PDA

View Full Version : தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மேலும்..



namsec
09-02-2008, 07:43 AM
தமிழகத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மிகப் பெரிய திட்டங்கள் : அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து மிகப் பெரிய திட்டங்கள் துவங்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.தமிழக அமைச்சரவையின் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்தது. 6.15 மணி வரை நடந்த இக்கூட்டத்தில் தொழில் துறை மற்றும் சிறு தொழில் துறை தொடர்பான முடிவுகள் எடுக்கப் பட்டன. அது பற்றிய விவரம்:அமைச்சரவைக் கூட்டத்தில் ஐந்து மிகப் பெரிய திட்டங்கள் அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 16 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் துவக்கப்படும் இத்திட்டங்கள் மூலம் 58 ஆயிரத்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 47 ஆயிரத்து 500 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்தளவு தொகைக்கு ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது இதுவே முதல் முறை.
திட்டங்கள் வருமாறு:

*சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் வாகனங்களை தயாரிப்பதற்கான 'ரெனால்- நிசான்' நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மோட்டார் வாகனத் திட்டம்.

*சென்னைக்கு அருகில் எண்ணூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனங்களைத் தயாரிப்பதற்கான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டம். ஸ்ரீபெரும்புதூர் வட்டம் வல்லம் கிராமத்தில் ஆண்டு ஒன்றுக்கு இரண்டு லட்சம் இலகுரக வணிக வாகனங்களைத் தயாரிப்பதற்கான அசோக் லேலண்ட்- நிசான் கூட்டு முயற்சி திட்டங்கள்.

*சென்னைக்கு அருகே ஒரகடத்தில் சிப்காட் உயர்தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பிளாஷ் கார்டுகள், மீடியா பிளேயர்ஸ் போன்ற நினைவாற்றல் சாதனங்கள், 'சிலிகான்' அடிப்படையிலான 'போட்டோவோல்டாயிக்', மெல்லிய பிலிம் போன்றவைகளைத் தயாரிப்பதற்கான மோசர் பேயர் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் திட்டம்.

*சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சோலார் போட்டோ வோல்டாயிக் அமைப்புகளையும், மெல்லிய பிலிம் தொழில்நுட்ப பொருட்களையும் தயாரிப்பதற்கான அமெரிக்காவைச் சேர்ந்த சிக்னெட் சோலார் நிறுவனத்தின் திட்டம்.

*சென்னைக்கு அருகே தரமணியில் 25. 27 ஏக்கர் பரப்பில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்காக 40 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பு கொண்ட சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து, அதனுடன் ஒருங்கிணைந்த சர்வதேச கூட்ட அரங்கு அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனமும், டாடா ரியாலிட்டி மற்றும் இன்ப்ராஸ்டிரக்சர் நிறுவனமும் இணைந்து ஏற்படுத்தும் கூட்டு முயற்சித் திட்டம். ஆயிரத்து 326 கோடியே 42 லட்சம் ரூபாய் தொகையை நிலக் குத்தகை வாடகையாக ஒரே தவணையில் வசூலித்துக் கொண்டு 25.27 ஏக்கர் நிலம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் குத்தகைக்கு விடப்படும்.

இந்த திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

thamilan2007
31-03-2008, 05:36 AM
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில்லை

சென்னையின் தொழில் வளர்ச்சி என்று கூறுங்கள்

தென் தமிழகத்தில் தொழிலே இல்லை வளர்ச்சி எங்கிருந்து வரும்

தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியில் யாரும் அக்கரை காட்டுவதாக இல்லை

இந்த திட்டங்களில் சிலவற்றை மற்ற மாவட்டங்களில் தொடங்கிருக்கலாமே தொடங்கிருந்தால் நன்றாக இருக்கும்

இந்த நிலை முதலில் மாறவேண்டும்

aren
31-03-2008, 05:53 AM
நண்பரே கவலை வேண்டாம்.

தென் தமிழகத்திற்கு பல திட்டங்கள் வருகின்றது. மதுரைக்கு புதிய விமான நிலையம். தொழிற்கூடம் அதனருகில். இப்படி பல திட்டங்கள் மதுரைக்கு வருகிறது.

ஒவ்வொன்றாக பிற மாவட்டங்களுக்கும் நலத்திட்டங்கள் வருகின்றன.

தமிழ்நாடு நிச்சயம் முதல் இடத்தைப் பிடிக்கும்.

சுகந்தப்ரீதன்
31-03-2008, 07:45 AM
தமிழ்நாடு நிச்சயம் முதல் இடத்தைப் பிடிக்கும்.

அண்ணா.. தமிழகம் முதல் இடத்தை பிடிக்குமோ இல்லியோ ஆனால் இன்றைக்கு தமிழகம் அதைநோக்கிய முயற்சியில் இறங்கி இருக்கிறது எனலாம்..!!

இதேநிலை தொடர்ந்து வரும்காலங்களிலும் நீடித்தால் நிச்சயம் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தை வகிக்க வாய்ப்புண்டு.