PDA

View Full Version : சிறு குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள



sarathecreator
09-02-2008, 02:07 PM
1) தயவுசெய்து சிறுகுழந்தைகளுக்கு ஏ,பி,சி,டி..என எழுத்துக்களை முதலில் சொல்லிக்கொடுக்காதீர்கள்.

2) அதேபோல இளம்சிறார்களை நோட்டு, பேனா,பென்சில், புத்தகம் முதலியவற்றின் பக்கமே அண்டவிடாதீர்கள்.

3) எழுத்துக்களை கற்றுத் தருவதை தடைசெய்யவேண்டும்.

4) நாம் குழந்தையாக இருக்கும்போது நமது அம்மா, அப்பா, அண்டை வீட்டாரிடம் முதலில் தமிழ் பேசத்தானே கற்றுக்கொண்டோம். எழுதப்படிக்க பிறகுதானே கற்றுக்கொண்டோம்.

5) சிறுவர்களுக்கு அம்மா என்றால் மம்மி யில் ஆரம்பித்து - அவர்களிடம் சின்னச்சின்ன வார்த்தைகளாக தமிழிலும் ஆங்கிலத்திலும் இணையாகப் பேசமட்டும் கற்றுக்கொடுக்கவும்.

6) சிறார்கள் எப்போதும் இது என்ன - இந்தப் பொருளை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - என்று நச்சரித்தார்கள் - என்றால் அது குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சி அடைந்தே தீரவேண்டும். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து உங்களுக்குத் தெரியாததை அவர்கள் விடாப்பிடியாகக் கேட்டார்கள் என்றாலும் அதற்கான ஆங்கிலப் பதத்தை அர்த்தத்தை நீங்கள் அகராதியில் - இணையத்தில் திரட்டி அவர்களுக்குப் புரியும்படி எளிமையாகச் சொல்லிக்கொடுங்கள்.

7) இளம்குழந்தைகள் அதுஎன்ன - அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்கும் அழகே தனிதான். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.

8) நாம் எப்படி எழுத்துக்களை அறிவதற்கு முன்னரே தமிழில் பேசக் கற்றுக்கொண்டோமோ - அதே மாதிரி நமது குழந்தைகளை ஆங்கில எழுத்துக்களை சொல்லித் தருவதற்கு முன்னால் ஆங்கிலத்தைப் பேசக் கற்றுத்தந்தே ஆகவேண்டும்.

9) அவர்கள் சில நாட்களுக்குப் பிறகு - சிறிய சிறிய வாக்கியங்களாகப் பேச ஆரம்பிப்பார்கள். அதற்குள்ளாகவே அவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதுவரைக்கும் கூட நாம் எழுத்துக்களை வாசிக்கக் கற்றுக்கொடுக்கக் கூடாது.

10) ஏராளமான வார்த்தைகளையும், புதுப்புது வாக்கியங்களையும் பேச ஆரம்பித்தபிறகு மட்டுமே ஆங்கிலத்தை எழுதப்படிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். நாமும் முதலில் தமிழில் பேசிவிட்டு அதுவும் நன்றாக அரட்டை அடிக்கும் அளவுக்குத் தமிழ் தெரிந்த பிறகுதானே எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டோம்.

ஆனால் இந்த சமுதாயத்தில் ஆங்கிலம் மட்டும் எழுத்திலிருந்து ஆரம்பித்து கடைசி வரையில் பேசத்தெரியாமல் எத்துணை மக்கள் மனப்புழுக்கத்துடன் வாழ்கிறார்கள்.

இதைப்பற்றி உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

sarathecreator
09-02-2008, 02:36 PM
பிற மொழி சொற்களை தமிழாக்கம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை?
பிற மொழி சொற்களை எல்லா இடங்களிலும் மொழிமாற்றம் செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை.

உதாரணம் : ஆங்கிலத்தில் டிரான்ஸ்பார்மர் என்று எலெக்ட்ரிகல் பிரிவில் இருப்பதை தமிழுக்காக மொழிபெயர்க்கும்போது 'மின்மாற்றி' - என பெயர்க்கிறார்கள்.

இதனால் தமிழ் வேண்டுமானால் வளரலாம்.

ஆனால் அந்த எலெக்ட்ரிகல் எஞ்சினியரின் கதி என்ன ஆகும். ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இவர் 12 ஆம் வகுப்பு வரையிலே மின்மாற்றி எனப் படித்து வருகிறார். அதுவரையிலே இவர் இந்த மின்மாற்றியைக் கண்ணாலே கண்டரியாதவர் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இவருக்கு மின்மாற்றியின் தத்துவங்கள் - அதன் பயன்பாடுகள் எல்லாம் நன்றாகத்தெரியும் - தலைத்தட்டாக (மக்கப்) தட்டிப் படித்து முதல் மதிப்பெண்ணும் வாங்கி ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறார்.

