PDA

View Full Version : அ முதல் ஃ வரை.



sarathecreator
09-02-2008, 02:34 PM
அன்பே அன்பே அன்பே ஆருயிரே
ஆசைக் காதலியே ஆனந்தப்பூங்காற்றே
இதயம் நீதானே இனியவளே
ஈ யாய் உன்னைச் சுற்றிச் சுற்றி வரும் இளையவன் நான் தானே
உயிரே உனக்காக நீ எனக்காக உன் உள்ளத்தை அள்ளித்தா
ஊர்விட்டு ஊர் வந்து வஞ்சி உன்னக் காதல் செய்வேன்
என் மனவானில் என்றென்றும் நீதானே என்னவளே
ஏய் என்று உன்னை உன் அம்மாவே அழைத்தாலும் கொதித்திடுவேன் நானே ஒருவன் - உன்னை மணப்பவன் - மணமகன் -
உன் தந்தையின் - மருமகன் நான்தானே
ஓடங்கள் போகும் கடல்தனிலே நான் போவேன் உன் வழித்தடம் தனிலே எஃகாக இருந்த உன் இதயம் இப்போது என் வசம் -
அட பூவெல்லாம் உன் வாசம்.

சும்மா பொழுது போகாமல் யோசிச்சேன் -- அதுவா வந்தது - இது கவிதைன்னு நானே சொல்லவில்லையென்றால் வேறு யார்தான் சொல்லுவது?

.

aren
09-02-2008, 02:36 PM
சொல்லிக்கோங்க, யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள்.

சினிமா படங்களின் பெயர்களைவைத்தே அடித்து விளாசுகிறீர்கள். தொடருங்கள்.

sarathecreator
09-02-2008, 02:54 PM
சொல்லிக்கோங்க, யாரும் உங்களை தடுக்க மாட்டார்கள்.

சினிமா படங்களின் பெயர்களைவைத்தே அடித்து விளாசுகிறீர்கள். தொடருங்கள்.

நன்றி. சினிமாப் படங்கள் நமது வாழ்க்கையுடன் இணைந்து விட்ட ஒன்றாகத்தானே இன்னமும் இருக்கிறது. போகப் போக கணிணி இல்லாத வாழ்க்கையையும் நினைத்துப்பார்க்க முடியாமல் போகும்.

நாகரா
20-02-2008, 07:23 AM
"இதயம் நீதானே இனியவளே" - உம் கவிதையின் உயிர்க்கரு அது. ஆழமான வரிகள்.
நல்ல காதல் கவிதை சரத், உம் கவிப்பயணம் இனிதே தொடர என் வாழ்த்துக்கள். நன்றி