PDA

View Full Version : உழைப்பின் ரகசியம்

அனுராகவன்
07-02-2008, 01:53 PM
மானிதா!! உழைக்கக் கற்றுக்கொள் முதலில்;
பிழைக்கக் கற்றுக்கொள்ளாதே!
உழைத்தால் உயரலாம்;பிழைக்க நினைத்தால்
நம் பிள்ளைகள் நிற்க்கும் நடு வீதியிலே.!!

அனுதினமும் மூவ்வேளைகள் வயிறுபுடைக்க
நாற்தினமும் படைக்கும் உன் பெற்றோர்
அகிலமெங்கும் கிடைக்காத அறியதெய்வம்;
ஆதலால் நன்றியே தெரிவி முதலில்.!!

பெற்றோர்க ளில்லையேல் ஏது நீ? பின்
அவர்களின் உழைப்பில் வாழ்வதும்
எத்தனைநாள் சொல் மானிடா!! அப்படி வாழ்த்தால்
யாருமே உழைக்கமாட்டார்கள் உலகிலே ...!!

மற்றவர்கள் உழைப்பில் வாழ்ந்து சுகபோக கிடைக்க
தானாக வரும் சோம்பல் எனும் அரக்கரூபம்
என்ன செய்வாய்?? அதனை வெல்ல பிறகுதொடரும்
தப்பான வழிகள் ;இது தேவையா...!!

செய்யும் செயலில் கவனம்
செய்யும் விதத்தில் கவனம்
செய்ய்ப்படுவதில் புதுமையே சேர்த்தல்
செய்வது எதுவானாலும் நீங்கள்..!!

உழைக்க இன்றே தொடங்குக;
பிழைப்பை இன்றே முடித்துக்கொள்க;
செல்வம் பெருகும் முறுவினாடியில்
ஆகவே உழை,உழை அதுதான் நம் தாரகமந்திரம்..!!

-அனு

அனுராகவன்
08-02-2008, 11:42 AM
உழைப்பின் ரகசியம் நமக்கு வேண்டும்..
அதிலும் உழைப்பை நாம்தான் பெற வேண்டும்..
உங்கள் கருத்து??

ஜெகதீசன்
08-02-2008, 12:52 PM
அனு

மொத்தத்துல

கடமையை செய் பலனை எதிர்பாராதேன்னு

சொல்லுறிங்களோ ?

அனுராகவன்
08-02-2008, 11:07 PM
அனு

மொத்தத்துல

கடமையை செய் பலனை எதிர்பாராதேன்னு

சொல்லுறிங்களோ ?

அது ஒரு விதத்துல உண்மைதான்..
ம்ம் உழைப்பால் நம் மற்றவரை எதிர்பார்க்காமல் வாழலாமே!!
உழைப்பு கூட பிழைப்புக்கு என்ற நிலை வந்து விட்டது,..
ம்ம் நன்றி ..

விகடன்
09-02-2008, 02:44 AM
"உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாந்திடாதே"

என்ற அந்த காலாத்தால் வென்ற பாடல் வரிகளை மீட்டுச் சென்ற கவிதை.
பாராட்டுக்கள் அனு.
---------
கவிதையில் தென்பட்ட ஓரிரு வரிகள் கூட கவிதையின் அழகை கெடுத்துவிடலாம் அனு.
அத்துடன் கவிதை வடிவிலிருந்து கட்டுரை வடிவிற்கு ஓர் கணம் பாய்ந்து மீண்டு விட்டதாக எனக்கு ஓர் உணர்வு.

அனுராகவன்
09-02-2008, 03:26 AM

நன்றி விராடன் அவர்களே..
ம்ம் என் நன்றி

நேசம்
09-02-2008, 05:01 AM
குறிக்கோளுடன் உழைக்க கூடாதா அனு.... பிழைப்புக்கு என்று இருந்தாலும் அதில் ஒரு நோக்கம் இல்லையா

அனுராகவன்
09-02-2008, 05:08 AM
குறிக்கோளுடன் உழைக்க கூடாதா அனு.... பிழைப்புக்கு என்று இருந்தாலும் அதில் ஒரு நோக்கம் இல்லையா

பிழைப்புக்கு நோக்கம் இருக்குதுதான் நேசம்..
ஆனால் சிலர் தங்கள் பெற்றோரின் உழைப்பில் மட்டுமே வாழ நினைக்கிறார்கள்..
அது ஒரு பிழைப்பா..
உழைத்தால்தான் தன் சுயசப்பாத்தியத்தில் வாழ முடியும்.
அப்படியில்லையேல் குடும்பத்தை சோக சூழ்ந்துக்கொள்ளும்.
ம்ம் என் நன்றி

நேசம்
09-02-2008, 05:16 AM
பிழைப்புக்கு நோக்கம் இருக்குதுதான் நேசம்..
ஆனால் சிலர் தங்கள் பெற்றோரின் உழைப்பில் மட்டுமே வாழ நினைக்கிறார்கள்..
அது ஒரு பிழைப்பா..
உழைத்தால்தான் தன் சுயசப்பாத்தியத்தில் வாழ முடியும்.
அப்படியில்லையேல் குடும்பத்தை சோக சூழ்ந்துக்கொள்ளும்.
ம்ம் என் நன்றி

