PDA

View Full Version : உலகம் இவ்வளவுதான்



sarathecreator
09-02-2008, 12:08 PM
குமார் ஒரு தன்னம்பிக்கையற்ற இளைஞன். அவனுக்கு எப்படியோ ஒரு குருட்டு யோகத்தால் வேலையிலே பதவி உயர்வு கிடைத்தது. அவனுக்கு அந்தப் புதிய வேலையைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அக்கரை இல்லை.

அவன் வானில் பறப்பதாகக் கனவு கண்டான். குருட்டு யோகத்தால் கிடைத்த பதவிஉயர்வு அவனைத் தன்நிலை கெடச் செய்தது. அவன் கலர்கலராகப் பகல்கனவு காண்பதிலேயே இன்பம் கண்டான். எப்போது பார்த்தாலும் வேலையில் பிசியாக இருப்பதுபோல நடித்துக்கொண்டே இருப்பான்.

அவனது அறையின் கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. அவன் வழக்கம்போல தனது தொலைபேசியை எடுத்துக் காதிலே வைத்திக்க்கொண்டு ரொம்பவும் கஷ்டப்பட்டு பிசியாக இருப்பதைப்போல நடிக்க ஆரம்பித்தான்.

தொலைபேசியில் நன்றாகக் கதைத்துக்கொண்டே கதவைத் தட்டியவரை "உள்ளே வரலாம்" - என உத்தரவிட்டான். இன்னமும் தொலைபேசியில் கதைப்பதை விடவேயில்லை. "நான் இப்போ கொஞ்சம் பிசி. மதியத்துக்கு மேல போன் பண்ணுங்க?" என கூறி ஒரு வழியாக தொலைபேசியைக் கீழே வைத்தான். இப்போது ஒரு வழியாக எதிரே நிற்பவரிடம் பேச்சுக்கொடுத்தான், "சொல்லுங்க சார். என்ன விசயம்?" என்றான்.

அவர் சொன்னார் - "இங்கே காலையிலிருந்து போன் பழுது என்று கம்ப்ளெயின்ட் வந்தது. இப்போ நீங்க அதே போனில்தான் பேசிக்கிட்டு இருந்தீங்க. அதுவாகவே ஆட்டோமேட்டிக்காக (தானியங்கி) வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது போலிருக்கு.", என்றார்.

இறுதியாக "எனக்கு வேலை மிச்சம். நன்றி..சந்தோசம்..மகிழ்ச்சி" - என ஆட்டோகிராப் படத்திலே வந்த வசனத்தை அதேமாதிரியான தொனியில் கூறிவிட்டு நடையைக்கட்டினார். நம்ம குமார் இப்போ பாண்டியராஜன் மாதிரி திருட்டு முழி முழித்துக் கொண்டிருந்தார்.

பிசியாக இருப்பதுபோல காட்டுவதற்கு பழுதடைந்த போனைப் பயன்படுத்திய அறிஞர் குமாரை என்ன செய்வது. உலகம் இவ்வளவுதான்.

அக்னி
09-02-2008, 12:10 PM
முன்னரேயே அறிந்திருந்தாலும்,
மீண்டும், சுவாரசியமான எழுத்து நடையில் வாசிக்கையில் மிகவும் நன்றாகவே இருக்கின்றது...
தொடரட்டும்... பாராட்டுக்கள்...

சாலைஜெயராமன்
09-02-2008, 12:23 PM
சுவாரசியமான நிகழ்வு. இப்படித்தான் பல அலுவல்களில் பணி நடக்கிறது. எதார்த்தத்தை அழகாக தந்திருக்கிறீர்கள் சரத்.

மலர்
10-02-2008, 10:51 AM
அட...
நம்ம பீலா பாண்டி.... :icon_rollout: :icon_rollout:
என்னைக்குமே ரொம்ப பன்ஸ் உட்டா இப்பிடிதான் :D :D :D

மனோஜ்
10-02-2008, 11:02 AM
பிசியாக இருப்பதுபோல காட்டுவதற்கு பழுதடைந்த போனைப் பயன்படுத்திய அறிஞர் குமாரை என்ன செய்வது. உலகம் இவ்வளவுதான்.

பாவம் குமார் கண்ணு பிதிங்கி பார்க்க பாவமா இருக்கும்

மலர்
10-02-2008, 11:13 AM
பிசியாக இருப்பதுபோல காட்டுவதற்கு பழுதடைந்த போனைப் பயன்படுத்திய அறிஞர் குமாரை என்ன செய்வது. உலகம் இவ்வளவுதான். இதுல உள்குத்து ஏதாச்சும் இருக்கா மனோஜ்.... :D :D