தமிழிலேயே 12 ஆண்டுகள்வரை படித்த இந்த தலைவருக்கு, மின்மாற்றியைக் காண்பித்து - திஸ் இஸ் டிரான்ஸ்பார்மர். என்று இங்கிலீஸில் வகுப்பெடுக்கின்றனர். இவரும் மறுபடி டிரான்ஸ்பார்மரை இதுதான் மின்மாற்றி என்று தெரியாமலேயே படித்து ஒரு வழியாக வருடங்களைத் தொலைத்து வெளியே வருகிறார்.

பின் வேலைக்கும் செல்கிறார். பல பிரமோசன்களும் இவரைத் தேடி வருகின்றன. இவருக்கும் ஒரு மகன் / மகள் பிறந்து அவர்களும் தமிழ் வழியே படிக்கிறார்கள். (தலைவருக்கு தமிழார்வம் அதிகம் - என்னைப் போல) இவரது பிள்ளைகுட்டிகளும் மின்மாற்றி என 12 ஆம் வகுப்புவரை படிக்கும்போது தலைவரிடம் - அப்பா மின்மாற்றி என்றால் என்ன? என்று கேட்கும்போது ஒரு எலெக்ட்ரிகல் எஞ்சினியராக இருந்து ரிட்டையர்மென்டு ஆகி இருந்தும் தன்னால் இந்த மின்மாற்றிதான் ஒரு டிரான்ஸ்பார்மர் என்பதை தெரியாமலேயே இருக்கிறார்.

இதை என்னவென்பது.. ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்பார்மர் என்று இருந்தால் அது தமிழில் டிரான்ஸ்பார்மர் என்றே இருந்துவிட்டுப்போகட்டும். இரண்டு மொழிகளும் வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.

தமிழில் வார்த்தைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அதற்காக ஒரு எலெக்ட்ரிகல் எஞ்சினியரின் வாழ்வில் கண்டிப்பாக விளையாடத்தான் வேண்டுமா..

இவர் 12 ஆம் வகுப்பு வரையிலே மின்மாற்றி எனப் படித்து வருகிறார். அதுவரையிலே இவர் இந்த மின்மாற்றியைக் கண்ணாலே கண்டரியாதவர்.

பாடம் நடத்தும் வாத்தியாரே.. மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்கள். புரிந்து பாடம் நடத்தும் ஆசிரியர்களும் உண்டு. எஞ்சினியரிங் காலேஜுக்கு யாரு வாத்தியாராக வருகிறார்கள்? வேறு வேலை கிடைக்காமல்..fஏக் போட்டுப் போட்டு வெறுத்துப்போன வேலைவெட்டியில்லாத தலையில் சரக்கில்லாத எத்தனையோ பேர் வெறும் ஐயாயிரம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்திற்கெல்லாம் வேலை பார்க்கின்றனர். அவர்கள் நடத்தி அதை நாங்கள் புரிந்துகொண்டு .. எதை சாதித்தோம்...?

கல்வியின் தரம் குறைந்து விட்டது. நாம் எத்தனையோ விசயங்களை என்னவென்று புரியாமல் படித்து இப்போ முழித்து கொண்டிருக்கிறோம் தானே.

சுத்தத்தமிழில் எழுதுவது / படிப்பது எல்லாமே சரி. ஆனால் அதற்காக பூங்கணிகம் - என்று பாட்டனி வகுப்புகளில் (தாவரவியல்) 8 ஆம் வகுப்புகளில் படித்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பூங்கணிகம் என்பதைப் பார்த்ததும் இல்லை. அதை ஆங்கிலத்தில் என்னவென்று அறிந்ததும் இல்லை.

இது நமது தவறு கிடையாது. நமது வேலைகளைப் பார்ப்பதற்கே 24 மணி நேரம் போதவில்லை. இதிலே நாம் என்ன செய்வது? அப்போதைக்கப்போது குழுக்களிலே எட்டிப்பார்த்துவிட்டு மனதில் உள்ளதை கொட்டிவிட்டுச் செல்லத்தான் முடிகிறது.. வேறென்ன செய்வது?

எத்தனையோ பேர் தமிழ்த்தொண்டாற்றுவதற்காகவே பிறந்திருக்கிறார்கள். மாணவர்களுக்குப் புரியவைப்பதற்காகவே அவதரித்திருக்கிறார்கள். அவர்களை நான் வாழ்த்துகிறேன். அவர்கள் இருப்பதால்தான் நாட்டிலே மழை பெய்கிறது..

