PDA

View Full Version : கவிதைக் கரு



நாகரா
10-02-2008, 12:06 PM
காகிதத்தில்
கவிழும் என் எண்ணங்களில்
கவிதைக் கரு
கிடைக்குமா?

கிறுக்கனின்
கிறுக்கல்களில்
ஒளிந்திருக்கும் கரு
வெளிச்சத்திற்கு வருமா?

பித்தனின்
பிதற்றுகளில்
பதுங்கியிருக்கும் கரு
புதுக்கவிதை தருமா?

காகித வெள்ளை இருளில்
கரு வரிகளின் வெளிச்சம்
கருவைக் காட்டுமா?

உணர்வுச் சூட்டில்
எண்ணங்கள் உருகி
விரல் வழி ஓடிப்
பரவும் சொற்பெருக்கில்
என்னைத் தொலைத்து
நான் தேடும்
கவிதைக் கரு.

எண்ணங்கள் தீர்ந்து
வெறும் இருப்பில்
திடீரென
மின்னும் அக்கருவைக்
கவிதையாக்க
மீள்கிறேன்
நான்.

இளசு
12-02-2008, 06:08 AM
தேடி அலையும்போது ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சி ஆடிய வண்ணத்துப்பூச்சி
ஓய்ந்து நான் அமர்ந்தபோது
தோளில் தானே தொற்றியது...

கவிக்கும் கருவுக்குமான கண்ணாமூச்சி - ரசித்தேன்.

பாராட்டுகள் திரு.நாகரா அவர்களே!

அனுராகவன்
12-02-2008, 06:16 AM
நன்றி நாகரா..!!
ம்ம் என் நன்றி உங்களுக்கு..!
ம்ம் தொடர்ந்து வருக!!

நாகரா
12-02-2008, 07:11 AM
தேடி அலையும்போது ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சி ஆடிய வண்ணத்துப்பூச்சி
ஓய்ந்து நான் அமர்ந்தபோது
தோளில் தானே தொற்றியது...

கவிக்கும் கருவுக்குமான கண்ணாமூச்சி - ரசித்தேன்.

பாராட்டுகள் திரு.நாகரா அவர்களே!

உமது அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி இளசு

நாகரா
12-02-2008, 07:12 AM
நன்றி நாகரா..!!
ம்ம் என் நன்றி உங்களுக்கு..!
ம்ம் தொடர்ந்து வருக!!

நன்றிக்கு நன்றி அனு

ஷீ-நிசி
12-02-2008, 01:39 PM
எண்ணங்கள் தீர்ந்து
வெறும் இருப்பில்
திடீரென
மின்னும் அக்கருவைக்
கவிதையாக்க
மீள்கிறேன்
நான்.

அக்கவிதையை கண்ட மகிழ்ச்சியில் நானும்.. வாழ்த்துக்கள் தோழரே!

நாகரா
13-02-2008, 03:12 AM
அக்கவிதையை கண்ட மகிழ்ச்சியில் நானும்.. வாழ்த்துக்கள் தோழரே!

வாழ்த்துக்களுக்கு நன்றி, ஷீ-நிசி.