PDA

View Full Version : நீ என்னவள்!!!

aren
07-02-2008, 09:56 PM
நொறுங்குகையில்
ஒரு நெருக்கம்!!!

கொதித்தெழுகையில்
ஒரு பிணக்கம்!!!

நெருங்குகையில்
ஒரு வெட்கம்!!!

அணைக்கையில்
ஒரு மணம்!!!

அருகில் இருக்கையில்
ஒரு சுகம்!!!

காதல் மனதினில் ஓட
இல்லாளைக் கண்டு
கைபிடித்து
நீ என்னவள்
என்று சொல்வதில்
இருக்கும் பிரியம்
லோகத்தில்
வேறு உண்டோ!!!

kavitha
08-02-2008, 09:54 AM
இல்லாளைக் கண்டு
கைபிடித்து
நீ என்னவள் உண்மைதான். சொல்வதைவிட கேட்பவர் இன்பம் இரட்டிப்பு. வாழ்க அண்ணலும், அண்ணியும்.

ஆதவா
08-02-2008, 10:49 AM
வாவ்... அண்ணா என்ன இது? சூப்பர்ப் கவிதை..
குறிப்பாக இரன்டிரன்டு வரிகள் அனைத்தையும் ரசித்தேன்.... அப்படியே மெல்ல எழுந்து சொல்லியிருக்கீங்க....

விமர்சனம் பின்பு.....

ஆதவன்

aren
09-02-2008, 04:29 AM
உண்மைதான். சொல்வதைவிட கேட்பவர் இன்பம் இரட்டிப்பு. வாழ்க அண்ணலும், அண்ணியும்.

நான் எழுதியதைப் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி கவிதா.

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.

aren
09-02-2008, 04:30 AM
வாவ்... அண்ணா என்ன இது? சூப்பர்ப் கவிதை..
குறிப்பாக இரன்டிரன்டு வரிகள் அனைத்தையும் ரசித்தேன்.... அப்படியே மெல்ல எழுந்து சொல்லியிருக்கீங்க....

விமர்சனம் பின்பு.....

ஆதவன்

நன்றி ஆதவா. எல்லாம் நீங்கள் கற்றுக்கொடுத்த வரிகள்தான்.

அனுராகவன்
09-02-2008, 04:44 AM
நன்றி ஆரென் அவர்களே..
ம்ம் நல்ல கவி..
ம்ம் நன்றி

நேசம்
09-02-2008, 04:57 AM
சொல்லி ஏற்று கொண்ட பிறகு எப்படி இருக்கும் அனுபவசாலி ஆரென் அவர்களே.... [ப்]நல்ல கவி.வாழ்த்துகள்[/B]

பூமகள்
09-02-2008, 06:22 AM
நொறுங்குகையில்
ஒரு நெருக்கம்!!!
அன்பினால் அணை வெடித்து நொறுங்குகையில் உள்ள அந்த அன்யோன்யம்..!

கொதித்தெழுகையில்
ஒரு பிணக்கம்!!!
சீண்டலில் செல்ல கோபம் கொண்டு கொதித்து எழுகையில் ஒரு செல்ல ஊடலான பிணக்கம்..!

நெருங்குகையில்
ஒரு வெட்கம்!!!
அருகில் நெருங்கி வருகையில் நாணம் போர்த்திய விழியோடு நிற்பவள்..!

அணைக்கையில்
ஒரு மணம்!!!
பூவினும் மெல்லியவள் நெருங்கி தழுவுகையில் வீசும் சுகந்த பூ மணம்..!

அருகில் இருக்கையில்
ஒரு சுகம்!!!
பார்க்கும் தூரத்தில் அருகிருப்பதே ஒரு வரம் பெற்ற சுகம்..!

காதல் மனதினில் ஓட
இல்லாளைக் கண்டு
கைபிடித்து
நீ என்னவள்
என்று சொல்வதில்
இருக்கும் பிரியம்
லோகத்தில்
வேறு உண்டோ!!!
இப்படியான ஒருத்தியை கண்டுபிடித்து, நீ தான் என்னுள் என்றும் இருப்பவள்.. இருக்க போகிறவள்.. என்று சொல்லும் கணத்தில் தோன்றும் இன்பத்தினை விட வேறு பேரின்பம் வேறு என்ன அண்ணா இருக்க இயலும்..!!