நான் 10 ஆம் வகுப்புப் படிக்கும்போது சேவியர் என்னும் ஆசிரியர் - எனக்கு ஆங்கிலப் பாடம் எடுத்தார். அவர் அந்த எஸ்ஸே என்போமே.. அதை மனப்பாடமாக ஒப்புவிக்கச் சொல்லுவார். அதன் அர்த்தம் புரிந்ததா என்பது முக்கியமில்லை.

ஆனால் அந்த எஸ்ஸே என்பதை எங்களால் மனப்பாடமாக (புரிந்தோ / புரியாமலோ) ஒப்புவிக்கத் தெரிந்தால் தப்பித்தோம். இல்லாவிடில் சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் காலை 10 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை 2 மணி நேரம் முட்டிக்கால் போட்டு (அப்போது நாங்கள் பேன்ட் எல்லாம் போடுவதில்லை - டிரவுசர் மட்டும் தான்) பேன்ட் போட்டாலும் கூட அந்த வெயில் தகிக்கமுடியாது..

வெறும் காலில் 2 மணிநெரம் முட்டிக்கால் போடப் பயந்துகொண்டே தலைத்தட்டாக (மக்கப்) தட்டியேதான் 10ஆம் வகுப்பின் எஸ்ஸேக்களைக் கடந்து வந்தேன். நமக்கு புரிகிறதோ / இல்லையோ - அந்த ஒரு ஆசிரியரின் பிழைப்புக்காக நாமும் சில தியாகங்களைப் புரிந்துதான் இருக்கிறோம். இதே தவறு இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது..

எல்கேஜி / யூகேஜி - இவற்றின் விரிவு என்ன (அப்ரிவியேசன்) என்று கூடத் தெரியாதவர்களால் ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்படுகிறது. எனது மகனைச் சேர்ப்பதற்காக, ஊரில் இருந்த ஒரு கிறிஸ்டியன் சிறுவர்பள்ளிக்குச் சென்றேன் (ஆர்வக்கோளாறுதான்) அங்கே எனது வாய்த்துடுக்கால் அந்த ஆசிரியையிடம் எல்கேஜி என்பதன் விரிவு என்ன என்று கேட்டுவிட்டேன்.

அந்த ஆசிரியைக்கு வந்ததே கோபம்... நமது ஆர்வக்கோளாறை மூலதனமாகக்கொண்டு ஆங்கிலவழிப் பள்ளிகள் எத்தனையோ கோடிகள் வருமானம் பெருகின்றன.. இது ஒரு பெரிய வருத்தமான நிகழ்வு ஆகும்.

என்னை பொருத்தவரை அரசாங்க பள்ளி படிப்பே மேல். பல நல்ல அரசாங்க பள்ளிகள் உள்ளன. நாம் நம் பணத்தை தனியாரிடம் கொடுப்பது பிரயோஜனமில்லை. ஆயிரம் வகையாக பணம் வசூலிக்கப்படுகிறது. பல தேவையில்லாத ஆங்கில வழக்கங்கள் நுழைக்கப்படுகின்றன.

நல்ல பெற்றோர்களின் கவனிப்பு இருக்கும் பிள்ளைகள் எந்த பள்ளியில் படித்தாலும் நல்ல முன்னேற்றம் பெறமுடியும் வாழ்கையில்.

மேலும் நம் அரசாங்கத்தின் மீதும், கல்வி தரத்தின் மீதும் நமக்கே நம்பிக்கையில்லாவிட்டால் எப்படி. அரசாங்க ஆசிரியர்கள் நல்ல பொருளாதார வசதியுள்ள குடும்பத்திலிருந்தும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்று அறிந்தால் தான் அவர்களும் மெத்தனமின்றி அதிகம் கவனம் செலுத்துவார்கள் தம் பணியில்.

ஏழை பிள்ளைகளுக்காக யார் தரத்தை மாற்றுகிறார்கள். ஒரு கலெக்டரின் பிள்ளை ஒரு மேயரின் பிள்ளை ஒரு டாக்டரின் பிள்ளை ஒரு வக்கீலின் பிள்ளை இவர்கள் படித்தால் தான் அரசாங்க பள்ளிக்கூடங்களின் தரம் உயரும்.

