PDA

View Full Version : கன்கரன்சி



sarathecreator
09-02-2008, 02:00 PM
ஒரு ரெக்கார்டை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் திருத்துவதற்கு முயலும்போது ஏற்படும் பிரச்சினை கன்கரன்சி ஆகும்.

ஒருவர் ஏற்கனவே உள்ள தகவலை திருத்தி மாற்றிக்கொண்டிருக்கும்பொழுது, அடுத்தவர் அதை படிக்க இயலாமல் தடுப்பது பெசிமிஸ்டிக் கன்கரன்சி.

ஒருவர் ஏற்கனவே உள்ளதை திருத்தும்போது, அடுத்தவர் அதைப் படிக்கலாம். ஆனால் மாற்ற இயலாது. இவ்வாறு உள்ளது - ஆப்டிமிஸ்டிக் கன்கரன்சி.

aren
09-02-2008, 02:05 PM
நீங்கள் ஏதோ சொல்லவருகிறீர்கள் என்று தெரிகிறது ஆனால் அது என்ன என்றுதான் எனக்குப் புரியவில்லை.

sarathecreator
09-02-2008, 02:15 PM
நீங்கள் ஏதோ சொல்லவருகிறீர்கள் என்று தெரிகிறது ஆனால் அது என்ன என்றுதான் எனக்குப் புரியவில்லை.


புரியவில்லை என்றாலும் கன்கரன்சி என்றொரு வார்த்தை உமக்குக் கிடைத்ததே.

சாலைஜெயராமன்
09-02-2008, 02:27 PM
நமது மன்றத்தில் பின்னூட்டம் போடும் போது, போட்ட பின்னூட்டத்தில் திருத்தங்கள் செய்யும்போதும் concurrent இல்லாமலே கன்கரன்ஸி அடிக்கடி மற்ற பங்காளர்களால் இது அடிக்கடி வருகிறது சரத்.

அதைத்தான் கூற வருகிறீர்களோ. ஏனென்றால் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும் போதே மாற்றங்கள் நிறைய தெரிகிறது.

பூமகள்
09-02-2008, 02:44 PM
அன்புச் சகோதரர் சரத் அவர்கள் சொல்லியிருப்பது டேட்டாபேஸ்(Database) எனப்படும் பல டேட்டா(data)களை சேமிக்க உதவும் இடத்தில் ஓரே ரெக்கார்டை(Record) பலர் ஒரே நேரத்தில் உபயோகிப்பதாலும், மாற்றம் செய்வதாலும் ஏற்படும் பிரச்சனையாகும்.

உதாரணமாக,
பலர் ஒரே நேரத்தில் ஒரு டேட்டாபேஸில் இருக்கும் ரெக்கார்டை படிக்கலாம்.
ஆனால், எழுதும் போது, ஒருவர் மட்டுமே எழுத இயலும். பலரும் எழுதினால் அங்கே கன்கரன்சி பிரச்சனை வரும்.

எளிதில் விளக்க,
உங்கள் பெயர் மற்றும் முகவரி ஒரு ரெக்கார்டா டேட்டாபேஸில் சேமித்தால் ஒரே நேரத்தில் பலர் படிக்க இயலும்.

ஆனால், அதை மாற்றி எழுத பலர் முயன்றால், கன்கரன்சி பிரச்சனை வரும்.

Concurrency(கன்கரன்சி) என்ற வார்த்தையாடல் இந்த இடத்தில் அதனைத் தான் குறிப்பதாக எனக்கு தெரிகிறது.

எனது வேண்டுகோள், டேட்டாபேஸ் பற்றி விரிவாக விளக்க விரும்பின், முதலில் டேட்டாபேஸ் என்றால் என்ன என்பது தொடங்கி, கன்கரன்சி பற்றி எல்லாம் சொல்லி வந்தால் உபயோகமாக இருக்கும், பலருக்கும் புரியும் என்று நான் கருதுகிறேன்.

நல்ல முயற்சி. வாழ்த்துகள் சரத் சகோதரரே..!!
இன்னும் இன்னும் கொடுங்க..!

பாராட்டுகள்..! :)

sarathecreator
09-02-2008, 02:46 PM
அன்புச் சகோதரர் சரத் அவர்கள் சொல்லியிருப்பது டேட்டாபேஸ்(Database) எனப்படும் பல டேட்டா(data)களை சேமிக்க உதவும் இடத்தில் ஓரே ரெக்கார்டை(Record) பலர் ஒரே நேரத்தில் உபயோகிப்பதாலும், மாற்றம் செய்வதாலும் ஏற்படும் பிரச்சனையாகும்.

நல்ல முயற்சி. வாழ்த்துகள் சரத் சகோதரரே..!!
இன்னும் இன்னும் கொடுங்க..!

பாராட்டுகள்..! :)


உங்கள் விளக்கம் எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக இருக்கிறது. நன்ற்

aren
09-02-2008, 02:48 PM
இப்போ புரியுது பூமகள். முதலில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது, இப்போது கொஞ்சம் தேவலை.

பூமகள்
09-02-2008, 02:52 PM
நன்றிகள் சரத் மற்றும் ஆரென் அண்ணா.
கணினி ஒரு கடல். முத்தெடுக்க, முதலில் கடலில் மூழ்கனுமே..!

சகோதரர் சரத், இதே திரியில் ஆரம்பம் முதல் நான் சொன்னது போல், டேட்டாபேஸ் பற்றி சொல்லி வந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

முயலுங்களேன்..! வாழ்த்துகள்..! :)

மாதவர்
10-02-2008, 11:08 AM
நல்ல முயற்சி