PDA

View Full Version : மாறுபட்ட கோணம்



sarathecreator
09-02-2008, 12:04 PM
நான் ஒரு கல்லூரி மாணவி. பிஎஸ்ஸி படிக்கிறேன். அழகாக இருப்பேன். கல்லூரிக்குச் செல்லும்போது - பேருந்து நிலையத்தில் காத்திருந்து - எனது தோழிகளையும் அழைத்துக்கொண்டு செல்வதை வழக்கமாக செய்து வந்தேன்.

ஆனால் பேருந்து நிருத்தத்தில் - பசங்களோட தொல்லை தாங்கத்தான் முடியவில்லை. சில சமயங்களில் பலப்பல சேட்டைகள் செய்து பிறரது கவனத்தைக் கவர முயல்பவர்கள் அதிகம் பேர் இருந்தனர்.

கடந்த ஒரு வாரமாகவே ஒருவன் பேருந்திலிருந்து இறங்கி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டு விசில் அடித்தபடியே மீண்டும் அதே பேருந்தில் தொத்திக்கொள்கிறான். அவனைக் கண்டாலே எனக்கு எரிச்சலாக வருகிறது. 10 நாட்களுக்கு மேலாகவும் அவன் இதைத் தொடர்ந்து வந்தான். பஸ்ஸிலிருந்து இறங்குவான். என்னைப் பார்த்து விசில் அடிப்பான். திரும்பப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே சென்றுவிடுவான்.

பொறுமை கடலினும் பெரிதுன்னு சொல்லுவாங்க. ஆனால் என் பொறுமையையே இழந்துவிட்டேன். இதற்கு ஒரு முடிவு கட்டுவத்ற்காக அடுத்த நாள் - என் அண்ணனையும் பஸ் ஸ்டாப் க்கு அழைத்துவந்தேன். ஆனால் அவரிடம் எதுவும் இதுபற்றி சொல்லவில்லை. அவரை வேறு வார்த்தை சொல்லி அழைத்து வந்தேன். மிகச் சரியான நேரத்துக்கு அதே குறிப்பிட்ட பேருந்தில் அவன் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வந்தான்.

என் அண்ணன் இருப்பதை அவன் அறியவில்லை. என்னைப்பார்த்து விசில் அடித்தான். நான் என் அண்ணனிடம் அவனைப் பற்றி முறையிடலாம் என்று திரும்பினேன்.

அவரோ - அவனை நோக்கிச் சென்று "ஏ!. நண்பா.. சவுக்கியமா?. என்னடா ரொம்ப நாளா வேலை கிடைக்காமல் அழைந்தாயே!..இந்த பஸ்லதான் கண்டக்டரா வேலை பார்க்குறீயா!.. நல்லா இருடா நண்பா." என்றார்.

அவனும் - அண்ணனிடம் சொன்னான். "ஆமாம்டா.!.. ஒருமாசம் பயிற்சிக்காலம். ரூட் கிளியர் ஆவதற்காக பயிற்சிக்காலம்.." என்றான். "தங்கச்சியை தினமும் இதே இடத்துல பார்ப்பேன். ஆனால் இவளுக்குத் தான் என்னைத் தெரியாது. ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரலாம் என்றுதான் இருந்தேன். பரவாயில்லை அதற்குள்ளே - நாமே சந்திச்சுட்டோம் - என்று சொல்லி மறுபடியும் விசில் அடித்துவிட்டு படியில் தொங்க ஆரம்பித்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் கண்முன்னே நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. இது என்னுடைய முதல் சிறுகதை முயற்சி ஆகும். பெரும்பாலும் எங்கள் ஊர் கிராமங்களில் தனியார் பேருந்துகளின் நடத்துனர்கள் சீருடை (யூனிபார்ம்) அணிவதில்லை. வண்ண உடைகள்தான். புதியதாகப் பார்ப்பவர்களுக்கு அவரை நடத்துனராகப் பாவிக்காமல் பயணியாகப் பாவிக்கத்தான் இயலும். இதனால் நிகழ்ந்த குழப்பநிகழ்வே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.விசில் கருவி இல்லாமல் வெற்று வாயால் விசிலடிக்கும் ஆட்கள் அவர்கள்.

சிவா.ஜி
09-02-2008, 12:41 PM
யாராயிருந்தாலும் முதலில் தவறாகத்தான் நினைப்பார்கள்.நல்ல வேளை அண்ணனிடம் தவறாக எதுவும் சொல்லி அசடு வழியவில்லை அந்த பெண்.
கண்ணால் கண்பதும் பொய்,காதால் கேட்பதும்(விசில் கூட)பொய்...தீர விசாரிப்பதே மெய்.
நல்ல கதை சாரா.பாராட்டுகள்.

சாலைஜெயராமன்
09-02-2008, 12:47 PM
வாழ்க்கையில் பல நேரங்களில் இவ்வாறுதான் நடந்து கொள்கிறோம். நல்ல கதை. அருமையான நடை. தொடருங்கள் சரத்.

சுகந்தப்ரீதன்
13-02-2008, 12:46 PM
எங்க ஊர்ல எல்லாம் அடிப்பாங்க பாரு வாயால விசிலு..நிஜ விசிலு எல்லாம் தோத்துபோகும்.. அவங்க ஊதுறதுக்கும் ஓட்டுனர் வேகத்த கூட்டுறதுக்கும் குறைக்கறதுக்கும் ஒருவித புரிந்துணர்வு இருக்கும் பாருங்க...!!

மாறுபட்ட கோணம் அருமை நண்பரே..முயற்சியை தொடருங்கள்..!

அனுராகவன்
17-02-2008, 03:45 AM
ஆகா!! நம்ம கிராமத்து பஸ்களில் நடப்பது அன்றாட நகழ்வே...
ம்ம் நல்ல முறையில் நன்கு இங்கு இணைத்த உங்களுக்கு என் நன்றி..
ம்ம் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

பூமகள்
17-02-2008, 06:24 AM
நல்லவேளை.. பேருந்தில் விசில் அடித்தவர், அந்த சகோதரின் நண்பர்.
இல்லையெனில் பெரும் களேபரம் கூட நிகழ்ந்திருக்க கூடும்.

உண்மைச் சம்பவத்தை வைத்து நல்ல சிறுகதை. இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.

பாராட்டுகள்.

sarathecreator
17-02-2008, 07:26 AM
நேரம் கிடைக்கும் நேரமெல்லாம் நானும் கதையெழுத முயற்சிக்கிறேன். கரு உருவானால் உடனே கதை தயார்.