ஒரு பாடத்தினை புரியக்கூடிய ஒரு மொழியினில் படிக்கும் போதே அதனைப்பற்றி இலகுவாக அறிந்து அதன் நுணுக்கங்களை அறிய முடியும். அதை விடுத்து வேறு மொழியில் கல்விபயில்வதானது மனதில் பாடமாக்கி ஒப்புவிப்பதற்கு பயன்தரலாம்.

(அடியேன் ஒரு எலெக்ட்ரிகல் எஞ்சினியர்தான்.. டிப்ளமோ முடித்து .. இப்போது எம்.எஸ்.ஸி. ஐ.டி எல்லாம் முடித்து ஒருவாராக கம்ப்யூட்டர் துறையில் டெவெலப்பராகப் பணிபுரிகிறேன்)

சாலைஜெயராமன்
09-02-2008, 04:20 PM
மொழி ஆளுமை அடைவதற்கு கொஞ்சம் மெனக்கிட வேண்டும் சரத். வழக்குச் சொல்லிலிருந்து மாறுபட்டு தனித்மிழில் இருந்தாலும் தொடர்ந்து வலியுறுத்தப்படுமானால் சொல் புழக்கத்திற்கு வந்துவிடும்.

மருத்துவத்தில் எத்தனையோ ஆங்கிலப் பதங்களை எழுத்துக் கூட்டிக் கூட நம்மால் படிக்கமுடியாது. ஆனால் மருத்துவர்கள் தனித்திறமை காட்டவில்லையா? அன்னிய மொழியையே அநாயசமாகக் கையாளும்போது தாய்மொழி ஒன்றும் கஷ்டமாக இருக்காது.

யாழ்ப்பாணத் தமிழில் கொஞ்சம் கூட ஆங்கிலக் கலப்பு இருக்காதாமே? ஜப்பானில் தலைசிற்ந்த மருத்துவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் இல்லையா? கருத்தோடு முறைப்படுத்தமானால் வழக்குத் தமிழிலும் செம்மொழிக் கருவை கொண்டு வர முடியும். அனைத்துமே தேவையின் நிமித்தம்தானே?

kavitha
23-02-2008, 09:12 AM
சுத்தத்தமிழில் எழுதுவது / படிப்பது எல்லாமே சரி. ஆனால் அதற்காக பூங்கணிகம் - என்று பாட்டனி வகுப்புகளில் (தாவரவியல்) 8 ஆம் வகுப்புகளில் படித்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பூங்கணிகம் என்பதைப் பார்த்ததும் இல்லை. அதை ஆங்கிலத்தில் என்னவென்று அறிந்ததும் இல்லை.

:) உண்மையை உரக்கச் சொன்ன சரத் துக்கு ஒரு ஜே....!
படிப்பதற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லாததும்/சம்பந்தப்படுத்திக்கொள்ளாததும் தான் இதன் காரணம் சரத்.
சாலை ஜெயராமன் அவர்கள் சொன்னது போல் தொடர்ந்து வலியுறுத்தப்படவேண்டும். அதை விட சிறந்த வழி எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், செயல்முறை விளக்கம் கொண்டு வருவது. தமிழ் கட்டாய பாடமாக, தமிழ்ப்பாடம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், பொருளாதாரம் என அனைத்தும் வருவது.

இதை அரசு தான் சட்டமியற்ற வேண்டும்.

ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ பட்டம் பெற வேண்டும் என்று மட்டுமின்றி தாங்கள் (தெளிவாக) படித்தை தமிழில் மொழி பெயர்த்து புத்தகங்களாக இட வேண்டும். அதையே பாடத்திட்டத்தில் வைக்கவேண்டும். இதை அரசே ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறாக நடந்தால் தாய்மொழிவழிக்கல்வி சாத்தியம்.

இல்லையெனில் இந்தக்குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது.
இதை பழைய மன்ற விவாதத்தில் கூட அலசியிருக்கிறோம்.

மொழி அறிவு, பல்மொழி அறிவு வளர்த்துக்கொள்வது கூடுதல் பலமே. இருப்பினும் தாய்மொழியில் அதை என்னவென்று உணரவைக்காத நமது பாடத்திட்டங்கள் தலைகுனிவை ஏற்படுத்துகிற செயல்தான்.

மொழி அறிவு மட்டுமே அறிவு அல்ல.. நுண்ணறிவு வேறு. அது தாய்மொழியினால் தான் பெறப்படும். அல்லது எல்லோருமே இங்கிலாந்தில் பிறக்க வேண்டும்.. இல்லையெனில் நீங்கள் சொல்வது போல் மம்மியிலிருந்து.....டெத் வரை குழந்தைக்கு புகட்டித்தான் ஆகவேண்டும்.

என்ன கொடுமை சார் இதெல்லாம்...!!