PDA

View Full Version : மழையாக...!!!



சிவா.ஜி
10-02-2008, 11:11 AM
மழை-1

மேகப் பிள்ளைகள்
வெய்யிலில் விளையாடி
கருத்துப் போனதை
வானத் தந்தை கண்டித்ததால்
மேகக்குழந்தை வடித்த விழிநீர்......


மழை-2

வெண்மேகக் காதலி
கருமேகக் காதலனை
கருப்புக்காக
வெறுப்பதாய் சொன்னதால்
கலங்கி அழுத கண்ணீர்......


மழை-3

தாய் மேகத் தாகத்துக்கு
தனயன் கொண்டு சென்ற தண்ணீர்
வான் வீதி நெரிசலில்
வேறு மேகம் இடித்ததால்
சிதறி விழுந்த துளிகள்...........


மழை-4

வானப் பந்தலில்
நட்சத்திர தோரணத்தை
கட்டி முடித்த களைப்பில்
மேகத் தொழிலாளி
வழித்து எறிந்த
வியர்வைத் துளிகள்...........

யவனிகா
10-02-2008, 11:30 AM
கலக்கறீங்க சிவா அண்ணா...எனக்கு இந்த இயற்கை வர்ணிப்புக் கவிதைகள் எல்லாம் தூரமாகிப் போனதாலோ என்னவோ...இப்படிப் பட்ட கவிதைகள் படிப்பதும் ரசிப்பதும் மிகவும் பிடிக்கும்....வித்தியாசமான கற்பனை.....நல்ல வரிகள்...பாராட்டுகள் அண்ணா...

கறுப்புக் காதலன்
அழுத போது
வெள்ளைத் துளியானான்...
தவறுக்கு வருந்தி
தானும் கருத்த
காதலி...
துளியாய் அவனைத்
தொடந்து...
இருவருமாய் என்
உள்ளங்கையில் இணைந்த போது
உடல் சிலிர்த்தது....
மானுடக் காதல்
மட்டும் தான் பெரிதா....
எவன் சொன்னது....

சிவா.ஜி
10-02-2008, 11:41 AM
அட அட அட...அசத்தல் கற்பனை.
நான் சும்மா அழவிட்டுத் தான் பாத்தேன்...நீங்க ஒரு காவியக்காதலையே சொல்லிட்டீங்க.சூப்பர்.வாழ்த்துகள்+நன்றிம்மா.

பென்ஸ்
10-02-2008, 05:04 PM
சிவா...

நலமா....

நல்ல வளமான கற்பனை... தலைப்பில் "மழையாய்..." என்று சொல்லிவிட்டு கவிதையின் முடிவில் மீண்டும் சொல்லி இருக்க வேண்டாமோ..???!!!!

சிவாவின் கவியை வாசித்த போது தோன்றிய மனகுறையை யவனிகாவின் வரிகள் களைந்தன...

அமரன்
10-02-2008, 08:20 PM
மேகங்களே.
தொடர்ந்து பொழியுங்கள்
மழைகளை..

பொ(மொ)ழிந்தவர்களுக்கு பாராட்டுகள்.

இளசு
10-02-2008, 10:21 PM
தந்தை, தனயன், உழைப்பாளி என உருவகங்கள்..
காதலன் காதலி உருவகத்துக்கு யவனிகாவின் நீட்டிய நல்முடிவு..

சிவாவின் கற்பனை மேகங்களை உரசி கவிமழையாய்..

நனைந்தபடி... ''நன்று''

---------------

வாங்க இனிய பென்ஸ்... நலந்தானே?

சிவா.ஜி
11-02-2008, 03:20 AM
சிவா...

நலமா....

நல்ல வளமான கற்பனை... தலைப்பில் \"மழையாய்...\" என்று சொல்லிவிட்டு கவிதையின் முடிவில் மீண்டும் சொல்லி இருக்க வேண்டாமோ..???!!!!

சிவாவின் கவியை வாசித்த போது தோன்றிய மனகுறையை யவனிகாவின் வரிகள் களைந்தன...

நலமே புது மாப்பிள்ளை....இல்லறம் நல் விதமே தொடங்கியாகிவிட்டதா?வாழ்த்துகள்.
நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன்..ஆம்..அந்த மழையாக மீண்டும் தேவையில்லைதான்.மிக்க நன்றி பென்ஸ்.

சிவா.ஜி
11-02-2008, 03:21 AM
மேகம் தொடர்ந்து பொழியப் பொழியத் தானே பூமி குளிரும்...பூமியின் மாந்தரும் குளிர்ந்து...மகிழ்ந்து அதனை புகழ்ந்து கவி எழுதுவார்கள்....?
மிக்க நன்றி அமரன்.

