PDA

View Full Version : உலகம் போற போக்கைப்பாரு தங்கமே தில்லாலே!..!!..!!!..sarathecreator
09-02-2008, 12:27 PM
ஒரு வாலிபன் ஒரு மதுபானம் அருந்தும் இடத்தில், வெகு நேரமாக தன் எதிரே இருந்த மது புட்டியையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தான்.

திடீரென்று உள்ளே வந்த குண்டான மாமன் ஒருவர் - வாலிபனின் நடவடிக்கையை கண்டு - 'தம்பி - யோசிக்காதே - ஒரே மடக்குள இப்படியே குடிக்கிறேன் பார் - என்று கூறி - ஒரே மடக்க் மடக்க் - மதுப்புட்டியில இருந்த திரவத்தை காலி செய்தார்.

நமது மதிப்பிற்குரிய வாலிபனோ அழ ஆரம்பித்துவிட்டார். உடனே குண்டுமாமன் - மாப்பிள்ளை இதுக்குப்போகி அழலாமா? - நான் ஒரு புது புட்டியை - இப்பொதே வாங்கித்தாரேன்டா செல்லம் - என்று பிரகாஷ்ராஜ் பாணியில் சொல்லிமுடிப்பதற்குள்ளாக நமது மதிப்பிற்குரிய வாலிபர் இதை சொல்லுரார் இப்படி.....

என்ன சொன்னாருன்னா --இந்த நாள் எனக்கு ஒரு மோசமான நாள். மாமா என்னுடைய ராசியோ மேசம். ஆனால் இன்னைக்கு எனக்கு நடந்ததெல்லாம் மோசம். நான் இன்றைக்கு எதையுமே ஒழுங்காக செய்யலை - நான் நேற்று ராத்திரி ரொம்ப நேரம் தூங்குனதால - அலுவலகத்துக்கு மிகத்தாமதமாக சென்று - கலந்துரையாடலை சொதப்பி - தலை கிட்டே திட்டு வாங்கி நொந்து போகி - ஒரு வழியா சாயங்காலம் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பினேன்.

வண்டி நிறுத்துர எடத்துல பார்த்தால் வண்டியை யாரோ லாவிட்டாங்கெய். அந்த வண்டிக்கு பூட்டு இருந்தது - சாவி இருந்தது - அனுமதிப்பத்திரம் இருந்தது - ஆனால் காப்பீடு பண்ணாம உட்டுருந்தேன்.

ஆட்டோ புடிச்சு வீடு வந்து சேர்ந்தேன் - ஆட்டோவுக்கு துட்டை கொடுத்துட்டு ஆட்டோவை நான் விரட்டினேன் - போ போ சனியனே அப்படின்ன்னு - ஆனால் விதியை என்னால துரத்த முடியலை - நம்ம ராசியே மோச ராசிதானே - கடைசியில கட்டையில போற விதி - என்னைத்தான் துரத்துச்சு.. சொல்லுரேன் கேளு மாமா கேளு - என் பணப்பையை அந்தக் குடிகாரப்பயல் ஓட்டிய ஆட்டோவிலேயே உட்டுட்டேன் - அந்த பாழாப்போன ஆட்டோக்காரன் - அதை லபக்கிட்டான்.

ஒரு வழியா வீட்டுக்குப்போனால் ஊருக்குப்போகி இருந்த பொண்டாட்டி திரும்ப வந்துட்டா.

நான் அவகிட்ட் நடந்ததெல்லாம் சொன்னேன் - அவ ஒப்பாரி வைக்க ஆரம்புச்சுட்டா... அவள் தொந்தரவு தாங்க முடியாமல் - அவள்கிட்டயே காசு வாங்க்கிக்கிட்டு பார்க்கு வந்து பீர் குடிக்கலாம்னு வந்தால் - அதையும் ஓசி கேட்டுட்டீயே மாமு மாமு - உன் தொல்லைக்க்கு என் பொண்டாட்டி தொல்லை பரவால்லை மாமு மாமு.. அதை நினைத்துதான் அழுறேன்.

ஒரு முழு பாட்டிலையும் கொஞ்சம் கூட வைக்காமல் அப்படியே குடிச்சிட்டியே மாமு - இது என்ன ஆர்லிக்ஸா - அதை நினைத்துதான் -- என்றார் வாலிபர்.


எனக்கு ஆங்கிலத்தில் வந்த ஒரு மின்னஞ்சலின் தமிழ் வடிவம் இது.இதில் அடல்ட் தனமான முடிவு இருந்தது. அதை சென்சார் செய்து முடிவை மாற்றியிருக்கிறேன். நகைச்சுவைக்காக மட்டும்தான். மற்றபடி கதையில் கருத்தை எதிர்பார்க்கவேண்டாம்.

இதையே உல்ட்டாவாக யோசித்திருக்கிறார் ஒருவர் (கடலோடி)

ஹா ஹா : இதே போல கொஞ்ச நேரம் முன்பு ஊர் கெட்டுப்போனதாக எனக்கு ஒரு எஸஎம்எஸ் வந்தது . __ ஊர் மிகவும் கெட்டுப் போய் விட்டது . எப்படின்னா ! நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு இருந்தேன் , அப்போ ஒரு இளைஞன் வந்தான் , அவன் பாட்டுக்கு சிகரெட்எடுத்து வாயில வெச்சான் . தீப்பெட்டியும் லைட்டரும் அங்க இருந்தவங்ககிட்ட கேட்டான் , யாரும் தரல , திடீர்னு அய்யர் கொண்டுவந்த ஆரத்தில சிகரெட் பத்த வெச்சான் பாருங்க !!எல்லோருக்கும் ஒரே ஷாக் , நான் என் கையில இருந்த பீர் பாட்டிலை கீழ போட்டுட்டேன்னா பாத்துக்குங்களேன் .

மலர்
10-02-2008, 10:11 AM
ஆஹா....
நம்ம மக்கள் போற போக்கை பார்த்தால் :sprachlos020: :sprachlos020: :sprachlos020: பயம்மா இருக்கு
நான் வளர்கிறேனே மாமிங்கிற ஸ்டைலில் மொத்தத்தையும் மொக்கை போட்டுட்டாரே......:eek: :eek: குண்டான மாமா
பாவம் அந்த முதல் வாலிபன்.... கொஞ்சூண்டாச்சும் வச்சிருந்திருக்கலாம்.... :D :D


எல்லோருக்கும் ஒரே ஷாக் , நான் என் கையில இருந்த பீர் பாட்டிலை கீழ போட்டுட்டேன்னா பாத்துக்குங்களேன் .
இதப்பாத்துட்டு நான் கூடத்தான் ஷாக் ஆயிட்டேன்....:cool: :cool:
நல்ல நகைச்சுவையான குட்டி மெயில்...
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.....