PDA

View Full Version : அவளின் சிரிப்பு !!!



lenram80
10-02-2008, 05:26 PM
உனது சிரிப்பு காற்றில் விடப்படும் கரும்புச் சாறோ?
சங்கீதங்களில் இந்த சிரிப்புச் சத்தம் ராணியாக இருக்குமோ?
உனது சிரிப்பின் மாறு வேடம் தான் நிலவோ?

உனது சிரிப்பைப் போல சிரிக்கத் தான் - பூமி
தன் மீது ஆறுகளை படைத்து கலகலவென சிரித்துப் பார்க்கின்றதோ?
உனது சிரிப்பைக் கேட்டு - மேகம் சந்தோஷத்தில்
சிரிக்கும் எதிர் சிரிப்பு தான் இடியோ?

உனது சிரிப்பைக் கேட்டுவிட்டு அன்பளிப்பாகக் கொடுக்க
செடிகள் செய்யும் சின்ன பரிசு தான் பூக்களோ?

நீ சிரிக்கவில்லை என்றால் - வானம் வேண்டிக் கொண்டு
எடுக்கும் காவடி தான் வானவில்லோ?

சிரிப்பு என்ற மொழிக்கு இலக்கணங்களை வகுத்த
தொல்காப்பியமா உனது சிரிப்பு?

காந்தி காலத்தில் நீ இருந்திருந்தால்
உப்பு சத்தியாகிரகம் செய்யாமல்
சிரிப்பு சத்தியாகிரகம் செய்திருப்பாரோ?
உனது சிரிப்பை விட வலிமையான அஹிம்சை ஆயுதம் வேறேதும் உண்டா என்ன?

நீ சிரிக்கும் போது ஏன் பூக்கள் அசையாமல் நிற்கின்றன?
ஓ!
உனது சிரிப்பொலி தான் அவைகளின் தேசியகீதமோ?

உனது சிரிப்பொலி பறவைகளின் சத்தத்தின் மொழி பெயர்ப்பா?
இல்லை,
பறவைகளின் சத்தம் உனது சிரிப்பின் மொழி பெயர்ப்பா?

உனது சிரிப்பின் திடவடிவம் பூக்களா?
இல்லை
பூக்களின் வாயு நிலை தான் உனது சிரிப்பா?*

உனது சிரிப்பை புதைத்து வைத்தால்
வைரமாக மாறுமா?
இல்லை
மாணிக்கமாக மாறுமா?
இல்லை
சிரிப்பு மரமாக வளர்ந்து இந்த உலகத்தை சிரிக்க வைக்குமா?

என்னவாகவாவது உனது சிரிப்பு இருந்து விட்டுப் போகட்டும்!
எனக்கு காக்கும் கடவுள் சிவன் இல்லை!
உனது சிரிப்பு தான்!
இதை மட்டும் நீ ஞாபகம் வை!!!


*திட நிலையிலிருந்து வாயு நிலைக்கு (திரவமாகாமல்) நேரடியாக மாறுவதற்கு "பதங்கமாதல்" (sublimation) என்று பெயர்.

இளசு
10-02-2008, 10:42 PM
சிரிப்பூ....

இது பூத்தவுடன் முகத்தோட்டம் ரம்யமாகிறது...

குழந்தை சிரிப்பில் மனம் இளகும்..
ஞானி சிரிப்பில் மனம் உருகும்..
கன்னி சிரிப்பில்...? மனம் மயங்கும்!
அதனால்தான் சிவன் ''காக்கும்'' கடவுளானான்!!

மயங்கட்டுமே மனம்... இதுபோல் கவிதைகள் உதிருமானால்
மயக்கம் தெளியாதிருக்கட்டும்!


பாராட்டுகள் லெனின்..

இன்பா
11-02-2008, 05:03 AM
இன்னும் எத்தனை கவிதைகளை/கவிஞ்யர்களை
புதைத்து வைத்திருக்கிறாய் - உன் சிரிப்பில்

சிவா.ஜி
12-02-2008, 03:56 AM
சிரிப்பில் மயாங்காதவர் யார்...அதுவும் இதயத்தில் வைத்திருக்கும் அன்பான அவளின் சிரிப்பு எப்படியெல்லாம் இந்த காதலனுக்கு காட்சியளிக்கிறது.....
அபாரமான கற்பனை...அருமையான கவிதை.
வாழ்த்துகள் லெனின்.

lenram80
14-02-2008, 02:10 AM
மயங்கிய இளசு,வரிப்புலி,சிவா.ஜி --- நன்றி!!!!!!!!!

அமரன்
16-02-2008, 06:26 PM
வர்ணணை தேசத்தின்
வரவேற்பு தோரணமா
இந்தசிரிப்பு..

ஆளை அசத்துகிறதே..!
பாராட்டுகள் லெனின்.

lenram80
21-02-2008, 12:16 AM
ஆளை அசத்துகிற பாராட்டுகள் சொன்ன அமரனுக்கு நன்றிகள்....