PDA

View Full Version : டாக்டர்கள் மன்னிக்கவும்!...!!..!!!..



sarathecreator
09-02-2008, 02:43 PM
பல மன நல மருத்துவர்கள் ஒன்று கூடி ஒரு பெரிய கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த குழுவிலே 4 டாக்டர்கள் மட்டும் வெளியே வந்து நடை பழகினர்.

4 பேரில் ஒருவர் சொன்னார். "மக்கள் - கவலை - தூக்கமின்மை - பயம் - இன்னபிற பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நம்மை நாடுகிறார்கள். அவர்களுக்கு நாம் இருக்கிறோம். ஆனால் நமக்குத்தான் யாருமில்லை - நமது பிரச்சினைகளுக்கு யார் தீர்வுகள் தர தயாராக இருக்கின்றார். ஆனால் நமக்குத்தான் யாருமில்லை.

4 பேரில் இன்னொருவர் சொன்னார். "-நாம் எல்லோரும் வாரம் ஒரு முறை நேரம் ஒதுக்கி - பிறர் குறைகளைக் கேட்டால் என்ன" என்றார். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். முதலாமாவர் சொன்னார் - "எனக்கு அவ்வப்போது எனது நோயாளிகளை கொன்றுவிடும் எண்ண்ம் - தலைதூக்கி - கொலை செய்யும் அளவுக்கு - தாங்க இயலாத பேராவல் உண்டாகிறது" என்றார்.

இரண்டாமாவர் சொன்னார் "எனக்கு விலையுயர்ந்த பொருட்கள் மேல் எப்போதும் ஆசை அதிகம் - அதற்காக என்னிடம் வரும் நோயாளிகளை பலவிதங்களில் ஏமாற்றி - அவர்களிட்ம் பண்ம் பெற்று - அதைக்கொண்டு - எனக்கு பிரியமுள்ள விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்கிறேன்" என்றார்.

மூன்றாமாவர் சொன்னார் - "நான் போதைப்பொருட்களை விற்பதிலும் - அவற்றை விற்பனை செய்வதற்காக எனது நோயாளிகளைத் தூண்டிக்கொண்டும் இருக்கிறேன்" - என்றார்.

நான்காமாவர் சொன்னது இதுதான் -" நான் உங்களைப்போல் எல்லாம் இல்லை - ஆனால் என்னால் முடியாதது ஒன்று உண்டு - அது என்னவென்றால் - இரகசியங்களைக் காப்பாற்றுவதேயாகும். எனக்கு உயிரே போனாலும் இரகசியங்களை மட்டும் காப்பாற்றத் தெரியாது" என்றார்.

மலர்
10-02-2008, 04:35 PM
பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியகார டாக்டருக்கே பைத்தியம் புடிச்சா
- ஹீ,,ஹீ,,, இது தான் நினைவுக்கு வருது... :D :D

தங்கவேல்
11-02-2008, 12:17 AM
அட உண்மையினை புட்டு வைத்து விட்டீரே...