PDA

View Full Version : தொ(ல்)லைப் பேசியா

அனுராகவன்
07-02-2008, 01:51 PM
தொலைப்பேசி அழைத்தது;
ஓடினேன் எடுக்க மறுநொடியிலே
தொலைப்பேசி அணைந்தது தானாக;
செல்பேசியே எடுத்து அழைத்தேன் நான்
அங்கோ என் சுற்றத்தர்கள் கூடியிருக்க
என் மனதில் பலநாட்கள் கழித்து அழைப்பது
அதில் எல்லையில்லா ஆனந்தம் தான்;
தொ(ல்)லைகளில் பேசுவதால் தொ(ல்)லைபேசியா..
ஹலோ!! என்று சொன்னார்கள் அதில் எனக்கு சந்தோசம்
பணம் எப்போ!! என்று கேட்டார்கள் வந்தது ஒரு தோசம்
வெளிநாடு வந்தோம் பிழைப்பிற்காக
உள்நாட்டில் பலர் ஏங்குவது பணத்திற்காக..
சொந்தங்கள் அங்கு கூடியிருக்க
சோகங்கள் மட்டும் என்னுடன் இருக்க
பணத்திற்காக தேடும் சுற்றங்கள் இருக்கும் வரை
பிழைப்பிற்காக வாடும் நம்மவர்கள் நிலைமாறாது.
ஒரேவொரு அழைப்பால் என்மனம் கலங்கிடும்
ஒரேசிந்தனையால் நம்வாழ்க்கை ஓடும்...!!

-அனு

அனுராகவன்
08-02-2008, 11:30 AM
தொலைப்பேசி எனக்கும் மட்டும் இப்படியா..
உங்களுக்கு எப்படி??

ஷீ-நிசி
08-02-2008, 01:24 PM
வெளிநாட்டிலிருக்கும் மனது
ஏங்குகிறது பாசத்திற்காய்!
உள்நாட்டிலிருக்கும் மனங்கள்
தாங்குகிறது அவனை பணத்திற்காய்!

தொடர்ந்து வார்த்தைகளை செதுக்குங்கள்! வாழ்த்துக்கள் அனு!

ஜெகதீசன்
08-02-2008, 01:32 PM
அனு
வெளிநாடுவாழ் இந்தியர்களின் உண்மைக் கவிதை நன்றி.வாழ்த்துக்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் இப்படித்தான்.
அதாவது பணம் தான் முக்கியம்.அதுவும் மிஸ்காலில் பணம் கேட்பவர்கள்
இப்போது அதிகம்

அனுராகவன்
08-02-2008, 10:57 PM
வெளிநாட்டிலிருக்கும் மனது
ஏங்குகிறது பாசத்திற்காய்!
உள்நாட்டிலிருக்கும் மனங்கள்
தாங்குகிறது அவனை பணத்திற்காய்!

தொடர்ந்து வார்த்தைகளை செதுக்குங்கள்! வாழ்த்துக்கள் அனு!

ஆமாம் ஷீ-நிசி அவர்களே!!
ம்ம் என் நன்றி..
இதேநிலைதானே.
ம்ம் என் வாழ்த்துக்கள்!!!

அனுராகவன்
08-02-2008, 11:00 PM
அனு
வெளிநாடுவாழ் இந்தியர்களின் உண்மைக் கவிதை நன்றி.வாழ்த்துக்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்பாலும் இப்படித்தான்.
அதாவது பணம் தான் முக்கியம்.அதுவும் மிஸ்காலில் பணம் கேட்பவர்கள்
இப்போது அதிகம்

நன்றி ஜெகதீசன் அவர்களே!!
மிஸ்கால்தான் அதிகமாக எனக்கும்வரும்..
அது அவசரகாலாக் கூட தெரியாது..
ம்ம் என் வாழ்த்துக்கள்!!!
தொடர்ந்து வாருங்கள்

அக்னி
08-02-2008, 11:45 PM
ஹலோ என்றால் கிலோ கணக்கில் கேட்கின்றார்கள் பணம்...
அவசியத் தொலைபேசி, பேசினாலே அவஸ்தை என்ற நிலை...
என்று மாறுமோ இந்த நிலை...

