PDA

View Full Version : ரீமிக்ஸ் சிறுகதை முயற்சிsarathecreator
08-02-2008, 01:29 PM
எனக்கு ஒரே மாதிரியான வேலைதான். எப்போதும் எனது ஓட்டலில் உட்கார்ந்தபடியே கல்லாவில் காசு வாங்கிப்போட்டுக் கணக்குப் பார்ப்பதுதான் எனது உத்தியோகம். இன்று நேற்று அல்ல - கிட்டத்தட்ட 17 வருடங்களாக இதே வேலையை செய்து ரொம்ப போர் அடிச்சு இருந்தது.

என்னடா நம்ம வாழ்க்கை இப்படியே - உப்புச்சப்பு இல்லாமல் - ஒரே ஸ்டீரியோ டைப்புல - போகிக்கிட்டே இருக்குதே - என்று எனக்கு ரொம்ப வருத்தமான வருத்தம். பார்த்த வேலையே திரும்ப திரும்ப பார்த்து விரக்தியடைந்த நான் கிட்டத்தட்ட - ஒரு மனநோயாளியைப்போல் - இரவுகளில் தூக்கமின்றி - வெறுப்பில் இருந்தேன்.

ஒரு நாள் எதற்கும் பக்க்கத்தில் இருக்கும் மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவோம் என்று எண்ணி - அவரிடம் அனுமதி பெற்றேன். ஒரு வாரம் கழித்து அனுமதி கிடைத்தது. அவரைக் காண - கவுன்சிலிங் - அட்டன்ட் செய்ய சென்றேன்.

டாக்டர் : என்ன பிரச்சினை ..சொல்லுங்க ...

நான்: சார். நான் இந்த மாதிரி எங்க ஓட்டலில் ஒரே மாதிரி 17 வருசம் கல்லாப்பெட்டியைக் காவல் காக்கிறேன். காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் ஒரே மாதிரியான வேலை. இது தவிர நான் வீட்டுக்கு பேருந்தில் செல்லும்போதும், ஏன் இரவில் தூங்கும்போதும் கூட எனக்கு என் கண்ணெதிரே - வெறும் நம்பர்கள் தான் கண்ணுக்குத் தெரிகின்றன. இரவுகளில் உறக்கம் இல்லை. பகலிலும் விரக்தியாகவே உணருகிறேன். எனக்கு உங்கள் ஆலோசனை தேவை.

டாக்டர் : யாருக்குத்தான் பிரச்சினை இல்லை. நானும் தான் ஒரே வேலையை 23 வருடமாக பார்க்கிறேன். அய்யா.. நீங்களாவது தெளிவான மனிதர்களிடம் பழகுகிகின்றீர்கள். நானோ பைத்தியங்களுடன் தான் அதிக நேரம் செலவழிக்கிறேன். உஙகள் நிலைமை பரவாயில்லை.

நான் : அது சரி. இருக்கட்டும் . எனக்கு ஒரு பதிலைச் சொல்லிவிடுங்கள். நான் என்னைப் பற்றி சொல்லும்போது நீங்கள் உங்களைப் பற்றியெல்லாம் சொல்லவேண்டாம். இப்பொழுது அடிக்கடி நான் இவ்வாறு நினைக்கிறேன். " தற்கொலை செய்துகொண்டு இறந்து போவதாக கனவிலும் - நினைவிலும் - ஒரு உந்துதல் ஏற்பட்டு அதே நினைப்பாக இருக்கிறது. தற்கொலையைத் தவிர வேரு வழியில்லை என்று நினைக்கிறேன்.

டாக்டர் : தற்கொலை என்பது சட்டப்படி தவறு. குற்றம். உங்கள் கதையை கேட்க கவலையாகத்தான் இருக்கிறது. நான் ஒரு வாரம் டூர் போறேன். அதனால 7 நாட்கள் கழித்து வாங்க - என்றார்.

நான் : சரி ஓகே. என்று சொல்லிவிட்டு இடத்தைக்காலி செய்தேன்.

பணத்தைக்கொடுத்துவிட்டு 7 வது மாடியிலிருந்து நடந்தே கீழே வந்தேன். மின்சார பழுது ஏற்பட்டு இருந்ததால் மாடிப்படிகளின் வழியே நடந்தே கீழே வந்தேன். கீழே நான் கண்ட காட்சி என்னை செவிட்டில் அறைந்ததுபோல் இருந்தது..பயங்கரம். 7ஆவது மாடியில் இருந்து அந்த டாக்டர் சன்னல் வழியே குதித்து கீழே விழுந்து தலை குப்புற வீழ்ந்து இறந்து கிடந்தார்.