ஆஹா.. வாவ்... அபாரமான கவிதை..!! :icon_b:
அரென் அண்ணா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். :icon_rollout::rolleyes:

கவிதையில் மாபெரும் முன்னேற்றம் தெரிகிறது அரென் அண்ணா.
தொடர்ந்து அசத்துங்க.. இன்னும் இன்னும் நிறைய எழுதி, எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடியுங்கள்..!! :)

அமரன்
09-02-2008, 06:42 AM
அன்னையாக, அப்பாவாக, ஆசானாக, இணையாக
ஆதிபராசக்தியின் மண்ணுலக அவதார சக்தியாக
இருப்பவள் கைபிடித்து என்னவள் என்கையில்
பெருமிதவானில் இல்லறவாசிகள் உல்லாசமாக...
இல்லறமோ திவ்விய தித்திப்பு சொர்க்கமாக...

மாறாக..
குழந்தைகள் இது என்னுடையதென
இறுமாப்புடன் உரிமையாக சந்தோசம் கலந்து நவில்வதும்
மனமுடைந்த நேரத்தில் "எடுத்தெறி"ந்து (பேசி)விடுவதும்,
சமயங்களில் போட்டு உடைத்து அழுவதும்
நினைவுக்கு வந்து மறைவதை தடுக்க முடியவில்லை

ரொம்பப் பெரிய விஷயத்தை சாதாரணமாக், தெளிவாக சொல்லும் வல்லமை உள்ளவர்களை எப்படி அழைக்க வேண்டுமோ அப்படி அழைக்க வேண்டும் ஆரென் அண்ணாவை..

sarcharan
09-02-2008, 07:21 AM
ஆரென் அண்ணா!!!, இன்னிக்குத்தான் உங்களது இந்த கவிதையை படிச்சேன். சூப்பருங்க சூப்பர்...
எண்ணங்களை அப்படியே எழுதியுள்ளீர்கள்

aren
09-02-2008, 01:59 PM
நன்றி ஆரென் அவர்களே..
ம்ம் நல்ல கவி..
ம்ம் நன்றி

நன்றி அனு.

aren
09-02-2008, 02:00 PM
சொல்லி ஏற்று கொண்ட பிறகு எப்படி இருக்கும் அனுபவசாலி ஆரென் அவர்களே.... [ப்]நல்ல கவி.வாழ்த்துகள்[/B]

அந்த சுகம் அனுபவத்தவர்களுக்குத்தான் புரியும். கல்யாணம் செய்துபாருங்கள் (இதுவரை ஆகாவிட்டால்) உங்களுக்குத் தானாகவே புரியும்.

aren
09-02-2008, 02:02 PM
அன்பினால் அணை வெடித்து நொறுங்குகையில் உள்ள அந்த அன்யோன்யம்..!

சீண்டலில் செல்ல கோபம் கொண்டு கொதித்து எழுகையில் ஒரு செல்ல ஊடலான பிணக்கம்..!

அருகில் நெருங்கி வருகையில் நாணம் போர்த்திய விழியோடு நிற்பவள்..!

பூவினும் மெல்லியவள் நெருங்கி தழுவுகையில் வீசும் சுகந்த பூ மணம்..!

பார்க்கும் தூரத்தில் அருகிருப்பதே ஒரு வரம் பெற்ற சுகம்..!

இப்படியான ஒருத்தியை கண்டுபிடித்து, நீ தான் என்னுள் என்றும் இருப்பவள்.. இருக்க போகிறவள்.. என்று சொல்லும் கணத்தில் தோன்றும் இன்பத்தினை விட வேறு பேரின்பம் வேறு என்ன அண்ணா இருக்க இயலும்..!!

ஆஹா.. வாவ்... அபாரமான கவிதை..!! :icon_b:
அரென் அண்ணா சொன்னால் சரியாகத்தான் இருக்கும். :icon_rollout::rolleyes:

கவிதையில் மாபெரும் முன்னேற்றம் தெரிகிறது அரென் அண்ணா.
தொடர்ந்து அசத்துங்க.. இன்னும் இன்னும் நிறைய எழுதி, எங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடியுங்கள்..!! :)

உங்களுடைய விளக்கத்தைப் படித்தபிறகுதான் நானும் ஏதோ எழுதியிருக்கிறேன் என்று தெரிகிறது.