பெற்றோரின் உழைப்பில் வாழ்ப*வ*ர்க*ளை என்ன* சொல்லி அழைப்ப*து என்றுதான் தெரிய*வில்லை.உழைப்புதான் ம*னித*னுக்கு ம*கிழ்ச்சியை த*ரும் என்று உண*ர்த்தும் ந*ல்ல* க*விதை த*ந்த* அனுக்கு வாழ்த்துக*ள்

அனுராகவன்
09-02-2008, 07:35 AM
பெற்றோரின் உழைப்பில் வாழ்ப*வ*ர்க*ளை என்ன* சொல்லி அழைப்ப*து என்றுதான் தெரிய*வில்லை.உழைப்புதான் ம*னித*னுக்கு ம*கிழ்ச்சியை த*ரும் என்று உண*ர்த்தும் ந*ல்ல* க*விதை த*ந்த* அனுக்கு வாழ்த்துக*ள்

ம்ம் நன்றி நேசம்
மிக்க நன்றி..
ம்ம் தொடர்ந்து வாங்க..!!

அமரன்
09-02-2008, 07:37 AM
உழைப்புக்கும் பிழைப்புக்கும் நூலிழை வித்தியாசம். பலர் உழைத்து பிழைக்கிறார்கள். சிலர் பிழைப்பதற்காக உழைத்து 'பிழை'க்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் குழுவினர் எண்ணிக்கை சரிவடைந்து செல்கிறது. உழைத்துப் பிழைக்கவேண்டுமென்று அதிகமானோர் நினைத்து முயல்கிறார்கள். கடினமான அவர்கள் உழைப்பு, பல சந்தர்ப்பங்களில் பெற்றுத்தருவது என்னவோ பூட்டிய கதவுத்தடைகளைத்தான். ஆனாலும் தளரா மனதுடன் உழைப்பை கைநழுவ விடுவதில்லை. கைநழுவவிடும் சிறுபான்மையினர் தவறான வழியிலும், பின்புல வலிமையிலும் வாழ்கிறார்கள்.

அவர்களுக்குப் விதையாகவும், எல்லோருக்கும் உரமாகவும் நீங்கள் புனைந்த கவிதை. பாராட்டுகள் அனு.

அனுராகவன்
09-02-2008, 07:49 AM
உழைப்புக்கும் பிழைப்புக்கும் நூலிழை வித்தியாசம். பலர் உழைத்து பிழைக்கிறார்கள். சிலர் பிழைப்பதற்காக உழைத்து 'பிழை'க்கிறார்கள்.

நீங்கள் சொல்லும் குழுவினர் எண்ணிக்கை சரிவடைந்து செல்கிறது. உழைத்துப் பிழைக்கவேண்டுமென்று அதிகமானோர் நினைத்து முயல்கிறார்கள். கடினமான அவர்கள் உழைப்பு, பல சந்தர்ப்பங்களில் பெற்றுத்தருவது என்னவோ பூட்டிய கதவுத்தடைகளைத்தான். ஆனாலும் தளரா மனதுடன் உழைப்பை கைநழுவ விடுவதில்லை. கைநழுவவிடும் சிறுபான்மையினர் தவறான வழியிலும், பின்புல வலிமையிலும் வாழ்கிறார்கள்.
நன்றி அமரன்..
ம்ம் என் நன்றி

ஆர்.ஈஸ்வரன்
09-02-2008, 09:56 AM
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

Narathar
09-02-2008, 04:15 PM
மானிதா!! உழைக்கக் கற்றுக்கொள் முதலில்;
பிழைக்கக் கற்றுக்கொள்ளாதே!

அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் அனு

அனுராகவன்
20-03-2008, 06:28 AM
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
நன்றி ஆர் .ஈஸ்வரன் அவர்களே!!
நன்றி உங்களுக்கு ..

அனுராகவன்
20-03-2008, 06:29 AM
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள் அனு
நன்றி நாரதர் அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்

Keelai Naadaan
20-03-2008, 09:26 AM
சகோதரி,

உழைக்க உற்சாகமூட்டும் தரும் வார்த்தைகளுக்கு நன்றி.

எனக்கு கவிதையெழுத தெரியாது. அதனால் கவிதைக்கு வேண்டிய விதிமுறைகளும் தெரியாது.

பாராட்டுகள்.

செல்வா
20-03-2008, 11:11 PM
உழைப்பை முன்னிறுத்தும் கவிதை.....
உழைப்பின்றி உலகில்லை.....
பிழைப்பதற்கும் உழைப்பு அவசியம் தான் அன்றோ.. அனு அக்கா...
எத்தனை நாள் தான் ஒருவரால் இன்னொருவர் உழைப்பில் பிழைக்க முடியும்... முயற்சிக்கு வாழ்த்துக்கள்....