PDA

View Full Version : தலைவா!!!சிவா.ஜி
09-02-2008, 12:29 PM
தலித்துகளின் தலைவா
எங்களுக்காக போராடு
அதுவரைக்கும்
என்கூட வருவியா
கக்கூஸு கழுவ....

ரெட்டை டம்ளரை
ஆவேசமா எதுக்குற
எழுச்சித் தலைவா
களைப்பா இருந்தா
எங்கூட உக்காந்து
அலுமினிய டம்ளர்ல
ஆத்திக் குடிப்பியா
தேத்தண்ணியை

தமிழினத்தலைவா
தனையனுக்கு தனையனையாவது
தமிழ் படிக்க அனுப்புவியா
எங்க கூட


கற்பிழந்தவளுக்கு
வாழ்வு கொடுக்க
மேடைதோறும் முழங்கும்
மேன்மையான தலைவா
பெத்த புள்ளை வேணா
தத்துப் புள்ளைக்காவது
அவளை கட்டிக்கொடுக்க
ஒத்துக்குவியா....

தாய்நாட்டை தரமுயர்த்த
தினம் உழைக்கும் தானைத் தலைவா
வெளிநாட்டில் நீ போடும்
முதலீட்டில் ஒரு சதவீதமேனும்
என் நாட்டில் இருக்க வைப்பாயா...

அக்னி
09-02-2008, 12:34 PM
தலைவர்கள்...
TheLieவர்கள்...
அப்புறம் எப்படி எதிர்பார்ப்பது?

சிவா.ஜி
09-02-2008, 12:36 PM
தலைவர்கள்...
TheLieவர்கள்...
அப்புறம் எப்படி எதிர்பார்ப்பது?

சூப்பர் அக்னி ஸ்டைல். நச்!!

Narathar
09-02-2008, 05:07 PM
"ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி மகளே" போன்று ஊரூருக்கு தலைவர்கள் என்னமாஇ ஏமாற்றுகிறார்கள்?

கொடி பிடிக்கும் தொண்டர்கள் யோசிக்க கடவது

அமரன்
09-02-2008, 09:39 PM
மேடை ஏறும்போதும் சாமிவந்துவிடும். மைக்கை பிடித்தால் அருள்வாக்கு(றுதி) பிரவாகிக்கும். திக்கெட்டும் முழங்கும். மேடைவிட்டு இறங்கும்போது சாமி மலையேறிடும்...

எனதூரில் ஒருவர் நக்கலாக சொல்லுவார் "சாமி ஆடும்போது சொல்லுவது, சாமி மலை ஏறியதும் மறந்திடும்".

வாக்கில் உறுதி இருக்குமே தவிர வாக்குறுதி உருகி விடும்..

நாட்டு நடப்பை நையப்புடைக்க வந்த கவிதையானாலும்:icon_b: சிவாவின் முத்திரை இல்லை..

சிவா.ஜி
10-02-2008, 10:28 AM
நன்றி நாரதர். கண்டிப்பாக தொண்டர்கள்தான் யோசிக்க வேண்டும்...தலைவர்கள் யோசித்தால்....நாட்டுக்கே நல்லதில்லை.

சிவா.ஜி
10-02-2008, 10:31 AM
நாட்டு நடப்பை நையப்புடைக்க வந்த கவிதையானாலும்http://www.tamilmantram.com:80/vb/ சிவாவின் முத்திரை இல்லை..

ரொம்ப கடுமையா சொல்ல நினைச்சேன்...அப்புறம் கொஞ்சம் பாலீஷா மாற்ற நினைச்சேன்...உண்மையிலேயே எழுத நினைத்த வார்த்தைகள் வேறு,உருவமும் வேறாக இருந்தது...பின் அப்படி இப்படி எடிட் செய்து...ஹி...ஹி...இப்படி ஆகிவிட்டது.

யவனிகா
10-02-2008, 11:47 AM
அண்ணா...மலையேறுங்க...மலையேறுங்க...

காலில சலங்கையோட....கழுத்தில பாம்போட...கையில உடுக்கையோட சிவ(சு) ரவுத்திர தாண்டவம் ஆடறது கண்ணுக்கு முன்னே தெரியுது.....

நீங்க என்ன ஆடினாலும் ஒன்னும் நடக்கப் போறதில்லை...அண்ணி பக்கத்தில இருந்தாவது...கன்னதில ரெண்டு இடி இடிச்சிட்டு காலுக்கு தைலமாவது போட்டு விடுவாங்க...அதுவும் இல்ல...நீங்க ஆடி ஆடி உங்களுக்குத் தான் கால் வலிக்கும்....

அண்ணா....உங்கள் கவிதைகளிலிருந்து வித்யாசப்பட்ட கரம் மசாலா தூக்கலா பானி பூரி கவிதை...தங்கச்சிக்கு பசி நேரம் போல....அப்படித்தான நினக்கிறீங்க....அதே...

வாழ்த்துக்கள் அண்ணா....

மனோஜ்
10-02-2008, 11:58 AM
ஆடு நனைய ஓநாள் அழிம் கதை நம் அரசியல் வாதிகள் கதை
அதை அழகாய் உரத்து சென்ன கவிதை அருமை

சிவா.ஜி
10-02-2008, 11:59 AM
அன்புத் தங்கையே இப்படியெல்லாம் எழுதினா...அப்புறம்...இங்கே என்கூட வேலை செய்யறவங்க...சொந்த காசை செலவழிச்சாவது கீழ்பாக்கம் கொண்டுபோய் சேர்த்துடுவாங்க...
பின்ன கம்ப்யூட்டர் திரையைப் பாத்து கெக்கெக்கேன்னு சிரிச்சிக்கிட்டிருந்தா வேற என்ன செய்வாங்க....?

