PDA

View Full Version : மந்திர மௌனம்

நாகரா
10-02-2008, 11:58 AM
மௌனத்தை மறந்து
சொற்களில் இறந்து போன
மந்திரம் உயிர்த்தெழ
மௌன மெய்யாய்
நான்

இளசு
12-02-2008, 10:02 PM
அர்த்தமுள்ள மௌனங்கள் அடர்த்தியானவை!

ஓசையில் இருந்து விடுதலை ஆன மந்திரத்தால்
மௌனமான உண்மை உங்களைக் காணப் பெற்றீர்கள்..

வாழ்த்துகள் திரு நாகரா அவர்களே!

நாகரா
13-02-2008, 03:18 AM
அர்த்தமுள்ள மௌனங்கள் அடர்த்தியானவை!

ஓசையில் இருந்து விடுதலை ஆன மந்திரத்தால்
மௌனமான உண்மை உங்களைக் காணப் பெற்றீர்கள்..

வாழ்த்துகள் திரு நாகரா அவர்களே!

மௌனத்தில் அர்த்தம் கண்ட உம் அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி, இளசு.

சாலைஜெயராமன்
13-02-2008, 01:39 PM
மெனளம் உயிர்ப்பிக்கும் மொழியல்லவா.

மெளன மாமணிக்குள் உறங்கா னின்று உயிர்தரும் உன்னத மெய்யின் உவப்பை நீங்கள் அடைந்ததால்தானே இந்த இன்பம் உங்களுக்கு வாய்த்தது திரு நாகரா.

அகந்தைப் பொருளான "நான்" என்னும் பதம், பக்குவம் அடைந்த பின் அதே "நான்" மெனள மொழியாக உருமாறி ஏகமும் அதுவாகி நான் என்ற கருணைப் பிரவாகம் எடுத்து உலகையே உன்னதமாக்கும் உபாயம் மெனளம் என்ற வித்தையினால் அல்லவா விளைகிறது.

வாயில் சொன்ன மந்திரங்கள்
வாய் செத்த பின்னே
வஞ்ச எமனுக்கு
வந்து பதில் சொல்லுமோ.

உயிர்ப்பிக்கப்படாத மந்திரத்தால் ஒரு உபயோகமும் இல்லை. மந்திரங்களும் உயிர்பெறுவது மெளன குருவின் திருக்கடாட்சத்தால்தானே.

அருமையான தீர்க்கமான அனுபவக் குறிப்பு திருமிகு நாகரா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.

நாகரா
14-02-2008, 02:51 AM

கவி நயம் மிக்க உமது அழகிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, சாலை ஜெயராமன். தமிழ் மன்ற நெஞ்சங்களை மெய்வழிச் சாலையில் இணைக்கும் உமது மௌனப் பணியைப் பாராட்ட எனக்குச் சொற்களில்லை. எனவே மௌனத்தில் நின்று உம்மை வணங்கி நிற்கிறேன், நன்றி.