சிவா.ஜி
11-02-2008, 03:22 AM
மிக்க நன்றி இளசு.உண்மையாகவே யவனிகாவின் அந்த நீட்டல்.....தேன் சொட்டல்.

பூமகள்
11-02-2008, 05:58 AM
கார்முகில் துளிகளில் சிலிர்த்தேன்..!
காதல் துளிகளின் சிரிப்பில் மலர்ந்தேன்..!

தேனாய் பெய்த மழையில்
தேனீயாக நனைகிறேன்..!!

இன்னும் இன்னும் வானம் மடைதிறக்கட்டும்..!
எங்கள் மனம் நனையட்டும்..!

பாராட்டுகள் சிவா அண்ணா மற்றும் யவனி அக்கா. :)

அமரன்
11-02-2008, 06:55 AM
முடிந்த உலக உலா
முகத்தில் படர்த்திய கருமைகளை
கழுவித் துடைக்கிறாள்
வானமகள்..!

சிவா.ஜி
11-02-2008, 07:01 AM
ரொம்ப நன்றிம்மா பூ...அசத்தலான பின்னூட்டம்...அருமை.

ஆதி
11-02-2008, 07:14 AM
கறுப்பு உழவனுக்கு
கார் ஓலை!!

மேக மயில்களின்
மெல்கிய இறகுகள்..

சாமக் கறுப்புடன்
சரசம் ஆடிய*
ஊமை வெண்முகில்
உகுத்த வியர்வைகள்..

நனைந்து வந்து
நனைக்கும் துளிகள்
மணந்து மண்ணாள்
மணக்கும் துளிகள்..

இந்த துளிகளில்
ஒரு துளியாய்
நானும்
சிந்திவிட்டேன்
சிவா அண்ணா..

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஈர மழைக் கவிக்கும் உங்களுக்கும்..

மதி
11-02-2008, 07:16 AM
மழை..
இது பற்றிய ஒவ்வொரு கவிதையும் அருமை சிவாண்ணா..
அக்காவின் பின்னூட்டக் கவிதையும் முத்தாய்ப்பாய் இருந்தது.

கலக்குறீங்க...

அமரன்
11-02-2008, 07:29 AM
தந்தை, தனயன், உழைப்பாளி என உருவகங்கள்..
காதலன் காதலி உருவகத்துக்கு யவனிகாவின் நீட்டிய நல்முடிவு..
இன்னும் எத்தனையோ உறவுகள் இருக்கே. அவை என்ன பாவம் பண்ணின..:)

காற்று அண்ணனைக்
கறைப் படுத்தியது கண்டு
குமிறும் மேகத்தங்கை..

களங்கம் அறுத்த
விருட்சங்கள் மீது அண்ணன்
மண்வாரி தூற்றும்போது
நொருங்கி அழுகிறாள்.

சிவா.ஜி
12-02-2008, 04:01 AM
கறுப்பு உழவனுக்கு
கார் ஓலை!!

மேக மயில்களின்
மெல்கிய இறகுகள்..

சாமக் கறுப்புடன்
சரசம் ஆடிய*
ஊமை வெண்முகில்
உகுத்த வியர்வைகள்..

நனைந்து வந்து
நனைக்கும் துளிகள்
மணந்து மண்ணாள்
மணக்கும் துளிகள்..


அசத்தலான வரிகள் ஆதி.மிக அழகு.பாராட்டுக்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றி.

சிவா.ஜி
12-02-2008, 04:03 AM
மழை..
இது பற்றிய ஒவ்வொரு கவிதையும் அருமை சிவாண்ணா..
அக்காவின் பின்னூட்டக் கவிதையும் முத்தாய்ப்பாய் இருந்தது.

ரொம்ப நன்றி மதி. உங்க அக்காவினுடையது,ஆதியினுடையது,அமரனின் கவிதைகள்....எல்லாமே டாப்.மழைன்னாலே இந்த கவிஞர்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகிவிடுகிறது.

சிவா.ஜி
12-02-2008, 04:05 AM
காற்று அண்ணனைக்
கறைப் படுத்தியது கண்டு
குமிறும் மேகத்தங்கை..

களங்கம் அறுத்த
விருட்சங்கள் மீது அண்ணன்
மண்வாரி தூற்றும்போது
நொருங்கி அழுகிறாள்.

ஆஹா...அழகு...அருமை...குமுறும் தங்கை நொறுங்கி அழுகிறாள்....
அற்புதமான கற்பனை....அசத்துறீங்க அமரன்.

அமரன்
06-03-2008, 08:22 AM
சடங்கானாளோ மண்ணாள்
குப்பைத் தண்ணி ஊற்றி
முறை செய்கிறதே வான்!