சொன்னது சரிதான்னு நினைச்சுட்டு ஒரு பிடி துன்னீரை எடுத்து பாதி நெத்தியிலயும்,மீதிய சாயங்கால டிபனா வாய்லயும் போட்டுக்கிட்டு மலையேறிட வேண்டியதுதான்.

நம்பிகோபாலன்
11-02-2008, 11:51 AM
தலைவா.....கலக்கிட்ட தலைவா.....உணரட்டும் உண்மை அரசியல் வியாபாரிகள்

சிவா.ஜி
11-02-2008, 12:02 PM
நன்றி நம்பிகோபாலன்.அவர்கள் வியாபாரிகள்தானே...அவங்க உணரனுன்னா...தொண்டர்ங்கதான் திருந்தனும்.

aren
11-02-2008, 12:15 PM
இப்படியெல்லாம் சொன்னால் அவர்கள் கேட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் வழி தனிவழி. அரசியல்வாதிகள் அரசியல் மட்டும் பேசத்தெரிந்தவர்கள். மக்கள் படும் அவதிகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அவர்கள் கண்களுக்கு ஒன்றும் தெரியாது காதுகளுக்கும் ஒன்றும் கேட்காது. நாம்தான் வாய்கிழிய கத்திக்கொண்டிருக்கிறோம்.

இப்படி கேட்கும் மக்கள் தங்கள் பொன்னான வாக்குகளை ஒரு பாக்கெட் பிரியாணிக்கும் பத்து ரூபாய்க்கும் விற்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.

நல்ல கவிதை சிவா. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
11-02-2008, 12:24 PM
மிகச் சரியாக சொன்னீர்கள் ஆரென்.தங்கள் உரிமையை ஒரு பிரியாணி பொட்டலத்துக்கு விற்பவர்கள் இருக்கும்வரை தலைவர்களை திருத்த முடியாது.மிக்க நன்றி.

இளசு
12-02-2008, 07:14 AM
ஊருக்கு மட்டுமே உபதேசம்..

சிகரெட் பிடிக்கும் மருத்துவர்
மனைவியை அடிக்கும் ஆசிரியர்
கற்புக்காணிக்கை ''எடுக்கும்'' சாமியார்..

சமூக ஊளுத்தல்களின் பரிணாம உச்சம் - அரசியல்வியாதி..
இலட்சக்கணக்கான பேருக்கு ஒற்றை விரலின் ஒரே வீச்சில் நாமம் போடுவதால்!

''நம்'' சமூகத்தில் இருந்து உருவாகும் அரசியல்வாதிகள்
நீங்கள் சொன்னபடி இல்லாவிட்டால்தான் ஆச்சர்யம்..

வாழ்த்துகள் சிவா..

யவனிகாவின் சாமியாட்ட விமர்சனமும் உங்கள் தின்னூறு நிவாரணமும்
சலித்த மனதுக்கு கொஞ்சம் இதவருடல் சேர்த்தன..

சுகந்தப்ரீதன்
12-02-2008, 12:01 PM
ஹா...ஹா...!! வாழ்த்துக்கள்...!!

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!!

இதுக்கெல்லாமா கவிதை எழுதி நீங்க கஸ்டபடனும்...?! விடுங்கண்ணா..அதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே...!!!

சிவா.ஜி
12-02-2008, 12:27 PM
ஊருக்கு மட்டுமே உபதேசம்..

சமூக ஊளுத்தல்களின் பரிணாம உச்சம் - அரசியல்வியாதி..
இலட்சக்கணக்கான பேருக்கு ஒற்றை விரலின் ஒரே வீச்சில் நாமம் போடுவதால்!

யவனிகாவின் சாமியாட்ட விமர்சனமும் உங்கள் தின்னூறு நிவாரணமும்
சலித்த மனதுக்கு கொஞ்சம் இதவருடல் சேர்த்தன..

ஒற்றை விரலில் ஒரே வீச்சில் லடசக்கனக்கானோருக்கு பட்டை நாமம் போடும் பச்சோந்தி தலைவர்கள்....அவர்களைப் பற்றி கவலையில்லை இளசு...நம்ம தொண்டர்களை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது.பலியாடுகளாக...மண்டையை ஆட்டிக்கொண்டு கோஷம் போட்டுக்கொண்டு...சே....எப்போது திருந்துவார்கள்.

சிவா.ஜி
12-02-2008, 12:28 PM
ஹா...ஹா...!! வாழ்த்துக்கள்...!!

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!!

இதுக்கெல்லாமா கவிதை எழுதி நீங்க கஸ்டபடனும்...?! விடுங்கண்ணா..அதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே...!!!

சூப்பர்ர் நச்......சரிதான்...நாம ஏன் கஷ்டப்படனும்...??

Narathar
12-02-2008, 01:44 PM
நன்றி நாரதர். கண்டிப்பாக தொண்டர்கள்தான் யோசிக்க வேண்டும்...தலைவர்கள் யோசித்தால்....நாட்டுக்கே நல்லதில்லை.


யோசிக்காத தலைவர்களால் நாட்டுக்கு நல்லது என்கிறீர்களா?? ;)

சிவா.ஜி
12-02-2008, 01:49 PM
அதாவது வில்லங்கமா யோசிப்பார்கள் என்று சொல்ல வந்தேன்.
ஆனா நீங்க சொன்ன மாதிரி யோசிக்காத தலைவரால் நாட்டுக்கு ஒரு நன்மையுமில்லை.பொதுவாவே இப்ப இருக்கிற தலைவர்களால் எந்த நன்மையுமில்லை என்பதுதான் நிஜம்.சிங்கைக்கு கிடைத்தைப் போல ஒரு தலைவர் எப்போது கிடைப்பாரோ...?