PDA

View Full Version : காதிருந்தும் செவிடு



sarathecreator
09-02-2008, 02:05 PM
காதிருந்தும் செவிடு


சிறு குழந்தையின் மழலை மொழி கேட்க இயலாத பாவி நான்!..!!..!!!
(ஏன் என்றால் எனக்கு காது கேட்காது)

--கால் சென்டரில் வேலை பார்க்கும் காரிகையின் நாட்குறிப்பிலிருந்து.

வேலை நேரத்தில் அலுவலகத்தில் காதிலே போன் அணிகிறாள்.

வீட்டிலேயும், வெளியிலேயும் கூட காதிலே போன் அணிகிறாள்.

எப்போது தனது குழந்தையின் மழலை மொழி கேட்கிறாளோ தெரியவில்லை.

இவளுக்கு காது கேட்கத்தான் செய்கிறது..

ஆனால் தன் குழந்தையின் மழலையைக் கேட்டு
ரசிக்க இயலாத இவளின் காதின் கேட்கும் சக்தி
இருந்தால் என்ன இழந்தால் என்ன?

வள்ளுவர் சொல்லுவாரே -
கண்ணிருந்தும் குருடர் அதுபோல காதிருந்தும் செவிடு

அமரன்
16-02-2008, 11:18 AM
தொலைபேசியும் காதுமாக அலையும் ஒருசிலரைப் பார்த்திருக்கிறேன். சினம் கொண்டிருக்கிறேன். இந்தக்கவிதையால் மீண்டும் ஒருமுறை ஔவை சொன்ன சினங்காத்தல் மழுங்கியது. தொடர்ந்து எழுதுங்கள் சரத். கவிதைகள் செதுக்கப்படும்.

அனுராகவன்
16-02-2008, 11:23 AM
கால் சென்டரில் வேலை பார்க்கும் காரிகையின் நாட்குறிப்பிலிருந்து.



யாரது காரிகையா..
புரியலையே..
ம்ம் என் நன்றி சரத்..
உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துகள்

இளசு
16-02-2008, 01:19 PM
கருத்து சிறப்பு..

தொலைக்காட்சியில் தொலைந்துபோய்
அணைக்கவந்த பாட்டியைப் புறந்தள்ளும் குழந்தை -
கண்ணிருந்தும்....

டாஸ்மாக் வாசலில் கிடக்கும்
தமிழக முன்தோன்றி மூத்தக் குடிமகன்-
காலிருந்தும்.....

பெற்ற தாயை கட்டிய மனைவி சொல்லால் சுட
கட்டிலெண்ணி மௌனம் காக்கும் '' பெரிதுவந்த மகன்'' -
வாயிருந்தும் .....

''ஊனம் என்பது உடலிலல்ல..''

வாழ்த்துகள் சரா!