா..உங்கள் வாழ்வை போலவே..!!

இன்னிக்குப் போலவே என்னிக்கும் உங்கள் அனைவரின் அன்பு இருக்கும் வரை அண்ணிக்கும்,இந்த அண்ணனுக்கும் வாழ்க்கை அழகுதான் அன்பு சுபி.
மிக்க நன்றி சகோதரா.

அக்னி
12-02-2008, 03:39 AM
ஒருவரின் வாழ்வை முழுமையாக்குவது திருமணம் தான்.
நன்றாகக் கேட்டுக்கோங்க ராக்கி.
ஒருவரின் வாழ்வை முழு மையாக்குவது திருமணம் தான்
என்று நான் சொல்லவில்லை.
சிவா.ஜி சொல்கின்றார்...:aetsch013:

அனுராகவன்
12-02-2008, 03:40 AM
ஓ!! அப்படியா அண்ணா..!
நீங்கள் பல வருடம் வாழ வாழ்த்திகிறேன்.!
ம்ம் என் வாழ்த்துக்கள்..!!

சிவா.ஜி
12-02-2008, 03:48 AM
ஓ!! அப்படியா அண்ணா..!
நீங்கள் பல வருடம் வாழ வாழ்த்திகிறேன்.!
ம்ம் என் வாழ்த்துக்கள்..!!

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தங்கையே.

சிவா.ஜி
12-02-2008, 03:51 AM
நன்றாகக் கேட்டுக்கோங்க ராக்கி.
ஒருவரின் வாழ்வை முழு மையாக்குவது திருமணம் தான்
என்று நான் சொல்லவில்லை.
சிவா.ஜி சொல்கின்றார்...http://www.tamilmantram.com:80/vb/

அக்னி சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...திருமணம் வாழ்க்கையை முழுதாக அவர்களுடையதாக்குகிறது என்று அக்னி சொல்கிறார் முழு my யாக்குகிறது.

அக்னி
12-02-2008, 04:30 AM
அக்னி சரியாத்தான் சொல்லியிருக்கீங்க...திருமணம் வாழ்க்கையை முழுதாக அவர்களுடையதாக்குகிறது என்று அக்னி சொல்கிறார் முழு my யாக்குகிறது.
சபாஷ் சிவா.ஜி...
இதுக்கு மேல என்ன சொல்றது என்று தெரியல.
இதுக்கு மேல சொல்லவும் கூடாது.
மீண்டும் சபாஷ்...

rocky
12-02-2008, 05:26 AM
நன்றாகக் கேட்டுக்கோங்க ராக்கி.
ஒருவரின் வாழ்வை முழு மையாக்குவது திருமணம் தான்
என்று நான் சொல்லவில்லை.
சிவா.ஜி சொல்கின்றார்...:aetsch013:

சரியாச் சொன்னீங்க சிவா.ஜி அண்ணா,

நான் வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டேன், வாழ்வ்வை வெறும் வெள்ளைத் தாளாக இல்லாமல் முழு மையாக்கி நம் பதிப்ப்பை உலகில் விட்டுச் செல்ல வைப்பது மனைவிதான்.

இனிமேல் யார் என்ன சொன்னாலும் நான் பயப்படுரதா இல்ல. எனக்கு நம்பிக்கையிருக்கு. (Nice guys can get Nice Girls) அதனால எனக்கு நீச்சயமா ஒரு நல்ல பொண்னுதான் கிடைப்பா, நானும் சிவா.ஜி அண்ணா போல சந்தோஷமா கல்யாணத்துக்கு அப்புறமும் கவிதையை எழுதி இதே தமிழ் மன்றத்துல போடத்தான் போறேன். நீங்களும் பார்க்கத்தான் போறீங்க.:icon_b:

நுரையீரல்
12-02-2008, 05:37 AM
அன்பின் உருவமாய்த் திகழும் சிவாண்ணாவை கணவனாய், காதலனாய்ப் பெற்றதில் அண்ணி அதிர்ஷ்டக்காரர்தான்.

ஆதி
12-02-2008, 08:46 AM
அகவைகள் கூடியதால்
அவளுக்கும் எனக்கும்
தோல்கள் சுருங்கினாலும்
காதலின் எல்லை மட்டும்
விரிந்து கொண்டேயிருக்கிறது!


இந்த வரிகளில் மனம் இழந்தேன் சிவா அண்ணா.. இல்லறப் பாதையில்
ஒவ்வொருவரும் நடை நடந்தால் சொர்க்கம் பூமியிலேயே வசமாகும் என்பது உறுதி..

இருப்பத்தி ஓராவது ஆண்டும் திருமணநாளுக்கு எனது நாப்பத்தி ஓராவது வாழ்த்துக்கள் சிவா அண்ணா..


