PDA

View Full Version : சாதனையின் வேதனை



அனுராகவன்
07-02-2008, 01:48 PM
சாதனை எதற்கு?
வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா,
இல்லை பேர் கிடைக்கவா,
இல்லை வாழ்வைக் கழிக்கவா!

தன்னை வருத்தி சாதகம் செய்வதால்
கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு
சமுதாயம் கொடுக்கும் பட்டம்தான் சாதனை

தன்னை வருத்தி சாதகம் செய்யும் போது
சிந்திய வியர்வைத் துளிகளுக்கும்,
மனதில் உதித்த எதிர்பார்ப்புக்கும்
தக்க பதில்- உணர்வு ரீதியாக கிடைக்கும் போது
கிளம்பும் எதிர்மறை உணர்வுதான் வேதனை

வேதனைகளைத் தாண்ட
சோதனைகளைத் தாண்டி
சாதனைகளைத் தேண்டியவனுக்கு
வேதனைகளே பரிசனால்- அதுதான்
சாதனையின் வேதனை.

-அனு

அனுராகவன்
08-02-2008, 11:38 AM
சாதனைகள் செய்ய சோதனையே வெல்ல வேண்டும்.
ம்ம் நீங்கள் எப்படி??

ஆர்.ஈஸ்வரன்
09-02-2008, 09:54 AM
சாதனைகள் செய்ய சோதனையே வெல்ல வேண்டும்.
ம்ம் நீங்கள் எப்படி??


அப்படித்தான் முயன்று கொண்டிருக்கிறேன் இன்னமும்.

அமரன்
09-02-2008, 10:28 AM
அழகான சிலை..
அருகாமையில் செதுக்கிய சிற்பி..
சுற்றும் உடைந்த கற்கள்..

சிற்பியைக் கேட்டேன்..
இவ்வளவு அழகாக எப்படி?
பதிலால் நெளிந்தேன். தெளிந்தேன்..
சிதறியகற்களின் பங்கும் அதிகம்..

வரும்போது கால் குத்திய
கற்சில்லுகளை நிந்தித்ததை நினைந்து
என்னையே நொந்துகொண்டேன்..

சிற்பியின் கால்களையும்
சிதறிய கற்கள் பதம்பார்க்குமே?

சோதனை...
எப்படி சாதனை ஆகிறது..
சோ(ர்வு) "சா"வடையும்போது..:icon_b:

பாராட்டுகள் அனு..

சுகந்தப்ரீதன்
10-02-2008, 08:37 AM
வேதனைகளைத் தாண்ட
சோதனைகளைத் தாண்டி
சாதனைகளைத் தேண்டியவனுக்கு
வேதனைகளே பரிசனால்- அதுதான்
சாதனையின் வேதனை.
உண்மைதான் அக்கா...!!
அனுபவ கவிதை போல் தோன்றுகிறது..வாழ்த்துக்கள்..!!
அந்த சாதனையும் எத்தனை நாள் நீடிக்கும்..அடுத்தவன் வந்து அதை முறியடிக்கும் வரைதானே..?!
பின் நாம் செய்த சாதனை நம்மை பார்த்து சிரிக்கும்...!! ஆக கடைமையை செய் பலனை எதிர்பாராதே என்று எண்ணி நடந்தால் சாதனைகள் வரலாம் வாழ்வில்..ஆனால் சோதனைகள் வராது..!!
வாழ்த்துக்கள் ச்கோதரி..முன்னேற்றம் தெரிகிறது எழுத்தில் மேலும் வளர வாழ்த்துக்கள்...!!

அனுராகவன்
12-02-2008, 03:44 AM
அப்படித்தான் முயன்று கொண்டிருக்கிறேன் இன்னமும்.
எப்ப அதை அடைய போகுறீங்க..!!
முதுமையிலா??
ம்ம் வேகமாக..!
ம்ம் என் நன்றி!

அனுராகவன்
12-02-2008, 03:47 AM
அழகான சிலை..
அருகாமையில் செதுக்கிய சிற்பி..
சுற்றும் உடைந்த கற்கள்..

சிற்பியைக் கேட்டேன்..
இவ்வளவு அழகாக எப்படி?
பதிலால் நெளிந்தேன். தெளிந்தேன்..
சிதறியகற்களின் பங்கும் அதிகம்..

வரும்போது கால் குத்திய
கற்சில்லுகளை நிந்தித்ததை நினைந்து
என்னையே நொந்துகொண்டேன்..

சிற்பியின் கால்களையும்
சிதறிய கற்கள் பதம்பார்க்குமே?
ம்ம் நல்லது நண்பா..!
ம்ம் என் நன்றி சிற்பிக்கு..!




சோதனை...
எப்படி சாதனை ஆகிறது..
சோ(ர்வு) "சா"வடையும்போது..:icon_b:


ம்ம் நல்ல வரி!
என் நன்றி!!

அனுராகவன்
12-02-2008, 03:52 AM
உண்மைதான் அக்கா...!!
அனுபவ கவிதை போல் தோன்றுகிறது..வாழ்த்துக்கள்..!!
அந்த சாதனையும் எத்தனை நாள் நீடிக்கும்..அடுத்தவன் வந்து அதை முறியடிக்கும் வரைதானே..?!
ம்ம் நன்றி சுகந்தப்ரீதன்!
நல்லது..!!


பின் நாம் செய்த சாதனை நம்மை பார்த்து சிரிக்கும்...!! ஆக கடைமையை செய் பலனை எதிர்பாராதே என்று எண்ணி நடந்தால் சாதனைகள் வரலாம் வாழ்வில்..ஆனால் சோதனைகள் வராது..!!
வாழ்த்துக்கள் ச்கோதரி..முன்னேற்றம் தெரிகிறது எழுத்தில் மேலும் வளர வாழ்த்துக்கள்...!!

நன்றி சுகந்தப்ரீதன்!
எல்லாம் உங்கள் சித்தம்!!