PDA

View Full Version : பசியில் பிறந்த தத்துவம்sarathecreator
09-02-2008, 01:56 PM
அய்யா நாங்க எங்க ஊட்டுல ஒரு டீக்கடை வச்சுருக்கோமுங்க. அதுலபாருங்க பலபேரு பல்லுவெலக்காமக்கூட காலயிலயே டீ சாப்புட வந்துருவாங்கெ. நமக்கும் அதப் பாத்துபாத்து அத்துபடி ஆச்சுங்க.

ஆனாபாருங்க ஒரு வில்லங்கம்புடுச்சவென் நேத்துக்காலயில வந்தானுங்க. "அண்ணே. ரொம்பப் பசிக்குது 5 இட்டிலி குடுங்க" - அப்புடீன்னானுங்கோ.

நானும் இட்டிலிச்சட்டிக்குள்ளார இருந்து 5 இட்டிலி எடுத்து எலயில வச்சு குடுத்தேனுங்க. அவன் பரக்கபரக்க 5 இட்டிலியையும் ஒரே நிமுசத்துல முழுங்கிட்டானுங்க. "பசி தாங்கமுடியலண்ணே 2 பன்னுரொட்டி தாங்க" அப்புடின்னானுங்க. நானும் 3 பன்னா வச்சுக்கடான்னு கொடுத்தேனுங்க.

அதையும் பாதி நிமுசத்துலயே வவுத்துக்குல தள்ளிப்புட்டானுங்க. அப்புரமும் சொன்னான் - "அண்ணே 3 முறுக்கு எடுத்துக்கரேன்". நானும் கொடுத்தேன். இதை மட்டும் கொஞ்சம் பொறுமையா தின்னானுங்க.. 2 நிமுசம் ஆச்சு. "அண்ணே 4 வடை தாங்க "ன்னு சொன்னான். நானும் கொடுத்தேன். 2 நிமுசத்துல அந்த 4 வடையையும் காலி பன்னிட்டானுங்க.

அண்ணே. இன்னும் பசி நிக்கலை - 2 தோசை வேணும்னான். நானும் பொறுமையா கொடுத்தேன். சாம்பாரிலே கொலச்சுகொலச்சு அடிச்சான். 2 தோசையயும் அரைச்சொம்பு சாம்பாரு 2 டம்ப்ளரு சட்டினியயும் காலிபன்னிட்டான். அண்ணே இன்னும் பசி கபகபங்குதுன்னான்.

அப்புரம் ஒரு டீ போடுங்கன்னான். அதையும் ஒரெ மடக்குல குடுச்சுட்டான். அப்படியும் அவனுடைய பசி தீரலையாம். அண்ணேன் ஒரு வாழப்பழம் வேணும்னான். குடுத்தேன். விட்டாக்கா தோலோட துன்னுருப்பான். அத சாப்புட்ட பெரகு சொன்னான் ஒரு தத்துவம்.

அந்தத்தத்துவம் இதுதான்.

புதிய தத்துவம் 10ஆயிரத்து 111 : அண்ணே. நானும் காலையில இருந்து என்ன என்னவோ ஐட்டமெல்லாம் துன்னுபாத்தென். பசி நிக்கல. இட்டிலி, பன்னு, முறுக்கு, வடை, தோசை , டீ - வரைக்கு சாப்புட்டுப் பாத்தேன். பசி அடங்குர மாதிரி தெரியாம அதுபாட்டுக்கு பசிச்சுக்குட்டே இருந்துச்சு. அப்புரமா கடேசியா ஒரு வாழப்பழத்தை பிச்சுப்போட்டேன்.

அப்போதான் எம்பசி போனுச்சு. இது முன்கூட்டியே தெருஞ்சுருந்தாக்கா எல்லாம் சாப்புடுறதுக்கு மின்னாடியே ஒரெ ஒரு வாழப்பழத்தை மொதல்லயே துன்னுட்டு செலவு மிச்சப்படுத்திருப்பேன். அப்படின்னான். எனக்கு மயக்கமும் கிறுகிறுப்பும் சேர்ந்து வந்தது..

இம்புட்டு அயிட்டத்த சாப்புட்டு அடங்காத அவன் பசி தம்மாத்துண்டு வாழப்பழத்த தின்னவொடன்ன அடங்கிருச்சாம். என்னாத்த சொல்லுரது.

மலர்
10-02-2008, 03:08 PM
என்னத்தை சொல்ல... இப்பிடியான ஆட்களை....
ஆனாலும்
இவன் நிச்சயமா மனுஷேனே இல்லை... அதையும் தாண்டி..... (வேணா ஒரு எக்க்கோ போட்டுக்கலாம்....)
சோத்துக்குள்ள பாத்திய கட்டி சாம்பாரை மோட்டார் வச்சி பாய்க்கிற
கும்பலுக்கு இவர் தான் தலைவருன்னு நினைக்கிறேன்.... :sauer028: :sauer028:

எல்லாத்தையும் சொன்னீங்க கடைசியில உங்களுக்கு பில்க்கு பணம் கிடைச்சுதா..........:confused: :confused: :fragend005: :fragend005:
அது மட்டும் குடுக்காம கணக்குல வைக்க சொல்லியிருந்தான்னா சொல்லுங்க
நாம அவன் கணக்கை செட்டில் பண்ணியிராம்,,,, :D :D :D

சாலைஜெயராமன்
10-02-2008, 04:03 PM
சரியான கடோத்கஜன்தான்.