அன்புடன் ஆதி

அமரன்
12-02-2008, 08:48 AM
இருப்பத்தி ஓராவது ஆண்டும் திருமணநாளுக்கு எனது நாப்பத்தி ஓராவது வாழ்த்துக்கள் சிவா அண்ணா..
அட.. அட..கலக்கல்ஸ். ஆதி..
இரட்டிப்பு மகிழ்ச்சியில் நிச்சயமாகச் சிவா.

சிவா.ஜி
12-02-2008, 11:32 AM
அன்பின் உருவமாய்த் திகழும் சிவாண்ணாவை கணவனாய், காதலனாய்ப் பெற்றதில் அண்ணி அதிர்ஷ்டக்காரர்தான்.

மிக்க நன்றி நுரை(ராஜா)..நான் பார்த்து பெருமைப் பட்ட தம்பதியர்கள் நீங்கள்...உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
12-02-2008, 11:33 AM
இருப்பத்தி ஓராவது ஆண்டும் திருமணநாளுக்கு எனது நாப்பத்தி ஓராவது வாழ்த்துக்கள் சிவா அண்ணா..


ஆஹா...உண்மையிலேயே...அமரன் சொன்னதைப் போல இரட்டிப்பு மகிழ்ச்சி ஆதி.மிக்க நன்றி.

அக்னி
12-02-2008, 11:40 AM
அதெல்லாம் இருக்கட்டும் சிவா.ஜி...
நேற்று இரவு முழுதும் மன்றமே மஞ்சமாக இருந்த மாதிரி இருக்கே...:D
அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே வந்ததே...:whistling:

சிவா.ஜி
12-02-2008, 11:44 AM
அதெல்லாம் இருக்கட்டும் சிவா.ஜி...
நேற்று இரவு முழுதும் மன்றமே மஞ்சமாக இருந்த மாதிரி இருக்கே...http://www.tamilmantram.com:80/vb/
அந்த நாள் நினைவுகள் நெஞ்சிலே வந்ததே...http://www.tamilmantram.com:80/vb/
இருக்குமப்பா...இருக்கும்.நல்ல உறக்கத்திலிருந்த என்னை எழுப்பி விட்டு பின்னர் உறக்கம் வராமல் மன்றத்திலிருக்க வேண்டியதாகி விட்டது.
(ஆனாலும் நீங்கள் அழைத்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது)

ஷீ-நிசி
12-02-2008, 01:46 PM
முதலில் வாழ்த்துக்கள் தோழரே!


அன்றுமுதல் இன்றுவரை
அவளின்றி ஓரணுவும்
எனக்கசையாது...
அவள் சொல்லாத எதுவும்
எனக்கிசையாது!

மிக மிக அழகிய வரிகள். உங்கள் இல்லறம் இன்றுபோல் என்றும் சிறப்புற வாழ்த்துக்கள்!

சிவா.ஜி
12-02-2008, 01:50 PM
மிக்க நன்றி ஷீ-நிசி.வரிகளைச் சுட்டி வாழ்த்திய உங்கள் வாழ்த்துகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

சாலைஜெயராமன்
12-02-2008, 02:49 PM
அதுமட்டுமில்லை ஷீநிசி.

தன்னில் பாதி தந்தவனின் பேச்சைக் கேட்கத்தான் வேண்டும் என நினைக்கும் கணவர்மார்களில் திரு சிவா "அவள் சொல்லாமல் எனக்கெதுவும் இசையாது" என்று கூறியிருப்பதில் மிக உயர்ந்து நிற்கிறார் இல்லையா.

பெண்உரிமை என்பது கேலிக்கூத்தாகிவிடாமல் கணவனுக்கு ஒரு மதிமந்திரியைப் போல யோசனை கூறும் தகுதி ஒரு பெண்ணுக்கு இருக்குமேயானால் அவளிடம் அடிமையாகிக் கிடக்கலாமே, அறிவுக்குப் பொருத்தமில்லாத, சீரியல் கண்ட பாதிப்பால் கணவனின் மனோ நிலை அறியாமல் வாழும் பெண்ணானால் அது நரகமில்லையா. கணவன் மனைவி உறவில் பால் பேதமற்ற தோழமை உணர்வு மட்டும் விஞ்சி நிற்குமாயின் கணவனுக்கு அதை விட வேறு என்ன செல்வம் வேண்டும்.

மேலும் கணவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் அறிவுடைய மங்கை நல்லாள் ஒருவனுக்கு வாய்க்கப்பெற்றால் அதைவிட உவகை உலகில் வேறென்ன இருக்க முடியும். முதலில் கணவன் என்ன சொல்கிறான் என்பதை ஒரு பெண் முழுதுமாகப் புரிந்து கொண்டாலே அந்த மணவாழ்க்கை வெற்றியடைந்த ஒன்றாகத்தான் இருக்கும்.

சிவா.ஜி
14-02-2008, 11:22 AM
திரு ஜெயராமன் அவர்களின் பின்னூட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள எத்தனையோ இருக்கிறது.மிக்க நன்றி அய்யா.