PDA

View Full Version : рокрпЖропро░рпН роХрпБро┤рокрпНрокродрпНродро┐ро▓рпН роХрпЛроЯроорпНрокро╛роХрпНроХроорпН



роЕройрпБро░ро╛роХро╡ройрпН
09-02-2008, 12:57 AM
பெயர் குழப்பத்தில் கோடம்பாக்கம்
நான் பத்திரிக்கையில் படித்தது..
நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.


தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்ற தமிழக அரசின் ஆணையால் ஏற்பட்ட பெயர் குழப்பம் இன்னும் தீரவில்லை.
முக்கியமாக எது தமிழ்ப் பெயர், எது வடமொழிப் பெயர், எது ஆங்கிலப் பெயர் என்பதில் இன்னமும் தகராறு. 24 மணிநேரமும் தமிழ், தாய்மண் என ரத்தக் கொதிப்புடன் இருக்கும் Юமானே தனது படத்துக்குக் கன்னாவை சேர்த்து வாழ்த்துக்கள் என்று பெயர் வைக்கும்போது மற்றவர்களைப்பற்றி சொல்ல வேண்டுமா.
புதுமுகம் செம்பி நடித்திருக்கும் ஆலயம் படம் விரைவில் தணிக்கைக்கு செல்ல உள்ளது. இதுவரை படக்குழுவினர் ஆலயம் தமிழ்ச்சொல் என்றே நினைத்திருந்தனர்.
பட வேலைகள் முடிந்த நிலையில் இப்போதுதான் ஆலயம் வடமொழிச்சொல் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனால், வரிச்சலுகை கிடைக்குமா என தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இதேபோன்று சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கும் படத்துக்கு ஜெயம் கொண்டான் என பெயர் வைத்துள்ளனர். இதில் கொண்டான் மட்டுமே தமிழ். ஜெயம் தமிழல்ல. வெற்றிதான் சரியான தமிழ்ச்சொல்.
சத்யஜோதியின் முந்தையப் படமான எம்டன் மகன் இதே பெயர் குழப்பத்தால் எம் மகன் என சுருங்கியது. ஜெயம் கொண்டான், கொண்டான் என்று சுருங்கினால் நன்றாகவா இருக்கும்?

- அனு
நன்றி: கூடல்

роирпЗроЪроорпН
09-02-2008, 03:32 AM
ஆபாச கதையை கருவாக கொண்ட கதைக்கு தமிழில் பெயர் வைத்து வரிசலுகை பெற்றால் தகுமா...? இதனால இந்த வரிசலுகையால் தமிழுக்கு ஒன்றும் சிறப்பு இல்லை.கொடுக்கமால் இருந்தால் அரசுக்கு வருமானமாவது வரும்

Narathar
12-02-2008, 11:11 AM
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்வைத்துவிட்டால் மட்டும் தமிழ் வளருமா என்ன?