சுஜாதாவின் சிறுகதை ஒன்றை நான் இங்கே ரீமிக்ஸ் செய்திருக்கிறேன்.பில்லா 2007 - போல திரைப்படங்கள் மட்டும்தான் ரீமேக் - ரீமிக்ஸ் செய்வார்களா என்ன. நானும் முயன்றிருக்கிறேன்.
தோல்வி / வெற்றி பற்றிக் கவலையில்லாமல் இதை ரீமேக் (இந்த வார்த்தைக்கு பழைய உருப்படியைக் கொலைசெய்து கெடுப்பது என்றும் அர்த்தம் கொள்ளலாம்) செய்துள்ளேன்.
நீங்கள் தான் சொல்லவேண்டும். அடிக்கடி இப்படி எதையாவது எழுதிக்கொண்டிருந்தால்தானே எனது நடைப்பிரவாகம் - எழுத்தின் வீச்சை நான் தெரிந்துகொள்ள இயலும்.

மதி
08-02-2008, 01:52 PM
உண்மையிலேயே நல்ல முயற்சி சரா...
வித்தியாசமாய் இருந்தது... அதே சுஜாதா பாணி..!
நன்று...

ஆயினும்..எழுத ஆயிரம் இருக்க... ரீமிக்ஸ்... ஏன்..? உங்க தனித்தன்மையை நிலைநாட்டலாமே..?

sarathecreator
09-02-2008, 04:15 PM
உண்மையிலேயே நல்ல முயற்சி சரா...
வித்தியாசமாய் இருந்தது... அதே சுஜாதா பாணி..!
நன்று...

ஆயினும்..எழுத ஆயிரம் இருக்க... ரீமிக்ஸ்... ஏன்..? உங்க தனித்தன்மையை நிலைநாட்டலாமே..?


புதிய பதிவுகள் - எனது சொந்தக் கருத்துக்களுடனும் - பிற மின்னஞ்சல் மொழிபெயர்ப்புகளுடனும் - மொழியாக்க முயற்சிகளுடனும் - தொடர்ந்து வழங்குவதில் பேராவலுடன் பெருமகிழ்ச்சியுடன் இருப்பதை எனக்குள் நானே உணர்கிறேன்

சாலைஜெயராமன்
09-02-2008, 04:26 PM
பாவம் அந்த டாக்டர். பல பேருக்கு இந்த வியாதிதான் இருக்கு.

மனசு, புத்திங்கறதுலே மனது ராஜா புத்தி மந்திரி. நல்ல மந்திரியா புத்தி இருந்தால் தப்பிச்சோம்.

ஞான நூல்கள் மனோ நாசம், பின் மனோ ஜெயம் என்று சொல்கிறது. மனத்தை ஜெயிக்கிறது அவ்வளவு சுலபமில்லை,

மொக்கைதான் மாமருந்து.

தொடருங்கள் சரத்

அனுராகவன்
17-02-2008, 04:39 AM
நல்ல முயற்சி சரத்..
நல்ல கதை..
கதையில் டாக்டர் போல இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ..
ம்ம் அதற்கு அவன் கதையேமேல்..
ம்ம் என் வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு..

sarathecreator
17-02-2008, 08:31 AM
அது என்ன இரண்டு முறை ம்ம்.. ம்ம்...

அக்னி
17-02-2008, 05:59 PM
இந்தக் கதையின் சுஜாதாவின் மூலக்கதையை நான் வாசிக்கவில்லை.
வாசித்தவர்களின் உண்மையான ஒப்பீடை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
ஆனால், உங்கள் கதையை வாசிக்கும் போது வித்தியாசமாக உள்ளது.
விறுவிறுப்பு அதிகமாக்கப்பட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்.
அதைவிடுத்துப் பார்த்தால், கதையின் இறுதித் திருப்பம் உண்மையிலேயே என்னால் ஊகிக்க முடியாதிருந்தது. அதற்கு சபாஷ்!
பாராட்டுக்கள்... தொடருங்கள்... சரா அவர்களே...
உங்களிடமிருந்து வித்தியாசமான படைப்புக்கள் வரும் என்ற எதிர்பார்ப்பைத் தந்திருக்கின்றீர்கள்...

prady
19-02-2008, 02:05 AM
சிறுகதை மிக மிக நன்று. உளவியல் நோக்கில்தான் எழுதியிருக்கிறீர்களோ தெரியவில்லை. அனால் உள்ளே பொதிந்துகிடக்கும் விடயம் அருமை!

மனோஜ்
17-03-2008, 06:01 PM
ஒரே தொழிலை செய்வது கடடினம் தான் அனால் அன்றன்றுல்லதை அன்றன்று எதிர்கொண்டால் பிரச்சனை நீங்கும்

கதை அருமை சிறப்பாக செய்துல்லீர்கள் நன்றி