யதார்த்த நிலையைக் கவிதையில் கொணர்ந்த அனு அவர்களுக்குப் பாராட்டுக்கள் பலப் பல...

அனுராகவன்
09-02-2008, 12:19 AM
ஹலோ என்றால் கிலோ கணக்கில் கேட்கின்றார்கள் பணம்...
அவசியத் தொலைபேசி, பேசினாலே அவஸ்தை என்ற நிலை...
என்று மாறுமோ இந்த நிலை...

யதார்த்த நிலையைக் கவிதையில் கொணர்ந்த அனு அவர்களுக்குப் பாராட்டுக்கள் பலப் பல...

நன்றி அக்னி..
ம்ம் என் நன்றி
தொடர்ந்து வருக..!!

விகடன்
09-02-2008, 02:13 AM
ஹலோ! என்றால்
கிலோவில் அனுப்புவீர்கள் என்ற நம்பிக்கைதான்.
அதேவேளை உரிமை உள்ளவனிடந்தானே உரிமையுடன் சுற்றி வளைக்காமல் கேட்கமுடியும்!!!

என்வீட்டில் மட்டும் நிலமை தலைகீழ்.
என்ன கஸ்டமென்றால் அழைப்பு வராது.
தனியே இருப்பவனை ஏன் குழப்புவான் என்று எண்ணுவார்கள்.
தேவை என்றாலும் வேறு பல விடயங்கள் பேசி எப்போதாவது ஒரு நிலைடில் நாசூக்காக "இந்த மாதம் ஏதாச்சும் அதிக செலவாடா?" என்று ஒரு கேள்வி.
அதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டியாதுதான்.

அனுராகவன்
09-02-2008, 03:28 AM

நன்றி விராடன் அவர்களே!!
ம்ம் உங்கள் வீட்டீல் இப்படியா..
ம்ம் நல்லதுதான்..
ம்ம் என் நன்றி!!

சிவா.ஜி
09-02-2008, 04:07 AM
முன்பெல்லாம் கடிதங்கள் வராதா என்று ஏங்குவோம்...அதே ஒரு கட்டத்தில் கடிதங்களே கவலையாக மாறிவிட்டது.அதே போலத்தான் இப்போது தொலைபேசியும்.ஒவ்வொருமுறை மணி அடிக்கும்போது,மனதுக்குள் ஒரு சின்ன திக்-உடன் தான் எடுக்க வேண்டியிருக்கிறது.
எதார்த்த கவிதை.பாராட்டுகள் அனு.

அனுராகவன்
09-02-2008, 04:23 AM

ஆமாம் சிவா.ஜி அவர்களே!!
ம்ம் என் நன்றி..
இதே நிலைதானே.
ம்ம் என் வாழ்த்துக்கள்!!!

அமரன்
09-02-2008, 07:55 AM
நிறைய பேச வைக்கும் கவிதை. வாசிப்பவன் மனநிலையே கவிதையை ஆதரிக்கிறது. எதிர்க்கிறது. எனது மனநிலையில் இக்கவிதையை எதிர்க்கிறேன். சக நண்பர்கள் மனநிலையில் இதை ஆதரிக்கிறேன்..

அடிக்கடி உன்னைப் பார்த்து, குலாவி, அளவலாவிட்டு இப்போ முடியலடா.. எங்கே பார்த்தாலும் நீ இருப்பது போல இருக்கு.. ஏன் கூப்பிடல்ல. பரிதவிச்சுப் போயிட்டேன் தெரியுமா. தளுதளுத்த வார்த்தைகள் காது நிரப்பி ததும்பும்போது கூடவே நானும் தளுதளுத்து.. வந்து வருடங்கள் பல கடந்ததை விட்டு விலகி... நேற்று முன்தினம்தானே பேசினோம் என்பதை மறந்து..

சுக நயங்கள் முடித்து, கொஞ்சிகுலாவிய பின்பு காசு அனுப்பவா என்றால், தேவைல்லடா.. போன வாரம் நீ அனுப்பியது இருக்குடா.. ஒரு மாதத்துக்கு போதும். நீ நல்லா சாப்பிட்டு, உடுத்தி இருடா.. அடிக்கடி பேசுடா..வெச்சுடறேன்..

ஒலித்து ஒதும் சத்தம் காது மோதுகையில் தோன்றும் உணர்வு இருக்கே. சொல்லில் அடங்காது. சொல்லி மாளாது..

