PDA

View Full Version : குற்றம் நடந்தது என்ன?



sarathecreator
09-02-2008, 02:40 PM
குமார் என்னும் இளைஞன் இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் நேரத்தில் குற்றவாளிக்கூண்டில் நின்ற குமாரை நோக்கி நீதிபதி சொன்னார்," உனது தரப்பில் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?".

"அய்யா. நான் குற்றம் செய்தவன்தான். நானே ஒத்துக்கொள்கிறேன். தண்டனை பெறுவதில் தயக்கம் இல்லை எனக்கு. ஆனால் ஒரு முக்கியமான விசயம் இந்தத் தண்டனைக்குச் சமமான தண்டனையை எனது தாய்தந்தையரும் அனுபவிக்கவேண்டும்", என்றான் குமார்.

"ஏன்?", நீதிமன்றத்தில் சலசலப்பு.

குமார் தொடர்ந்தான், "நான் சிறுவயதில் பள்ளியில் பென்சில் திருடினேன். அதை எனது தாய்தந்தை அறிந்து இருந்தும் - என்னை ஒன்றும் செய்யவில்லை. பிறகு பேனா திருடினேன். அடுத்த வீட்டில் மாங்காய், தேங்காய் திருடினேன். வீட்டில் உள்ளோர் எதுவும் சொல்லாமல் அந்த காய்களைக்கொண்டு சுவையாகக் கறிசமைத்து உணவு உண்டோம்.

வேலைபார்க்கும் அலுவலகத்தில் இலஞ்சம் வாங்கச் சொல்லித்தூண்டியது எனது பெற்றோர்களே. அவ்வாறு இலஞ்சப்பணத்தில் வாங்கிய ல்க்சரியஸ் பொருட்கள் வீட்டில் பல இருக்கின்றன".

"24 மணி நேரமும் ஓடும் சீரியல் பார்ப்பதற்காக Tv முதல், சில்லுவாட்டரு ப்ரிட்ஜ் வரை எல்லாம் இந்த இலஞ்சப் பணத்தில் வாங்கியவைதான். திருட்டு சிறியதாக இருந்தபோதும் இவர்கள் என்னைத் திருத்தாமல் விட்டுவிட்டனர். கொஞ்சம் அதிகமாக இலஞ்சம் வாங்கினபோதும் இவர்கள் அதில் குளிர்காய்ந்தே இருந்துவிட்டார்கள். என்னைத் திருத்தவே முற்படவில்லை.

"நானும் ஒரு பைத்தியத்தைப் போல அவர்களின் விருப்பத்திற்கினங்க இலஞ்சம் பெறும் ஒரு இயந்திரமாகத் தான் இருந்திருக்கிறேன். இப்போதுதான் சுயசிந்தனை பெற்று திருந்தி இருக்கிறேன். கண்டிப்பாக எனக்கு கிடைக்கக்கூடிய தண்டனைக்குச் சமமான தண்டனையை எனது பெற்றோர்களும் அனுபவித்தே தீரவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்".

நீதி : தவறுதல் மனித இயற்கை. தன் தவறை நினைத்து மனம் வருந்துதல் அறம். ஆனால் ஒருவன் தவறு செய்யும்போது அதைத் தட்டிக்கேட்காமல் இருப்பது தவறு செய்வதைவிட மிகக்கொடிய குற்றம். அந்தத் தவறைத் தட்டிக்கொடுத்து மேலும் மேலும் தவறுசெய்யத் தூண்டுவது குற்றத்திலும் குற்றம். அதற்கு மன்னிப்பே கிடையாது.