எனக்கு கூட ஒரு கதை ஞாபகம் வருது. ஒரு சாப்பாட்டுராமன் ஒரு கல்யாண விருந்துலே அடுத்தடுத்து விடாம மூன்று பந்தியிலே மாத்தி மாத்தி சாப்பிட்டுக்கிட்டே இருந்தான். இதைக் கவனமாப் பாத்திட்டுக்கிட்டு இருந்த பெண்வீட்டுக்காரர் ஒருவர் நம்மாளை ரொம்பவும் கவனிச்சு கவனிச்சு பரிமாறிக்கிட்டே இருந்தார்.

மூணு பந்தி முடிச்சாச்சு. அண்ணணுக்கு இன்னும் பசி அடங்கலே. நாலாவது பந்திக்கு உக்காந்தாச்சு. ஸ்வீட்டுப் பக்கம் பார்வை திரும்பிச்சு. ஒரு ஐஞ்சாரை உள்ள தள்ளியாச்சு. வடை ஒரு 10 போயிருக்கும். கவனம் இது நாலாவது பந்தியிலே.

அப்புறம் சாப்பாடு ஒரு கட்டுக் கட்டியாச்சு. கடைசியா ஒரு வாழைப்பழம் உள்ள போட்டாச்சு. ஒரு வழியா பந்தி முடிச்சு அண்ணண் கை கழுவுவோமா இல்ல அப்படியே 5வது பந்திக்கு போயிடலாமான்னு ஒரு சின்ன யோசனைல இருந்தாரு. அப்புறம் ரொம்பப் பெரியமனசோட பெண்ணு வீட்டுக் காரங்களை காப்பத்ற பொருட்டா கை கழுவ வந்துட்டாரு.

குழாய்கிட்ட வந்தவுடன் வவுறு கொஞ்சம் படுத்த ஆரம்பிச்சுருச்சு. கொஞ்சம் சிரமப்பட்டாரு. சாப்பாடு வயித்தைதாண்டி கொஞ்சம் மேலே மிதக்கறமாதிரி வந்தவுடன் ரொம்ப வருத்தமாயிட்டாறு.

இவர் படற கஷ்டத்தை பார்த்து ரொம்பக் கருத்தா இவருக்கு பரிமாறின பொண்ணு வீட்டுக்கார நண்பர் அருகில் வந்து ரொம்ப ஆதரவா என்ன சார் கொஞ்சம் கஷ்டப்படறீங்க போலிருக்கே. ஏதாவது சோடா கீடா வாங்கியாறவான்னு ரொம்ப பிரியமா கேட்டார்.

வெறும் தலையசைப்பை மட்டும் வேண்டாம்னு அண்ணன் சிக்னல் கொடுக்கறாறு. திருப்பியும் வயித்தை உருட்டி பிரட்டி என்னமோ மாதிரி வாயைக் குழைச்சு பண்ணிக்கிட்டு இருக்காறு. அதைப் பார்த்த பொண்ணு வீட்டுக்காரர் என்ன அண்ணே சாப்பாடு நல்லாயிருந்திச்சில்ல ரொம்பக் கஷ்டப் படுறீகளே. கொஞ்சம் கையைவிட்டு வேணா வாந்தி எடுத்துட்டுட்டா கொஞ்சம் சௌகரியமாய் இருக்குமே. கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன்னு ரொம்ப அப்பாவித்தனமா சொல்றாரு.

நம்ம அண்ணணுக்கு ரொம்பக் கோவம் வந்திருச்சு. என்னய்யா நானும் அப்பவேயிருந்து பார்க்கறேன். சாப்பிட்ட சாப்பாட்டை வெளிய தள்றதுக்கில்ல யோசனை சொல்றீக. நானே கொஞ்சம் கேப் இருக்கேன்னு ரொம்ப வருத்தமாயிருக்கேன். கையைவிட்டு வாந்தியெடுக்கறதுக்கு இடம் இருந்தாத்தான் இன்னும் இரண்டு வடையை உள்ள தள்ளியிருப்பேனுல்ல. மனுஷன் கஷ்டம் தெரியாம யோசனையா சொல்றீகளேன்னு கொஞ்சம் கோவமாயிட்டாரு.

பொண்ணு வீட்டுக்காரர் என்ன ஆயிருப்பாருன்னு நினைக்கிறீங்க. சும்மா மயக்கம்தான். எழுந்திருக்கவே இல்லை.

மலர்
10-02-2008, 04:11 PM
அடப்பாவிகளா.....
முதல்ல இவிங்கள எல்லாம் நிக்க வச்சி சுடணும்...
ஏற்கனவே பொண்ணு வீட்டு காரங்கன்னாலே செலவு அதிகம்ம்ம்
இவங்களை மாதிரி ஒரு நாலு பேரு... ம்ம்ம் நாலு பேரா ம்ம்ஹூம் ஊரு தாங்காது ஒருத்தர் போதும்...

கல்யாணவீட்டு சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்ன்னு மொத்தமா
கட்டிட்டு போயிருவாங்க... அப்போ கடைசி பந்திக்கு போற நம்மளை
மாதிரி ஆட்களுக்கு மேட்டால ஊத்துனா ரசம்... கொஞ்சம் கலக்கி
ஊத்துனா சாம்பார்.. அடியில தங்கியிறது கூட்டுன்னு நிலமையையே மாறிடும்.....