சிவா சொன்னது போல் படபடக்கும் நெஞ்சுடன் நானும் சொல்வேன். உன் இலக்கத்தை போனில் பார்த்தால் நெஞ்சு பதை பதைக்குது.. நானே அழைக்கிறேனே.. நீ எடுக்க வேண்டாம்..

"போடா..நீ போன் எடுக்காட்டா என் ஆவி துடிதுடிக்குது..அதானே மிஸ்டு கால் கொடுக்காது நானே கூப்டுறேன்.." ஊமையாக்கும் பதங்கள் பாசத்தின் பதம் சொல்லும்..

அசைபோட வைத்த கவிதைக்கு நன்றியும் பாராட்டும்..

யவனிகா
09-02-2008, 08:09 AM
நல்ல உணர்வு வெளிப்பாடு தோழியே...
என் தோழியும் இதையே தான் சொல்வாள்...மிஸ் கால் தான் வருகிறது. பணம் கேட்கக் கூட மிஸ் கால் தரும் உறவுகள்....

kavitha
09-02-2008, 09:03 AM
வாழ்க்கைத்தேவைகளுக்குப் பணம்
மன நிம்மதிக்கு? ஆறுதலாய் நாலு வார்த்தைகள் போதும்.
உணர்த்திய கவிதை அனு.

எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
வாரம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசும்போது
அவர்களது தனிமையின் ஆழம், சொந்த சமையலின் சுவை எல்லாம் புரியும்.
பேசினால் கூட கட்டணம் ஏறிவிடும் என்று எனது பெரியம்மா அண்ணனை யாரிடமும் பேசக்கூடாது என்பாள்.
சொந்தங்களை விட்டுச் சென்று, விழா, கல்யாணம், இறப்பு இப்படி எல்லாமுமே அவர்களுக்கு தொலைபேசிச்செய்தி தான். மிக வருத்தமாக இருக்கும்.

Narathar
09-02-2008, 04:22 PM
தொலைப்பேசி எனக்கும் மட்டும் இப்படியா..
உங்களுக்கு எப்படி??

சுஹாசினி நடித்த மனதில் உறுதிவேண்டும் படத்தில் ஊரிலிருந்துவரும் கடித்தத்தை "கே.கே" என்பார் செல்லமாக... என்னவென்று கேட்கும் தோழிக்கு அவர் சொல்லிம் விளக்கம் "கழுத்துக்கு கத்தி"

அன்று கடதாசி இன்று கைப்பேசி

அனுராகவன்
11-02-2008, 06:32 AM
நிறைய பேச வைக்கும் கவிதை. வாசிப்பவன் மனநிலையே கவிதையை ஆதரிக்கிறது. எதிர்க்கிறது. எனது மனநிலையில் இக்கவிதையை எதிர்க்கிறேன். சக நண்பர்கள் மனநிலையில் இதை ஆதரிக்கிறேன்..

அடிக்கடி உன்னைப் பார்த்து, குலாவி, அளவலாவிட்டு இப்போ முடியலடா.. எங்கே பார்த்தாலும் நீ இருப்பது போல இருக்கு.. ஏன் கூப்பிடல்ல. பரிதவிச்சுப் போயிட்டேன் தெரியுமா. தளுதளுத்த வார்த்தைகள் காது நிரப்பி ததும்பும்போது கூடவே நானும் தளுதளுத்து.. வந்து வருடங்கள் பல கடந்ததை விட்டு விலகி... நேற்று முன்தினம்தானே பேசினோம் என்பதை மறந்து..

சுக நயங்கள் முடித்து, கொஞ்சிகுலாவிய பின்பு காசு அனுப்பவா என்றால், தேவைல்லடா.. போன வாரம் நீ அனுப்பியது இருக்குடா.. ஒரு மாதத்துக்கு போதும். நீ நல்லா சாப்பிட்டு, உடுத்தி இருடா.. அடிக்கடி பேசுடா..வெச்சுடறேன்..

ஒலித்து ஒதும் சத்தம் காது மோதுகையில் தோன்றும் உணர்வு இருக்கே. சொல்லில் அடங்காது. சொல்லி மாளாது..