எனக்குப் புரியவைத்த பூமகளுக்கு என் நன்றிகள்.

aren
09-02-2008, 02:02 PM
ரொம்பப் பெரிய விஷயத்தை சாதாரணமாக், தெளிவாக சொல்லும் வல்லமை உள்ளவர்களை எப்படி அழைக்க வேண்டுமோ அப்படி அழைக்க வேண்டும் ஆரென் அண்ணாவை..

ஆரென் என்றே அழையுங்கள் அமரன்.

aren
09-02-2008, 02:03 PM
ஆரென் அண்ணா!!!, இன்னிக்குத்தான் உங்களது இந்த கவிதையை படிச்சேன். சூப்பருங்க சூப்பர்...
எண்ணங்களை அப்படியே எழுதியுள்ளீர்கள்

என்னை வைத்து கிண்டல் எதுவும் பண்ணலியே!!!

நன்றி சரவணன்.

sarathecreator
09-02-2008, 02:17 PM
ஆகா... பின்னீட்டீங்க

Narathar
09-02-2008, 04:04 PM
அரேன் இக்கவிதையை அன்னி வாசித்தார்களா? வாசிக்க வேண்டுமென்றுதான் எழுதினீர்களா?
அசத்தியிருக்கின்றீர்கள்

aren
10-02-2008, 01:02 AM
ஆகா... பின்னீட்டீங்க

நன்றி சரத்.

aren
10-02-2008, 01:03 AM
அரேன் இக்கவிதையை அன்னி வாசித்தார்களா? வாசிக்க வேண்டுமென்றுதான் எழுதினீர்களா?
அசத்தியிருக்கின்றீர்கள்

இதையெல்லாம் அவர்களிடம் சொன்னால் என்னை நிச்சயம் நம்பமாட்டார்கள் நாரதரே. அவர்கள் வழி தனி வழி.

நம்பிகோபாலன்
11-02-2008, 10:38 AM
இருமனம் இணையும்போது காதல் தெரியும் அழகு.....
அருமையான கவிதை.....

aren
11-02-2008, 10:46 AM
இருமனம் இணையும்போது காதல் தெரியும் அழகு.....
அருமையான கவிதை.....

நன்றி நம்பிகோபாலன்.

இளசு
12-02-2008, 06:21 AM
ஆழ்மனதின் மலர்ச்சி..அதனால்
அன்பின் ஆரெனின் கவிதையில் கூடுதல் கவர்ச்சி..

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி...

அன்று பாரதி சொன்ன பெருமிதம் இங்கே ஆரெனின் வரிகளிலும்..

பூமகளின் செழித்த பின்னூட்டம் சிறப்பு..

வாழ்த்துகள் ஆரென்...

சுகந்தப்ரீதன்
12-02-2008, 11:05 AM
காதல் மனதினில் ஓட
இல்லாளைக் கண்டு
கைபிடித்து
நீ என்னவள்
என்று சொல்வதில்
இருக்கும் பிரியம்
லோகத்தில்
வேறு உண்டோ!!!

தெரிலீங்கண்ணா...!:mini023:
கைப்புடிச்சதுக்கு அப்புறம் சொல்லுறேனே...?!:icon_ush:
இப்போதைக்க்கு காதல் போதையேறி கவிதை எழுதுற உங்களுக்கு ஒரு சல்யூட் அண்ணா..! வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்..!!:icon_rollout:

aren
15-02-2008, 02:28 AM
ஆழ்மனதின் மலர்ச்சி..அதனால்
அன்பின் ஆரெனின் கவிதையில் கூடுதல் கவர்ச்சி..

கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி...

அன்று பாரதி சொன்ன பெருமிதம் இங்கே ஆரெனின் வரிகளிலும்..

பூமகளின் செழித்த பின்னூட்டம் சிறப்பு..

வாழ்த்துகள் ஆரென்...

நன்றி இளசு.

ஆமாம், பூமகளின் பின்னுட்டத்தால் இந்தத் திரி சிறப்பு பெறுகிறது.

aren
15-02-2008, 02:29 AM
தெரிலீங்கண்ணா...!:mini023:
கைப்புடிச்சதுக்கு அப்புறம் சொல்லுறேனே...?!:icon_ush:
இப்போதைக்க்கு காதல் போதையேறி கவிதை எழுதுற உங்களுக்கு ஒரு சல்யூட் அண்ணா..! வாழ்த்துக்கள் அண்ணா தொடருங்கள்..!!:icon_rollout:

சரி சுகந்தா. சீக்கிரமே கைபிடித்துவிட்டுச் சொல்லுங்கள்.