PDA

View Full Version : எண்ணாமலும் துணிக



sarathecreator
09-02-2008, 12:31 PM
ஒரு விவசாயியைப் பார்த்து ஊர்த்தலைவர் (பஞ்சாயத்துத்தலைவர்) இப்படிக் கேட்டாரு.,"நண்பா.. இந்த சாகுபடி சீசனுல எந்த பயிரை வெதச்சுருக்க? கோதுமைதான."

விவசாயி சொன்னாரு, "அய்யா. இந்த சீசனுல மழ வருமான்னு தெரியல. அதனால பயந்துக்குட்டு கோதுமய வெதக்காம விட்டுட்டேன்".

ப.தலை : "அப்படின்னா சோளத்தைதான் வெதச்சுயா?".

விவசாயி : "இல்லய்யா.. பூச்சிக தொல்லை கொடுக்குமோன்னு நினைச்சு.."

ப.தலை : "நினைச்சு.."

விவசாயி : "ஒன்னுமே பயிரிடலய்யா. பயந்துக்குட்டே இந்த போகத்த சும்மா விட்டுட்டேன்

ப.தலை : "ஒன்னைய நிக்க வெச்சு சுடணும்யா...ஒனக்குட்ட போகி கேட்டேம்பாரு..எனக்குதான் இப்ப நேரம் சரியில்ல....எடுடா வண்டிய..." என்று கூறி போயேபோகிட்டாரு.

நீதி : எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஆனால் எதையுமே செய்யாம இப்படி ஆகுமோ, அப்படி ஆகுமோன்னு பயந்துக்கிட்டே [ எண்ணிக்கிட்டே ] இருக்கக்கூடாது.

என்னுடைய நண்பரு ஒருத்தரு சாப்ட்வேர் டெஸ்டிங் படிச்சுட்டு - இன்டர்வியூவுக்கே போகாமல் பயந்துக்கிட்டே நாட்களை நகர்த்துராரு..அவருக்கும் இந்த விவசாயிக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு ஆங்கில சுயமுன்னேற்ற நூலிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மலர்
10-02-2008, 03:19 PM
என்னுடைய நண்பரு ஒருத்தரு சாப்ட்வேர் டெஸ்டிங் படிச்சுட்டு - இன்டர்வியூவுக்கே போகாமல் பயந்துக்கிட்டே நாட்களை நகர்த்துராரு..அவருக்கும் இந்த விவசாயிக்கும் என்ன வித்தியாசம்?
இதே மாதிரி நான் நிறைய பேரை தினமும் பாக்குறேன்....
என்ன செய்ய....??
அருமையான கருத்து...
இதை நகைச்சுவை பகுதியில் பதிஞ்சிருக்க வேண்டாமின்னு தோணுது.......

ஒரு ஆங்கில சுயமுன்னேற்ற நூலிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது
அந்த நூலிலிருந்து நல்ல தகவல்களை எடுத்து ஒரு தொகுப்பாக பயனுள்ள தகவல்கள், கட்டுரைகள் பகுதியில் கொடுங்களேன்....

சாலைஜெயராமன்
10-02-2008, 03:36 PM
எண்ணித் துணிக என்பது எண்ணத்தால் மட்டுமல்ல. எத்தனை முறை தோல்வி வந்ததாலும் அத்தனையும் 1,2,3 என்று எண்ணிக் கொண்டே வந்து 100 முறை தோல்வியடைந்தாலும் முயற்சியைமட்டும் விடாமல் தொடர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட இருக்கலாமோ?

மலர்
10-02-2008, 03:44 PM
எண்ணித் துணிக என்பது எண்ணத்தால் மட்டுமல்ல. எத்தனை முறை தோல்வி வந்ததாலும் அத்தனையும் 1,2,3 என்று எண்ணிக் கொண்டே வந்து 100 முறை தோல்வியடைந்தாலும் முயற்சியைமட்டும் விடாமல் தொடர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட இருக்கலாமோ?

ஹீ..ஹீ.,...
அப்படி கூட இருக்கலாமோ...... :icon_hmm::icon_hmm:

தீபா
17-02-2008, 08:20 AM
தவறாக எடுக்கப்பட்ட
நீதி,


எண்ணித் துணிக கருமம்.
எண்ணிக் கொண்டே இருப்பதல்ல..


விதையுமுன் யோசி,
விதைப்பதையே யோசிக்காதே


எண்ணாமல் துணியும் அனிச்சை
இச்செயலில் இல்லை..

மனோஜ்
17-02-2008, 06:57 PM
காற்ருல்ல போழதே தூற்றி கொள் என்று எதற்கு சொல்கிறார்கள் இதற்கு தான்

sarathecreator
18-02-2008, 03:21 AM
இப்போது அந்த நண்பர் இறுதியாக சன் சோலாரிஸ் இயங்குத்தளத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் அருமையான வேலை செய்கிறார்.
இவர் எண்ணாமல் துணிந்தாரோ.. எண்ணித் துணிந்தாரோ. தனது முயற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தார்.
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு எனது நண்பர் உதாரணமாகிவிட்டார்.

அறிஞர்
19-02-2008, 05:24 PM
முயற்சில்லாதோர் வாழ்க்கையில் வெற்றியடைவதில்லை....

"எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு." என்பது போல் செயல்படவேண்டும்.