சிவா சொன்னது போல் படபடக்கும் நெஞ்சுடன் நானும் சொல்வேன். உன் இலக்கத்தை போனில் பார்த்தால் நெஞ்சு பதை பதைக்குது.. நானே அழைக்கிறேனே.. நீ எடுக்க வேண்டாம்..

"போடா..நீ போன் எடுக்காட்டா என் ஆவி துடிதுடிக்குது..அதானே மிஸ்டு கால் கொடுக்காது நானே கூப்டுறேன்.." ஊமையாக்கும் பதங்கள் பாசத்தின் பதம் சொல்லும்..

அசைபோட வைத்த கவிதைக்கு நன்றியும் பாராட்டும்..

நல்ல குடும்பம் நண்பரே..
ம்ம் ஒரு சிலருக்குதான் இப்படியெல்லாம் உள்ளது..
ஆனால் பலருக்கு என் நிலைமையே

அனுராகவன்
11-02-2008, 06:34 AM
நல்ல உணர்வு வெளிப்பாடு தோழியே...
என் தோழியும் இதையே தான் சொல்வாள்...மிஸ் கால் தான் வருகிறது. பணம் கேட்கக் கூட மிஸ் கால் தரும் உறவுகள்....

நன்றி யவனிகா!!
ம்ம் என் நன்றி!!

sarathecreator
11-02-2008, 07:59 AM
பணம் காய்க்கும் மரங்களாக நீங்கள் அங்கே இருக்க
பணம் தின்னும் கழுகாக அவர்கள் இங்கே இருக்க
மிஸ் கால் கொடுத்தாலே பணம் வரும் என்றிருக்க
நீண்டநெடிய கால் பண்ண இவர்களுக்கெங்கே மனம்?

இவர்களின் மனம் இவ்வாறிருந்தும் இன்னமும் இவர்கள்
மேல் இரக்கம் காட்டும் நீங்கள் எங்கே?

அனுராகவன்
12-02-2008, 03:34 AM
வாழ்க்கைத்தேவைகளுக்குப் பணம்
மன நிம்மதிக்கு? ஆறுதலாய் நாலு வார்த்தைகள் போதும்.
உணர்த்திய கவிதை அனு.

எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.
வாரம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசும்போது
அவர்களது தனிமையின் ஆழம், சொந்த சமையலின் சுவை எல்லாம் புரியும்.
பேசினால் கூட கட்டணம் ஏறிவிடும் என்று எனது பெரியம்மா அண்ணனை யாரிடமும் பேசக்கூடாது என்பாள்.
சொந்தங்களை விட்டுச் சென்று, விழா, கல்யாணம், இறப்பு இப்படி எல்லாமுமே அவர்களுக்கு தொலைபேசிச்செய்தி தான். மிக வருத்தமாக இருக்கும்.
ஓ அப்படியா கவிதா..!
ம்ம் என்னசெய்து அது பெண்களின் கட்டுபாடு..!
ம்ம் நாமும் அளவோடு பேசுவோம்..!!
என் நன்றி தோழி..!!

அனுராகவன்
12-02-2008, 03:35 AM
சுஹாசினி நடித்த மனதில் உறுதிவேண்டும் படத்தில் ஊரிலிருந்துவரும் கடித்தத்தை "கே.கே" என்பார் செல்லமாக... என்னவென்று கேட்கும் தோழிக்கு அவர் சொல்லிம் விளக்கம் "கழுத்துக்கு கத்தி"

அன்று கடதாசி இன்று கைப்பேசி

ம்ம் பழைய ஞாபகம்.
ம்ம் என் நன்றி நாரதரே..

அனுராகவன்
12-02-2008, 03:36 AM
பணம் காய்க்கும் மரங்களாக நீங்கள் அங்கே இருக்க
பணம் தின்னும் கழுகாக அவர்கள் இங்கே இருக்க
மிஸ் கால் கொடுத்தாலே பணம் வரும் என்றிருக்க
நீண்டநெடிய கால் பண்ண இவர்களுக்கெங்கே மனம்?

இவர்களின் மனம் இவ்வாறிருந்தும் இன்னமும் இவர்கள்
மேல் இரக்கம் காட்டும் நீங்கள் எங்கே?

நன்றி நண்பா..!!
தொடர்ந்து வாங்க..!!